தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதி போக்குவரத்து தடை

தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதி போக்குவரத்து தடை | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் கெட்டபுலா பகுதியில் (13.10.2020) அன்று மதியம் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைபட்டது.

இதனையடுத்து அப்பிரதேச வாசிகள் இணைந்து வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குறித்த மரம் முறிந்து வீழ்ந்ததால் சுமார் இரண்டு மணித்தியாலயத்திற்கு மேல், போக்குவரத்து தடைபட்டிருந்தது. இதனால் கெட்டபுலா, நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளுக்கு சென்ற பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

அத்தோடு தொலைபேசி இணைப்புகள் மீது முறிந்து வீழ்ந்ததால் அப்பகுதிக்கான தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

Wed, 14 Oct 2020 00:38:23 +0530

16 வயதுக்கும் குறைந்த பாடசாலை மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு

16 வயதுக்கும் குறைந்த பாடசாலை மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

16 வயதுக்கும் குறைந்த பாடசாலை மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இத்தீர்ப்பினை நேற்று திங்கட்கிழமை(12)  வழங்கியுள்ளார்.

இவ்வாறு 7 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளவர் திருகோணமலை மொரவெவ,குணவர்தனபுர பகுதியைச் சேர்ந்த சானக்க என்றழைக்கப்படும் கிறிஸ்தோம்பூ பதுகே சுரங்க சில்வா (30வயது) எனவும் தெரியவருகின்றது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரை உள்ள கால பகுதியில் மொரவெவ சிங்கள மகா வித்தியாலயத்திற்கு கல்வியைக் கற்பதற்காக சென்ற மாணவியிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டதாக அம்மாணவியின் வகுப்பாசிரியையினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மூன்றாம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த எதிரிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் குறித்த நபருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இரண்டு குற்றச்சாட்டுக்களிலும் இவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு  திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தனது தீர்ப்பினை திறந்த நீதிமன்றில் வாசித்துக் காட்டியுள்ளார். இதேவேளை  பாரதூரமான பாலியல் குற்றச்சாட்டை புரிந்த குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்துமாறும், குறித்த பணத்தை செலுத்த தவறினால் ஒரு வருட கால கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை  அரசுக்கு 25,000 ரூபாய் தண்டம் செலுத்துமாறும் அந்த பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் ஆறு மாத காலம் கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

Wed, 14 Oct 2020 00:35:56 +0530

பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை

பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

தலவாக்கலை – டயகம பிரதான வீதியில் லிந்துலை - அகரகந்தை பகுதியில் (13.10.2020) அன்று அதிகாலை பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைபட்டது.

இதனையடுத்து அப்பிரதேச வாசிகள் மற்றும் லிந்துலை பொலிஸார் ஆகியோர் இணைந்து வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

குறித்த மரம் முறிந்து வீழ்ந்ததால் சுமார் மூன்று மணித்தியாலயத்திற்கு மேல், போக்குவரத்து தடைபட்டிருந்தது. இதனால் டயகம, அக்கரப்பத்தனை, மெராயா ஆகிய பகுதிகளுக்கு சென்ற பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

அத்தோடு தொலைபேசி இணைப்புகள் மீது முறிந்து வீழ்ந்ததால் அப்பகுதிக்கான தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

Wed, 14 Oct 2020 00:29:54 +0530

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இருவருக்கிடையில் ஏற்பட்ட போட்டியால் நேர்ந்த விபரீதம்

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இருவருக்கிடையில் ஏற்பட்ட போட்டியால் நேர்ந்த விபரீதம் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

அட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் மல்லியப்பு சந்தி பகுதியில் இன்று (12.10.2020) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.  அவர் சிகிச்சைக்காக டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டகலையிலிருந்து அட்டன் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், அட்டனிலிருந்து கொட்டகலை நோக்கி சென்ற காருடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இருவருக்கிடையில் ஏற்பட்ட போட்டியால் இருவரும் வேகமாக பயணித்துள்ளனர். இதனையடுத்து இரு சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டதில் ஒரு மோட்டார் சைக்களில் காரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் காரும், மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளன. மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தப்பிச்சென்றுள்ளார். பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mon, 12 Oct 2020 20:20:47 +0530

அட்டனில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

அட்டனில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

அட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டன், ஹிஜ்ஜிராபுர பகுதியில் வீட்டினுள் இறந்த கிடந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (12.10.2020) திகதி மீட்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டு உரிமையாளர் வழங்கி தகவலினை அடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டவர் பழணியாண்டி வயது 60 மதிக்கதக்கவர் என்றும் இவர் ஒரு முச்சக்கரவண்டி சாரதி என்றும் இவர் மூன்று நாளுக்கு முன் இறந்து இருக்கலாம் என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளன.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

குறித்த நபர் தனது வீட்டின் முன்னுள்ள வீதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் முச்சக்கர வண்டியினை நிறுத்தி விட்டு சென்ற நிலையில் திரும்பி தனது முச்சக்கர வண்டியினை எடுக்காததால் சந்தேகம் கொண்ட வீட்டு உரிமையாளர் அவரின் குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து அவரின் உறவினர்கள் இவர் பற்றி தகவல் எதுவும் தெரியாது என தெரிவித்ததனை அடுத்து உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுத்த பொலிஸார் அவர் நிர்வாணமாக வீட்டினுள் இறந்து கிடப்பதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் கூலிக்காக இந்த வீட்டில் தனது 2வது முறை திருமணமான மனைவியுடன் வாழ்ந்து வந்தாகவும் 2 நாட்களுக்கு முன் அவரின் மனைவி வீட்டை விட்டு சென்றதாகவும் அதன் பின் குறித்த நபரையும் காணவில்லை. என்றும் மின்சார பட்டியில் மற்றும் தபால் காரர்கள் வந்து கதவு தட்டிய போதும் திறக்கப்படவில்லை. என்றும் அயலவர்கள் தெரிவித்தனர்.

குறித்த நபர் நோய்வாய்க் காரணமாக இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணங்களால் இறந்தரா என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் அட்டன் கைரேகை அடையாளப் பிரிவு மற்றும் அட்டன் பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் குறித்த நரேந்திரன் ஜெயந்திநாத் வீட்டு உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில், குறித்த நபர் எனது வீட்டில் தான் கூலிக்கு இருக்கிறார் கடந்த 2 நாட்களுக்கு முன் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ எடுக்கப்படவில்லை நாய்கள் அதில் படுத்து உறங்கியதனால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து அவரின் மகனுக்கு இந்த தகவலினை வழங்கினேன். அதனை தொடந்து இன்று (12.10.2020) காலை என்னிடம் அவரது மகன் தொடர்பு கொண்டு அவர் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவித்தார். அதனை தொடர்ந்து நான் பொலிஸாருக்கு அறிவித்தேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Mon, 12 Oct 2020 20:02:39 +0530

கொரோனா வைரஸ் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

கொரோனா வைரஸ் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் வகையில் அட்டன் நகர் பகுதியில் மக்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை திருச்சபை கொழும்பு மறை மாவட்டத்தின் ஏற்பாட்டில் தோட்ட சமூக அபிவிருத்தி பணியகத்தின் ஊடாக 12.10.2020 அன்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தோட்ட சமூக அபிவிருத்தி பணியகத்தின் மாவட்ட இணைப்பாளர் என்.நித்தியா, முகாமையாளர் என்.லோகராணி, மஸ்கெலியா பிரதேச சபையின் சுகாதார நிர்வாகி எஸ்.ஆனந்தன் உட்பட உத்தியோகத்தர்கள், இளைஞர்கள் இணைந்து குறித்த விழிர்ப்புணர்வு துண்டுப்பிரசுரத்தை மக்களுக்கு வழங்கி வைத்ததோடு விழிப்புணர்வு பதாதைகளையும் காட்சிப்படுத்தினர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்வது தொடர்பான வழி முறைகள் அடங்கிய குறித்த துண்டுப்பிரசுரம் அட்டன் நகர் பகுதி, அரச தனியார் பேருந்து தரிப்பிடம், டிக்கோயா, பொகவந்தலாவ, மஸ்கெலியா, நோர்வூட் அகிய பிரதான நகரங்கள் போன்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Mon, 12 Oct 2020 19:59:22 +0530

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆரம்பம் - மாணவர்கள் சிலர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றவில்லை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆரம்பம் - மாணவர்கள் சிலர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றவில்லை | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

கல்விப் பொதுத் தராதர உயர்தப் பரீட்சை கடும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று காலை (12.10.2020) ஆரம்பமானது. மலையக பகுதிகளில் இன்று காலையும் ஆங்காங்கே மழை பெய்தது, கடும் குளிரும் நிலவியது. எனினும், மாணவர்கள் உற்சாகத்துடன் பரீட்சை நிலையங்களை நோக்கி சென்றதை காணமுடிந்தது.

கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை, மொனறாகலை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள மாணவர்கள் நேரங்காலத்தோடு பரீட்சை நிலையங்களுக்கு சென்றதுடன் சுகாதார வழிகாட்டல்களையும் முழுமையாக பின்பற்றிருந்தனர்.

எனினும், ஒரு சில மாணவர்கள் முகக்கவசம் அணிவதற்கு மறந்திருந்தனர். அவ்வாறானவர்களுக்கு பாடசாலை அதிபர்களால் உரிய ஆலோசனை வழங்கப்பட்டு, முகக்கவசம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முகக்கவசம் அணியாமல் பரீட்சை நிலையங்களுக்கு வரக்கூடாது எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

பாடசாலைகளுக்கு முன் கைகளை கழுவுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொற்றுநீக்கம் செய்யப்பட்டு, சமூக இடைவெளியைக் கடைபிடித்து உரியவகையில் பரீட்சை நிலையங்களும் தயார் செய்யப்பட்டிருந்தன. சில மாணவர்களை பெற்றோர் அழைத்து வந்திருந்தனர்.

அந்தவகையில், அட்டன் கல்வி வலயத்தில் 26 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 3161 மாணவர்கள் பரீட்சை எழுதவுள்ளனர். தமிழ் மொழி மூலம் 1392 மாணவர்களும், சிங்கள மொழி மூலம் 800 மாணவர்களும், தனியார் பரீட்சாத்திகள் 969 பேரும் பரீட்சை எழுத அனுமதியை பெற்றுள்ளனர்.

இம்முறை 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 பரீட்சாத்திகள் உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் 3 இலட்சத்து 19 ஆயிரத்து 485 பேர் புதிய பாடத்திட்டத்திலும் 43 ஆயிரத்து 339 பேர் பழைய பாட திட்டத்திலும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

புதிய பாடத்திட்டத்தில் 2 இலட்சத்து 77 ஆயிரத்து 580 பேர் பாடசாலை மூல பரீட்சாத்திகளாவர். எஞ்சிய 41 ஆயிரத்து 905 பேர் தனியார் பரீட்சாத்திகளாவர். உயர்தர பரீட்சைகளுக்காக நாடளாவிய ரீதியில் 2648 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், 316 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Mon, 12 Oct 2020 19:51:21 +0530

50 அதிகமான மக்களை கொண்டு ஆராதனை நடத்திய சமய தலம் ஒன்றுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் எச்சரிக்கை

50 அதிகமான மக்களை கொண்டு ஆராதனை நடத்திய சமய தலம் ஒன்றுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் எச்சரிக்கை | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

அட்டன் பகுதியில் உள்ள பிரபல கத்தோலிக்க மதத்தலம் ஒன்றில் 50 மேற்பட்ட நபர்களை கொண்டு ஆராதனை நடத்திய அதன் பொறுப்பாளருக்கு அட்டன் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.

குறித்த தேவ ஆராதனையுில் 50 இற்கும் அதிகமான பொது மக்கள் கலந்து கொண்டிருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமையவே குறித்த சமயதலம் இன்று (11.10.2020) சோதனைக்குட்படுத்தப்பட்டது.

அதன் போது 145 பேர் இந்த ஆராதனையில் கலந்து கொண்டிருந்தனர். குறித்த நபர்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியிருந்த போதிலும் அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட 50 பேரை விட அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்ததனால் இவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

இனிவரும் காலங்களில் குறித்த நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் வழக்கு தாக்கல் செய்யப்போவதாகவும் பொது சுகாதா பரிசோதகர்கள் தெரிவித்தனர்.  

Sun, 11 Oct 2020 13:36:26 +0530

நுவரெலியா மாவட்டத்தில் புலமை பரிசில் பரீட்சைக்கு 79 பரீட்சை மத்திய நிலையங்களில் 7938 மாணவர்கள் பரீட்சை எழுத அனுமதி - சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மாணவர்கள் வருகை

நுவரெலியா மாவட்டத்தில் புலமை பரிசில் பரீட்சைக்கு 79 பரீட்சை மத்திய நிலையங்களில் 7938 மாணவர்கள் பரீட்சை எழுத அனுமதி - சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மாணவர்கள் வருகை | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

கொரோனா மற்றும் கொட்டுமழையினையும் பொருட்படுத்தாது மலையகத்தில் உள்ள தரம் ஐந்து புலமை பரிசில் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், கொட்டும் மழையினூடான கடும் காற்று, குளிர் ஆகியன பொருட்ப்படுத்தாது மலையக மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர்.

இன்று (11.10.2020) காலை 9.30 மணிக்கு ஆரம்பமான தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைக்கு காலை 8.00 மணி முதல் மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் மிகவும் உற்சாகமாக வருகை தந்திருந்தனர்.

தரம் ஐந்து புலமை பரிசில் நடைபெறும் சகல பாடசாலைகளிலும் சுகாதார அறிவுரைகளுக்கமைவாக நேற்றைய தினம் (10.10.2020) தொற்று நீக்கம் செய்யப்பட்டன.

எனினும் நோர்வூட் பகுதியில் சில பாடசாலைகள் தொற்று நீக்கம் செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்கள் பரீட்சைக்கு மிகவும் பாதுகாப்பான முறையில் தோற்றுவதற்கான சுகாதார ஏற்பாடுகளை சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கல்வி அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில், அட்டன் கல்வி வலயத்தில் 43 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 3788 மாணவர்கள் பரீட்சை எழுதவுள்ளனர். தமிழ் மொழி மூலம் 2181 மாணவர்களும், சிங்கள மொழி மூலம் 1607 மாணவர்களும் பரீட்சை எழுத அனுமதியை பெற்றுள்ளனர்.

அத்தோடு, நுவரெலியா கல்வி வலயத்தில் 36 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 4150 மாணவர்கள் பரீட்சை எழுதவுள்ளனர். தமிழ் மொழி மூலம் 3300 மாணவர்களும், சிங்கள மொழி மூலம் 850 மாணவர்களும் பரீட்சை எழுத அனுமதியை பெற்றுள்ளனர்.

Sun, 11 Oct 2020 13:27:08 +0530

முச்சக்கரவண்டி விபத்து - மூவர் பலத்த காயம்

முச்சக்கரவண்டி விபத்து - மூவர் பலத்த காயம் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

வட்டகொடை பகுதியிலிருந்து தலவாக்கலை நகரத்திற்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி 10.10.2020 அன்று இரவு தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் ஒலிரூட் பகுதியில் வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டி சாரதிக்கு முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் படுங்காயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டி சாரதி உட்பட மூவரும் மது போதையில் இருந்ததாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Sun, 11 Oct 2020 13:22:40 +0530

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தலைவர் யார் தெரியுமா?

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தலைவர் யார் தெரியுமா? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

ஐக்கிய தேசிய கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்க உடனான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து புதிய தலைமைத்துவம் ஒன்றினைத் தேர்ந்தெடுப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயற்குழு தெரிவித்துள்ளது.

குறித்த பேச்சுவார்த்தையின்போது 2020 பொதுத் தேர்தலின் கட்சி தொடர்பான பெறுபேறுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக செயற்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செயற்குழு உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு அமைவாகவே புதிய தலைவர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதோடு அதற்கான முன்னெடுப்புக்களும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் தலைமைத்துவ பதவி வகிக்க விருப்பமுள்ள கட்சியின் அங்கத்தவர்களில் இருந்து ஒருவரை தெரிவு செய்வதற்கான வாய்ப்பும் அமையப்பெற்றுள்ளது.

அனைத்து கட்சி அங்கத்தவர்கள் மற்றும் சுயாதீன அங்கத்தவர்களுக்கும் இத் தலைமைத்துவ போட்டியில் சம வாய்ப்பு வழங்கும் வகையில் கட்சியினால் தலைமைத்துவத்துக்கான பொறுப்புக்கள் சார்ந்த நிகழ்ச்சித்திட்டம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Fri, 14 Aug 2020 14:17:58 +0530

யார் குற்றம் சொன்னாலும் அச்சப்பட தேவையில்லை. எனது அமைச்சின் கடமைகளை எவ்வாறு முன்னெடுக்கின்றேன் என்பதை பொருத்திருந்து பாருங்கள் - ஜீவன் தொண்டமான்

யார் குற்றம் சொன்னாலும் அச்சப்பட தேவையில்லை. எனது அமைச்சின் கடமைகளை எவ்வாறு முன்னெடுக்கின்றேன் என்பதை பொருத்திருந்து பாருங்கள் - ஜீவன் தொண்டமான் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு பிரதமரின் நேரடி பார்வையின் கீழ் காணப்படுவதனால் எனது அபிவிருத்தி பணிகளை தடை இன்றி தயக்கம் இன்றி முன்னெடுப்பேன். யாரும் அச்சப்பட தேவையில்லை என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொழும்பு கொள்ளுப்பிட்டியவில் அமைந்துள்ள தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் 14.08.2020 அன்று காலை சுப நேரத்தில் கடமைகளை பொறுப்பேற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன், தேர்தலில் போட்டியிட்ட இ.தொ.கா வேட்பாளர்கள், உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தற்போதைய புதிய அரசாங்கத்தில் வழங்கப்பட்டுள்ள அமைச்சு பொறுப்புகளை கண்காணிப்பதற்காக அமைச்சரவை அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சு நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் நேரடி பார்வையில் காணப்படுகின்றது.

ஆகையால் யார் குற்றம் சொன்னாலும் அச்சப்பட தேவையில்லை. எனது அமைச்சின் கடமைகளை எவ்வாறு முன்னெடுக்கின்றேன் என்பதை பொருத்திருந்து பாருங்கள்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசியல் ரீதியாகவும், தொழிற்சங்க ரீதியாகவும் அதன் அணுகுமுறைகளை வெவ்வேறாக முன்னெடுத்து செல்கின்றது.

அந்தவகையில் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பளம் விடயம் தொழிற்சங்க ரீதியாக முன்னெடுக்கப்படவுள்ளது. அதேநேரத்தில் இது தொடர்பாக நாட்டின் பிரதமருடைய கவனத்திற்கும் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆயிரம் ரூபாய் தொடர்பான பேச்சுவார்த்தை சற்று வித்தியாசமாக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும்.

பெருந்தோட்டப்பகுதிகளில் அமைக்கப்படும் வீடமைப்பு ஆரம்ப காலத்தில் சொன்னதை போல் எழுத்தளவில் மாடி வீடாக இருந்தாலும், (சிலப்) முறையிலான வீடுகளே அமைக்கப்படும்.

ஆனால் இந்திய வீடமைப்பை வைத்துக் கொண்டு நாம் அரசியல் செய்யப்போவதில்லை. வீடமைப்பு தொடர்பில் முன்னெடுக்கும் பணிகளை நீங்கள் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியுடன் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பல்கலைகழகம் அமையப்பெறவுள்ளது. இன்று கல்வி அமைச்சராக ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் பதவியேற்றுள்ளார்.

அவரிடம் கலந்தாலோசித்துள்ளோம். ஆகையால் இன்னும் ஓரிரு வாரங்களில் பல்கலைகழகம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என நம்பிக்கை உள்ளது.

வடக்கு, கிழக்கு மலையகம் உள்ளிட்ட மாணவர்களை உள்ளடக்கியே இவ் தேசிய பல்கலைகழகம் அமையப்படும். அங்குள்ள இளைஞர்களையும் நாம் கவனிக்க கடமைப்பட்டுள்ளோம்.

Fri, 14 Aug 2020 13:37:01 +0530

சஜித்துக்கும், சம்பிக்கவுக்குமிடையில் அதிகாரப்போட்டி ஆரம்பித்துவிட்டது - நவீன் திஸாநாயக்க தெரிவிப்பு

சஜித்துக்கும், சம்பிக்கவுக்குமிடையில் அதிகாரப்போட்டி ஆரம்பித்துவிட்டது - நவீன் திஸாநாயக்க தெரிவிப்பு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

ஐக்கிய மக்கள் சக்தியானது வாடகைக்கு வாங்கப்பட்ட கட்சியாகும். அந்த கட்சிக்யென கொள்கைகள் கிடையாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

கொத்மலை நவதிஸ்பன பகுதியில் 20.07.2020 அன்று இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

" ஐக்கிய தேசியக்கட்சிக்கென ஒரு கட்டமைப்பு இருக்கின்றது. அது எமது கலாச்சாரம், மதம். ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியென்பது, அதிக தலைவர்கள் உள்ள கட்சியாகும். சஜித்தை தலைவர் என்கின்றனர், மேலும் சிலர் சம்பிக்க தலைவர் என்கின்றனர். ஆனால், உறுதியான தலைவர் ஒருவர் இல்லாத கட்சியாகும்.

எனது தந்தை ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து வெளியேறியபோது புதிய கட்சியொன்றை உருவாக்கினார். ஆனால், சஜித் அணியினர் கட்சியொன்றை வாடகைக்கு வாங்கியுள்ளனர். அந்த கட்சிக்கு கொள்கை இல்லை, இரண்டாம் தலைமைத்துவமும் இல்லை.

ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராக பல கட்சிகள் உருவாகலாம். அவற்றுக்கு ஆயுள் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியை எவராலும் அழிக்கமுடியாது. 50 களில் பண்டார நாயக்க வெளியேறினார். சுதந்திரக்கட்சியை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் கை சின்னம் இருந்தது. அதன் பின்னர் கதிரை, வெற்றிலை என இன்று மொட்டு சின்னத்தில் வந்து நிற்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இதே நிலைமையை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித்துக்கும், சம்பிக்கவுக்குமிடையில் அதிகாரப்போட்டி ஆரம்பித்துவிட்டது. நிதி பலத்தை பலப்படுத்தி சஜித் பக்கம் உள்ள உறுப்பினர்களை பாட்டளி வாங்கிவிடுவார். அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ஆவதே அவரது இலக்காகும். எமது கட்சியிலும் மறுசீரமைப்பு அவசியம். அதனை நிச்சயம் செய்வோம். என்றார்.

Mon, 20 Jul 2020 15:03:51 +0530

சொல் அல்ல செயல் - முத்தையா பிரபு

சொல் அல்ல செயல் - முத்தையா பிரபு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

மலையகத்தில் மாற்றம் ஏற்படவேண்டும். அதற்காகவே நாம் போராடிக்கொண்டிருக்கின்றோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய ஆட்சியின் கீழ் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்துவோம் - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபு தெரிவித்தார்.
லிந்துலை பெயார்வெல் தோட்டத்தில் 20.07.2020 அன்று இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அவரின் அபிவிருத்தி செயல்திட்டங்களை எமது பகுதிகயிலும் நடைமுறைப்படுத்தவேண்டும். அபிவிருத்தி என்பது வார்த்தையில் மட்டுமல்ல செயலிலும் இருக்கவேண்டும் என்பதற்காகவே நான் அரசியலில் குதித்துள்ளேன்.

தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு பலரும் ஏமாற்றுவார்கள். ஆனால், செய்துகாட்டுவதற்காகவே நாம் அரசியலுக்கு வந்துள்ளோம்.

வருமானம் இன்மையே எமது மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையாகும். அந்த வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்கான வழிமுறைகள் இங்கு இல்லை. அதற்கான திட்டங்களையும் அரசியல்வாதிகள் கொண்டுவரவில்லை. நுவரெலியா மாவட்டத்தில் தொழிற்சாலைகள் இருந்தால் வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்லவேண்டியதில்லை. அவ்வாறான தொழிற்சாலைகளை கொண்டுவருவதற்கும் கடந்தகாலங்களில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறான திட்டங்களையே நாம் கொண்டுவரவுள்ளோம்.

தொழிற்சாலைகளை உருவாக்கினால் உதிரி தொழில்களும் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வீட்டின் அபிவிருத்தி கூடினால் மட்டுமே அபிவிருத்தி என்பது அர்த்தமுடையதாக இருக்கும்.  சுதந்திரகம் கிடைத்து 72 வருடங்கள் கடந்தும் தமிழ் அரசியல் வாதிகளால் நுவரெலியாவில் ஒரு தமிழ் தேசிய பாடசாலையை உருவாக்கமுடியாத நிலை ஏற்பட்டது.

இவ்வாறான அரசியல் மாறவேண்டும். அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே நான் வந்துள்ளேன். எனக்கும் வாய்ப்பு தந்து பாருங்கள், நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன்." - என்றார்.

Mon, 20 Jul 2020 14:58:51 +0530

நுவரெலியாவில் இராதா - பதுளையில் அரவிந்த் - தேர்தலில் போட்டியிட தயார்

நுவரெலியாவில் இராதா - பதுளையில் அரவிந்த் - தேர்தலில் போட்டியிட தயார் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனும், பதுளை மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரும் மலையக மக்கள் முன்னணி சார்பாக போட்டியிடுவதற்கு ஏகமனதாக மத்திய குழுவும், நிர்வாக குழுவும் தீர்மானித்திருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் தெரிவித்தார்.

அட்டன் மலையக மக்கள் முன்னணி தலைமை காரியாலயத்தில் 25.01.2020 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஷ்ணன், அரவிந்தகுமார், செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், தேசிய அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஆர்.இராஜாராம், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் கே.சுப்பிரமணியம், மலையக மக்கள் முன்னணியின் நிதி செயலாளர் பேராசிரியர் எஸ்.விஜயசந்திரன், மலையக தொழிலாளர் முன்னணியின் நிதி செயலாளர் விஷ்வநாதன் புஷ்பா, சிரேஷ்ட உப தலைவர்களான ஜெபாரதி, கிருஷ்ணன், மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு உறுப்பினர்கள், மலையக தொழிலாளர் முன்னணியின் நிர்வாக குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

மலையக மக்கள் முன்னணியில் எதிர்வரும் தேர்தலில் யார் எங்கே போட்டியிட வேண்டும் என்பதை தீர்மானிக்கின்ற பொறுப்பு மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழுவிற்கும், மலையக தொழிலாளர் முன்னணியின் நிர்வாக குழுவினருக்குமே இருக்கின்றது.

அந்த அடிப்படையில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்படி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் 98 வீதமானவர்கள் கலந்து கொண்டு இதற்கு ஏகமனதாக ஒத்துழைப்பு வழங்கினர்.

ஒரு சிலர் வெளியில் இருந்து கொண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகுவதாக தெரிவிக்கின்ற கருத்துக்கள் எல்லாம் மலையக மக்கள் முன்னணியின் நிலைப்பாடு அல்ல. எமக்கு என்று ஒரு கட்டுப்பாடு ஒரு நிர்வாகம், ஒரு தலைமைத்துவம் இருக்கின்றது.

அதற்கு அமைய ஜனநாயக ரீதியாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் தேர்தலில் இந்த இருவரும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஊடாக போட்டியிடவுள்ளனர்.

இதன்போது இங்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் இராதாகிருஷ்ணன்,

கட்சியின் ஏகமனதான தீர்மானத்தை தான் ஏற்றுக்கொள்வதாகவும், அதற்கமைய எதிர்வரும் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் என்ற அடிப்படையில் நான் போட்டியிடுகின்றேன்.இந்த தீர்மானத்தை நான் வரவேற்கின்றேன்.

இதன்போது இங்கு கருத்து தெரிவித்த பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்,

மலையக மக்கள் முன்னணியை பொருத்தவரையில் இது ஜனநாயகத்தை பின்பற்றி வளர்ந்து வந்திருக்கின்ற ஒரு அமைப்பாகும். எனவே இன்று எடுக்கப்பட்டுள்ள இந்த தீர்மானம் ஜனநாயக ரீதியாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் படி நாங்கள் செயற்படவுள்ளோம்.

Sat, 25 Jan 2020 19:47:48 +0530

தலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை

தலவாக்கலையில் டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் டெங்கு நோய்க்குள்ளாகி பாதிக்கப்பட்ட விபரம் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாடசாலையின்  சுகாதார நலன் கருதி, டெங்கு ஒழிப்பு புகை விசிறும் நடவடிக்கை,  25.01.2020 அன்று மதியம் இடம்பெற்றது.

கொட்டகலை சுகாதார பணிமனை, தலவாக்கலை லிந்துலை நகரசபை, கொத்மலை நவதிஸ்பனை சுகாதார பணிமனையின் டெங்கு ஒழிப்பு பிரிவினர் என்பன இணைந்து, மேற்படி பாடசாலையில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்களை இனங்கண்டு, இராசாயண புகை விசிறல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த பாடசாலையில் டெங்குவின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கோடு, இந்தப் புகை விசிறல் மற்றும் துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக, கொட்டகலை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.சௌந்தராகவன் தெரிவித்தார்.

Sat, 25 Jan 2020 19:42:12 +0530

மத்திய வங்கி கொள்ளையர்களையும் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளையும் சிறையிலடையுங்கள் - இம்ரான் எம்.பி

மத்திய வங்கி கொள்ளையர்களையும் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளையும் சிறையிலடையுங்கள் - இம்ரான் எம்.பி | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

மத்திய வங்கி கொள்ளையர்களையும் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளையும் சிறையிலடையுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். இன்று சனிக்கிழமை(18) காலை கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:

நாம் ஆட்சிக்கு வந்து மறு நாளே மத்திய வங்கி கொள்ளையர்களையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளையும்  சிறையிலடைப்போம் என கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தால் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் இது பற்றி விசாரணை கூட நடத்த முடியவில்லை. மக்களுக்கு வழங்குவதாக கூறிய நிவாரணங்களை வழங்க முடியவில்லை.

ஆனால் எமது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்களின் கொடுப்பனவை நிறுத்தியுள்ளார்கள்,நாம் குறைத்த மருந்து பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளார்கள், ஆட்சிக்கு வந்தவுடன் நாம் வழங்கிய சலுகைகளை நிறுத்தியுள்ளார்கள்.  

ஏன் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கேட்டால் பாராளுமன்றத்தில் எமக்கு பெரும்பான்மை இல்லை. அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்கிறார்கள்.
நாங்கள் 2015 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய போது எமக்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கவில்லை. பெரும்பான்மை இன்றியே அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தோம். பல்கலைக்கழக மாணவர்களின் மகாபொல புலமைபரிசில் தொகையை அதிகரித்தோம். நூறு நாள் திட்டத்தில் பல அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுத்தோம் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆகவே மீண்டும் மீண்டும் மக்கள் முன் பொய் உறைக்காமல் மத்திய வங்கி கொள்ளையர்களையும் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளையும் சிறையிலடையுங்கள், விவசாயிகளுக்கு வழங்குவதாக கூறிய இலவச உரத்தை வழங்குங்கள், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரியுங்கள், பட்டதாரிகளுக்கு வேலை வழங்குங்கள், மக்களுக்கு நிவாரனம் வழங்குங்கள். இதற்கு நாம் மூன்றில் இரண்டு அல்ல அதற்கு மேலான ஆதரவையும் பாராளுமன்றத்தில் வழங்க தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

Sat, 18 Jan 2020 15:31:38 +0530

பிலிப் குணவர்தனவின் பாராளுமன்ற உரை நூல் பிரதமரிடம் கையளிப்பு

பிலிப் குணவர்தனவின் பாராளுமன்ற உரை நூல் பிரதமரிடம் கையளிப்பு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பிலிப் குணவர்தன எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்துகொண்டு பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் அடங்கிய நூல், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிலிப் குணவர்தன அறக்கட்டளை தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கீதான்சன குணவர்தனவினால் அண்மையில் அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது.

மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் அவிசாவளை தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான பிலிப் குணவர்தன 1960 – 1965 வரையான காலப்பகுதியில் பாராளுமன்றத்தில் ஆற்றிய 140 உரைகள் அடங்கிய இந்நூல் எஸ். கொடகே அச்சகத்தினால் வெளியிடப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாட்டுக்காக பாரிய சேவைகளை ஆற்றிய பிலிப் குணவர்தனவின் பாராளுமன்ற உரைகளை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வது வரவேற்கத்தக்கது.

அவர் மாநில சபையின் தசாப்தத்தில் இருந்தே சுதந்திரத்தை பெற்றுக்கொள்ளும் வரையில் அதை அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்காக ஆற்றிய பணிகளை தற்போதைய தலைமுறைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். பிலிப் குணவர்தன ஒரு முன்மாதிரியான தலைவர் என்றார்.

மேலும் இங்கு கருத்து தெரிவித்த கீதான்சன குணவர்தன, எமது நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக மாநில சபையின் தசாப்தத்தில் இருந்தே ராஜபக்ஷ குடும்பம் மற்றும் குணவர்தன குடும்பம் இடையிலான உறவு 1956இல் மக்கள் ஐக்கிய முன்னணி அரசு ஸ்தாபிக்கப்பட்டவுடன் உச்சநிலையை அடைந்தது.

பிலிப் குணவர்தன, டி.ஏ. ராஜபக்ஷ மற்றும் லக்ஷமன் ராஜபக்ஷ உள்ளிட்ட தலைவர்கள் எமது தாய் நாட்டின் சுதந்திரத்துக்காகவும் சுதந்திரத்தை பாதுகாத்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சதித்திட்டங்களை தோற்கடிப்பதற்கு போராடினார்கள். 1956இல் அடைந்த இந்த வெற்றியை பாதுகாப்பதற்கு பிலிப் குணவர்தன தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார்.

தாய்நாட்டை நேசிக்கும் அனைத்து சக்திகளையும் ஒன்றுபடுத்தி அண்மையில் நாட்டில் மறுமலர்ச்சியின் தலைவராகிய உங்களுடன் இணைந்து ஒரு புதிய உலகத்தை கட்டியெழுப்ப 56 குழந்தைகளில் ஒருவராக இருப்பதில் நான் பெருமைப்படுகின்றேன்.

எனது அன்புக்குரிய எனது தந்தை பிலிப் குணவர்தன, தாயார் குசுமா குணவர்தன ஆகியோரின் அரசியல் வாழ்க்கையில் முக்கிய மைல்கல்லாக காணப்படும் படைப்புகளை உங்களுக்கு வழங்குவதற்கு கிடைத்த வாய்ப்பை ஒரு கௌரவமான நிகழ்வாக கருதுகிறேன் என்றார்.

இந்நிகழ்வில் அமைச்சர் தினேஷ் குணவர்தன, பிரசன்ன குணவர்தன, லக்மாலி குணவர்தன, பிலிப் குணவர்த்தன அறக்கட்டளையின் பணிப்பாளர் யதாமினி குணவர்தன, மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சமக்மலி ஸகலசூரிய குணவர்தன, நடிகர் சுமித்ரா பீரிஸ், சிறி சுமன கொடகே, மூத்த பத்திரிகையாளர் கே.கே.எஸ். பெரேரா, விஜய ரத்னாயக, காமினி வெலிகட, யூ.ஏ.எச். உபேசிங்க, சி.ஏ. பத்பேரிய உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Buddika Prasanna

Sat, 18 Jan 2020 15:24:26 +0530

மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தை பொங்கல் பண்டிகையை வெகுவிமர்சியாக கொண்டாடினார்கள்

மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தை பொங்கல் பண்டிகையை வெகுவிமர்சியாக கொண்டாடினார்கள் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும்.

உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாக இதனைக் கொண்டாடுகின்றனர்.

நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல்படைத்து இந்நாளில் வழிபடுவார்கள்.

ஆண்டு தோறும் இப்பண்டிகை தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவது வழமையாகும்.

அந்தவகையில் மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தை பொங்கல் பண்டிகையை 15.01.2020 புதன்கிழமை வெகுவிமர்சியாக கொண்டாடினார்கள்.

அட்டன் பகுதியில் அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் பிரமஸ்ரீ. பூர்ணாசந்திராநந்த குருக்கள் தலைமையில் தைபொங்கல் விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.

விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Wed, 15 Jan 2020 09:51:41 +0530

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக ஐக்கிய தேசியகட்சியின் ஊடாக போட்டியிடுவோம் - இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக ஐக்கிய தேசியகட்சியின் ஊடாக போட்டியிடுவோம் - இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக போட்டியிடுவோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், முன்னாள் அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அட்டன் போடைஸ் என்.சி தோட்டப்பகுதியில் 10.01.2020 அன்று மாலை ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த காலத்தில் ஜனாதிபதி தேர்தலில் தோழ்வியை சந்தித்திருந்தாலும் கூட, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரிய வெற்றியை பெற்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளுடன் பிரதமராக சஜித் பிரேமதாசவை நியமிப்போம். சஜித் பிரமேதாசவை ஆட்சிபீடம் ஏற்றக் கூடிய சந்தரப்பம் மீண்டும் எமது கைகளுக்கு கிடைத்துள்ளது. எனவே நாம் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

சிறுபான்மை மக்கள் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றனர். எனவே இந்த தேர்தலில் சஜித் பிரேமதாச அவர்களை பிரதமராக்க வேண்டும். அவர் பிரதமாரக வந்தால் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும்.

அத்தோடு, ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியையும் ரணில் விக்கிரமசிங்க விட்டுக்கொடுப்பு செய்து சஜித் பிரேமதாசவிற்கு கொடுத்து இந்த ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்கால நலன் கருதி வழிநடத்துவதற்கான வாய்ப்பினை உருவாக்கி தருவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

கடந்த 25 வருட காலங்கள் ரணில் விக்கிரமசிங்க இந்த கட்சியை வழிநடத்தி வந்தாலும், இந்த கட்சியினுடைய முன்னேற்றகரமான செயல்களை செய்வதற்கு தவறி இருந்தார் என்பது தான் உண்மையான கருத்து.

ஏனென்றால் ஒவ்வொரு தேர்தல்களிலும் பின்னடைவை சந்திக்க கூடிய நிலையிலேயே இருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

எனவே மலையக மக்கள் கடந்த காலங்களில் எமக்கு வாக்களித்து எம்மை தெரிவு செய்து மக்கள் சேவைக்கு வழிவகுத்து கொடுத்தது போல் இம்முறை தேர்தலிலும் எமக்கு வாக்களித்து மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்புகளை பெற்று தரும்படி கேட்டுக் கொண்டார்.

Fri, 10 Jan 2020 20:03:35 +0530

மலையக தியாகிகள் தினம் - பிரதான நினைவேந்தல் நிகழ்வு மஸ்கெலியாவில் நகரில் இடம்பெற்றது

மலையக தியாகிகள் தினம் - பிரதான நினைவேந்தல் நிகழ்வு மஸ்கெலியாவில் நகரில் இடம்பெற்றது | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

மலையக தியாகிகள் தினம் (10.01.2020) அன்று பெருந்தோட்டப்பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு மஸ்கெலியாவில் நகரில் இடம்பெற்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

மலையக உரிமை குரல் மற்றும் பிடித்தளராதே ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்வில் பொது சுடரை தொழிலாளர்களின் உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த மலையக தியாகி சிவனு லெட்சுமனனின் தங்கை ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.

அத்துடன், நிகழ்வின் போது, அரசியல் ஆய்வாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான என். சரவணனால் எழுதப்பட்ட மலையக ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பான 'கள்ளத்தோணி' நூல் வெளியிடப்பட்டது.

அத்தோடு, காளிதாசன் குழுவினரின் வீதி நாடகம், மலையக தியாகிகள் தொடர்பான விசேட உரை ஆகியனவும் இடம்பெற்றது.

அதன்பின்னர் மலையகத் தமிழர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுக்கு உயிர்கொடுத்துவரும் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில், மலையக உரிமை குரல் தலைவர் ராமச்சந்திரன் சனத், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், ஊடகவியலாளர்கள், தியாகிகளின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Fri, 10 Jan 2020 19:59:52 +0530

வேன் விபத்து - 5 பேர் படுங்காயம்

வேன் விபத்து - 5 பேர் படுங்காயம் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை தியகல – நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் தியகல பகுதியில் 10.01.2020 அன்று காலை 8.30 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த 5 பேர் கடும்காயங்களுக்குள்ளாகி வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

சிவனொளிபாதமலை யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வேனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கம்பளை பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Fri, 10 Jan 2020 19:40:49 +0530

ஆயிரம் ரூபாய் சம்பள விடயம் தையில் வழி பிறக்கும் நம்பிக்கை தெரிவிக்கின்றார் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்

ஆயிரம் ரூபாய் சம்பள விடயம் தையில் வழி பிறக்கும் நம்பிக்கை தெரிவிக்கின்றார் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் இன்றைய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவர் என தெரிவித்துள்ள அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தைப்பிறந்தாள் வழி பிறக்கும் என சம்பளம் விடயம் தொடர்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மலையக மக்களின் அபிவிருத்தி தொடர்பில் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். இவ் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முன்னாள் அமைச்சர் பி.பி.தேவராஜ் ஊடாக குழு ஒன்று நியமிக்கப்பட்டு இது தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் பெருந்தோட்ட தொழிலாளர் மக்களுக்கு புதிய அரசாங்கத்தால் செய்து கொடுக்க வேண்டிய அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையை பிரதமர் அக்குழுவுக்கு வழங்கியிருக்கின்றார்.

அதேநேரத்தில் மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் மதுபான சாலைகள் அகற்றுவது தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது மற்றும் கணிதம், விஞ்ஞான பாடங்களுக்குரிய ஆசிரியர்கள் பற்றாக்குறை பெரும்பாலும் நிலவுவதனால் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை இத்துறைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது தொடர்பிலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படும் வைத்திய சேவையை விருத்திக்கும் வகையில் தாதியர் பயிற்சி கல்லூரி ஒன்றை அமைப்பது தொடர்பாகவும், இதன்போது பிரதமரின் கவனத்திற்கு அக்குழு கொண்டு வந்துள்ளது. பெருந்தோட்ட பகுதிகள் இன்று காடுகளாக்கப்பட்டு இருக்கும் தேயிலை காணிகளை தோட்ட இளைஞர்களுக்கு பிரித்து கொடுத்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும், பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறாக பல்வேறு கோரிக்கைகள் இ.தொ.கா குழுவினரால் முன்வைக்கப்பட்டுள்ளது. இவைகளை அனைத்தையம் நிறைவேற்றுவதில் காங்கிரஸ் கவனம் செலுத்தி வரும் காங்கிரஸ் சொன்ன விடயத்தில் இருந்து எதுவுமே மாறுப்படாது.

கண்டி பிரதேசத்தில் உள்ள பெருந்தோட்ட பகுதிகள் மூன்று பிரிவுகளாக கூரிடப்பட்டு அக்காணிகளை தனியார்களுக்கும் தோட்ட தொழிலாளர்களும் வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் ஏ,பீ என தேர்ந்தெடுக்கும் பகுதிகளை வெளியாருக்கும் கரடு முரடான தேயிலை காணிகளை சீ என வகைப்படுத்தி பல வருடங்களாக ஆண்டு வந்த தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது. அண்மையில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரணவை சந்தித்த வேளையில் இது தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டு இக்காணி பிரிப்புகளை இடைநிறுத்த கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்றைய ஜனாதிபதி, சொன்னதை செய்பவர்கள் இதில் மாற்று கருத்துகள் இல்லை. அந்தவகையில் இவை அனைத்து பிரச்சனைகளையும் விட முக்கியமான விடயம் ஒன்று உள்ளது. தை பிறந்தாள் தோட்ட தொழிலதாளர்களுக்கு வழி பிறக்கும் என தெரிவித்த போது, ஊடகவியலாளர் ஒருவர் குறுக்கிட்டு கேள்வி எழுப்பினார் அவ்வாறு என்றால் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் சம்பளம் விடயமா என்று கேட்ட போது, நிச்சயமாக பொருத்து இருந்து பாருங்கள் என்று அமைச்சர் பதிலளித்தார்.

அதேநேரத்தில் எதிர்வரும் காலங்களில் தேர்தல் ஒன்றில் யாருக்கு ஆதரவு வழங்குவீர்கள் என ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்புகையில், இ.தொ.காங்கிரஸ், பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்கும், சேவலில் கேட்டாலும் சரி மொட்டுவில் கேட்டாலும் சரி ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவுக்கே தமது ஆதரவை வழங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Fri, 10 Jan 2020 19:07:56 +0530

பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் பயன்படுத்தும் பிரதான பாதை மண்சரிவினால் பாதிப்பு

பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் பயன்படுத்தும் பிரதான பாதை மண்சரிவினால் பாதிப்பு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பசறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட  கோணகல தோட்டம் 10 ஆம் கட்டை கீழ் பிரிவில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் பயன்படுத்தும் பிரதான பாதை மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக இந்த பாதையை பிரதேச மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

எனினும் இப்பகுதியில் 70  குடும்பங்களைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியாக இருந்த போதும் கடந்த நாட்களில் நிலவிய கடும் மழை காரணமாக இந்த பாதை பாரிய மண்சரிவு மற்றும் கற்பாறைகள்  சரிந்து விழ்துள்ளது. இதனால் 100 க்கும் மேற்பட்ட மாணவர்களும் அதிக அளவிலான பயணிகள் தோட்ட தொழிலாளர்கள் என பலரும் பாரிய சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள்  பாடசாலைக்கு செல்வதாயின் இந்த பாதையை பயன்படுத்தினால் 1 km தூரம் மாத்திரமே நடந்து செல்ல வேண்டும். இல்லை என்றால் சுமார் 4 km தூரம் பஸ்களில் ஊடாக ஒரு நாளைக்கு ஒரு தடவை 12 ரூபாய் கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும்  இது தொடர்பாக கவனம் செலுத்தவில்லை எனவும் கூறினர்.

இந்த பகுதிகளில்  குடியிருப்புகளும் காணப்படுவதினால் பிரதேச மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

Thu, 09 Jan 2020 19:04:58 +0530

பதுளையில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தம் காரணமாக 11 பேர் வெளியேற்றம்

பதுளையில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தம் காரணமாக 11 பேர் வெளியேற்றம் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பதுளையில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தம் காரணமாக 11 பேர் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பதுளை, பஸ்ஸர பிரதேசத்தில் வெல்கொல்ல பாடசாலைக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இரண்டு வீடுகள் மண் சரிவினால் முழுமையாக சேதமமைந்துள்ளன.

மண் சரிவு ஏற்பட நொடி பொழுதிற்கு முன்னர் அந்த வீட்டில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் 11 பேர் வெளியேற்றியமையினால் உயிர் தப்பியுள்ளனர்.

வீடுகள் இரண்டும் ஆபத்தான நிலைமையில் இருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய பிரதேச செயலகத்தின் கண்கானிப்பின் கீழ் வீட்டில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அந்த குடும்பத்தில் அங்கிருந்து வெளியேறி நொடிப்பொழுதுகளில் பாரிய மண் சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதனால் இரண்டு வீடுகளும் முழுமையான சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பிரதேச செயலகம் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Sat, 21 Dec 2019 00:03:43 +0530

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.

கடந்த இரு தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டது.

மேல் கொத்மலை, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்பட்டது. இந்நீரினை வெளியேற்றுவதற்காக 20.12.2019 அன்று நீரேந்தும் பகுதிகளில் வான்கதவுகள் திறக்கப்பட்டது.

அந்தவகையில் மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் வான்கதவு ஒன்று திறக்கப்பட்டிருந்தது.

அத்தோடு காசல்ரீ நீர்தேகத்தின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் நீர்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும்படி அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Sat, 21 Dec 2019 00:00:13 +0530

முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கைது! நேரில் சென்று பார்வையிட்டார் சஜித்

முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கைது! நேரில் சென்று பார்வையிட்டார் சஜித் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு சட்டமா அதிபரினால் கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட ஆலோசனையின் படி சற்று முன்னர் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்ட்டதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

கவனயீனத்துடன் வாகனத்தை செலுத்தி நபரொருவரை படுகாயமடையச் செய்தமை மற்றும் வீதி விபத்தின் போது வேறு ஒரு நபரை சாரதியாக அடையாளப்படுத்தியதாக முன்னாள் அமைச்சருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சற்றுமுன் அங்கு சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாச, எஸ்.எம்.மரிக்கார் ஆகியோர் சம்பிக்கவை சந்தித்தனர்.

2016ம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் குறித்தே சம்பிக்க ரணவக்க இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை நாளை (19) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் சற்று முன்னர் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் அமைச்சரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாக தெரிவித்த போதே நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நீதிமன்ற வளாகத்துக்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உட்பட ஐ.தே.க.யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சமூகமளித்திருந்தனர்.

வாகன விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Wed, 18 Dec 2019 23:47:36 +0530

கொத்மலை நீர்த்தேக்கத்தில் சிறுமியின் சடலம் மீட்பு

கொத்மலை நீர்த்தேக்கத்தில் சிறுமியின் சடலம் மீட்பு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்மலை நீர்த்தேக்கத்தில் 28.11.2019 அன்று மதியம் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக   பொலிஸார் தெரிவித்தனர். பொது மக்கள் வழங்கிய தகவலின் அடுத்தே இச்சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மற்றும் பொது மக்களின் உதவியுடன் மீட்கப்பட்ட இச்சடலத்தை மரண விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பூண்டுலோயா - ஹதூனுவாவ, வட்டாந்தர பகுதியை சேர்ந்த 18 வயதுடைய சிறுமி எனவும், 27.11.2019 அன்று காலை முதல் காணாமல் போய் இருந்ததாகவும், பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 28.11.2019 அன்று மதியம் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சானிக்கா மதுஷானி ஏக்கநாயக்க (வயது – 18) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இப்பெண் தற்கொலை செய்து கொண்டரா அல்லது கொலை செய்யப்பட்டு நீர் தேக்கத்தில் எறியப்பட்டுள்ளாரா என்பது தொடர்பாக பொலிஸார் புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரைணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Fri, 29 Nov 2019 12:04:29 +0530

புதிய அரசாங்கத்தின் கன்னி அமைச்சரவைக் கூட்டம் இன்று

புதிய அரசாங்கத்தின் கன்னி அமைச்சரவைக் கூட்டம் இன்று | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (27) முற்பகல் இடம்பெறவுள்ளது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸவின் தலைமையில் அமைச்சரவை கூடவுள்ளது.விரைவுபடுத்தப்பட வேண்டிய சில திட்டங்கள் தொடர்பான யோசனைத் திட்டங்களை முன்வைக்கப்பட்டு இன்று கலந்துரையாடப்படவுள்ளது.இதேவேளை, புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்யவுள்ளனர்.ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 9 மணியளவில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ முன்னிலையில் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதேவேளை, அமைச்சுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்களும் இன்று வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 (News 1st) 

Wed, 27 Nov 2019 09:33:01 +0530

நுவரெலியா ; பலத்த பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள்

நுவரெலியா ; பலத்த பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் 488 வாக்களிப்பு நிலையங்களில் 569,028 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா – மஸ்கெலியா, கொத்மலை, ஹங்குராங்கெத்த, வலப்பனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மேலும், 48 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 33 வாக்கு எண்ணும் நிலையங்கள் நுவரெலியா காமினி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ளதோடு, மிகுதி 15 வாக்கு எண்ணும் நிலையங்கள் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பு நிலையங்களில் 6800 பேர் கடமையில் ஈடுப்பட்டுள்ளதோடு, பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸாரும் 1590 பேர் கடமையில் ஈடுப்பட்டுள்ளனர்.

Fri, 15 Nov 2019 22:06:07 +0530

Loudspeaker | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பிரபலமானவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 08:40:10 +0530

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...