பூமியில் கண்களுக்கு புலப்படாமல் வாழும் ஏலியன்கள்- பிரிட்டன் விண்வெளி வீராங்கனை தகவல்

பூமியில் கண்களுக்கு புலப்படாமல் வாழும் ஏலியன்கள்- பிரிட்டன் விண்வெளி வீராங்கனை தகவல் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

விஞ்ஞானமும் அறிவியலும் பெருமளவு வளர்ச்சி அடைந்த போதிலும் இயற்கையின் எத்தனையோ விந்தைகளுக்கு பதில் இல்லை என்றே கூறலாம். மனித அறிவுக்கு எட்டாத, சொல்லால், செயலால் விளக்க முடியாத சில விஷயங்களையே அமானுஷ்யம் என்கிறோம். 

அதிலும் வானில் தோன்றுவதாக கூறப்படும் பறக்கும் தட்டுகள், ஏலியன்கள், வினோதமான உருவங்கள் போன்ற சில விந்தைகள், மனித குலத்திற்கு புரியாத புதிராகவே உள்ளன. ஏலியன் என்ற வார்த்தைக்கு வெளியிடத்தைச் சேர்ந்தவர் என்பதே சரியான அர்த்தம். ஆனால் நாம் அந்த வார்த்தையை வேற்று கிரகத்தைச் சேர்ந்த உயிரினங்களை குறிப்பிட பயன்படுத்துகிறோம்.

முதன்முதலில் பறக்கும் தட்டு கி.பி 1440ம் ஆண்டு பண்டைய எகிப்தில் தோன்றியது. அன்று முதல் கடந்த வருடம் ஜூன் மாதம் 8ம் தேதி நியூயார்க் நகரில் தோன்றிய பறக்கும் தட்டு வரை பலஆயிரம் முறைகள் இத்தட்டுகள் பூமியில் தோன்றி மறைந்துள்ளன. 

இந்தியாவில் முதல் முதலில் 1954ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் மான்பும் என்ற இடத்தில் 12 அடி நீளமும் சாம்பல் நிறமும் கொண்ட பறக்கும் தட்டு தோன்றியது. ஆனால் அதிலிருந்து மனிதர்கள் கீழிறங்கி வந்ததாக இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் இல்லை. பறக்கும் தட்டுகள் இருப்பது உண்மை என அமெரிக்க கப்பல்படை கடந்த ஆண்டு வீடியோ ஆதாரம் வெளியிட்டது. 

பறக்கும் தட்டுகள் பூமிக்கு வந்ததாகவும் அதிலிருந்து வேற்றுகிரகவாசிகள் இறங்கி வந்ததாகவும் கூறப்படுகின்றன. ஏலியன்கள் இருக்கலாம் என்றே கூறப்படுகிறதே தவிர உறுதியான தகவல்கள் இல்லை என்றே ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், பூமியில் ஏலியன்கள் வாழ்ந்துகொண்டுதான் உள்ளன. ஆனால் அவை நம் கண்ணுக்கு புலப்படுவதில்லை என பிரிட்டனின் முதல் விண்வெளி வீராங்கனை டாக்டர் ஹெலன் ஷார்மன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் டாக்டர் ஹெலன் ஷார்மன் (வயது 56). பிரிட்டனின் முதல் விண்வெளி வீரரான இவர் 1991ம் ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் மிர் விண்வெளி கப்பலில் பயணித்தவர் ஆவார்.

சமீபத்தில் செய்தியாளர்களிடையே பேசிய ஹெலன், ‘விண்ணிலிருந்து பூமியைப் பார்ப்பதை விட அழகான விஷயம் ஏதும் இல்லை. பிரபஞ்சத்தில் பில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன, அவைகளில் வெவ்வேறு விதமான வாழ்க்கை வடிவங்கள் இருக்க முடியும். பூமியில் உள்ள வாழ்க்கை முறை போன்று அங்கு இருக்காது. அந்த வேறுபாடுகள் ஏலியன்களை நம் கண்ணுக்கு புலப்படாதவர்களாக மாற்றக்கூடும். 

ஏலியன்கள் தற்போதே இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஏலியன்கள் மனிதர்களைப் போன்று கார்பன் மற்றும் நைட்ரஜனால் உருவாக்கப்படாவிட்டாலும், அவர்கள் இப்போதே இங்கே இருக்கக்கூடும், அவர்களை நம்மால் பார்க்க முடியாது’ என்று கூறினார். 

சாத்தியமான பறக்கும் தட்டுகள் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கான ஒரு ரகசிய அரசாங்க திட்டத்தை வழிநடத்திய முன்னாள் பென்டகன் அதிகாரி, ஏலியன்கள் பூமியை அடைந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதை நம்புவதாக கடந்த 2017ம் ஆண்டு கூறியது குறிப்பிடத்தக்கது. 

Thu, 09 Jan 2020 19:31:04 +0530

விண்வெளியில் நடந்து சென்ற முதல் பெண் விண்வெளி வீராங்கனைகள்

விண்வெளியில் நடந்து சென்ற முதல் பெண் விண்வெளி வீராங்கனைகள் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

விண்வெளி வரலாற்றில் முதன் முறையாக இரண்டு பெண் வீராங்கனைகள் விண்வெளி நடையில் ஈடுபட்டுள்ளனர். விண்வெளி வீரர்களுக்கான பிரத்யேக உடைகளை அணிந்து கொண்டு அவர்கள் இருவரும் விண்வெளியில் நடந்து சென்றனர்.

நாசாவைச் சேர்ந்த கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிக்கா மெய்ர் என்ற விண்வெளி வீராங்கனைகள் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் இருவரும் இன்று விண்வெளி நிலையத்தின் வெளிப்புற பகுதியில் இருக்கும் ஒரு பழுதான மின்கல பகுதியை  விண்வெளியில் நடந்து சென்று சரி செய்தனர்.

இதுவரை 221 முறை விண்வெளி நடை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் பெண்கள் விண்வெளியில் நடந்தது இதுவே முதல் முறையாகும்.

Sat, 19 Oct 2019 01:33:13 +0530

பயனர்களுக்கு கூடுதல் வசதி வழங்கும் இன்ஸ்டாகிராம்

பயனர்களுக்கு கூடுதல் வசதி வழங்கும் இன்ஸ்டாகிராம் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது பயனர்கள் அவர்களின் தனிப்பட்ட விவரங்களை இயக்குவதற்கென கூடுதல் வசதிகளை வழங்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் பயனர் விவரங்கள் மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்ளப்படுவதை இனி வாடிக்கையாளர்கள் தீர்மானிக்க முடியும்.

இதனை இயக்க இன்ஸ்டாகிராமில் செட்டிங்ஸ் -- செக்யூரிட்டி -- ஆப்ஸ் மற்றும் வெப்சைட்ஸ் ஆப்ஷன் சென்று எந்தெந்த மூன்றாம் தரப்பு சேவைகள் பயனர் விவரங்களை இயக்குகின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும்.

"பயனர்கள் எங்களிடம் பகிர்ந்து கொள்ளும் விவரங்களை நாங்கள் பாதுகாப்பது முக்கியமான விஷயம் ஆகும். இதேபோன்று பயனர்கள் பகிர்ந்து கொள்ளும் விவரங்களை இயக்க அவர்களுக்கு அதிகளவு வசதியை வழங்க வேண்டும்," என இன்ஸ்டாகிராம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் மூன்றாம் தரப்பு சேவை பயனர் விவரங்களை கோரும் போது அவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் மேம்பட்ட ஆத்தரைசேஷன் ஸ்கிரீன் இன்ஸ்டாகிராம் செயலியில் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. 

"எந்தெந்த விவரங்களை மூன்றாம் தரப்பு கோருகிறது என்பதை தெரிவிக்கும் வகையில், மேம்பட்ட ஆத்தரைசேஷன் ஸ்கிரீனினை அறிமுகம் செய்ய இருக்கிறோம். இதனை அனுமதிக்கவும், நிராகரிக்கும் வசதி நேரடியாக ஆத்தரைசேஷன் ஸ்கிரீனிலேயே வழங்கப்படும்," என இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.

Sat, 19 Oct 2019 01:19:16 +0530

கறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது

கறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

உலகின் பாரிய கறுப்பு இணைய சந்தையைப் பயன்படுத்தி 38 நாடுகளைச் சேர்ந்த 337 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்ட 2 இலட்சத்திற்கும் அதிக காணொளிகளைக் கொண்ட குறித்த கறுப்பு இணையத்தளம் கடந்த வருடத்தில் பிரித்தானியா முன்னெடுத்த விசாரணைகளை தொடர்ந்து முடக்கப்பட்டு அதன் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த இணையத்தளத்தை பயன்படுத்திய 337 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரித்தானியா, அயர்லாந்து, அமெரிக்கா, தென் கொரியா, ஜேர்மனி, ஸ்பெய்ன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், செக் குடியரசு மற்றும் கனடா உள்ளிட்ட 38 நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

NewsFirst

இந்தநிலையில், குறித்த இணையத்தளத்தின் நிர்வாகியான 23 வயதுடைய Jong Woo Son என்பவருக்கு எதிராக அமெரிக்க அதிகாரிகள் 9 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Thu, 17 Oct 2019 23:38:26 +0530

கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் வரி

கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் வரி | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

இணையதள ஜாம்பவான்களான முக்கிய அமெரிக்க நிறுவனங்கள் கூகுள், அமேசான் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றிற்கு ஐரோப்பிய ஒன்றியம் டிஜிட்டல் வரிகளை விதித்துள்ளது. அதாவது இணையதள பரிவர்த்தனைகளுக்கு 3 சதவீத வரி செலுத்த வேண்டும்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியும், 2020-ம் ஆண்டுக்கான வரைவு பட்ஜெட்டில் இந்த புதிய வரிக்கு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரான்ஸ் நாடும் இதே டிஜிட்டல் வரியை அறிமுகப்படுத்தியது. ஆனால் அமெரிக்கா, பிரான்சுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னர் ஒப்பந்த அடிப்படையில் அந்த நிறுவனங்களுக்கு கூடுதலாக விதிக்கப்பட்ட வரியை திரும்ப செலுத்த முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவிக்கையில், ‘அந்த இணைய நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் எனக்கு எதிராக தான் செயல்பட்டார்கள். ஆனால் அமெரிக்க நிறுவனங்களுக்கு வரி விதித்தால் அது அமெரிக்காவுக்கும் விதித்ததாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த வரி விதிப்பு செயல் விரும்பத்தகாத ஒன்றாகும்’ என தெரிவித்துள்ளார். 

Thu, 17 Oct 2019 23:36:01 +0530

இன்ஸ்டாகிராமில் டார்க் மோட் வசதி அறிமுகம்

இன்ஸ்டாகிராமில் டார்க் மோட் வசதி அறிமுகம் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

இன்ஸ்டாகிராம் செயலியில் படிப்படியாக டார்க் மோட் வசதி வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு மற்றும்  ஐ.ஒ.எஸ். என இருவித தளங்களிலும் புதிய வசதிக்கான அப்டேட் வழங்கப்படுகிறது.

ஐ.ஒ.எஸ். 13 மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட சாதனங்களில் டார்க் மோட் ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராமிலும் அது தானாக வேலை செய்யும். எனினும் ஆண்ட்ராய்டு போனில் டார்க் மோட் வேலை செய்தாலே இன்ஸ்டாகிராமிலும் டார்க் மோட் இயங்கும்.

முன்னதாக கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் டார்க் மோட் வசதியை வழங்கியது. இதில் பெரும்பாலான கூகுள் செயலிகள் புதிய டார்க் மோட் பெறும் என கூகுள் தெரிவித்திருந்தது. எனினும், பெரும்பாலான மூன்றாம் தரப்பு செயலிகளில் டார்க் மோட் வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

அந்த வரிசையில் தற்சமயம் இன்ஸ்டாகிராம் இணைந்திருக்கிறது. இன்ஸ்டாகிராம் செயலியின் டார்க் மோட் AMOLED சார்ந்து இயங்குகிறது. இதன் பின்னணியில் கருப்பு நிறம் இருக்கும். இது பெரும்பாலான செயலிகளில் சீராக இயங்கும். வரும் அப்டேட்களில் இந்த அம்சம் மேலும் மேம்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sat, 12 Oct 2019 22:54:56 +0530

பியூட்டி கேமரா செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி கூகுள் அதிரடி

பியூட்டி கேமரா செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி கூகுள் அதிரடி | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் பல்வேறு பியூட்டி கேமரா செயலிகள் தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்ட விளம்பர சர்வர்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இவற்றில் சில செயலிகள் அதிகளவு பிரபலமானதால் பல லட்சம் பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். இவ்வாறு டவுன்லோடு செய்தவர்களில் பலர் ஆசியாவில் வசிக்கின்றனர்.

இதுபோன்று பிரச்சனைகளை ஏற்படுத்தும் செயலிகளை கண்டறிவது வாடிக்கையாளர்களுக்கு கடினமான விஷயம் ஆகும். இந்த செயலிகள் இன்ஸ்டால் ஆனதும் இவை பயனர் ஸ்மார்ட்போனில் ஷார்ட்கட் ஒன்றை உருவாக்கி அதனை மறைத்து வைத்துவிடும். செயலி மறைக்கப்பட்டிருப்பதால் இவற்றை பயனரால் கண்டறியவே முடியாது. மேலும் இவை பேக்கர்களை பயன்படுத்தி எவ்வித பாதுகாப்பு வலையிலும் சிக்காத வகையில் உருவாக்கப்படுகின்றன.

இதுதவிர இந்த செயலிகள் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் முழு ஸ்கிரீனை மறைக்கும் வகையில் விளம்பரங்களை வெளியிடும். இவற்றில் பல்வேறு விளம்பரங்கள் பயனரின் பிரவுசர் வழியே திறக்கும்படி உருவாக்கப்பட்டிருக்கும். இந்த விளம்பரங்கள் பயனருக்கு தீங்கு ஏற்படுத்தும் நோக்கில் இருக்கும். இடையூறை ஏற்படுத்தும் செயலி மறைந்திருப்பதால், வாடிக்கையாளர்களால் எங்கிருந்து விளம்பரங்கள் வருகின்றன என்பதையே கண்டறிய முடியாது.

பெரும்பாலும் இதுபோன்ற செயலிகள் தீங்கிழைக்கும் வலைதளங்களை திறக்கச் செய்து அவற்றின் மூலம் பயனரின் தனிப்பட்ட விவரங்கள், முகவரி அல்லது மொபைல் போன் விவரங்களை சேகரிக்கும். இந்த செயலிகள் ரிமோட் சர்வெர்கள் அல்லது வெளிப்புற இணைய முகவரிகளில் இருந்து டவுன்லோடு ஆகி விளம்பரங்களை இயக்க ஆரம்பிக்கும்.

முதற்கட்ட ஆய்வில் போட்டோ ஃபில்ட்டர் சேவைகளை வழங்கும் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து கண்டறியப்பட்டன. இந்த செயலிகள் பிரத்யேக சர்வெர் மூலம் பயனர் புகைப்படங்களை அழகுப்படுத்துகின்றன. எனினும், அழகுபடுத்தப்பட்ட புகைப்படத்துன் போலி விவரங்களும் சேர்ந்து வரும்.

செயலியில் அப்லோடு ஆன புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்படும். எனினும், கூகுள் சார்பில் இந்த செயலிகளை முடக்கும் நடவடிக்கை துவங்கப்பட்டு விட்டது.

Wed, 06 Feb 2019 11:06:26 +0530

கைத்தொலைபேசியிலிருந்து வரும் கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகள்!.

கைத்தொலைபேசியிலிருந்து வரும் கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகள்!.   | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி ?

செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் இன்றை உலகில் ஒரு அத்தியாவசிய ‘கருவியாகி’ யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில், செல்போன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப இயலாது.

ஏனெனில், செல்போன் பயன் படுத்தாவிட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் பாதிக்கவே செய்யும். குருவிகள் இதனால் தான் நகர்ப்புரங்களிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.

இந்நிலையில், கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது நமக்கும் நமது குடுமபம் மற்றும் சந்ததியினருக்கும் சிறந்த விடயமாக இருக்கும்.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த கைத்தொலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.
இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான (Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விடயம் நாம் கைத்தொலைபேசி உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.

1. முடிந்த அளவு கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட கைத்தொலைபேசிகள் பாதிப்பு அதிகம்.

2. ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.

3. குழந்தைகளிடம் கைத்தொலைபேசிகளின் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.

4. உங்கள் கைத்தொலைபேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.

5. காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட கைத்தொலைபேசிகளின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.

6. தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.

7. நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஓன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.

8. கைத்தொலைபேசிகளில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.

9. கைத்தொலைபேசிகளில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும். முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

10. கைத்தொலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.

11. கைத்தொலைபேசிகளை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.

12. கைத்தொலைபேசியில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.

Thu, 20 Dec 2018 07:31:04 +0530

வாட்ஸ் ஆப் குழு உறுப்பினர் அனுப்பிய தேச விரோத செய்தி! 5 மாதங்களாக கம்பி எண்ணும் அட்மின்

வாட்ஸ் ஆப் குழு உறுப்பினர் அனுப்பிய தேச விரோத செய்தி! 5 மாதங்களாக கம்பி எண்ணும் அட்மின் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

தேச விரோத செய்தியை வாட்ஸ்அப் குழு உறுப்பினர் பகிர்ந்த புகாரில், அதன் அட்மின் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கார் மாவட்டத்தில் உள்ள தலேன் நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் கடந்த பிப்ரவரி 14 அன்று நண்பர்கள் சிலர் இருந்த வாட்ஸ்அப் குரூப்பில் தேசவிரோத மெசேஜ் ஒன்றை பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. அச்சிறுவன் பகிர்ந்த தகவலுக்கு, அந்த குரூப்பில் இருந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்பேரில் அவர்கள் தலேக் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், அத்தகவலை பகிர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அந்த வாட்ஸ் அப் குரூப் அட்மின் ராஜா குர்ஜார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பினர்.

எனினும், குழுவின் அட்மினான குர்ஜார் உடனடியாக அந்த குரூப்பில் இருந்து தானாகவே வெளியேறினார். இதனைத் தொடர்ந்து குழுவில் இணைந்த கால மூப்பின் அடிப்படையில் வாட்ஸ் அப் விதிமுறையின்படி மேலும் இருவர் அந்த குரூப்பின் அட்மினாக தானாகவே ஆக்கப்பட்டனர். உடனே சுதாரித்துக் கொண்ட அவர்கள் தாங்களாகவே குரூப்பில் இருந்து வெளியேறினர். இறுதியாக ஜூனைத் மேவ் என்ற இளைஞர் அந்த குரூப்பின் அட்மினாக ஆக்கப்பட்டார். அவருக்கு வயது 21. அவர் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி பட்டம் படித்து வந்ததுடன், பகுதிநேரமாக தொழில்நுட்ப பட்டயப் படிப்பும் படித்து வந்தார். 

இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் 14 அன்று ஆட்சேபிக்கத்தக்க வகையிலான தகவலை அனுப்பிய சிறுவன், குழுவின் அட்மின் ஜூனைத் மேவ் ஆகியோர் மீது தேசதுரோகம் (124A பிரிவு), வேண்டுமென்றே தீங்கிழைக்கும் செயல்கள் (295A பிரிவு), எந்தவொரு வர்க்கத்தின் மத உணர்வுகளையும் சீர்குலைக்க நோக்கம் கொண்டது, தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். அந்த சிறுவன், மைனர் சிறுவன் என்பதால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும், அட்மினான மேவ் சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டனர்.

ஆனால், இந்த விவகாரத்தில் அட்மின் ஜூனைத் மேவ் மேல் எந்த தவறும் இல்லை. வாட்ஸ்அப் விதிமுறைகள்படி, அட்மின்கள் வெளியேறியதால், தானாகவே அவர் அட்மினாக நியமிக்கப்பட்டுள்ளார். இது வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைவருக்கும் தெரிந்த விசயம். உண்மை இப்படியிருக்க, செய்யாத தவறுக்காக, 5 மாதங்களாக ஜூனைத் மேவ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். மேலும், போலீசார் விசாரணையை வேண்டுமென்றே தாமதம் செய்துவருவதாக, ஜூனைத் மேவின் சகோதரர் முகமது ஃபக்ருதீன் குற்றம் சாட்டியுள்ளார். 

தேச துரோக வழக்கு சுமத்தப்பட்டிருப்பதால் உயர்நீதிமன்றம் வாயிலாகக் கூட மேவிற்கு பிணை வாங்க இயலவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். ஜூனைத் மேவின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பருவத் தேர்வுகளை அவர் முழுவதும் தவறவிட்டுவிட்டதாகவும் குடும்பத்தினர் குறிப்பிடுகின்றனர். அதேசமயம், போலீசார் தரப்பில், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது எனக் கூறியுள்ளனர்.

Wed, 25 Jul 2018 03:39:20 +0530

குழந்தைகளின் கற்றல் குறைபாட்டை போக்க வழி என்ன?

குழந்தைகளின் கற்றல் குறைபாட்டை போக்க வழி என்ன? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பிறப்பதற்கரிய பிறவியான மானிடப்பிறவி எடுத்தாலும், வெளிப்புற அங்க குறைபாடுகள் இல்லாமல் பிறப்பது அரிது. அதைவிட அரிது முறைப்படி கல்வி கற்று ஞானத்தைப் பெறுவது என்பது அவ்வையின் வாக்கு. பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் முறைப்படி கல்வி கற்கும் திறன் ஒரே அளவாக அமைவதில்லை. ஒத்த வயதுடைய குழந்தைகளின் சராசரி கற்கும் திறனைவிட, அளவில் குறைவான கற்றல் திறனுள்ள குழந்தையை கற்றல் குறைபாடுள்ள குழந்தையாகக் கருதுகிறோம்.

முறைசார்ந்த கல்விமுறையில் எழுத்துகளையும், சொற்களையும், எண்களையும் வாசிப்பதிலும், புரிந்து கொள்வதிலும், புரிந்து கொண்டதை கோர்வையாக சொல்வதிலும், மனனம் செய்வதிலும், நினைவூட்டுவதிலும், எழுதுவதிலும் அந்த வயதிற்குரிய சராசரி குழந்தையைவிட சிரமப்படுவதை கற்றல் குறைபாடு என்கிறோம்.

கற்றல் குறைபாடு என்பது பத்து குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு என்ற விகிதத்தில் காணப்படுகிறது. பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு நான்கு மடங்கு எண்ணிக்கையில் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் புத்தி கூர்மையில் இந்த குழந்தைகள் பெரும்பாலும் சராசரி அளவு அல்லது இதைவிட சற்று அதிக அளவு கூர்மை பெற்றவர்களாக உள்ளனர்.

குழந்தைகளிடம் பின்வரும் அறிகுறிகள் தென்படுவதை வைத்து அவர்களை உரிய மருத்துவரிடம் அழைத்துச்சென்று பரிசோதித்து கற்றல் குறைபாடு உள்ளதா? என்பதை தெளிவுப் படுத்திக் கொள்ள வேண்டும். அந்த அறிகுறிகள் சரளமாக வாசிக்க சிரமப்படுவது, ஒரே மாதிரி உச்சரிப்புள்ள சொற்களை மாற்றி வாசிப்பது, வலது, இடது புறங்களில் மாறிவரும் எழுத்துக்களில் தடுமாற்றம் கொள்வது, சொற்களில் எழுத்துகளை மாற்றி எழுதுவது, படிப்பதில், எழுதுவதில் ஆர்வம் காட்டாமல் இருப்பது, சொல்ல வருவதை கோர்வையாக சொல்ல முடியாமல் தவிப்பது, கவனத்தை அதிகமாக சிதறவிடுவது, கையெழுத்து மோசமாக இருப்பது போன்றவையாகும்.

குறைப்பிரசவம், பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்கள், பிறந்த குழந்தையின் எடை குறைந்திருப்பது, கருவுற்ற காலத்தில் தாய் உட்கொள்ளும் சில மருந்துகள் மற்றும் மதுவகைகள், பெற்றோர்களின் புகைபிடிக்கும் பழக்கம், குழந்தை வந்த பரம்பரையில் அந்த குறைபாடுள்ளோர் இருப்பது, குழந்தை வளரும் சுற்றுச்சூழல் போன்றவைகள் குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு ஏற்பட காரணிகள் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளில் பலர் மற்ற துறைகளில் ஈடுபாடும், சிறந்த அறிவும், ஆற்றலும் பெற்றிருப்பதை காணமுடிகிறது. குழந்தைகள் வெளிப்படுத்தும் ஆர்வத்தை கவனித்து பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களிடம் ஒளிந்திருக்கும் திறனை கண்டறிந்து அந்த திறன்களை வளர்க்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதனை மேன்மேலும் வளர்க்கும் வண்ணம் அவர்களை ஊக்கப்படுத்துவதையும், உற்சாகப்படுத்துவதையும் செய்ய வேண்டும்.

அப்போது தான் அவர்கள் விரும்பும் துறைகளில் உச்சத்திற்கு கொண்டு செல்ல முடியும். இத்தகைய குழந்தைகள் விளையாட்டு, ஓவியம், நாடகம், ஆடை, அணிகலன்கள் வடிவமைப்பு, அறிவியல், கட்டிடக்கலை, தோட்டக்கலை, சமையல் கலை, இசை, வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்புக்கலை போன்ற பல்வேறு துறைகளில் நாட்டம் உடையவர்களாக உள்ளனர்.

கற்றல் குறைபாடு உள்ளதை முறைப்படி பெற்றோர்கள் உறுதிசெய்து கொண்டபின் அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை மருத்துவர் ஆலோசனைப்படியோ, அல்லது இதற்கென பயிற்சிபெற்ற உளவியலாளர் ஆலோசனைப்படியோ அளிக்க வேண்டும்.

கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு உரிய மருத்துவ சான்றிதழ் இருந்தால் அரசாங்கம் பொதுத்தேர்வில் சில சலுகைகள் வழங்குகின்றது.

பெற்றோர் கற்பதில் மிகவும் சிரமப்படும் குழந்தைகளை இதற்கென இயங்கும் சிறப்புப் பள்ளியில் அனுமதிக்க வேண்டும். சாதாரணப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை நிவர்த்தி வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டும். பெற்றோர் குழந்தைகளை குற்றம், குறை சொல்லாமல், மற்ற குழந்தைகளோடு ஒப்பிடாமல் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

இக்குறைகளை நீக்க மருந்துகள் இல்லை. தொடர் பயிற்சிகளின் மூலமே இதனை சரிசெய்ய முடியும். குழந்தையின் குறைகளின் அளவைப் பொறுத்தே பயிற்சியின் காலமும், தன்மையும் அமையும். பெற்றோரின் புரிதலும், அனுசரனையும், ஆதரவும் குழந்தைகளை இக்குறையிலிருந்து விரைவில் மேன்மையடைய உதவும். 

கலையரசி, சிறப்பு கல்வி பயிற்சியாளர்

Mon, 23 Jul 2018 05:19:31 +0530

பயண நேரத்தை பாதியாக குறைக்க மீண்டும் வருகிறது ஒலியை மிஞ்சும் சூப்பர் சோனிக் விமானங்கள்

பயண நேரத்தை பாதியாக குறைக்க மீண்டும் வருகிறது ஒலியை மிஞ்சும் சூப்பர் சோனிக் விமானங்கள் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

ஒலியை மிஞ்சும் வேகத்தை, மாக் என்ற அளவையால் விஞ்ஞானிகள் குறிக்கின்றனர். இதை, சூப்பர்சோனிக் வேகம் என்றும் அழைப்பர். அதனடிப்படையில், ஒலியை விட வேகமாக பறக்கும் விமாங்கள் சூப்பர் சோனிக் விமாங்கள் என அழைக்கப்படுகிறது. 

முதன்முதலாக பெல் எக்ஸ்-1 எனும் விமானம் 1947-ம் ஆண்டு ஒலியை விட வேகமாக பயணித்த உலகின் முதல் சூப்பர் சோனிக் விமானம் எனும் பெருமையை பெற்றது. போர் விமானங்களில், 1954-ம் ஆண்டில் எப்-100 சூப்பர் சாப்ரே எனும் முதல் சூப்பர் சோனிக் போர் விமானம் உருவாக்கப்பட்டது. ஆனால், அப்போதைய சோவியத் யூனியன் முதல்முதலாக சூப்பர் சோனிக் பயணிகள் விமானத்தை தயாரித்து பயன்பாட்டிற்கு விட்டது.

எனினும், 1976-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகளின் கூட்டுத்தயாரிப்பான கான்கார்டு ரக விமானங்கள் சூப்பர் சோனிக் விமான சேவையில் சிறந்து விளங்கின, ஆனால் 2000-ம் ஆண்டு 109 பேரை பலிவாங்கிய கான்கார்டு விமான விபத்து மற்றும் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு 2003ஆம் ஆண்டு கான்கார்டு  சூப்பர் சோனிக் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில்,  சூப்பர் சோனிக் விமான சேவை நிறுத்தப்பட்ட 15 ஆண்டுகள் கழித்து சொந்த விமாங்களை வாங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மற்றும் சர்வதேச பயணிகள் அதிகரித்து வருவது ஆகியவற்றை இலக்கு வைத்து, ஏரியோன் சூப்பர்சோனிக், ஸ்பைக் ஏரோஸ் பேஸ், பூம் சூப்பர்சோனிக் மற்றும் போயிங் போன்ற விமான தயாரிப்பு நிறுவனங்கள் சூப்பர் சோனிக் விமானங்களை தயாரிக்கும் முயர்ச்சியில் ஈடுப்பட்டுள்ளன.

சில மணி நேரங்களில் உலகின் எந்த ஒரு இடத்திற்கும் செல்லும் ஆற்றல் கொண்ட இந்த அதிவேக விமாங்கள் அடுத்த சில வருடங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இவை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், சாதாரணமாக நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு பயணிக்க 7 மணி நேரம் ஆகிறது எனில், இவ்விமானத்தில் பயணித்தால் 3.5 மணி நேரத்திலேயே நாம்மால் நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு சென்றுவிட முடியும்.

இருப்பினும், நவீன தொழில் நுட்பத்தில் உருவாகும் இவ்வாறான அதிவேக விமானங்களில் மக்கள் தொடர்ந்து பயணிக்கும் வகையில் அதன் கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்படுமா? அதன் பாதுக்காப்பு அம்சங்கள் சிறந்து விளங்குமா? என்பதை வைத்தே மீண்டு(ம்) வரும் சூப்பர் சோனிக் விமானங்களின் வெற்றி தோல்வி அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Mon, 23 Jul 2018 05:13:08 +0530

வாட்ஸ் அப் அதிரடி..! இனி 5 பேருக்கு மேல் மெசேஜ் பார்வார்ட் செய்ய முடியாது..!

வாட்ஸ் அப் அதிரடி..! இனி 5 பேருக்கு மேல் மெசேஜ் பார்வார்ட் செய்ய முடியாது..! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

ஒரு மெசேஜை 5 பேருக்கு மேல் பார்வர்ட் செய்ய முடியாத ஒரு  அப்டேஷனை விரைவில் வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது

வாட்ஸ் அப் மூலம் நொடி பொழுதில் எந்த ஒரு தகவலும் பகிர்ந்துக் கொள்ள முடிகிறது. அந்த தகவல் உண்மையானதா அல்லது பொய்யானதா என்று கூட பார்க்காமல் உடனடியாக மற்றவர்களுக்கு பார்வார்டு செய்வதால், தேவை இல்லாத கலவரங்கள் வர தொடங்குகிறது

மேலும், செய்தியின் உண்மைத்தன்மை கூட தெரியாமல் சில பொய்யான செய்திகளால் அப்பாவி மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

அதாவது, சமீபத்தில் வட மாநிலத்தவர்கள் தென் மாநிலம் வந்து குழந்தை கடத்தில் தொழிலில் ஈடுபட்டு வருவதாக பொய்யான தகவல் பரவியது.

இந்த தகவலால், பெரிதும் பாதிக்கப்பட்டது சாதாரண மக்களே. சந்தேகத்தின் பேரில் சில நபர்களை ஊர் மக்களே தவறாக புரிந்துக் கொண்டு அவர்களை அடித்தே கொன்று விட்டார்கள்.

இது போன்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு மத்திய அரசு பல்வேறு  முயற்சிகளை மேற்கொண்டது. அதில் பார்வார்ட் மேசெஜ் என்றால், உடனடியாக தெரிந்துகொள்ளும் வசதியை ஏற்படுத்தி கொடுத்தது வாட்ஸ் ஆப் நிறுவனம். ஆனால் இதற்கு மத்திய அரசு ஓகே சொல்ல வில்லை...இதனை அடுத்து தற்போது ஒரு மெசேஜை பார்வார்ட் செய்ய  வேண்டும் என்றால் 5 பேருக்கு மட்டுமே அனுப்ப முடியும் என்ற நிலை வர உள்ளது.

இந்த நடைமுறை விரைவில் வரும் தருவாயில் தேவை இல்லாத வதந்திகள் பரவாமல் தடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Sun, 22 Jul 2018 13:46:13 +0530

Loudspeaker | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பிரபலமானவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 08:51:59 +0530

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...