கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மீள் காடு வளர்ப்பு நிக்ழ்ச்சித்திட்டம்

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மீள் காடு வளர்ப்பு நிக்ழ்ச்சித்திட்டம் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

மீள் காடு வளர்ப்பு நிக்ழ்ச்சித்திட்டத்தின் கீழ் மரம் நடுவது, காடு வளர்ப்பது மற்றும் காட்டின் பயன் போன்றவற்றினை நோக்கமாகக் கொண்டு அஷ்ராப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப். றஹ்மான் அவர்களின் தலைமையில் விழிப்புணர்வு_செயற்திட்டம் நேற்று (05) நடைபெற்றது.

இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ.எம். றியாஸ் அகமட் அவர்கள் கலந்து கொண்டு விதைப்பந்து செயன்முறை பற்றி விளக்கம் வழங்கியதுடன், துண்டுப்பிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசலையின் வைத்தியர்கள்,கணக்காளர்,தாதிமார்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Wed, 06 Nov 2019 09:27:07 +0530

கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சூரங்கல் பிரதேசத்தில் சாந்தி நகரில் 3680 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது

கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சூரங்கல் பிரதேசத்தில் சாந்தி நகரில் 3680 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சூரங்கல் பிரதேசத்தில் சாந்தி நகரில் இன்று (04) 3680 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒருவரை தாம் கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத் தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர். 

கைதான நபர் போதை பொருள் விற்பனையாளர் எனவும் விற்பறைக்காக ஹெரோயினை பொதி இட முற்பட்ட வேளையில் தாம் குறித்த போதைப் பொருள் விற்பனையாளரை கைது செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர் 49 வயதுடையவர் எனவும் கைது செய்யப்பட்டவரையும் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதை பொருளையும் சட்ட நடவடிக்கைக்கு உற்படுத்தும் நோக்கில் கிண்ணியா பொலிஸார் வசம் ஒப்படைத்தாக அவர்கள் தெரிவித்தனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Mon, 04 Nov 2019 21:07:30 +0530

IMA சார்பாக 52 பேர் தேசிய கராத்தே போட்டிக்கு தெரிவு

IMA சார்பாக 52 பேர் தேசிய கராத்தே போட்டிக்கு தெரிவு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் கிழக்குமாகான கராத்தே போட்டி கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் களுவாஞ்சிகுடி, பட்டிருப்பு மகா வித்தியாலயத்தில் கிழக்குமாகான கராத்தே சம்மேளனத்தின் தலைவர் சிஹான், முகம்மத் இக்பால் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த போட்டியில் பதிவு செய்யப்பட்ட 25 சங்கங்களிலிருந்து கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 500 போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.

இந்த போட்டியானது Cadet (14/15 years), Junior (16/17 Years), Under 21 Years, Senior (above 21Years) Veteran ஆண்கள், பெண்கள் ஆகிய பிரிவினர்களுக்கு Kata, Kumite, Team Kata ஆகிய நிகழ்சிகள் நடைபெற்றது.

இந்த போட்டியில் கிழக்குமாகான கராத்தே சம்மேளனத்தின் தலைவர் முகம்மத் இக்பால் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்ற International Martial arts Association (IMA) சங்கம் சார்பாகவும், தென்கிழக்கு பல்கலைக்கழகம் சார்பாகவும் கலந்துகொண்ட மாணவர்களில்

Gold – 23, Silver – 17, Bronze – 12 அடங்கலாக மொத்தமாக 52 பதக்கங்களை பெற்று தேசிய கராத்தே போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டார்கள். தேசிய போட்டியானது எதிர்வரும் டிசம்பர் மாதம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tue, 22 Oct 2019 07:51:53 +0530

இந்தியா - இலங்கை மோதல்! இன்று என்ன நடக்கும்?

இந்தியா - இலங்கை மோதல்! இன்று என்ன நடக்கும்? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், லீக் சுற்று இன்றுடன் முடிவுக்கு வருகிறது. லீட்ஸ் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கும் 44-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இந்தியாவும், இலங்கையும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

6 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை என்று 13 புள்ளியுடன் பட்டியலில் 2-வது இடம் வகிக்கும் இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறி விட்டது. அதே சமயம் 3 வெற்றி, 3 தோல்வி, 2 முடிவில்லை என்று 8 புள்ளியுடன் உள்ள இலங்கை அணி, அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. எனவே இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால் இது வெறும் சம்பிரதாய மோதல் தான்.

ஆனால் இந்த ஆட்டத்தின் முடிவு இன்னொரு வகையில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று, ஆஸ்திரேலிய அணி தனது கடைசி லீக்கில் தென்ஆப்பிரிக்காவிடம் தோற்றால் புள்ளி பட்டியலில் இந்தியா ‘நம்பர் ஒன்’ ஆகி விடும். அவ்வாறு நடந்தால் இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்துடன் மோதும். இல்லாவிட்டால் இங்கிலாந்தை சந்திக்க வேண்டி வரும்.

இந்திய வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் விராட் கோலியும் (408 ரன்), துணை கேப்டன் ரோகித் சர்மாவும் (4 சதம் உள்பட 544 ரன்) பேட்டிங்கில் பட்டையை கிளப்புகிறார்கள். டோனியின் பேட்டிங் விமர்சிக்கப்பட்டாலும் அவரது அனுபவம் அணிக்கு அனுகூலமாக அமையும். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ராவும், முகமது ஷமியும் மிரட்டுகிறார்கள். வெற்றிப்பயணத்தை நீட்டித்து அதே உத்வேகத்துடன் அரையிறுதிக்குள் செல்ல இந்திய வீரர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணி ஆறுதல் வெற்றிக்காக போராடும். திடீர் நட்சத்திரமாக உருவெடுத்துள்ள 21 வயதான அவிஷ்கா பெர்னாண்டோ இந்த உலக கோப்பையில் வாய்ப்பு பெற்ற 3 ஆட்டங்களில் முறையே 49, 30, 104 ரன்கள் எடுத்துள்ளார். அதனால் அவரது பேட்டிங் மீது எதிர்பார்ப்பு காணப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவுக்கு உலக கோப்பையில் இதுவே கடைசி ஆட்டம் என்பதால் அவரும் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பார். அதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

இவ்விரு அணிகளும் ஒரு நாள் கிரிக்கெட்டில் 158 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 90-ல் இந்தியாவும், 56-ல் இலங்கையும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. 11 ஆட்டத்தில் முடிவில்லை. உலக கோப்பை கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால் 8-ல் மோதி அதில் 3-ல் இந்தியாவும், 4-ல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ரிஷாப் பண்ட், டோனி, தினேஷ் கார்த்திக் அல்லது ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, பும்ரா, யுஸ்வேந்திர சாஹல் அல்லது குல்தீப் யாதவ்.

இலங்கை: கருணாரத்னே (கேப்டன்), குசல் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் மென்டிஸ், மேத்யூஸ், திரிமன்னே, உதனா, தனஞ்ஜெயா டி சில்வா, ஜெப்ரே வாண்டர்சே, ரஜிதா, மலிங்கா.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Sat, 06 Jul 2019 14:40:49 +0530

மன்னாரும் புத்தளமும் சேந்து ஈன்றெடுத்த மாணவர் மிஷ்ராப் பஸீர் தொடர்ந்தும் சாதனை

மன்னாரும் புத்தளமும் சேந்து  ஈன்றெடுத்த மாணவர் மிஷ்ராப் பஸீர்  தொடர்ந்தும் சாதனை | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

மன்னாரும் புத்தளமும் சேந்து  ஈன்றெடுத்த மாணவர் மிஷ்ராப் பஸீர்  தொடர்ந்தும் சாதனை கொழும்பு றோயல் கல்லுாரியில உயர் கல்வியை கற்றுக் கொண்டிருக்கும் மாணவன் மிஷ்ராப் அகில இலங்கை ரீதியான Under 18 (Division – 1) இறுதிப் போட்டி 2019.01.13 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. 
இதில் அகில இலங்கை ரீதியில் சிறந்த கோல் காப்பாளராக தெரிவு செய்யப்பட்டு அவருக்கான நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. மிக குறுகிய கால இடைவெளியில் கல்லூரியில் இணைந்த இவர் அல்லாஹ் அவருக்கு கொடுத்த திறமையினால் மிகவும் சிறப்பாக கொழும்பு றோயல் உதைப்பந்தாட்ட அணிக்கு இந்த கௌரவத்தை பெற்றுக் கொடுத்திருக்கின்றார். இன்னும் பல சாதனைகளை நிலைநாட்ட வல்ல இறைவன் அவருக்கு சிறந்த உடல் ஆரோக்கியத்தை கொடுத்தருள்வானாக.

Madawalanews lk

 

Mon, 14 Jan 2019 23:30:00 +0530

இலங்கை வீரர்களை ஆட்டநிர்ணய சதி கும்பலிடம் சிக்கவைக்கும் பெண்- அதிர்சி தகவல்

இலங்கை வீரர்களை ஆட்டநிர்ணய சதி கும்பலிடம் சிக்கவைக்கும் பெண்- அதிர்சி தகவல்  | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

இலங்கையின் சிரேஸ்டவீரர்களிற்கு பாலியல்ரீதியில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் சிலர்  பின்னர் அதனை வைத்து அவர்களை அச்சுறுத்துவதுடன் ஆட்டநிர்ணய சதிக்கு பயன்படுத்துகின்றனர் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது

உலகின் பல பாகங்களில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் பயன்படுத்தும் இவ்வாறான தந்திரோபாயத்திற்கு இலங்கையின் சிரேஸ்ட வீரர்கள் பலியாகியுள்ளனரா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை இளம் வீரர்கள் தொடர்ந்தும் அணியில் இடம்பெறவேண்டுமென்றால் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடவேண்டும் என அதிகாரம் உள்ளவர்களால் மிரட்டப்படுகின்றனர் எனவும் சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பல்வேறு மட்டங்களினான அணிகளில் விளையாடும் வீரர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர், என தெரிவித்துள்ள சண்டே டைம்ஸ் ஊழல் மற்றும் கொழும்பை சேர்ந்த பெண்ணொருவருடனான தொடர்புகள் குறித்து இவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.

குறிப்பிட்ட பெண்மணி வீரர்களை தனது வலைக்குள் சிக்கவைத்த பின்னர் அவர்களை இந்தியாவை சேர்ந்த ஆட்டநிர்ணய சதி கும்பலை சேர்ந்தவர்களிற்கு அறிமுகப்படுத்துகின்றார் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த சதிமுயற்சியில் தொடர்புபட்டவர்கள் குறித்த படவிபரங்களை வீரர்களிற்கு வழங்கியுள்ள அதிகாரிகள் அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளனர்

Sun, 13 Jan 2019 09:15:38 +0530

வடமராட்சி விளையாட்டுக் கழகங்களுக்கு சுமந்திரனால் விளையாட்டு உபகரணங்கள்

வடமராட்சி விளையாட்டுக் கழகங்களுக்கு சுமந்திரனால் விளையாட்டு உபகரணங்கள் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

வடமராட்சியில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்குக்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரனால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் நிதி ஒதுக்கழுட்டிலேயே கடந்த 4 ஆம் திகதி இந்த விளையாட்டு உபகரணங்கள் மருதங்கேணி பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.

 

இந்த நிகழ்வில் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தனும் கலந்துகொண்டார்.

Wed, 09 Jan 2019 07:54:55 +0530

உள்ளத்தால் உயர்ந்த கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி..........!

உள்ளத்தால் உயர்ந்த கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி..........! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

இந்தியாவில் கிரிக்கெட் விளையாடி கோடி கோடியாக  சம்பாதித்தவர்கள் எல்லாம் ஹோட்டல்,  மற்றும் பெரிய நிறுவனங்களைத் தொடங்கி  தங்களின் தொழிலை மட்டுமே வளமாக்கிக் கொண்டார்கள். 
தனக்காக கைதட்டிய ரசிகனை பற்றி ஒரு முறையும் சிந்திக் காதவர்கள்.

நாம் ஓய்வு பெற்ற பின்பும் எதாவது வருமானம் வருமா என்று ஏங்கி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் அதிரடி ஆட்டக்காரர் ஷாஹித் அப்ரிடி, எந்த அளவிற்கு அதிரடி ஆட்டகாரரோ, அதே அளவிற்கு இளகிய மனம் படைத்தவர்.

ஆம், .தன் வாழ்நாளில் சம்பாதித்த பணத்தை எல்லாம் அவர் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு இலவச மல்டி ஸ்பெஷல் மருத்துவமனை அமைப்ப தற்கும் மற்றும் தரமான சாலைகள் போடுவதற்கும் செலவு செய்துள்ளார். இதுவரை அவர் இதற்காக 17 மில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளார். இந்திய மதிப்பில் 77 கோடிக்கும் மேல் இருக்கும். முன்னதாக ஷாஹித் அப்ரிதி தனது கிராமத்தின் பாதை நிர்மாணத்துக்கு ஒரு மில்லியன் அன்பளிப்பு செய்திருந்தமை குறிப் பிடத்தக்கது. அப்ரிடியின் மனிதநேய செயலை பாராட்டுவோம்.. வாழ்த் துவோம்..!

இன்னும் சிலரோ  ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் அகடமி தொடங்கு வார்கள். அதில் புதிய ஆட்டகாரரர்கள் நுழைவதற்கு லட்சக்கணக்கில் பணம் வாங்குவார்கள். அவர்களின் சம்பளத் தில் இருபது சதவீதம் வாழ்நாள் முழு வதும் தரகு பெறுவார்கள். இது தானே இங்கே நடந்து கொண்டு இருக்கிறது.

 

Madawalanews. Lk

Sun, 06 Jan 2019 21:19:26 +0530

வெற்றிகரமாக கத்தாரில் நடந்து முடிந்த நியாஸ் ஏ மஜித் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டி!

வெற்றிகரமாக கத்தாரில் நடந்து முடிந்த நியாஸ் ஏ மஜித் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டி! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

மாவனல்லை ஸாஹிராவின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளை ஏற்பாட்டில் நடைபெற்ற நியாஸ் ஏ மஜித் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை, ஜனவரி 04ஆம் திகதி மீஸைத் விளையாட்டு அரங்கத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

 

 

ஸாஹிராவின் ஓய்வு பெற்ற ஆசிரியரும் மாவனல்லை நகரின் சமூக நலன் விரும்பியும்,முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான மர்ஹூம் நியாஸ் ஏ மஜித் அவர்களுக்குக்கான கௌரவிப்பாகவே இக்கிண்ணம் பெயரிடப்பட்டு இருந்தது.

 

இத்தினத்தில் மாவனல்லை நகரின் இரு முக்கிய பாடசாலைகளாக விளங்கும் ஸாஹிரா மற்றும் பதுரியாவின் பழைய மாணவர்களுக்கிடையிலான ஷா ஆசிப் கிண்ண கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றது. ஷா ஆசிப் இளம் வயதில் உயிர் நீத்த ஸாஹிராவின் சிறந்து விளங்கிய ஒரு கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பதுரியாவின் பழைய மாணவர் அணி வெற்றி பெற்று முதல் ஷா ஆசிப் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

 

இந்த சுற்றுப் போட்டியில் ஐந்து அணிகள் மோதியதுடன் அவை பாடசாலையின் செயற்படும் இல்ல விளையாட்டு போட்டியில் உள்ளவாறு கோடோவா, அல் ஸஹ்றா, நிஸாமியா, அல் அஸ்ஹர் எனவும், ஐந்தாவது அணியாக நிர்வாக குழு அணியும் களம் இறங்கினர்.

 

நியாஸ் ஏ மஜித் கிண்ணத்துக்கான இறுதி போட்டிக்கு அல் அஸ்ஹர் அணியும் அல் ஸஹ்ரா அணியும் தகுதிபெற்றன. இறுதி போட்டியில் அல் ஸஹ்றா அணி அல் அஸ்ஹர் அணியை தோற்கடித்து கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

 

பின்வரும் வீரர்கள் சிறப்பாக விளையாடி சிறந்த வீரர்களுக்கான விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

 

இறுதி ஆட்ட வீரன் அல் ஸஹ்றா அணியின் முகம்மது மபாஸ்

 

சிறந்த துடுப்பாட்ட வீரன் கோடோவா அணியின் முகம்மத் அப்fலால்

 

சிறந்த பந்துவீச்சு முகம்மது அர்சாட்

 

சுற்றுப் போட்டியின் ஆட்ட நாயகன் முகம்மது மபாஸ்

 

ஆகியோர் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

 

இச்சுற்றுப் போட்டியின் நோக்கங்கள் பற்றி ஸாஹிரா பழைய மாணவர் சங்க கட்டார் கிளை தலைவர் முகம்மத் லாபிர் கருத்து தெரிவிக்கையில், "இச்சுற்றுப் போட்டியின் நோக்கம் கட்டார் வாழ் எமது ஸாஹிராவின் பழைய மாணவர்கள் மத்தியிலான உறவை மேம்படுத்துவதும் வளர்ப்பதும் ஆகும். மேலும் XZahirians அமைப்பு ஆரம்பிக்கும் ஸாஹிராவின் தேவை மிகுந்த மாணவர்களுக்கான Touching Hearts புலமைப் பரிசில் திட்டத்தின் ஆரம்ப நிதிக்கான பங்களிப்பை இதன் மூலம் நாம் பூர்த்தி செய்யும் உயரிய நோக்கத்தையும் இது கொண்டுள்ளது" என தெரிவித்தார். மேலும் இச்சுற்றுப் போட்டியை சிறந்த முறையில் நடத்தி முடிப்பதற்காக சகல விதத்திலும் உதவிய நிர்வாக குழு உறுப்பினர்கள்,அங்கத்தினர்கள், பதுரியாவின் பழைய மாணவர்கள், மற்றும் நிதி ஆதரவு தந்து உதவிய நிறுவனங்களுக்கும் தனது நன்றிகளை தெறிவிப்பதாகவும் கூறினார்.

 

இந்நிகழ்வில் ஸாஹிராவின் பழைய மாணவர்கள்,குடும்ப உறுப்பினர்கள், மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்

 

Sun, 06 Jan 2019 07:08:30 +0530

2018-ன் சிறந்த வீரர்களை கொண்ட ஒருநாள் அணி!!

2018-ன் சிறந்த வீரர்களை கொண்ட ஒருநாள் அணி!! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

2018ம் ஆண்டில் டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடிய 11 வீரர்களை கொண்ட 2018ம் ஆண்டின் சிறந்த டி20 அணியை ஹர்ஷா போக்ளே தேர்வு செய்திருந்தார். தற்போது 2018ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்துள்ளார். 

2018ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான ஒருநாள் தொடருடன் தொடங்கியது. இந்த ஆண்டில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து ஆடியது. பின்னர் ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர் என இந்த ஆண்டு இந்திய அணிக்கு படுபிசியாகவே அமைந்தது. 

இந்நிலையில், இந்த ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடிய வீரர்களை கொண்டு இந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்துள்ளார் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே. 

இந்த அணியின் தொடக்க வீரர்களாக சற்றும் யோசிக்காமல் எந்தவித தயக்கமுமின்றி ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவானை தேர்வு செய்துள்ளார். இந்த ஆண்டு ரோஹித் - தவான் தொடக்க ஜோடிக்கு மற்றுமொரு சிறந்த ஆண்டாகவே இருந்தது. இருவரும் சிறப்பாக ஆடி இந்திய அணிக்காக வெற்றிகளை பெற்றுக்கொடுத்தனர். ரோஹித் சர்மா 73.57 என்ற சராசரியுடன் இந்த ஆண்டில் 1030 ரன்களையும் தவான் 897 ரன்களையும் குவித்துள்ளனர். 

மூன்றாம் வரிசை வீரராக சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரான விராட் கோலியை தேர்வு செய்துள்ளார். விராட் கோலியை தேர்வு செய்ததிலும் எந்தவித ஆச்சரியமும் இருக்காது. ஏனெனில் அந்த இடத்தை அவரைத்தவிர வேறு எந்த வீரராலும் அவ்வளவு சிறப்பாக நிரப்பிவிடமுடியாது. 

நான்காம் வரிசை வீரராக இங்கிலாந்தின் ஜோ ரூட்டையும் ஐந்தாம் வரிசை வீரராக விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரையும் தேர்வு செய்துள்ளார். ஆல்ரவுண்டர்களாக ஷாகிப் அல் ஹாசன் மற்றும் இலங்கையின் திசாரா பெரேரா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டின் நம்பர் 1 ஆல்ரவுண்டரான ரஷீத் கான் மற்றும் இந்தியாவின் சைனாமேன் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் ஸ்பின்னர்கள். பும்ரா மற்றும் ரபாடா ஆகிய இருவரையும் வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்ந்தெடுத்துள்ளார். 

2018ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் அணி என ஹர்ஷா போக்ளே தேர்வு செய்துள்ள அணி:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ஜோ ரூட், ஜோஸ் பட்லர், ஷாகிப் அல் ஹாசன், திசாரா பெரேரா, ரஷீத் கான், குல்தீப் யாதவ், ரபாடா, பும்ரா. 

Fri, 28 Dec 2018 16:54:36 +0530

உலக உடல் கட்டழகன் போட்டியில் சம்பியனாகிய தமிழன் லூசியன் அன்ரன் புஷ்பராஜ்!

உலக உடல் கட்டழகன் போட்டியில் சம்பியனாகிய தமிழன் லூசியன் அன்ரன் புஷ்பராஜ்! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

ஆசியாவின் கறுப்புச் சிங்கம் என்று வர்ணிக்கப்படும் இலங்கையின் நட்சத்திர உடற்கட்டழகரான லூசியன் அன்ரன் புஷ்பராஜ், உலக உடற்கட்டழகர் வல்லவர் போட்டியில் முதற்தடவையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

 

உலக உடற்கட்டழகர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 10ஆவது தடவையாகவும் இடம்பெற்ற 10ஆவது உடற்கட்டழகர் வல்லவர் போட்டிகள் தாய்லாந்தின் சியெங் மாய் நகரில் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமாகியது.

 

உலக நாடுகளைச் சேர்ந்த சுமார் 117 வீரர்கள் பங்குபற்றிய இம்முறை போட்டிகளில் 100 கிலோ கிராம் மற்றும் அதற்கு மேற்பட்ட எடைப் பிரிவில் பங்குபற்றிய லூசன் புஷ்பராஜ், இறுதிப் போட்டியில் இந்தியா, ஈரான், ஈராக் மற்றும் ஹங்கேரி உள்ளிட்ட உலகின் முன்னணி நட்சத்திர உடற்கட்டழகரையெல்லாம் பின்தள்ளி முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இதன்படி, உலக உடற்கட்டழகர் போட்டியொன்றில் பதக்கமொன்றை வென்ற முதல் இலங்கையராகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.

அண்மைக்காலமாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற அவர், 2ஆவது தடவையாகவும் சர்வதேச மட்ட போட்டியொன்றில் பதக்கமொன்றை வென்றமை சிறப்பம்சமாகும்.

 

போட்டியின் பிறகு லூசன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், ”உலகின் முதல் 5 இடங்களில் உள்ள வீரர்களை வீழ்த்தித்தான் நான் இந்த வெற்றியைப் பெற்றுக் கொண்டேன். அதேபோல, போட்டியில் எப்படியாவது பதக்கமொன்றை வெல்வேன் என்ற நம்பிக்கையுடன் தான் களமிறங்கினேன். எனது நாட்டுக்காக இந்தப் பதக்கத்தை வென்று கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். எனது ரசிகர்களுக்கும், என்னை இதுவரை அழைத்துவருவதற்கு உதவியாக இருந்த இலங்கை மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” எனத் தெரிவித்தார்.

இதற்கு முன் ஆசிய உடற்கட்டழகர் சம்பியன் பட்டத்தையும் வென்ற லூசனுக்கு எதிராக ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது. இதனால், இலங்கை உடற்கட்டழகர் சம்மேளனத்துடன் பல முரண்பாடுகளிலும் அவர் ஈடுபட்டார். விளையாட்டுத்துறை அமைச்சு அல்லது இலங்கை உடற்கட்டழகர் சம்மேளனத்தின் எந்தவொரு உதவியும் இன்றி தனது தனிப்பட்ட செலவில் சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி இலங்கைக்கு பெருமையை தேடிக் கொடுக்கின்ற லூசனுக்கு உரிய கௌரவமும், வரவேற்பும் வழங்கப்படாது என இலங்கை உடற்கட்டழகர் சம்மேளனம் பல தடவைகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் அமெரிக்காவின் டெக்சாஸில் நடைபெற்ற மிஸ்டர் அட்லஸ் போட்டியில் 4ஆம் இடத்தையும், தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய உடற்கட்டழகர் வல்லவர் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்ற அவர், இவ்வருடம் ஆஸ்திரியாவில் நடைபெற்ற சர்வதேச உடற்கட்டழகர் போட்டியில் 2ஆம் இடத்தையும் பெற்றார். அதனைத் தொடர்ந்தே தற்போது அவர் உலக சம்பியனாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

குவைட் நாட்டில் உள்ள உடற்பயிற்சியகம் ஒன்றில் பயிற்சியாளராகக் கடமையாற்றுகின்ற லூசன், 2013ஆம் ஆண்டு கோல்டன் ஸ்ரீலங்கா உடற்கட்டழகராகவும், அதே ஆண்டு 100 கிலோ கிராமிற்கு அதிகமான எடைப்பிரிவில் இலங்கையின் உடற்கட்டழகராகவும் தெரிவானார்.

இதன் பிறகு 2006ஆம் ஆண்டு குவைட்டில் நடைபெற்ற உடற்கட்டழகர் போட்டித் தொடரில் வெண்கலப் பதக்கத்தை வென்ற அவர், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய உடற்கட்டழகர் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(மூலம் : த பப்பரே)

Tue, 18 Dec 2018 08:12:44 +0530

பதுரியன்ஸ் பாஷ் 2018 - மாபெரும் உதைபந்தாட்ட போட்டி

பதுரியன்ஸ் பாஷ் 2018 - மாபெரும் உதைபந்தாட்ட போட்டி | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்க கிளையின் ஏற்பாட்டில், பழைய மாணவர்களுக்கு இடையிலான புட்சல் கால்பந்து போட்டி (Baduriyan's Bash 2018 - Inter Batch Futsal Tournament) நேற்றுடன் இனிதே நிறைவு பெற்றது. கடந்த இரு தினங்களாக (சனி 15.12.2018, ஞாயிறு 16.12.2018) நடாத்தப்பட்ட இந்த புட்சல் போட்டியானது மிகவும் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. 

பதுரியா மத்திய கல்லூரி மைதானத்தில் இனிதே நிறைவு பெற்ற இந்த போட்டியை கண்டுகளிக்க நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பாடசாலையின் பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். இது நீண்ட நாட்களுக்கு பிறகான அணைத்து பழைய மாணவர்களினதும் சிறந்த ஒன்று கூடுதலாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.. 

லீக் முறையில் நடந்த இந்த புட்சல் தொடரில் 33 அணிகள் பங்கேற்றனர். மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியானது 25 வயதுக்கு கீழ், 25 முதல் 35 வயதெல்லையினர், 35 வயதுக்கு மேல் என்ற அடிப்படையில் இடம்பெற்றது. இதில் மூன்று குழுக்களிலும் வெற்றி பெற்றவர்களுக்கு சாம்பியன்ஸ், ரன்னர்ஸ்-அப் கிண்ணங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

இதில் 25 வயதுக்கு கீழ் பிரிவில் "குழு 84" அணி சாம்பியன் ஆகவும் "குழு 87" அணி ரன்னர்ஸ்-அப் ஆகவும் கோப்பையை வென்றனர். 25 முதல் 35 வயது வரை பிரிவில் "குழு 78" அணி சாம்பியன் ஆகவும் "குழு 80" அணி ரன்னர்ஸ்-அப் ஆகவும் கிண்ணங்களை சுவீகரித்தனர். 35 வயதுக்கு மேல் பிரிவில் "ஓர்கிட் அணி" சாம்பியன் ஆகவும் "குழு 64" அணி ரன்னர்ஸ்-அப் ஆகவும் வெற்றி பெற்று நிகழ்வை அலங்கரித்தனர்.

இதில் ஒவ்வொரு பிரிவுகளிலும் முறையே, திரு. நப்ரின் தாஹிர் (25 வயதுக்கு கீழ் பிரிவில்), திரு. சப்ராஸ் (25 முதல் 35 வயது வரை பிரிவில்), திரு. அஸ்மி ரஷீத் (35 வயதுக்கு மேல் பிரிவில்) சிறந்த வீரர்களாக தெரிவுசெய்யப்பட்டு பதக்கங்களை வென்றனர்.

மாவனல்லை உதைபந்தாட்ட வரலாற்றில் தலை சிறந்த வீரர்களை உருவாக்கிய பதுரியா மத்திய கல்லூரி இந்த நிகழ்வின் மூலம் உதைபந்தாட்டத்தில் தனது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. கல்வி மற்றும் இணைபாடவிதான செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் இந்த பாடசாலையானது இந்த நிகழ்வை தனக்கே உரிய சிறப்பம்சங்களுடன் வெற்றிகரமாக நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. 

சுமார் 3,000 மாணவர்களைக் கொண்ட பதுரியா மத்திய கல்லூரி, சபரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள தமிழ் மொழி மூல முஸ்லிம் பாடசாலைகள் தரவரிசையில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல பெருமைகளை கொண்ட இந்த பாடசாலை முதல் முறையாக நடத்திய இந்த  நிகழ்வு கல்லூரியின் வரலாற்றில் முக்கிய மைல்கல் என்றால் மிகையாகாது. கடந்த 8 டிசம்பர் 2018 ஆம் திகதி இந்த விழாவின் மாபெரும் துவக்க நிகழ்வு நடை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Mon, 17 Dec 2018 23:36:11 +0530

ஆசிய கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை வளர்ந்துவரும் அணியினர்.

ஆசிய கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை வளர்ந்துவரும் அணியினர். | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

.

இன்று  ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற வளர்ந்து வரும்  வீரர்களுக்கான  ஆசிய கிண்ண கிரிக்கட்  சுற்றுப்போட்டியின் இறுதி போட்டியில் இந்திய அணிக்கெதிராக இலங்கை அணியினர் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துள்ளனர்.

எட்டு நாடுகள் பங்குபற்றிய இத்  தொடரில் குழு A அணிகளில் காணப்பட்ட இலங்கை மற்றும் இந்திய அணிகள் இறுதிப்போட்டியில் பங்குபெற்றியது. நாணய சூழட்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் தன அணியை துடுப்பெடுத்தாட பணித்தார். 

சம்மு அசான் தலைமையிலான இலங்கை வளர்ந்து வரும் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 270 ஓட்டங்களை குவித்தது இலங்கை அணி சார்பாக கமிந்து மெண்டிஸ் 55 பந்துகளை எதிர் கொண்டு 61 ஓட்டங்களையும்  ஹசித போயோகோட 62 பந்துகளை எதிர் கொண்டு 54 ஓட்டங்களையும் செஹான் ஜயசூரிய 56 பந்துகளில் 46 ஓட்ட்ங்களையும் அதிகமாக குவித்தனர். இந்திய அணி சார்பாக ராஜ்கபூட் 61 ஓட்ட்ங்களை கொடுத்து 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து 270 ஓட்ட்ங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய வளர்ந்து வரும்  அணியினர் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகளை இழந்து 267 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தனர். ஜெயண்ட் ஜாதேவ் 85 பந்துகளில் 71 ஓட்ட்ங்களையும் சாகிர் முலானி 44 பந்துகளில் 46 ஓட்ட்ங்களையும் அதிக பட்ஷமாக குவித்தனர். இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் அசேல குணரட்ன 38 ஓட்ட்ங்களை கொடுத்து 3 விக்கட்டுகளையும் லசித் அம்புல்தெனிய 37 ஓட்ட்ங்களை கொடுத்து 2 விக்கட்டுகளையும் கைப்பெற்றினர்.

   2018 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத்தை இலங்கை வளர்ந்து வரும் அணியினர் சுவீகரித்ததோடு இறுதி போட்டியின் ஆட்டணாயகனாகவும் தொடரின் சிறப்பாட்டக்காரராகவும் கமிந்து மெண்டிஸ் தெரிவு செய்யப்பட்டார்.


CitizenMedia

Sat, 15 Dec 2018 23:35:15 +0530

புதிய சர்சையில் சிக்கியுள்ள அகில தனஞ்சய - சர்வதேச கிரிக்கெட் பேரவை

புதிய சர்சையில் சிக்கியுள்ள அகில தனஞ்சய - சர்வதேச கிரிக்கெட் பேரவை | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்து வீச்சு முறையில் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவை இதனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 14 நாட்களுக்குள் அது தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

எனினும், எதிர்வரும் 14 ஆம் திகதி இங்கிலாந்து அணிக்கெதிராக கண்டி - பல்லேகல சர்வதேச விளையாட்டு திடலில் இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் அகில தனஞ்சயவிற்கு பந்து வீச முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanks  : Sooriyan News

Sun, 11 Nov 2018 07:27:40 +0530

ஆஸ்திரேலியாவை அடித்து துவம்சம் செய்த தென்னாப்பிரிக்கா!!

ஆஸ்திரேலியாவை அடித்து துவம்சம் செய்த தென்னாப்பிரிக்கா!! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

தொடரை வெல்வது எந்த அணி என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியின் டுபிளெசிஸ் மற்றும் டேவிட் மில்லர் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி சதமடித்து அசத்தினர்.

தொடரை வெல்வது எந்த அணி என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியின் டுபிளெசிஸ் மற்றும் டேவிட் மில்லர் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி சதமடித்து மிரட்டினர். 

தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இதில் முதலில் ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றிருக்கின்றன. 

இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் டி காக் மற்றும் ஹெண்டிரிக்ஸ் ஆகிய இருவரும் ஒற்றை இலக்கங்களில் வெளியேறினர். இவர்களை தொடர்ந்து மார்க்ரமும் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். 55 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்க அணி. 

அதன்பிறகு தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ் மற்றும் டேவிட் மில்லர் ஆகிய இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டெடுத்தனர். இருவருமே விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் அதேநேரத்தில் சீரான வேகத்தில் ரன்களையும் சேர்த்தனர். அபாரமாக ஆடிய இருவருமே சதமடித்தனர். 

16வது ஓவரிலிருந்து 49வது ஓவர் வரை இருவரும் களத்தில் நின்று ஆடினர். நான்காவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 252 ரன்களை குவித்தனர். டுபிளெசிஸ் 125 ரன்களையும் டேவிட் மில்லர் 139 ரன்களையும் குவித்தனர். 50 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 320 ரன்களை குவித்தது. 

இதையடுத்து 321 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி ஆடிவருகிறது.

Sun, 11 Nov 2018 03:34:21 +0530

அசால்ட்டா இருந்தீங்கன்னா அம்போனு போயிடும்!! இந்திய அணிக்கு சேவாக் கடும் எச்சரிக்கை

அசால்ட்டா இருந்தீங்கன்னா அம்போனு போயிடும்!! இந்திய அணிக்கு சேவாக் கடும் எச்சரிக்கை | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, இந்திய மண்ணில் ஆதிக்கம் செலுத்துகிறதே தவிர வெளிநாடுகளில் தொடர்ந்து சொதப்பிவருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி, 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, இந்திய மண்ணில் ஆதிக்கம் செலுத்துகிறதே தவிர வெளிநாடுகளில் தொடர்ந்து சொதப்பிவருகிறது. 

தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமானது. ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் வீழ்த்துவதன் மூலம் இந்திய அணி தனது பலத்தை நிரூபிக்க முடியும். ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித்தும் வார்னரும் இல்லாதது இந்திய அணிக்கு பலமாக அமையும் எனவும் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

 

ஆனால் பல முன்னாள் வீரர்களின் கருத்திலிருந்து சேவாக் முரண்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய தொடர் குறித்து பேசியுள்ள வீரேந்திர சேவாக், ஸ்மித்தும் வார்னரும் ஆஸ்திரேலிய அணியில் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமையாது. ஏனெனில் அவர்கள் சொந்த மண்ணில் ஆடுகிறார்கள். தற்போதைய ஆஸ்திரேலிய அணியில் இருக்கும் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் அதிகமாக ஆடிய அனுபவம் இல்லாதவர்கள் என்றாலும் அதிகமான முதல்தர கிரிக்கெட்டில் ஆடியவர்கள் என்பதால் இந்திய அணிக்கு கடும் சவாலாக திகழ்வார்கள் என்று சேவாக் எச்சரித்துள்ளார்.

Sat, 10 Nov 2018 06:06:24 +0530

இரண்டு கைகளிலும் பந்துவீசும் அபார திறமை!! கிரிக்கெட் உலகை வியக்க வைத்த தமிழன்

இரண்டு கைகளிலும் பந்துவீசும் அபார திறமை!! கிரிக்கெட் உலகை வியக்க வைத்த தமிழன் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

ஐபிஎல்லை போலவே தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டு வீரர்கள் மட்டுமே கலந்துகொண்டு ஆடும் இந்த போட்டிகளின் மூலம், இளம் தமிழ் திறமைகளை வெளிக்கொண்டு வர முடிகிறது. 

கடந்த 11ம் தேதி தொடங்கி போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த தொடரில் பல இளம் வீரர்கள் இனம் காணப்பட்டாலும், ஒரு வித்தியாசமான திறமை கொண்ட வீரர் கிரிக்கெட் உலகையே வியந்து பார்க்க வைத்துள்ளார். 

காஞ்சீ வீரன்ஸ் அணியில் ஆடிவரும் மோகித் ஹரிஹரன் என்ற வீரர் தான், இரண்டு கைகளிலும் பந்துவீசும் அபார திறமை கொண்டவர். திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடனான போட்டியில், இடது கை பேட்ஸ்மேன்களுக்கு வலது கையிலும், வலது கை பேட்ஸ்மேன்களுக்கு இடது கையிலும் பந்துவீசியுள்ளார் ஹரிஹரன்.

ஹரிஹரனின் இந்த அபார திறமை கிரிக்கெட் ரசிகர்களை வியக்கவைத்துள்ளது. அவர் இரு கைகளிலும் பந்துவீசும் வீடியோ தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

பந்துவீசுவது மட்டுமல்லாமல், அபாரமாக பேட்டிங் செய்யும் திறன் படைத்தவராகவும் உள்ளார் ஹரிஹரன். திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான போட்டியில்,  50 பந்துகளுக்கு 77 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் ஹரிஹரன் 5 சிக்ஸர்கள் விளாசியிருந்தார். அவர் அடித்த சிக்ஸர்கள் வீடியோவும் டிஎன்பிஎல் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அபாரமான திறமைகளை கொண்ட இந்த இளம் தமிழக வீரர், எதிர்காலத்தில் இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பை கண்டிப்பாக பெறுவார் என்பதில் ஐயமில்லை.

Wed, 25 Jul 2018 03:59:41 +0530

தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்டில் இலங்கை வெற்றி

தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்டில் இலங்கை வெற்றி | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 199 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 338 ஓட்டங்களையும் தென்னாபிரிக்கா 124 ஓட்டங்களையும் பெற்றன.

இன்றைய நான்காம் நாளில் கைவசம் 5 விக்கெட்கள் இருக்க தென்னாபிரிக்காவின் வெற்றிக்கு 351 ஓட்டங்கள் தேவைப்பட்டன.

டெம்பா பவுமா மற்றும் Theunis de Bruyn ஆகியோர் 6ஆவது விக்கெட்காக 123 ஓட்டங்களைப் பகிர்ந்து தென்னாபிரிக்காவின் துடுப்பாட்டத்தை சற்று பலப்படுத்தினர்.

11ஆவது அரைச்சதத்தை எட்டிய டெம்பா பவுமா ரங்கன ஹேரத்தின் பந்துவீச்சில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

Theunis de Bruyn டெஸ்ட் அரங்கில் கன்னி சதத்தை எட்டினார்.

எனினும், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் மேலொங்க தென்னாபிரிக்கா 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

அபாரமாக பந்துவீசிய ரங்கன ஹேரத் 6 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இதன்மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 0 என இலங்கை அணி கைப்பற்றியது.

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 278 ஓட்டங்களால் வெற்றியீட்டியமையும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.

News First

Mon, 23 Jul 2018 05:23:14 +0530

உமர் அக்மல் இறந்து விட்டதாக வெளிவரும் திடுக்கிடும் செய்தி – நடந்தது என்ன?

உமர் அக்மல் இறந்து விட்டதாக வெளிவரும் திடுக்கிடும் செய்தி – நடந்தது என்ன? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் மத்தியதர வரிசை துடுப்பாட்ட வீரர் மற்றும் நட்சத்திர களத்தடுப்பு வீரர் இஸ்லாமாபாத் நகரில் மதக் குழு நடத்திய போராட்டத்தில் இறந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் கடந்த 2 நாட்களாக பரவி வருகிறது.

போராட்டத்தில் இறந்த 6 பேரில் உமர் அக்மலும் ஒருவர் எனக் கூறப்பட்டு இருந்தது. அத்தோடு அதில் உயிரிழந்தவர்களில் ஒருவரின் படத்தை பார்த்த போது அது உமர் அக்மலை போன்றே தென்பட்டது. இதனால் சமூக வலைத்தளங்களில் உமர் அக்மல் இறந்து விட்டார் என்ற செய்தி பரவியது.

இந்த நிலையில் தான் உயிரோடு பாதுகாப்பாக இருப்பதாக உமர் அக்மல் தனது டுவீட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது லாஹூரில் நான் அல்ஹம்துலில்லாஹ் வல்லவன் அல்லாஹ்வின் அருளால் பாதுகாப்பாகவும், நலமாகவும் உள்ளேன். சமூக வலைத்தளங்களில் வெளிவரும் பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இன்ஷா அல்லாஹ் #National20cup2017 தொடரின் அரையிறுதிப் போட்டியில் நான் இணைவேன்” என்று கூறியுள்ளார்.

Wed, 29 Nov 2017 12:20:05 +0530

Loudspeaker | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பிரபலமானவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 08:33:54 +0530

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...