சம்மாந்துறையில் வீட்டின் குப்பைப் பொதியினுள் தவறுதலாக வீசப்பட்ட 12பவுண் தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு

சம்மாந்துறையில் வீட்டின் குப்பைப் பொதியினுள் தவறுதலாக வீசப்பட்ட 12பவுண் தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

சம்மாந்துறையில் திண்மக் கழிவகற்றல் சேவையின் போது ஒரு வீட்டின் குப்பைப் பொதியினுள் தவறுதலாக வீசப்பட்ட 12பவுண் தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு 

கடந்த 20ஆம் திகதி சம்மாந்துறை சின்னப்பள்ளி வீதியில் குறித்த வீட்டு உரிமையாளர் தனது வீட்டில் திருமண நிகழ்வு இடம் பெற்றமையினால் 12பவுண் தங்க நகையை தன்னையரியாமல் குப்பையோடு குப்பையாக கழிவுப் பொதிக்குள் வீசியுள்ளார்.

அப்பொதி சம்மாந்துறை பிரதேச சபையின் கழிவகற்றல் வாகனத்திற்கு வழங்கப்பட்ட நிலையில், குறித்த வீட்டு உரிமையாளர் வீட்டில் இருந்த நகையை தேடிய வேளையில்  காணாமல் போயிருப்பது கண்டறிப்பட்டதை தொடர்ந்து, இவ்விடயம் சம்மாந்துறை பிரதேச சபை திண்மக்கழிவகற்றல் சேவை மேற்பார்வையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனை தொடாந்து சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் பணிபுரைக்கமைவாக உடனடியாக செயற்பட்டு, சம்மாந்துறை பிரதேச சபையின் வங்களாவடி சேதனைப் பசளை உற்பத்தி நிலையத்தில் ஊழியர்களின் உதவியுடன் குறித்த திண்மக்கழிவகற்றல் வாகனத்தில் சேகரிக்கப்பட்டிருந்த அனைத்து கழிவுக்குப்பைப் பொதிகளையும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் ஆராய்ந்து, குறித்த நபரின் 12பவுண்தங்க நகை  தேடிக்கண்டு பிடித்து உரிய நபரிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

இதன் மூலம் சம்மாந்துறை பிரதேச சபைக்கு  நற்பெயரை ஈட்டிக் கொடுத்தமைக்காகவும்  கழிவுக்குப்பைப் பொதிகளையும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் ஆராய்ந்து தங்க நகை  தேடிக்கண்டுபிடித்தமைக்கு   சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களினால் குறித்த மேற்பார்வையாளர், சுகாதார ஊழியர்கள் மற்றும் சேதனைப் பசளை உற்பத்தி நிலைய ஊழியர்களுக்கும்   நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இவ்வாறாக நகை, பணம், பெறுமதியான பொருட்கள் உரிமையார்களை அறியாமல் குப்பைகளுக்குள் வீசப்பட்ட பொருட்கள் உரிமையாளிடம் ஒப்படைந்த பல சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 22 Feb 2021 10:09:03 +0530

மீண்டும் சிக்கலை சந்திக்கும் மாளிகைக்காடு மையவாடி : ஜனாஸாக்களுக்கு மதிப்பளித்து உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை.

மீண்டும் சிக்கலை சந்திக்கும் மாளிகைக்காடு மையவாடி : ஜனாஸாக்களுக்கு மதிப்பளித்து உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை. | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

கடந்த மாதம் கடலரிப்புக்குள்ளாகி இடிந்து வீழ்ந்த மாளிகைக்காடு அந்- நூர் ஜும்மா பள்ளிவாசல் மையவாடி சுவர்கள் திரும்பவும் கடல் அரிப்புக்கு உள்ளாகும் நிலை தோன்றியுள்ளது. தற்காலிய தீர்வாக பிரதேச மக்களினால் இடப்பட்ட மண் மூட்டைகளும் கடல் அலைகளுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தொடர்ந்தும் சேதமாகிய நிலையில் உள்ளது

இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் பலரும் நடவடிக்கை எடுக்க போவதாக தெரிவித்தும் இது வரை நிரந்தர தீர்வு இல்லாத நிலையில் உள்ளது. கரையோரம் பேணல் திணைக்கள உயரதிகாரிகள் இது சம்மந்தமாக வேலைகளை ஆரம்பிக்க ஆரம்ப கட்டத்தை முன்னெடுத்தும் அது இன்னும் அடுத்த கட்டத்தை தொடவில்லை.  

இந்த மதில் இடிந்து விழுந்தால் முஸ்லிம் ஜனாஸாக்கள் கடலில் அள்ளுண்டு போகும் நிலை உருவாகும்.  எங்களின் பிரதேசத்து மக்களின் நிலைய உணர்ந்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொள்கின்றனர். 

Sun, 08 Nov 2020 13:33:02 +0530

ரிசாத் பதியுதீனின் கைது என்பது சிறுபாண்மை சமூகத்தின் மீது போடும் கீறலாகும் : சட்டத்தரணி பீ.எம்.ஷிபான் கண்டனம்

ரிசாத் பதியுதீனின் கைது என்பது சிறுபாண்மை சமூகத்தின் மீது போடும் கீறலாகும் : சட்டத்தரணி பீ.எம்.ஷிபான் கண்டனம் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாத் பதியுதீனின் குடும்பத்திற்கு எதிரான அரசியலை அரசாங்கமும், கடும்போக்கு அரசியல்வாதிகளும் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதானது ஆசியாவின் ஆச்சரியங்களில் ஒன்றாகவே நோக்க வேண்டி உள்ளது என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி பீ.எம்.ஷிபான் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

எந்தவிதமான குற்றமும் அவர் மீது இல்லாதபோதிலும், இடம்பெயர்ந்த மக்களுக்கு பொறுப்பான அமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தின் போது, கடந்த நல்லாட்சி அரசாங்கம் நிறுவப்படுவதற்கு இடம்பெயர்ந்த மக்களை பஸ் வண்டிகளில் அழைத்து வந்து வாக்களிக்கச் செய்தார் என்ற குற்றச்சாட்டினை சுமத்தி இருக்கிறார்கள்.

கடந்த ஈஸ்டர் தாக்குதலின் பிற்பாடும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலியான சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைத் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிசாத் பதியுதீன் மீது சுமத்தியிருந்த போதிலும், அவர் எந்த விதமான குற்றச் சாட்டும் இல்லாதவர் என நிரூபணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 52 நாள் ஆட்சி மாற்றத்தின் போது மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் நினைத்திருந்தால் மஹிந்த அரசுக்கு முட்டுக் கொடுத்து இன்று கோட்டையிலே குடியிருந்திருக்கலாம். ஆனால் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நீதியாக நின்று கொண்டதால் இன்று அவரும் அவருடைய குடும்பமும் பழி வாங்கப்பட்டு கொண்டிருக்கின்றது.

இந்த நிலையிலேயே இன்று அவரை கைது செய்ய மேற்கொண்டுள்ள நடவடிக்கையானது காட்டமானதாகும். இந்த நாட்டில் உள்ள சிறுபாண்மை மக்களை பிரதிநிதித்துவபடுத்துகின்றன கட்சியொன்றின் தலைவரை வேண்டுமென்றே கைதுசெய்ய எடுக்கும் எத்தனமானது அச்சிறுபான்மை சமூகத்தின் மீது போடப்படும் கீறலாகும் என தெரிவித்துள்ளார்.

Wed, 14 Oct 2020 00:40:59 +0530

பிரதமரின் பணிப்புரைக்கு உடனடி நடவடிக்கை எடுத்த கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகள் : மாளிகைக்காடு மையவாடிக்கு நிரந்தர தீர்வு

பிரதமரின் பணிப்புரைக்கு உடனடி நடவடிக்கை எடுத்த கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகள் : மாளிகைக்காடு மையவாடிக்கு நிரந்தர தீர்வு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

அண்மைக்காலமாக பாரிய கடலரிப்புக்குள்ளாகியுள்ள காரைதீவு பிரதேச மாளிகைக்காடு பொது மையவாடியை பாதுக்காக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நேற்று (12) பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் கரையோரம் பேணல் திணைக்கள பணிப்பாளர் நாயதத்திற்கு விடுத்த பணிப்புரைக்கு அமைவாக இன்று (13) காலை அம் மையவாடியை பாதுகாக்க நிரந்தர தீர்வை வழங்கும் முதல் கட்ட வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சில தினங்களாக உச்சகட்ட கடலரிப்புக்கு இலக்காகி பகுதிளவில் இடிந்து விழுந்த மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலின் ஜனாஸா மையவாடி தொடர்பிலும் ஒலுவில் பிரதேச கடலரிப்பின் பாதிப்புக்கள் தொடர்பிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களை அவரது விஜயராம வாசஸ்தலத்தில் நேற்று  (12) சந்தித்து பேசிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் பிரதமருக்கு நிலமையை தெளிவாக விளக்கினார். இதையடுத்து ஜனாஸா மையவாடி தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் ஜனாஸாக்களுக்கு உரிய கௌரவத்தை வழங்குமாறு கரையோரம் பேணல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நேற்றுக்காலை பணிப்புரை விடுத்திருந்தார்.

அதனடிப்படையில் மாளிகைக்காடு பொது மையவாடியை பாதுக்காக்க நிரந்தர தீர்வை பெறுதல் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று இன்று (13) காலை மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலில் போஷகர் ஏ.பௌசர் ஹாஜியின் தலைமையில் நடைபெற்றது. இங்கு கரையோரம் பேணல் திணைக்கள பிராந்திய  பொறியியலாளர் கே.எம். றியாஸ் கலந்துகொண்டு பாரியளவிலான பாராங்கற்களை கொண்டு நிரந்தர தீர்வுக்கான வழிகளை ஏற்படுத்தும் போது இப்பிரதேசம் எதிர்நோக்கும் சாதக, பாதங்களை விளக்கினார்.

இக்கூட்டத்தில் காரைதீவு பிரதேச சபை பிரதிதவிசாளர் ஏ.எம். ஜாஹீர், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.எம். இஸ்மாயில், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் பிரத்தியோக செயலாளர் நௌபர் ஏ பாவா, சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா, செயலாளர் ரோஷன் மரைக்காயர், காரைதீவு பிரதேச செயலக கரையோரம் பேனல் திணைக்கள அதிகாரி, தேசிய காங்கிரசின் மாளிகைக்காடு பிரதேச அமைப்பாளர் யு.எல்.என். ஹுதா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முதலாம் வட்டார அமைப்பாளர் எம்.எச்.எம். நாஸர், அந்நூர் ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் உட்பட நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டு நிரந்தர தீர்வாக பாரியளவிலான பாராங்கற்களை கொண்டு தடுப்புவேலியமைத்தலே சிறந்த தீர்வாகும் என ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றினர்.

அத்துடன் மீனவர்களின் தொழிலுக்கான வசதிகளையும் கரையோரம் பேணல் திணைக்கள உதவியுடன் செய்து கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டு ஆரம்ப வேலைகளை கரையோரம் பேணல் திணைக்கள பிராந்திய  பொறியியலாளர் கே.எம். றியாஸ் தலைமையிலான அதிகாரிகள் இன்று மேற்கொண்டனர்.

Tue, 13 Oct 2020 14:17:46 +0530

ஹரீஸ் எம்.பியின் வேண்டுகோளின் பிரகாரம் மாளிகைக்காடு மையவாடி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க பிரதமர் பணிப்பு

ஹரீஸ் எம்.பியின் வேண்டுகோளின் பிரகாரம் மாளிகைக்காடு மையவாடி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க பிரதமர் பணிப்பு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

காரைதீவு பிரதேச மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலின் ஜனாஸா மையவாடி தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் ஜனாஸாக்களுக்கு உரிய கௌரவத்தை வழங்குமாறு கரையோரம் பேணல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை பணிப்புரை விடுத்தார். 

சில தினங்களாக உச்சகட்ட கடலரிப்புக்கு இலக்காகி பகுதிளவில் இடிந்து விழுந்த மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலின் ஜனாஸா மையவாடி தொடர்பிலும் ஒலுவில் பிரதேச கடலரிப்பின் பாதிப்புக்கள் தொடர்பிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களை அவரது விஜயராம வாசஸ்தலத்தில் சந்தித்து பேச சென்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் நிலமையை தெளிவாக பிரதமருக்கு விளக்கினார். 

கடலரிப்பு காரணமாக அந்த ஜனாஸா மையவாடி சுவர் பகுதியளவில் இடிந்து விழுந்தது. மேலும் சுவர் இடிந்து விழாமல் காக்க அப்பிரதேச மக்களால் மணல் மூட்டை கட்டிப்போடும் தற்காலிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டும் அது பாரியளவில் வெற்றியளிக்கவில்லை. என்பதுடன் உடனடியாக பெரியளவு கருங்கற்களை கொண்டு தடுப்புசுவர் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதிற்கிணங்க பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்கள் கரையோரம் பேணல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிவித்தார். 

கரையோரம் பேணல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் உடனடியாக நிரந்தர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள பிரதமரினால் பணிப்புரை விடுக்கப்பட்டதை தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நேரடியாக கரையோர பேணல் திணைக்கள அழுவலகத்திற்கு நேரடியாக சென்று தற்போதைய நிலை குறித்து விளக்கியவுடன் உரிய அதிகாரிகளை அழைத்து பணிப்பாளர் நாயகத்தினால் உடனடி நடவடிக்கை எடுக்க பணிப்புரை வழங்கப்பட்டது.

இது தொடர்பில் அவசர நடவடிக்கை எடுக்க குறித்த துறைசார் நிபுணர்கள், பொறியலாளர்கள் பணிக்கப்பட்டு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Mon, 12 Oct 2020 20:05:17 +0530

மாதம் ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் நிதியுதவி கையளிப்பு

மாதம் ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் நிதியுதவி கையளிப்பு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

கல்முனை மாநகரசபை உறுப்பினர் சட்டத்தரணி பி.எம். ஷிபான் அவர்களால் அவருடைய மாதாந்த சம்பளத்தைக்கொண்டு செயற்படுத்தப்பட்டுவரும் "மாதம் ஒரு வேலைத்திட்டம்" நிகழ்ச்சி நிரலின் கீழ் இம்முறை  'ஷம்ஸ் நண்பர்கள் வட்டம்-2004 சமூக சேவை அமைப்புக்காக' ஒக்டோபர் மாத நிதி கையளிப்பு இன்று மருதமுனையில் இடம்பெற்றது.

மருதமுனையை மையமாகக் கொண்டு கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பொதுச்சேவைகளை செய்துவருகின்ற 'ஷம்ஸ் நண்பர்கள் வட்டம்-2004 சமூக சேவை அமைப்பின் பொருளாளர் ஆர்.எம்.பஸால் அமூன், செயளாளர் ஏ.ஆர்.எம். கியாஸ்,  செயற்குழு உறுப்பினர் எம்.எம்.எம். சிபாம் உள்ளிட்டோரிடம் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சட்டத்தரணி பி.எம். ஷிபான் நிதியை கையளித்தார். கடந்த மாத "மாதம் ஒரு வேலைத்திட்டம்" நிகழ்ச்சி நிரலின் கீழ் மருதமுனை அல்- மினன் பாடசாலைக்கு நிலற்குடை அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Mon, 12 Oct 2020 19:57:04 +0530

சம்மாந்துறை பிரதேச சபையில் 38 வருடங்களாக அலுவலக உதவியாளராக கடமையாற்றிய ஏ.எல்.அலியாருக்கு பிரியாவிடை நிகழ்வு

சம்மாந்துறை பிரதேச சபையில் 38 வருடங்களாக அலுவலக உதவியாளராக கடமையாற்றிய ஏ.எல்.அலியாருக்கு பிரியாவிடை நிகழ்வு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

சம்மாந்துறை பிரதேச சபையில் 38 வருடங்களாக அலுவலக உதவியாளராக கடமையாற்றி ஓய்வுபெற்று செல்லும் ஏ.எல்.அலியாரிற்கான பிரியாவிடை வைபவமும் கௌரவிப்பும் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் பதில் தவிசாளர் ஏ.அச்சி முஹம்மட் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். 

இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளுராட்சி உதவியாளர் எஸ்.கருணாகரன், பிரதேச சபையின் நிதி உதவியாளர் ஏ.ஜே.எம்.ஜெஸீல் தொழில்நூட்ப உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், நூலகர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஓய்வு பெற்றுச் செல்லும் ஏ.எல்.அலியாருக்கு சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர் சார்பாக நினைவுப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Fri, 14 Aug 2020 13:32:49 +0530

வருமானம் இல்லாத மக்களிடம் இருந்து நிதி அறவீடு செய்து ஆலயங்கள் அமைக்கப்படுகின்ற நிலை மாற வேண்டும் :அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன்

வருமானம் இல்லாத மக்களிடம் இருந்து நிதி அறவீடு செய்து ஆலயங்கள் அமைக்கப்படுகின்ற நிலை மாற வேண்டும் :அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் காரைதீவு பிரதேச எல்லைக்குட்பட்ட இந்து சமயத் தலைவர்கள் மற்றும் அற நெறி ஆசிரியர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) இடம் பெற்றது.

இந்நிகழ்வில் வளவாளராக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் அவர்களும், அம்பாறை மாவட்ட செயலக இந்து காலாசார அபிவிருத்து உத்தியோகத்தர்கள் கே.ஜெயராஜி, என்.பிரதாப் அவர்களும், காரைதீவு பிரதேச இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகர், காரைதீவு பிரதேச எல்லைக்குட்பட்ட இந்து ஆலயங்களின் அறங்காவலர்களும், இந்து சமய அறநெறி பொறுப்பாசிரியர்களும் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வளவாளராக கலந்து கொண்ட மேலதிக அரசாங்க அதிபர் விளக்கமளிக்கையில் வசதி படைத்தவர்களிடம் இருந்து நிதியை பெற்று வருமானம் குறைந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதனையே ஒரு காலத்தில் ஆலயங்கள் மேற்கொண்டன. ஆனால் இன்று வருமானம் இல்லாத மக்களிடம் இருந்து நிதி அறவீடு செய்து ஆலயங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த நிலை மாற வேண்டும். முடிந்தவரை ஆலயங்கள் மக்களின் நலனுக்காக பாடுபட வேண்டும் என்றார். இந்நிகழ்வில் எதிர்காலத்தில் ஆலயங்கள் மேற்கொள்ள கூடிய திட்டங்கள் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Mon, 20 Jul 2020 15:01:15 +0530

இம்முறையாவது முஸ்லிம் சமூகம் விழித்துக்கொள்ளா விட்டால் பாரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும் - குதிரை வேட்பாளர் ஏ.எல்.எம். சலீம்

இம்முறையாவது முஸ்லிம் சமூகம் விழித்துக்கொள்ளா விட்டால் பாரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும் - குதிரை வேட்பாளர் ஏ.எல்.எம். சலீம் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

எங்களுக்கு இவ்வளவு காலமும் தலைமைத்துவம் வழங்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர்கள் நல்ல தலைவர்களாக இருந்திருந்தால் இந்த நாட்டில் சுய கௌரவத்துடன் வாழ்ந்த முஸ்லிம் சமூகம் இன்று இவ்வளவு அவமானங்களை சந்தித்திருக்காது என தே.காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் முன்னாள் சட்டமொழுங்கு அமைச்சின் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம். சலீம் தெரிவித்தார்.

சாய்ந்தமருதில் தேசிய காங்கிரசின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர்களினது வார்த்தைகளில் உண்மை இல்லை, அவர்களின் இதயத்தில் இது நமது சமூகம் என்ற இரக்கம் கொஞ்சமும் இல்லை, அவர்களின் மனதில் எப்போதும் பணம், பட்டம், பதவிகள் என்ற ஆசைகளை மாத்திரமே இருந்துவந்துள்ளது. பேராசை கொண்ட கண்டி, வன்னி தலைமைகளிடம் நாம் இவ்வளவு காலமும் ஏமாந்தது போதும். இனியும் அவ்வாறான பசப்பு வார்த்தைகளுக்கு நாங்கள் சோரம்போக முடியாது.

இக்கட்டான சூழ்நிலைகளில் வாழும் நாம் இன்று விழித்துக்கொள்ளாவிட்டால் நமது சமூகம் என்றுமே இந்த நாட்டில் உயர்வினைப்பெற முடியாமல் போய்விடும் என்பது கசப்பான உண்மை. அந்த உண்மைகளை அறிந்து நாட்டின் எழுச்சிக்கும், முஸ்லிங்களின் சரியான போக்குகளுக்கும் நாம் ஒழுங்கான பாதையில் பயணிக்க வேண்டும். அதனாலயே தான் சாய்ந்தமருது மண் என்றும் உண்மையான எண்ணங்களுக்கு உரமூட்டும் மண்ணாக கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளது.

அந்த வரலாற்றுக்கு இப்பெரும்திரலான  மக்கள் அலை சாட்சியாக இருக்கிறது.  இந்த கூட்டத்தின் திரளை சாய்ந்தமருது மக்கள் தேசிய காகிரஸின் வெற்றிக்கு சமர்ப்பணம் செய்கின்றோம்.நாங்கள் எம் சமூகத்திடம் மன்றாட்டமாக கேட்பது என்னவென்றால் இம்முறை தேசிய காங்கிரசுக்கும் அதன் சின்னம் குதிரைக்கும்  வாக்களியுங்கள் என்பதுடன் உண்மையின் பக்கம் அணிதிரளுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்றார். இக்கூட்டத்தில் தேசிய காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அடங்கலாக தேசிய காங்கிரசின் வேட்பாளர்கள், தேசிய காங்கிரசின் முக்கியஸ்தர்கள் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Mon, 20 Jul 2020 10:44:45 +0530

பற்றியெரியும் வரை பார்த்துக்கு இருந்துட்டு, இப்போ தண்ணி ஊத்தப் போனா அணையுமா? என்கிறார் பேராசிரியர் இஸ்மாயில்!!

பற்றியெரியும் வரை பார்த்துக்கு இருந்துட்டு, இப்போ தண்ணி ஊத்தப் போனா அணையுமா? என்கிறார் பேராசிரியர் இஸ்மாயில்!! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

"உரிமை கோஷம் எழுப்ப எமக்கும் தெரியும் எமது இளைஞர்கள் நாளை இந் நாட்டில் நிம்மதியாக வாழ வேண்டுமெனில் நாம் சாதுவாக செல்வதே சிறப்பு" எனவும் கடந்த ஆட்சியில் அ.இ.ம.கா. எனக்கு தந்த தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கொண்டு  'பொறிக்குள் இருந்து பிய்த்து' எடுக்க வேண்டியது போலதான் அபிவிருத்திகளை கொண்டு வந்தேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொதுத்தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட தேசிய காங்கிரசின் வேட்பாளருமான பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.

சம்மாந்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

கடந்த ஆட்சியில் அ.இ.ம.கா. எனக்கு தேசிய பட்டியல் மூலம் எம்.பி. பதவி தந்திருந்த போதிலும் 'பொறிக்குள் இருந்து பிய்த்து' எடுக்க வேண்டியது போலதான் அபிவிருத்திகளை இங்கு கொண்டு வந்தேன். இன்று மேடைகளில் என்னை வசைபாடும் இவர்கள் நாணயத்தை பற்றி கதைக்க அருகதையற்றவர்கள். உலமாக்களின் முன்னிலையில் எனக்கு கொடுத்த வாக்குறுதியை மழுப்பியவரே அ.இ.ம.கா. தலைவர் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் தான். அதற்குண்டான ஆதரங்களான யாரும் மரணிக்கவில்லை இன்றும் உயிரோடுதான் இருக்கிறார்கள்.

இது போக இன்று சிலர் மேடையில் ஏறினால் பஸ் டிப்போ தடுக்கப்பட்டதைப் பற்றி பேசுகின்றனர். அவ்வாறு கூறும் சக கட்சிக் காரரிடம் கேட்கிறேன். "நான் பாராளுமன்றம் சென்று ஒன்றறை வருடங்கள்தான்; அதற்குள் தடுப்பா? அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவராகவும் இருந்த உங்களுக்கு இதை செய்து முடிக்க வக்கில்லை. நொண்டிச் சாட்டு கூறிக் கொண்டு மேடையில் வசைபாடி என்ன பலன்"

எது எப்படியோ, மாயக் கல்லி, கரங்கா, வட்டமடு இத்தனையும் இவர்கள் முழு அதிகாரத்தில் இருந்த காலத்தில்தான் நிகழ்ந்தவை 'பற்றியெரியும் வரை பார்த்துக்கு இருந்துட்டு, இப்போ தண்ணி ஊத்தப் போனா அணையுமா?'இறுதிக் காலத்தில் என்னை எம்.பி.யாக்கி நசுங்கு பொறிக்குள் சுழல வைத்த அசத்திய தலைவருக்கு அவர் நினைத்தது நடக்கவில்லை.

இறைவன் எம்மோடு இருக்கின்றான். என்னால் முடியுமான பல கோடி ரூபா அபிவிருத்திகளை கொண்டு வந்துள்ளேன். அவற்றை 'புரஜெக்டர்' இல் போட்டுக்காட்ட வேண்டிய அவசியம் எமக்கு இல்லை.மக்கள் இம் முறை மிகத் தெளிவாக உள்ளனர். தேசிய காங்கிரஸின் தேவையை மக்கள் உண்மையாக உணர்ந்துள்ளனர். மக்களே சிந்தியுங்கள் இனியும் ஏமாற எமது சமூகம் தயாரில்லை - என்றார்.

Mon, 20 Jul 2020 10:08:36 +0530

வட-கிழக்கு இணைக்கப்பட்ட வேண்டும் என்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாக கண்டிகின்றது - மு.கா பிரதி தலைவர் ஹரீஸ்

வட-கிழக்கு இணைக்கப்பட்ட வேண்டும் என்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாக கண்டிகின்றது - மு.கா பிரதி தலைவர் ஹரீஸ் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

வடகிழக்கு மாகணம் இணைக்கப்பட வேண்டும் என்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் பாராளுமன்ற தேர்தல் விஞ்ஞாபன நிலைப்பாட்டடினை முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கின்றது.என அக்கட்சியின் பிரதி தலைவரும்,முன்னாள் இராஜாங்க அமைச்சரும்,திகாமடுல்ல மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் இன்று(19)கல்முனையில் தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்து இருந்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் அம்பாறை மாவட்டத்தில் பெரும்பானை இன குடியேற்றங்கள் நடைபெறலாம் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் ஆக்கப்படலாம் இதனால் எங்களுடைய அரசியல் பலம் இல்லாமல் போகலாம் என்ற ஒரு ஆபத்து உள்ளது
இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றினை வெளியிட்டுள்ளது அந்த விஞ்ஞாபனத்தில் வட-கிழக்கு தனி மாநிலமாக மாற்றப்பட்டு சமஸ்டி தீர்வு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருந்தாலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தை பற்றி எந்தவிதமான அக்கறையும் இன்றி அவர்களே பலவந்தமாக 1987ம் ஆண்டு வட-கிழக்கு இணைத்தது போன்று மீண்டும் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களை வடக்குடன் இணைத்து அவர்களின் உரிமைகளை இல்லாமல் ஆக்குகின்ற சதியினை தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்யப்போகின்றது என்கின்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதுசம்மந்தமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவர் என்ற ரீதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட-கிழக்கு மாகாணம் இணைக்கப்பட வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

எங்களுடைய நிலைப்பாடு கிழக்கு மாகாணம் தனித்து இருக்க வேண்டும் இந்த மாகாணத்தில் மூன்றின மக்கள் வாழ்கின்றார்கள். ஒரு மாகாண சபை தேர்தல் ஊடாக தங்களுடைய பிரதிநிதிகளை உறுதிப்படுத்துகின்ற நிலைமை இந்த மக்களுக்கு இருக்க வேண்டும். இதனை இணைத்து முஸ்லிம் மக்களை அநாதையாகின்ற விடயத்தினை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதேநேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் புறக்கணித்து செய்து இருக்கின்ற இந்த விடயமானது மறைந்த தந்தை செல்வநாயகம் உயிருடன் இருந்து இருந்தால் இந்த விடயத்தினை நிச்சயமாக அனுமதித்து இருக்கமாட்டார்.

அவர் 1956ம் ஆண்டு திருமலை மாநாட்டில் கிழக்கில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பிராந்திய சபைகள் உருவாக்கப்பட்ட வேண்டும் அதில் முஸ்லிம் மக்களும் தேவையேற்படின் சிங்கள மக்களும் சபைகளை உருவாக்கலாம் என்று மிக தாராள மனப்பான்மையுடன் செயற்பட்ட தலைமைகள் தமிழ் மக்கள் மத்தியில் இருந்தன.
ஆனால் இன்று ஒரு பெரும் சமூகமான முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளை புறந்தள்ளிவிட்டு முடிவெடுத்து இருப்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதே நேரம் கல்முனை விவகாரத்தில் சில சக்திகள் வன்முறையை துண்டுகின்ற வகையில் ஏன் செயற்பட வேண்டும் என்கின்ற கேள்வி எம்மிடத்தில் உள்ளது.இந்த நாட்டில் பல நகரங்கள் உள்ளன அதில் எல்லா இன மக்களும் இணைந்து வாழ்கின்றார்கள். குறிப்பாக நாவிதன்வெளி,காரைதீவு போன்ற பிரதேச செயலக பிரிவுகளில் தமிழ் மக்கள் கூடுதலாக வாழ்ந்து வருகின்றனர் அதேநேரம் 35% ,36%ற்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் அந்த பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் முஸ்லிம் சமூகத்திற்கு முகவெற்றிலையாகவும், அடையாளமாகவும் இருக்கின்ற கல்முனை மாநகரத்தினை மட்டும் இலக்கு வைத்து இந்த ஞானசாரவும் கருணாவும் வந்து கலவரபூமியாக மாற்ற நினைப்பதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கபோவதிலலை.
ஏனென்றால் கல்முனை என்பது முழு முஸ்லிம் சமூகத்திற்கும்,கிழக்கு மாகாணத்திற்கும், அம்பாறை மாவடத்திற்கும் ஒரு அடையாள சின்னம். எனவே அதனை ஒரு போதும் நாங்கள் விட்டுக்கொடுக்க போவதில்லை.கல்முனை பிரச்சினைக்குத் தீர்வாக அரசாங்கத்திடம் பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.1895ம் ஆண்டு இந்த பிராந்தியத்திலேயே நான்கு சபைகள் இருந்தது குறிப்பாக அது பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் ஒருவாக்கப்பட்டது.இது தமிழ் தலைமைகளினால் உருவாக்கப்பட்ட விடயம் அல்ல.ஒரு நடுநிலையாக இருந்த பிரிட்டிஷ் அரசினால் இந்த பிராந்தியம் நான்காக பிரிக்கப்பட்டு கல்முனை தெற்கில் சாய்ந்தமருது மக்களுக்கு என்று ஒரு கிராம சபையும், கல்முனை வடக்கில் மருதமுனை மக்களை மையப்படுத்தி ஒரு கிராம சபையும், கல்முனை மேற்கில் தமிழ் மக்களை மையப்படுத்தி ஒரு கிராம சபையும் கல்முனை மத்தியில் 75%மேற்பட்டு வாழ்கின்ற முஸ்லிம் மக்களை மையப்படுத்தி ஒரு பட்டின சபையும் உருவாக்கப்பட்டது.

எனவே இந்த தீர்வு சம்மந்தமாக நாங்கள் எல்லா தரப்பினருக்கும் எங்களின் நியாயங்களை எடுத்துகூறி இருக்கின்றோம். எனவே யாரும் கல்முனையின் வரலாறினை கொள்ளையடிப்பதற்கு நாங்கள் ஒரு போதும் இடமளிகமாட்டோம்

இந்த தேர்தல் கால கட்டத்தில் அரசியல் இலாபம் தேடுவதற்காகவும், தமிழ் மக்களின் வாக்கினை பெற்றுக் கொள்வதற்காகவும் கருணா அம்மான் போன்றவர்கள் அம்பாறை மாவட்டத்தில் பிட்டும் தேங்காய் பூவுமாக ஐக்கியமாக வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் வேறுப்பாட்டினையும், சந்தேகத்தையும் உருவாகின்ற, இனவாத்தினை தூண்டுகின்ற பேச்சினை கருணா அம்மான் நிறுத்த வேண்டும் என பகிரங்கமாக வேண்டிக்கொள்ளுகின்றேன்.என ஹரீஸ் குறிப்பிட்டார்

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சர் வேதாந்தி சேகு.இஸ்ஸத்தீன்
கல்முனை மாநகர சபை மேயர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.ரக்கீப்,பிரதி மேயர் ரகுமத் மன்சூர்,கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றோஸன் அக்தார்,எம்,எஸ்.எம்.நிசார்(ஜேபி),ஏ.சி.ஏ.சத்தார்,எம், எஸ்.உமர் அலி,சட்டத்தரணி ஆரிகா காரியப்பர்,திருமதி முர்சீத் அமீன்,காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர் பஸ்மீர்,எம்.எச்.எம் இஸ்மாயில்,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எம் முஸ்தபா,எம்,ஐ.எம் பிர்தெளஸ்,முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொருளாளர் ஏ,சி யஹியாக்கான்,முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தகர்களான சட்டத்தரணி சாரீக் காரியப்பர், எம்.எஸ்.எம் பழீல்,பி.டி.ஜமால்,எம். எம் பாமி, எம்.எச். நாசார் உட்பட ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Mon, 20 Jul 2020 01:27:59 +0530

மருதமுனை மு.கா, ம.கா, ஆதரவு இளைஞர்கள் தேசிய காங்கிரஸில் இணைவு

மருதமுனை மு.கா, ம.கா, ஆதரவு இளைஞர்கள் தேசிய காங்கிரஸில் இணைவு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் தேசிய காங்கிரஸின் கொள்கைகளை ஏற்று அக்கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் எ.எல்.எம். அதாஉல்லா முன்னிலையில் நேற்று இணைந்து கொண்டனர். 

இன்று (18) மாலை 4.00 மணியளவில் தேசிய காங்கிரஸின் சட்டவிவகார கொள்கை அமுலாக்கள் செயலாளரும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி எ.எல்.எம். ரிபாஸ் தலைமையில் மருதமுனையில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் தேசிய காங்கிரஸின் ஆதரவாளர்கள் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு இணைந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், முன்னாள் மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்ற அமைச்சருமான ஏ. எல். எம். அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் தேசிய காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்பு இணைப்பாளர் யூ. எல்.என். ஹுதா, மருதமுனை இளைஞர் அமைப்பாளர் சமட் ஹமீட், உயர் பீட உறுப்பினர் நூருல் பௌஸ், உட்பட இளைஞர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Sun, 19 Jan 2020 10:30:00 +0530

தம்பி சஜித் தேர்தல் முடிய காடேறி விட்டார் : நாட்டு மக்கள் இன்னும் 20 வருடங்கள் இந்த ஆட்சி நீடிக்கும் என்று நம்புகிறார்கள் - தேசிய காங்கிரஸ் தலைவர்

தம்பி சஜித் தேர்தல் முடிய காடேறி விட்டார் : நாட்டு மக்கள் இன்னும் 20 வருடங்கள் இந்த ஆட்சி நீடிக்கும் என்று நம்புகிறார்கள் - தேசிய காங்கிரஸ் தலைவர் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

தம்பி சஜித் தேர்தல் முடிய காடேறி விட்டார். அவரை வைத்து அனுதாப அலைக்கு முயன்று தோற்று போனார்கள். நாட்டு மக்கள் இன்னும் 20 வருடங்கள் இந்த ஆட்சி நீடிக்கும் என்று நம்புகிறார்கள். இப்போது இனவாதம் இல்லாமலாகி நாடு நிம்மதியாக உள்ளது. மக்களை நிம்மதியாக வாழ வழியமைக்காமல் மீண்டும் வந்து பிரதமராக்க போகின்றோம் என்று மீண்டும் பொய்யான மாய பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஆறாவது ஆண்டு நிறைவு விழாவும் கலைச்சுடர் ஷக்காப் மௌலானா ஞாபகார்த்த விருது வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (18) மாலை 4.00 மணிக்கு சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் மன்றத்தின் தலைவர் அஸ்வான் ஷக்காப் மௌலானா தலைமையில் நடைபெற்றபோது அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசிய தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர்,

மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபுக்கு பிறகு கிழக்குக்கும் எமது மக்கள் வாழும் கிராமங்களுக்கும் அதிகமாக சேவை செய்தது யார் என்பதை நீங்கள் அறிந்து வைக்காமல் இல்லை. ஆனால் இன்னமும் எமது மக்கள் சில புல்லுருவிகளால் பிழையாக வழிநடத்தப்படுகிறார்கள். கிழக்கிலங்கை வாழ் மக்களின் தமிழே அழகானது. இங்குதான் அதிக பிரபலமிக்க குரல்வளமிக்க கலைஞர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். சாக்குபோக்குகளுக்காக நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்த கூடாது. பொய்யான நிகழ்வுகளை ஏற்பாடு செய்துவிட்டு வருகின்ற அரசியல் துறை சார்ந்த அதிதிகள் கூறுகின்ற பொய்யான செய்திகளை கேட்டுக்கொண்டு இருக்க முடியாது.முஸ்லிம் தலைவர்கள் என்று நாம் நியமிக்கும் எமது தலைவர்களை நாட்டில் யாரிடமும் காட்ட முடியாது. பதவிக்காக மு.கா தலைவர் ஹக்கீம் மதம் மாற கூடியவர் என்று முன்னாள் அமைச்சர் ராஜிதவால் பகிரங்கமாக பேசப்பட்டது.

எங்களிடம் உண்மையும் சத்தியமும் இருக்கிறது. சோதனைகளை தாண்டி பயணித்த தேசிய காங்கிரசை நோக்கி இப்போது மக்கள் படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். மக்கள் இப்போதுதான் உண்மைகளை அறிந்து கொண்டு நடக்க ஆரம்பித்துள்ளார்கள். சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் கடந்தகாலங்களில் ஜனாதிபதிகள் தெரிவாகிய வரலாறு இருக்கிறது. எம் மக்களை பிழையாக வழிநடத்தி விட்டு பின்கதவால் அரசில் வந்து இணைத்துக்கொண்ட தலைவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். 2005,2010 ஆண்டுகளில் இவர்கள் பின்கதவால் வந்து அமைச்சு பதவிகளை பெற்றதை நாம் கண்ணால் கண்டோம். எங்களிடம் நேர்மை இருக்கிறது அதனால் சத்தியம் வென்றிருக்கிறது. உண்மை நிலையை அறிந்து மக்கள் படையெடுக்க ஆரம்பித்தவுடன் இப்போது மீண்டும் ஒரு பிரதமர் புரளியுடன் வந்திருக்கிறார்கள்.

2015 இல் சிங்கள மக்களின் வாக்குகள் குறைந்தால் மைத்திரி ஜனாதிபதியானார் என்பதை நாம் நன்றாக அறிவோம் அதே போன்று 2019 இல் சிங்கள மக்கள மஹிந்த அலைக்கு அள்ளுண்டு போகும் நிலையில் கூட வடக்கு, கிழக்கு மக்களை கிணற்று தவளை போன்று வைத்திருக்க முஸ்லிம், தமிழ் தலைவர்கள் சரியாக திட்டமிட்டு செயற்படுத்தினார்கள். சாய்ந்தமருது, கல்முனை மக்களின் பிரச்சினைக்கு தீர்வை தர முன்னாள் அமைச்சர் பஸில் வந்து பேசிய போது முஸ்லிங்களின் தலைவர்களாக அடையாளப்படுத்தும் காங்கிரசின் இரு தலைவர்களும் உணர்ச்சி போங்க பேசியதை நம்பி முஸ்லிம் மக்களாகிய நாங்கள் தோற்றுப்போனோம் என்றார்.

 இந்நிகழ்வில் கைத்தொழில் அபிவிருத்தி, ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், தேசிய காங்கிரஸ் பிரதித் தலைவர் டொக்டர் ஏ.உதுமாலெப்பை, கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த, உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் , முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.பீர்முஹம்மத், தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள்,  உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சமூக சேவை, கல்வி, கலை, கலாசார, இலக்கியத் துறைகளுக்கு ஆற்றி வருகின்ற பணிகளுக்காக துறைசார் பிரமுகர்கள் சிலர், மர்ஹூம் கலைச்சுடர் ஷக்காப் மௌலானா ஞாபகார்த்த விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

Sun, 19 Jan 2020 10:21:56 +0530

மருதம் கலைக்கூடலின் ஆறாண்டு நிறைவு விழாவும் துறைசார் பிரமுகர்கள் கௌரவிப்பு நிகழ்வும்

மருதம் கலைக்கூடலின் ஆறாண்டு நிறைவு விழாவும் துறைசார் பிரமுகர்கள் கௌரவிப்பு நிகழ்வும் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் 6 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று சனிக்கிழமை (18) சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் மாலை 03.00 மணிக்கு நடைபெறும்.

மன்றத்தின் தலைவர் அஸ்வான் ஷக்காப் மௌலானா தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் பிரதம அதிதியாகவும் முன்னாள் பிரதி அமைச்சர் மையோன் முஸ்தபா கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

கைத்தொழில் அபிவிருத்தி, ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், தேசிய காங்கிரஸ் பிரதித் தலைவர் டாக்டர் ஏ.உதுமாலெப்பை, கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த, உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத், காரைதீவு பிரதேச சபை பிரதித்தவிசாளர் ஏ.எம். ஜாஹீர், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஏ.எச். அஹமத் அம்ஜத், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச். சபீக்கா, டொப் குயின் அட்வடைசிங் உரிமையாளர் எம்.எச்.எம். அலி ரஜாய் உள்ளிட்டோர் விசேட அதிதிகளாகவும் முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.பீர்முஹம்மத், இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாகவும் கலந்து கொள்வர்.

இந்நிகழ்வில், சமூகசேவை, கல்வி, கலை, கலாசார, இலக்கியத் துறைகளுக்கு ஆற்றி வருகின்ற சேவைக்காக துறைசார் பிரமுகர்கள் ‘மர்ஹூம் கலைச்சுடர் ஷக்காப் மௌலானா ஞாபகார்த்த விருது’ வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதுடன் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மன்றத்தின் செயலாளர் எம்.ஏ.சி.எம்.பாயிஸ் கரீம் தெரிவித்தார்.

மன்றத்தின் பிரதித் தலைவரும் ஆசிரியரும் அறிவிப்பாளருமான ஏ.எல். நயீம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

Sat, 18 Jan 2020 15:28:49 +0530

ஜனாதிபதியின் சிந்தனைக்கு சாய்ந்தமருதில் களமமைத்த மயோன் முஸ்தபா

ஜனாதிபதியின் சிந்தனைக்கு சாய்ந்தமருதில் களமமைத்த மயோன் முஸ்தபா | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சிந்தனையில் உதித்த ஆக்கங்களை கொண்டு அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கல்முனை பிராந்திய ஆரம்ப நிகழ்வு முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா தலைமையில் இன்று (10) மாலை 04.00 மணியளவில் சாய்ந்தமருது கல்வி கோட்ட கமு/கமு அல்-கமறூன் வித்தியாலய முன் பிரதான வீதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ. எம். றியாஸ், கல்முனை கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் B.ஜிஹானா ஆலிப், ஆசிரிய ஆலோசகர் A.K. பத்திரன மற்றும் கமு/கமு/அல்-கமறூன் வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இவ் வேலைத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

Fri, 10 Jan 2020 19:49:38 +0530

நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்திற்கு பாடசாலை தளபாடமும் போட்டோ கொப்பி இயந்திரமும் வழங்கும் நிகழ்வு

நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்திற்கு பாடசாலை தளபாடமும் போட்டோ கொப்பி இயந்திரமும் வழங்கும் நிகழ்வு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பைசல் காசிமின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்திற்கு  பாடசாலை தளபாடம் மற்றும் போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எம்.எம்.பாறூக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பைசல் காசிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உபகரணங்களை வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.எல்.ஜலீல், கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளர் எம்.ஏ.எம்.றசீம் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் எம்.எம்.எம்.அன்சார், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இவ்பாடசாலைகளில் காணப்படும் அடிப்படை தேவைகளை நிபர்த்திசெய்யும் நோக்கில் பாடசாலைக்கு ஒரு தொகுதி தளபாடமும் போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Fri, 10 Jan 2020 19:04:18 +0530

கடந்த காலங்களில் ஏற்பட்ட சமூக விரிசல்களை சுயநல அரசியலுக்காக பாவிப்பதை சகலரும் கைவிட வேண்டும் தமிழ்-முஸ்லிம் உறவுவே எமது பிரதேசத்தின் பலம் - மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்

கடந்த காலங்களில் ஏற்பட்ட சமூக விரிசல்களை சுயநல அரசியலுக்காக பாவிப்பதை சகலரும் கைவிட வேண்டும் தமிழ்-முஸ்லிம் உறவுவே எமது பிரதேசத்தின் பலம் - மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

கடந்த கால மனக்கசப்புகளால் கல்முனை பிரதேசத்தின் தமிழ் - முஸ்லிம் உறவில் ஏற்பட்டுள்ள, விரிசலை சில அரசியல்வாதிகள் சுயநலத்திற்காக பாவிப்பதை கைவிட வேண்டுமென சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளரும் கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம். சலீம் தெரிவித்தார்.

சமூக மாற்றம் மற்றும் அபிவிருத்திக்கான மையம் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அல் - சுபைதா ஸ்ரீலங்கா அமைப்பின் ஏற்பாட்டில் இந்த சமூக மாற்றம் மற்றும் அபிவிருத்திக்கான மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் கல்முனை மாநகரசபை சுயேச்சைக் குழுக்களின் தலைவர் உட்பட அங்கத்தவர்கள் மற்றும் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா, அதன் அங்கத்தவர்கள்,உலமா சபைத் தலைவர் உட்பட அங்கத்தவர்கள் மற்றும் காரைதீவு பி.ச. உறுப்பினருட்பட பெருந்திரளான பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய அவர்,

கல்முனை பிரதேச செயலக பிரச்சினையை வைத்துக் கொண்டு சில அரசியல்வாதிகள் இருபுறமும் பேதங்களை ஏற்படுத்தியுள்ளனர். இத்தகைய நிலையிலிருந்து தமிழ் - முஸ்லிம் மக்கள் விடுபட்டு கல்முனைப் பிரதேசத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்திக்கும் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டும் தேசிய நல்லிணக்கம், பிரதேச ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் நோக்குடனும் நிலையான பொருளாதார அபிவிருத்தி என்ற புதிய அரசின் கொள்கைக்கேற்பவும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் புறையோடிப்போயுள்ள பிரச்சினைகளை எதிர்காலத்தில் சமூகங்கள் இணைந்து தீர்த்துக் கொள்வதற்கான பொறிமுறைகளும் இந்த அமைப்பினூடாக வகுக்கப்படவுள்ளன. இவ்வாறான பிரச்சினைகளில் அரசியல்வாதிகள் இலாபம் தேடும் விதமாக நடந்துகொள்வது மிகவும் வருந்தத்தக்கது.

அத்துடன் எமது பிரதேசத்தின் முக்கிய தேவையான சாய்ந்தமருதுக்கான நகர சபையைப் பெறும் விடயம் இன்று இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.இந் நிலையில் இச்சபை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் கிடைக்கக்கூடிய வகையில் எமது பள்ளிவாசலும் உறுப்பினர்களும் ஏனையோரும் அதற்கான சகல வேலைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோன்று கல்முனைப் பிரதேச மீனவர்களின் பிரச்சினைகளான சாய்ந்தமருது படகு இறங்குதுறையை மிக விரைவில் அமைப்பதற்கான முன்மொழிவும் இந்த அலுவலகத்தின் மூலம் எதிர்வரும் காலங்களில் பிரதேச செயலகம் ஊடாக சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனால் எமது ஆழ்கடல் மீனவர்கள் பலன் பெறவுள்ளனர்.

அதுமட்டுமன்றி, ஆடைத்தொழிற்சாலை ஒன்றை அமைக்கவும் இந்த அலுவலகம் முயற்சிகளை மேற்கொள்ளும். பெருந்தொகையான இளைஞர் - யுவதிகள் இதில் தொழில்வாய்ப்பைப் பெறுவர்.

சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேசத்தில் புறையோடிப் போயுள்ள வீடில்லாப் பிரச்சினை மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டு போதியளவு வீடு வழங்கப்படாத குடும்பங்களுக்கான வீடுகளை வழங்கல், வொலிவோரியன் கிராமத்தை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல முன்மொழிவுகளையும் இந்த அலுவலகம்சமர்ப்பிக்கவுள்ளது.

அத்துடன் போதைப்பொருளுக்கு அடிமையானோரை புனர்வாழ்வளிக்கும் பொருட்டு, தேசிய ஔடத அமைப்புடன் இணைந்து இந்த அமைப்பு செயற்படவுள்ளது. இதற்கான முன்மொழிவும், போதைவஸ்த்துக்கு எதிரான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

மேலும் சுற்றுச் சூழல் சம்பந்தமான இயற்கை நீர் நிலைகளைப் பாதுகாப்பதற்கான செயற்றிட்டத்தை மேற்கொள்வதற்கு பிரதேச செயலகம் மூலம் முன்மொழிவுகளை சமர்ப்பித்தல், பல நீண்ட காலத் திட்டங்களை மேற்கொள்வதும் இந்த அலுவலகத்தின் செயற்பாடுகளாகவுள்ளன.

பொதுமக்கள், அரச ஊழியர்களது அன்றாட பிரச்சினைகளுக்கு வேண்டிய சந்தர்ப்பங்களில் வழிகாட்டல்களை வழங்கி அதற்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் நிலையமாகவும் இவ்வலுவலகம் செயற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Thu, 09 Jan 2020 19:22:10 +0530

மாணவர்களின் போஷாக்கு மட்டம் அவர்களது கற்றல் நடவடிக்கையில் தாக்கம் செலுத்துகிறது - வலய கல்விப் பணிப்பாளர் உமர் மெளலானா

மாணவர்களின் போஷாக்கு மட்டம் அவர்களது கற்றல் நடவடிக்கையில் தாக்கம் செலுத்துகிறது - வலய கல்விப் பணிப்பாளர் உமர் மெளலானா | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

இலங்கையில் இருக்கின்ற மாணவச் செல்வங்களின் போஷாக்கு மட்டம் அவர்களுடைய கற்றல் விடயங்களில் மிகக் கூடுதலான தாக்கத்தை செலுத்துகிறது என்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மெளலானா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு போஷாக்குணவு வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (6) ஓட்டமாவடி – மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலயத்தில் நடைபெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,

மாணவர்கள் மத்தியில் போஷாக்கு மட்டம் குறைவடைவதன் காரணமாக மாணவர்களின் கல்வி அடைவுகளில் பல்வேறு தாக்கங்கள் ஏற்படலாம் என்பதனைக் கருத்தில் கொண்டு இலங்கை அரசு மிக நீண்ட காலமாக பல்வேறு வடிவங்களில் மாணவர்களின் போஷாக்கை அதிகரித்துச் செல்வதற்கான வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது.

எனவே மாணவர்களுக்கு சத்துள்ள உணவுகளை வழங்க நாம் பழகிக்கொள்ள வேண்டும். இன்று நம்மில் பலர் சந்தோசமாக விரும்பி உண்ணுகின்ற உணவாக பரோட்டா காணப்படுகின்றது அதைத்தான் எங்களுடைய பிள்ளைகளுக்கும் வழங்கி வருகின்றோம். அதனை நாம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். என்னைப்பொறுத்தவரை உலகத்திலே மிகமோசமான உணவாக பரோட்டாதான் காணப்படுகின்றது. அது சமிபாட்டில் அநேகமான பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது.

எனவே பெரியவர்கள் உண்ணுகின்ற உணவுகளில் எண்ணெய்ப் பதார்த்தங்களைக் குறைக்கலாம். ஆனால் இந்தச் சின்னஞ்சிறுசுகளுடைய உணவுகளில் நீங்கள் அதனைக் குறைக்க தேவையில்லை. எண்ணெய்ப் பதார்த்த உணவுகளை நீங்கள் குறைக்கின்ற போது அவர்களுடைய அழகு சில வேளைகளில் குறைவடைவதற்கான வாய்ப்பு உள்ளது.

மாணவர்களுக்கு தேங்காய், எண்ணெய் கலந்த உணவுகளை கொடுத்துத்தான் ஆகவேண்டும். எங்களுக்கு வருத்தம் வருகின்றது என்பதற்காக அதை நாங்கள் மாணவர்களுக்கு வழங்காமல் இருக்கக்கூடாது. மாணவர்கள் வளர்ப்பு நிறைந்தவர்களாக மாறுவதற்கு இந்தவகை உணவுகள் கட்டாயம் தேவைப்படுகிறது.

அதனால்தான் அவர்களுக்கு வறுத்த, தாளித்த உணவுகள் கொடுக்க பணிக்கப்படுகின்றன ஒரு பிள்ளைக்கு குறைந்தது ஒரு நாளைக்கு காலை உணவு கொடுக்கும் போது பத்து கிராம் எண்ணெய் சேர்ந்த உணவுகள் கொடுக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

Thu, 09 Jan 2020 19:18:55 +0530

சாய்ந்தமருது மக்களாகிய நாம் இன்று நேற்றல்ல எப்போதும் மஹிந்த அரசை நேரடியாக எதிர்ப்பவர்கள் : இனி எமது தெரிவு நமது தலைவராகவே இருக்க வேண்டும் - சாய்ந்தமருதில் ஹுதா உமர்

சாய்ந்தமருது மக்களாகிய நாம் இன்று நேற்றல்ல எப்போதும் மஹிந்த அரசை நேரடியாக எதிர்ப்பவர்கள் : இனி எமது தெரிவு நமது தலைவராகவே இருக்க வேண்டும் - சாய்ந்தமருதில் ஹுதா உமர் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

அக்கரைப்பற்று எனும் ஒரு ஊரின் பாராளுமன்ற உறுப்பினர் அல்ல ஏ.எல்.அதாவுல்லா எனும் நபர். அவர் கிழக்கு மாகாணத்தின் ஒரு ராஜாவாக இருந்தவர். அவர் தனக்கு கிடைத்த அமைச்சர் பதவியை பயன்படுத்தி சகல பிரதேசங்களிலும் அபிவிருத்தி செய்தவர் என்பதையும் தாண்டி சில பிரதேச மக்களின் நீண்டநாள் உரிமை கனவுகளையும் நிஜமாக்கி கொடுத்த ஆளுமை மிக்க தலைவர். அவரை மீண்டும் அதிகார கதிரைக்கு கொண்டுவரவேண்டியது அம்பாறை வாழ் மக்களின் தேவையாகும் என தேசிய காங்கிரசின் தேசிய கொள்கைப்பரப்பு இணைப்பாளரும் தெற்காசிய சமூக அபிவிருத்தி ஸ்தாபன பணிப்பாளருமான அல்-ஹாஜ் யூ.எல்.நூருல் ஹுதா  தெரிவித்தார்.

இன்று (09) மாலை சாய்ந்தமருதில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் தொடர்ந்தும் தனது உரையில்,

நாம் வாக்களிக்காமல் நிராகரித்தாலும் எம்மை மதித்து சாய்ந்தமருது வைத்தியசாலை சுனாமியால் பாதிக்கப்பட்ட போது அதை பிரதான வீதியில் அமைக்க கடுமையாக பாடுபட்டு இன்று அந்த வைத்தியசாலை கம்பீரமாக எமது மண்ணில் தலைநிமிர்ந்து நிற்க்க காரணமானவர் தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா அவர்களே. அதுமாத்திரமின்றி எமது பிரதேச வீதிகளில் மிக அதிகமான அளவு வீதிகளை அபிவிருத்தி செய்தது முதல் எமது பிரதேச செயலகத்திற்கான கட்டிடம், பாடசாலை கட்டிடங்கள் என இன்னும் பல அபிவிருத்திகளை இந்த மண்ணுக்கு செய்தவர் என்றால் அது முன்னாள் அமைச்சர் அதாவுல்லா அவர்களையே சாரும்.

இப்போது கொழுந்து விட்டு எரியும் நகரசபைக்கான இந்த போராட்டத்தை ஆரம்பிக்க முன்னரே எமக்கான தேவையை முடித்துவைக்க தீர்வை தங்கத்தட்டில் தந்தபோது முஸ்லிம் காங்கிரசை நம்பி அதை நிராகரித்தோம். ஆனால் இன்று நாம் முஸ்லீம் காங்கிரசை நிராகரித்து போராடி கொண்டிருக்கிறோம். உண்மையும், சத்தியமும், தூரநோக்கு சிந்தனையும் கொண்டவர் அதாவுல்லா என்பதை காலம் எமக்கு நன்றாக பாடம் புகட்டியுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஸ, அதாவுல்லா போன்றோர்களும் இன்னும் பலரும் நகரசபையை துரிதகதியில் செய்துமுடிக்க எங்களுக்கு ஆணைத்தாருங்கள் என எம்மிடமே வந்து நேரடியாக கேட்டபோதும் நாங்கள் அவர்களை நிராகரித்து எமது மண்ணுக்கு நேரடியாக துரோகம் செய்த மாற்று அணியினரையே ஆதரித்தோம். பெரும்பான்மை இன மக்களின் கணிசமான வாக்குகளால் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்தும் நாம் எமது மண்ணுக்கான உரிமையை பெற வாக்களிக்க வில்லை. இப்போது அவர்கள் விரும்பும் நேரத்தில் தான் தருவோம் என்றால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் நாம் அவர்களை இன்று நேற்றல்ல எப்போதும் நேரடியாக எதிர்ப்பவர்கள். அவர்களை எதிர்த்து வாக்களித்துவிட்டு எந்த முகத்தை வைத்துக் கொண்டு எமது உரிமைகளுக்காக அவர்களிடம் பேச முடியும்.

எதிர்வரும் 10-20  வருடங்களுக்கு அசைக்க முடியாத அளவுக்கு பெரும்பான்மை இன மக்களின் ஆதரவை கொண்டிருக்கும் அரசாங்கத்துடன் இணைந்து சென்று எமது உரிமைகளையும், சலுகைகளையும் பெற நாம் இப்போதாவது ஒன்றிணைய வேண்டும். அதற்காக நமது மண்ணை எப்போதும் நேசிக்கும் ஒரு மக்கள் தலைவனை நாம் பலப்படுத்த முன்வரவேண்டும். பல்வேறு அபிவிருத்திகளை எமக்கு செய்த ஆளுமைகளை நாம் இவ்வளவு காலமும் நிராகரித்துவிட்டு பாட்டுக்கும் ஏனைய சில கவர்களுக்கும் சோரம்போகி பிழையான தீர்மானங்களையே எடுத்துள்ளோம். இனியும் பிழையான தீர்மானங்களை எடுத்துவிட்டு வீதிகளில் உண்ணாவிரதம் இருக்க முடியாது என்பதை நன்றாக சிந்தித்து நமது தாய் மண்ணை நேசித்து மண்ணின் தாக்கம் தீர்க்க எம் மண்ணின் மீது மற்றும் இந்த அரசின் தலைவர்களிடம் நல்ல மரியாத்தையும், செல்வாக்கும் மிகுந்த கிழக்கின் தலைவனை நாட்டின் குரலாக மாற்ற முன்வரவேண்டும் என்றார். 

Thu, 09 Jan 2020 19:15:38 +0530

சம்மாந்துறை வீரமுனை பிரதேசத்தில் 05 வேலைத்திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு

சம்மாந்துறை வீரமுனை பிரதேசத்தில் 05 வேலைத்திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் தணித்துவிடப்பட்ட கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை வீரமுனை பிரதேசத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட 05 வேலைத்திட்டங்கள் மக்கள் பாவனைக்கு இன்று கையளிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யகம்பத் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அபிவிருத்தித் திட்டங்களை திறந்து மக்களின் பாவனைக்கு கையளித்தார்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட், அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி, அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எம்.அப்துல் லத்தீப், சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளர் வீ.ஜெயசந்திரன்,  சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வீரமுனை மில்லடி வீதி, வீரமுனை குறிஞ்சாமுனை வீதி, வீரமுனை மைதான வடிகான், வீரமுனை அலவாக்கரை வீதியின் வடிகாண், வீரமுனை கண்ணகி வீதியின் தடுப்புச்சுவர் ஆகிய வேலைத்திட்டங்கள் திறந்துவைக்கப்பட்டது.

Thu, 09 Jan 2020 19:10:20 +0530

ஓட்டமாவடி - காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

ஓட்டமாவடி - காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

ஓட்டமாவடி -காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் நலன் கருதி ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் சமூர்த்தி சமூக நலன் பிரிவின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலையின் தலைவர் எஸ்.எச். அறபாத் ஸஹ்வி தலைமையில் பாடசாலை ஆராதனை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மவ்ஜுத் அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவர் ஏ.எல்.பீர் முகம்மட்காஸிமி, ஓட்டமாவடி சமூர்த்தி முகாமையாளர் எம்.எல்.ஏ.மஜீத், பாடசாலை நிர்வாக உறுப்பினர்களான எம்.ஜே.எம்.இம்தியாஸ், எம் .அசனார், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல். சியாத் மற்றும் சமூர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம். சாஜஹான் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு கொடி விற்பனை மூலம் சேகரித்த நிதியின் மூலம் குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதாக சமூர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம் ஷாஜகான் தெரிவித்தார். 

Thu, 09 Jan 2020 09:03:31 +0530

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுக்கூட்டம்

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுக்கூட்டம் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுக்கூட்டம் கடந்த 07.01.2020ம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப 4.00 மணிக்கு வைத்திய அத்தியட்சகர் Dr எறங்க ராஜபக்ஷ (Dr. Eranga Rajapakshe) தலைமையில் வைத்திசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன் போது வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறை மற்றும் ஆளணிப்பற்றாக்குறைகளால் வைத்தியசாலை எதிர்நோக்கும் வெளிநோயாளர் பிரிவு உட்பட முக்கிய பிரிவுகள் ஒரு சில தினங்கள் மூடப்படல், அதன் காரணமாக நோயாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

எதிர்வரும் காலங்களில் வைத்தியர்கள் நியமனம் மற்றும் ஏனைய ஆளணிகளைப் பெற்றுக்கொள்வதில் உரிய தரப்பை அணுகி பெற்றுக்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டது.

அத்தோடு, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் அவர்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை இம்மாதம் கடைசி பகுதியில் மேற்கொள்ளவுள்ள நிலையில், அபிவிருத்திக்குழுவின் அழைப்பின் பேரில் வைத்தியசாலையின் தற்போதைய நிலைப்பாட்டை ஆளுநருக்கு எடுத்துரைக்க அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Thu, 09 Jan 2020 08:49:30 +0530

பொறியியலாளர் ஷிப்லி பாறூக் இன் முயற்சியால் காத்தான்குடி தள வைத்தியசாலையில் ஒரு கோடி ஐம்பது இலட்சம் ரூபா செலவிலான அபிவிருத்திப் பணிகள் நிறைவு

பொறியியலாளர் ஷிப்லி பாறூக் இன் முயற்சியால் காத்தான்குடி தள வைத்தியசாலையில் ஒரு கோடி ஐம்பது இலட்சம் ரூபா செலவிலான அபிவிருத்திப் பணிகள் நிறைவு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

காத்தான்குடி தள வைத்தியசாலைக்கான மருந்துக் களஞ்சியசாலை, அம்பியூலன்ஸ் வண்டி நிறுத்தி வைப்பதற்கான பாதுகாப்பான தரிப்பிடம் மற்றும் அம்பியூலன்ஸ் சாரதிகள் தங்குவதற்கான விடுதி என்பன போன்ற பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. 

காத்தான்குடி தள வைத்தியசாலையைப் பொறுத்தமட்டில் முறையாக பராமரிக்கக் கூடிய மருந்துக் களஞ்சியசாலை ஒன்று இல்லை என்கின்ற பிரச்சினை மிக நீண்ட காலமாக இருந்து வந்த விடயமாகும். 

கடந்த அரசாங்கத்தின் போது சுகாதார இராஜாங்க அமைச்சராக இருந்த பைசல் காசிம் அவர்களிடம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் வேண்டிக் கொண்டதற்கிணங்க அதற்குரிய நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மருந்துக் களஞ்சியசாலையினுடைய பணிகள் பூரணமாக நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன.

அந்த வகையில் இந்தக் களஞ்சியசாலையானது காத்தான்குடி தள வைத்தியசாலைக்குத் தேவையான அனைத்து மருந்து வகைகளையும் கெட்டு விடாமல் நல்ல முறையில் பாதுகாக்கக் கூடியவாறு முழுமையாக குளிரூட்டப்பட்ட ஓர் களஞ்சியசாலையாக இப்போது அமையப்பெற்றிருக்கின்றது.

மேலும் அம்பியூலன்ஸ் வண்டிகளை நிறுத்தி வைப்பதற்கான பாதுகாப்பான நிறுத்தல் பகுதி மற்றும் அம்பியூலன்ஸ் சாரதிகள் தங்குவதற்கான விடுதி வசதிகள் என்பனவும் இல்லாதிருந்த நிலையில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் முயற்சியால் அவைகளும் இப்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. 

அத்துடன் ஒரு கோடி இருபத்தைந்து இலட்சம் ரூபா செலவில் விசேட வைத்திய நிபுனர்களுக்கான தங்குமிட வசதிகளும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் முயற்சியால் கட்டிமுடிக்கப்பட்டு ஏற்கனவே வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Wed, 08 Jan 2020 19:59:27 +0530

கல்முனை, அனுராதபுர மாணவர்களுக்கு 100 வீதம் வரையான புலமைப்பரிசில் - January 2020 Intake

கல்முனை, அனுராதபுர மாணவர்களுக்கு 100 வீதம் வரையான புலமைப்பரிசில் - January 2020 Intake | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

தலைநகரில் Networking மற்றும் Cyber Security போன்ற துறைகளில் முன்னணி கல்வி நிறுவனமாக விளங்கும் WinSYS Networks மற்றும் வளர்ந்துவரும் கல்வி நிறுவனமான Lisbro Academics இணைந்து கல்முனை, அனுராதபுர மாணவர்களுக்கு 100% வரையான புலமைப்பரிசில் பின்வரும் பாடநெறிகளில் வழங்க முன்வந்துள்ளது.

- HND in Software Development 
- HND in Cyber Security

கல்முனை, அனுராதபுர lisbro academics கிளைகளில் தங்கள் பாடநெறிகளை மாணவர்கள் பின்பற்ற முடியும் என்பதோடு கொழும்பிலிருந்து வருகைதரும் விசேட விரிவுரையாளர்கள் மூலம் கற்பிக்கப்படுவதோடு மாணவர்களுக்கு *Internship* வாய்ப்பும் செய்து கொடுக்கப்படும்.

புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம் அல்லது உங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கத்தை *076 469 9886* எனும் இலக்கத்திற்கு எஸ்.எம்.எஸ் அல்லது #WhatsApp செய்து வாய்ப்பினை உறுதி செய்து கொள்ளுங்கள். 

Mon, 30 Dec 2019 19:19:38 +0530

மலேசிய லிங்கன் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை லிஸ்ப்ரொ அகடமிக்ஸ் இற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

மலேசிய லிங்கன் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை லிஸ்ப்ரொ அகடமிக்ஸ் இற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

இலங்கை பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவினால் அங்கிகரிக்கப்பட்ட பட்டப்படிப்பினை வழங்கிவரும் மலேசிய லிங்கன் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பை இலங்கையில் அனுராதபுரம், கல்முனை பிரதேச மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் முகமாக லிங்கன் பல்கலைக்கழகத்திற்கும் லிஸ்ப்ரொ அகடமிக்ஸ் இற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் 26.12.2019 அன்று கைச்சாத்திடப்பட்டது. 

மலேசிய லிங்கன் பல்கலைக்கழகத்தின் சார்பில் அதன் துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் அமியா பகுமிக் அவர்களும் லிஸ்ப்ரொ நிறுவனத்தின் சார்பில் இயக்குனர் குழாம் அங்கத்தவர் சுகைல் ஜமால்தீன் அவர்களும் பிரசன்னமளித்து கைச்சாத்திட்டனர். 

Mon, 30 Dec 2019 18:43:42 +0530

சாய்ந்தமருதில் சுனாமி நினைவு நாள் நிகழ்வுகள்

சாய்ந்தமருதில் சுனாமி  நினைவு நாள் நிகழ்வுகள் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரலையில் சிக்கி எம்மை விட்டு மறைந்த எமது உறவுகளை நினைத்து இறைவனிடம் கையேந்துவோம்." எனும் தொனிப்பொருளில் அல்- மீஸான் பௌண்டசன், ஸ்ரீ லங்கா வின் சமூகநல பிரிவு 15வது வருடமாகவும்  ஏற்பாடு செய்த சுனாமி நினைவு நாள் நிகழ்வு சாய்ந்தமருது லீடர் MHM. அஷ்ரப் வித்தியாலய மண்டபத்தில் இன்று 2019.12.26 (வியாழன்) காலை 8.30 மணியளவில்  அல்- மீஸான் பௌண்டசன், ஸ்ரீ லங்காவின் தவிசாளர் அல்ஹாஜ் நூருல் ஹுதா உமர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை சாஹிரா கல்லூரி முன்னாள் அதிபரும் அரசியல் புரட்சிகர முன்னணி தலைவருமான  சட்டத்தரணி எம்.சி. ஆதம்பாவா சுனாமி நினைவு தின உரையை நிகழ்த்தினார். 
நினைவுதின உரையும் துஆ பிராத்தனையும் மாளிகைக்கடு அன் நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் பிரதம இமாமும் மத்கவுன் நூர் மதரஸா அதிபருமான  மௌலவி ARM. சப்றாஸ் நிகழ்த்தினார். இந்நிகழ்வில் குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கு குர்ஆனும் வழங்கி வைக்கப்பட்டது. 

இந்நினைவு தின நிகழ்வில் கமு/ அல்- ஹுசைன் வித்தியாலய பிரதி அதிபர் எம்.எஸ்.முபாரக், அல்- மிஸான் பௌண்டசன், ஸ்ரீ லங்கா வின் சமூக நல பிரிவின் தலைவர் ஆப்ரிடீன் உட்பட பலரும்  அதிதியாக கலந்து கொண்டனர்.

Thu, 26 Dec 2019 11:45:57 +0530

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

சாய்ந்தமருது அல் - ஹிலால் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா வித்தியாலயத்தின் கூட்ட மண்டபத்தில் அண்மையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் எம்.எஸ்.எம். பைஸார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. ஜலீல் பிரதம அதிதியாகவும், கணக்காளர் றிஸ்வி யஹ்ஸர் கௌரவ அதிதியாகவும், வைத்தியர்களான றஸீன், ஷாபி மற்றும் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.எம். றஹ்மான் ஆகியோர் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இப்பாடசாலையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு, இணைப்பாட விதான செயற்பாடுகளில் வலய, மாகாண மட்டம் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு, மற்றும் ஒவ்வொரு தரத்திலும் தரம் 03 தொடக்கம்  தரம்  08 வரை தவணைப்பரீட்சையில் டொப் 10 வரையும் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவித்தும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

பாடசாலையின் பிரதி அதிபர் றிப்கா அன்ஸாரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இவ்விழாவில், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், அபிவிருத்தி உறுப்பினர்கள், பழைய ஆசிரியர்கள் - மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Wed, 18 Dec 2019 23:42:55 +0530

அரசினால் வினியோகிக்கப்பட்ட கையேட்டை ஆதாரமாக கொண்டு நீதிமன்றத்தை நாடினால் தோல்வியை சந்திக்க நேரிடும் : உதவி ஆணையாளர் ராபி

அரசினால் வினியோகிக்கப்பட்ட கையேட்டை ஆதாரமாக கொண்டு நீதிமன்றத்தை நாடினால் தோல்வியை சந்திக்க நேரிடும் : உதவி ஆணையாளர் ராபி | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

எதிர்வரும் மார்ச் மாதத்தின் பின்னர் எமது அலுவலகத்தினால் விநியோகம் செய்யப்பட்ட கையெடுகள் பாரிய சட்ட சிக்கல்களை உண்டு பண்ணும் என்பதுடன் யாராவது ஒருவர் அந்த கையேட்டை ஆதாரமாக கொண்டு நீதிமன்றத்தை நாடினால் அவர் தோல்வியை சந்திப்பார் என அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.டி. எம். ராபி தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேச சபையின் நூலகங்கள் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்திய தேசிய வாசிப்பு மாத போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். நௌசாத் தலைமையில் இன்று (18) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், 
புதிய முகங்கள் உள்ளுராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களாக தெரிவானதால் உள்ளுராட்சி மன்ற சட்டங்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற விடயங்கள் தொடர்பில் தெளிவு படுத்தும் 1987ஆம் ஆண்டின்15ஆம் இலக்க பிரதேச சபை சட்டம் தொடர்பிலான புத்தம் ஒன்றை நாங்கள் வெளியிட்டிருந்தோம். அந்த புத்தகத்தில் 20க்கும் மேற்பட்ட பிழைகள் இருக்கிறது. அந்த புத்தகங்களை திரும்ப பெற வேண்டும் என அமைச்சுக்கு அறிவித்துள்ளேன். இதனை வரும் வாரங்களில் உள்ளுராட்சி சபைகளுக்கு அறிவிக்க உள்ளேன். பழைய கையெடுகளை பாவிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளேன்.

புத்தகம் எழுதுபவர்கள் விடுகின்ற பிழை ஒருவரின் வாழ்க்கையையே மாற்றி விடுகின்றது. வியாபார நோக்கம் கருதி எழுத்தப்படுகின்ற புத்தகங்கள் நிறைய பிரச்சினைகளை உருவாக்கிறது. பிள்ளைகள் ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க முன்னர் பெற்றோர் அந்த புத்தகத்தை நன்றாக வாசிக்க வேண்டும். 

வயதுக்கு ஏற்ற புத்தகங்கள் எமது பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டால் மாத்திரமே அவர்களால் அழுப்பில்லாமல் படிப்பில் கவனம் செலுத்த முடியும். சரியான விடயங்கள் சரியான முறையில் அமுல்படுத்தப்படல் வேண்டும். அவ்வாறு செய்ய தவறியதால் அண்மையில் பள்ளிவாசல் முன்றலில் வரையப்பட்டு பாரிய விவாத பொருளாக மாறிய சுவரோவியம் இருந்தது என்றார். 

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, உப தவிசாளர் வி. ஜெயச்சந்திரன், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர் ஏ.எல். அப்துல் மஜீத், உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Wed, 18 Dec 2019 23:37:39 +0530

ஐவா தாதியர் பயிற்சி கல்லூரி தாதிமார்களுக்கான தொப்பி அணிவிப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு

ஐவா தாதியர் பயிற்சி கல்லூரி தாதிமார்களுக்கான தொப்பி அணிவிப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

ஐவா தாதியர் பயிற்சி கல்லூரியில் தாதியர் பயிற்சியை நிறைவு செய்த தாதிமார்களுக்கான தொப்பி அணிவிப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வும் இன்று (18)  மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் ஐவா தாதியர் பயிற்சி கல்லூரியின் பணிப்பாளர் சித்தீக் நதீர் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான M.S.சுபைர் அவர்கள் கலந்து கொண்டு தாதியர் பயிற்சியை நிறைவுசெய்த தாதிமார்களுக்கு நிணைவுச் சிண்ணங்களை வழங்கி கௌரவித்தார்.

Wed, 18 Dec 2019 23:34:33 +0530

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தின் 10 ஆவது ஆண்டு விழாவும் பரிசில்கள் வழங்கும் வைபவமும்

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தின் 10 ஆவது ஆண்டு விழாவும் பரிசில்கள் வழங்கும் வைபவமும் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தினால் 10 ஆவது ஆண்டு விழாவும் பரிசில்கள் வழங்கும் வைபவமும் இன்று (18) கிண்ணியா அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம் பெற்றது.

வலயக் கல்வி அலுவலகத்தின் பணிப்பாளர் இசட்.எம்.எம்.ஸீனதுல் முனவ்வரா நளீம் தலைமையில் இடம் பெற்ற இவ் வைபவத்தில் கல்விச் சமூகத்தை சேர்ந்த பலர் கௌரவிக்கப்பட்டார்கள்.

இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் துறை முகங்கள் கப்பற் துறை பிரதியமைச்சருமான அப்துல்லாமஃறூப் அவர்களுக்கும் வலயக் கல்வி பணிப்பாளரால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மேலும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்,கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் உட்பட பாடசாலை அதிபர்கள் கல்வி சார் ஊழியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

Wed, 18 Dec 2019 23:29:53 +0530

Loudspeaker | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பிரபலமானவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 09:10:56 +0530

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...