அதிக சத்தத்தினால் ஏற்படும் தொல்லைகள்

அதிக சத்தத்தினால் ஏற்படும் தொல்லைகள் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

அதிக சத்தம் என்பது மிக சத்தமாக ஒலிக்கும் பாடல், கட்டிட ரிப்பேர், மிக்ஸி சத்தம் இப்படி பல சத்தங்கள் உள்ளன. இவை அநேகருக்கும் எரிச்சலையும், கோபத்தினையும் கடும் சொற்களையும், அழிவுப் பூர்வமான சிந்தனைகளையும் ஏற்படுத்துகின்றன என விஞ்ஞானிகளின் ஆய்வுகள் கூறுகின்றன.

சிலருக்கு மற்றவர் முன்கரண்டி, ஸ்பூன் கொண்டும் தட்டுகளை சுரண்டி கொண்டும், சத்தம் போட்டுக்கொண்டும் சாப்பிட்டால் தாங்க முடியாத எரிச்சல் வரும்.

சிலர் நகங்களால் போர்டுகளை சுரண்டும் பொழுது அருகில் இருப்பவர்கள் காதுகளை பொத்திக்கொள்வார்கள். ஒலியும் ஒரு சக்திதான். காரணம் ‘வைபரேட்’ செய்து ஒலி அலையினை ஏற்படுத்துகின்றன. இந்த ஒலி அலை நம் காதினுள் சென்று பல கட்டங்களைத் தாண்டி நம்மை கேட்க வைக்கின்றது. இனிமையான ஒலி மனதுக்கு மகிழ்வினை ஏற்படுத்தும்.

* குழந்தை வீரிட்டு விடாது அழுவது.
* பெண்ணின் கூச்சல்.
* மின்சாரம் கொண்டு சுவரில் துளை போடும் சப்தம்.

போன்றவை எளிதில் ஒருவரின் மன நலத்தினை மாற்றி விடுகின்றதாம். சிலருக்கு தன்னுடைய சொந்த குரலை பதிவு செய்து திரும்ப கேட்கும் பொழுது பிடிப்பதில்லை. ஏனெனில் அதை கேட்கும்பொழுது அவர் கேட்கும் குரல் வேறு. பதிவு செய்யப்பட்ட குரல் காற்றின் மூலம் உள் சென்று பதிவு செய்யும் கருவியை அடைந்து ஒலி கேட்கும் பொழுது மாறுதலாக ஒலிக்கிறது.

இதற்கு தீர்வு என்ன?

இதற்கு சத்தம் ஏற்படும் இடங்களில் இருந்து தள்ளி இருப்பதே தீர்வு ஆகும். இதுவே நம் மன நலனை சீராய் வைக்கும்.

நமக்கு கோபம் இதற்கு மட்டுமா வருகின்றது?

மேற்கூறியதிலாவது அதிக சத்தம் ஏற்பட்டால் அங்கிருந்து நகர்ந்துவிடலாம்.

ஆனால் சிலர்:

 • நம்மை கடுமையான வார்த்தைகளால் தாக்கும்போது.
 • ஒரு நிகழ்வுக்கு நம்மை அழைக்காமல் ஒதுக்கும் போது.
 • நமக்கு பாராட்டு வர வேண்டிய இடத்தில் நம்மை மட்டம் தட்டி பேசும்போது.
 • உடற்பயிற்சியினை 30 நிமிடங்களுக்குப் பதிலாக 15 நிமிடங்கள் மட்டுமே செய்யும்போது.
 • நமக்கு உரிய வேலை கிடைக்காத பொழுது.

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். அதற்காக எடுத்ததற் கெல்லாம் கோபப்பட்டுக்கொண்டே இருந்தால் வாழ்க்கை தான் என்னாவது? இதற்கு ஒரே ஒரு வழி இருக்கின்றது. இரண்டே இரண்டு வார்த்தைகள் தான். அதைச் சொன்னால் மனம், மகிழ்வாய் மாறிவிடும். அந்த வார்த்தைகள்.

அதனால் என்ன? ஆங்கிலத்தில் சொன்னாலும் தமிழில் சொன்னாலும் அது இரண்டு வார்த்தைகள் தான். உங்களையும் உங்கள் வாழ்வையும் நீங்கள் நேசிக்கத் தொடங்கி விடுவீர்கள்.

உலகெங்கும் உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு சர்வ சாதாரணமாக காணப்படுகிறது. உயர் ரத்த அழுத்தமே உயிர் இழப்பிற்கும், உடல் பாதிப்பிற்கும் முக்கிய காரணம் ஆகின்றது. இருதய நோய், சிறுநீரக பாதிப்பு, பக்கவாதம் இவற்றுக்கு உயர் ரத்த அழுத்தமே முக்கிய காரணம் ஆகின்றது. ரத்த நாளங்களில் செல்லும் ரத்தம் அதிக அழுத்தம், வேகம் கொண்டு செல்வதினை உயர் ரத்த அழுத்தம் என்கின்றோம்.

ஸ்டிரைங் கூடும்பொழுது, நோய் பாதிப்பு இருக்கும் நேரத்தில் இந்த உயர் ரத்த அழுத்தம் இருக்கலாம். உடனடியாக இது உடல்நலம் சீராகும் பொழுது சரியாகிவிடும். ஆனால் உயர் ரத்த அழுத்தம் நீண்ட காலம் இருக்கும் பொழுது ரத்த குழாய்கள், இருதயம் இவற்றில் பாதிப்பினை ஏற்படுத்தி விடுகின்றது. இது மிக அபாயகரமான முடிவைக் கூட தந்துவிடலாம். வயது, பரம்பரை, எடை, உணவுமுறைகள், பழக்கவழக்கங்கள் இவை அனைத்துமே காரணங்கள்தான். அதிக உப்பும், அதிக கொழுப்பும் ரத்த நாளங்களின் அடைப்பிற்கு முக்கிய காரணம் ஆகின்றன.

சிறுநீரகம் பாதிப்பு, தைராய்டு பிரச்சினை, சில மருந்துகள், அதிக மது இவையும் பாதிப்புக்கு முக்கியகாரணம் ஆகின்றன. காலம் கூடும் பொழுது உயர் ரத்த அழுத்தத்தால் இருதய பாதிப்பு, கண் பாதிப்பு, மாரடைப்பு, வாதம், மறதி என கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. உயர் ரத்த அழுத்தமும் ஆரம்பகால அறிகுறியாக சில அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

குழம்பிய நிலை, நெஞ்சுவலி, முறையற்ற இருதய துடிப்பு, பார்வைக்கோளாறு, காதில் சத்தம், சோர்வு, தலைவலி, மூச்சு வாங்குதல், மூக்கில் ரத்தம் வடிதல், படபடப்பு, வியர்த்து கொட்டுதல், தூங்குவதில் கடினம் என்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். எனவே மருத்துவரிடம் ரத்த அழுத்தத்தினை அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

உயர் ரத்த அழுத்தம் மட்டும்தான் பிரச்சினையா என்றால் குறைந்த ரத்த அழுத்தமும் பிரச்சினையே. தொடர்ந்து குறைந்த ரத்த அழுத்தம் இருந்தால் உடல் உறுப்புகளுக்கு தேவையான அளவு ஆக்ஸிஜனும், சத்தும் கிடைக்காமல் போகலாம். கீழ்கண்டவை குறைந்த ரத்த அழுத்த அறிகுறிகளாகும். தலைசுற்றல், மயக்கம், கவனம் செலுத்த இயலாமை, மங்கிய பார்வை, வயிற்றுப் பிரட்டல், வெளிறிய சருமம், சோர்வு, தாகம், மனச்சோர்வு ஆகியவை காணப்படும்.

உயர் ரத்த அழுத்தத்தின் தீர்வாக மருத்துவர் முறையான மருந்துகளை பரிந்துரைப்பார். வாழ்க்கை முறையில் மாற்றம் (உ.ம்) உடற்பயிற்சி, உணவு முறையில் மாற்றம் இவை அறிவுறுத்தப்படும். நார்சத்து, பூண்டு, ஒமேகா மற்றும் தாது உப்புகள் இவற்றினை உணவு நிபுணர், மருத்துவர் அறிவுறுத்துவார். மேலும் சர்க்கரை, உப்பு, கொழுப்பு, கேபின், உடல் உழைப்பின்மை, மது, புகை இவற்றினை அடியோடு தவிர்த்துவிட வேண்டும். மன உளைச்சல் நீங்க யோகா, தியானம் உடற்பயிற்சி போன்றவை பயன்படுகிறது.

Sun, 10 Nov 2019 11:19:33 +0530

மழைக்காலத்தில் நுளம்பினால் பரவும் காய்ச்சல்கள்

மழைக்காலத்தில் நுளம்பினால் பரவும் காய்ச்சல்கள் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

மழைக்காலம் ஆரம்பித்த பிறகு நம்மை முக்கியமாக பயமுறுத்துவது நுளம்புகள். இதன் மூலம் பலவிதமான நோய்கள் பரவுகின்றன. இத்தகைய காய்ச்சல்களில் டெங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது. எலிக்காய்ச்சல் போன்றவை ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. முதலில் டெங்கு பற்றி சில விஷயங்களை நினைவுகொள்ள வேண்டும். நுளம்புகள் உற்பத்தியை கட்டுப்படுத்தினால் தான் டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.

டெங்கு காய்ச்சலை ஏற்படுத்துகிற நுளம்புகள் சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகின்றன. எனவே, குடியிருப்பு பகுதிகளிலும், அதைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் இன்னும் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். நீர்த்தொட்டி, பால்கனி, மொட்டை மாடி மற்றும் பூந்தொட்டிகளின் கீழ்ப்பகுதியில் வைக்கப்படும் சின்னசின்ன தட்டுக்கள், பழைய டயர்கள், தேவையில்லை என தூக்கி எறியப்படும் சிரட்டைகள் போன்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒருவேளை இந்த இடங்களில் நீர் தேங்கினால், சற்றும் தாமதிக்காமல் உடனடியாக அகற்றிவிடுவது பாதுகாப்பானது. ஏனென்றால், இவ்வாறு தண்ணீர் தேங்குவது நமக்கு பெரிதாக தெரியாது. அதை கவனிக்காமல் விட்டுவிடுவோம். எனவே, டெங்கு காய்ச்சலுக்கு காரணமான நுளம்புகள் அதில் முட்டை இட்டு உற்பத்தி ஆகக்கூடும். நுளம்புக்கடியில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்வது நல்லது. இதற்கு ஜன்னல்களில் வலை பொருத்த வேண்டும்.

நுளம்புச் சுருள், மேட் போன்றவற்றால் சிலருக்கு ஒவ்வாமை உண்டாகும். அவர்கள் சிறிதளவு கிரீம் தடவி கொள்ளலாம். மேலும், படுக்கையில் நுளம்பு வலை கட்டி பாதுகாப்பாக உறங்க வேண்டும். டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் முதலில் மாநகராட்சியின் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மருத்துவமனைகள், பரிசோதனைக்கூடங்கள் மூலமாகவும் அவர்களுக்கு தகவல் அனுப்பப்படும். அவர்கள் உடனடியாக அந்த பகுதியில் நுளம்பு உற்பத்தியை தடுக்கும் வகையில், நுளம்பு மருந்து அடித்தல், நீர்த்தொட்டி, கிணறு ஆகியவற்றில் மருந்து ஊற்றுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவர்.

காலநிலை திடீரென மாறும்போது சாதாரண வைரஸ் காய்ச்சலும் இருக்கும். சளியோடு 2,3 நாள் நீடிக்கும். தீவிர காய்ச்சல், அதிகமான தலைவலி மற்றும் முதுகு வலி, உடலில் சிவப்பு நிற புள்ளிகள் போன்றவை இரண்டு நாளுக்கு மேல் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். டெங்கு நோய்க்கான பரிசோதனையில் ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் எந்த அளவுக்கு உள்ளது என்பதை மருத்துவர்கள் கவனிப்பார்கள். தட்பவெப்பம் அடிக்கடி மாறும் சூழலில் எலிக்காய்ச்சல் பரவ வாய்ப்புகள் அதிகம்.

எனவே, வெளி இடங்களுக்குச் சென்று வந்தால் கை, கால்களை நன்றாக சுத்தம் செய்துகொள்ள வேண்டும். காய்ச்சல் வந்துவிட்டால் ஆன்டிபயாட்டிக் கொடுக்கலாம். மேலும், சுத்தமான குடிநீரை அருந்த வேண்டும். நிறைய பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். இதனால் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். ஐஸ் சேர்த்த ஜூஸ், ஐஸ்கிரீம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

Sun, 10 Nov 2019 11:10:57 +0530

உடல் பருமனும் ஆஸ்துமா நோயும்

உடல் பருமனும் ஆஸ்துமா நோயும் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

உடல் பருமனுக்கும் ஆஸ்துமா பாதிப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். பருமனான உடல்வாகு கொண்ட நபர்களின் நுரையீரலில் கொழுப்புத் திசுக்களை ஆய்வாளர்கள் முதல்முறையாக கண்டுபிடித்துள்ளனர். 52 பேரின் நுரையீரல் மாதிரிகளை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தபோது, பி.எம்.ஐ. எனப்படும் உயரத்துக்கு ஏற்ற எடை கணக்கின்படி, நுரையீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.

உடல் எடை கூடி இருப்பவர்கள் அல்லது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஏன் ஆஸ்துமா அபாயம் அதிகரிக்கிறது என்பதை இந்தக் கண்டுபிடிப்பு மூலம் விளக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உடல் எடையைக் குறைப்பதன் மூலம் இவர்களின் உடல்நிலையைச் சீராக மாற்றியமைக்க முடியுமா என்பதையும் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

நுண்ணோக்கி மற்றும் சாயங்களைப் பயன்படுத்தி நுரையீரல் மாதிரிகளிலிருந்து சுமார் ஆயிரத்து 400 சுவாசவழிப் பாதைகள் குறித்து விரிவான பகுப்பாய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

பி.எம்.ஐ. அளவு அதிகமாக இருந்த பலருக்கு சுவாசப்பாதைகளின் சுற்றுப்புறத்தில் கொழுப்புத் திசுக்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

கொழுப்பு அதிகரித்தால் சுவாசவழிப்பாதைகள் இயல்பான நிலையிலிருந்து மாறி நுரையீரலை வீக்கமடையச் செய்யும். இதுவே அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஆஸ்துமா அபாயம் இருப்பதை விளக்குகிறது.

அதிக எடை மற்றும் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு நிச்சயம் ஆஸ்துமா பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது அல்லது மோசமான ஆஸ்துமா அறிகுறிகள் இருக்கும் என இந்த ஆய்வில் பணிபுரிந்த பெர்த்தில் உள்ள வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் டாக்டர் பீட்டர் நோபல் கூறுகிறார்.

அதிக எடை காரணமாக நுரையீரலில் ஏற்படும் நேரடி அழுத்தம் அல்லது அதிக எடையால் பொதுவாகவே நுரையீரல் வீக்கம் அடைந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் விவரிக்கின்றனர்.

ஆனால், இவர்களின் ஆராய்ச்சி மற்றொரு செயல்முறையையும் விளக்குகிறது என்று கூறுகிறார் பீட்டர் நோபல்.

நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் காற்றுப்பாதைகள் வீக்கமாக இருப்பதே ஆஸ்துமா ஏற்படுவதற்கான அறிகுறிகளின் அதிகரிப்புக்குக் காரணம் எனக் கருதுவதாகத் தெரிவிக்கிறார், பீட்டர் நோபல்.

உடல் எடைக்கும், சுவாச நோய்க்கும் இடையே உள்ள தொடர்பில் இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பது ஆஸ்துமா நோயாளிகளுக்கு எவ்வளவு மோசமான அறிகுறி என்பதை இது காட்டுகிறது என்று ஐரோப்பிய சுவாசக் கழகத்தின் தலைவர் தியரி டுரூஸ்டர்ஸ் கூறுகிறார்.

உடல் எடையைக் குறைப்பதன் மூலம் கொழுப்புத் திசுக்களின் இந்தக் கட்டமைப்பை மாற்றியமைக்க முடியுமா என்பதை அறிய கூடுதலாக ஆராய்ச்சி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.

பிரிட்டிஷ் தொராக்சிக் சொசைட்டி என்ற அறிவியல் அமைப்பின் தலைவர் டாக்டர் எலிசபெத் சாபே, உடல் எடை நுரையீரலில் உள்ள காற்றுப்பாதைகளின் கட்டமைப்பைப் பாதிக்கும் என்று சுட்டிக் காட்டப்படுவது இதுவே முதல்முறை என்கிறார்.

பொதுவாகவே, உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பது பல்வேறு உடல்நலப் பாதிப்புகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.

Sun, 03 Nov 2019 00:22:19 +0530

கர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவை

கர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவை | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

கர்ப்பகாலத்தில் பெண்கள் குறைந்தது 8 மணி நேரமாவது உறங்க வேண்டும். இது கருவிலிருக்கும் குழந்தைக்கு அவசியமானது. சாதாரணமாக ஒருவர் உறங்கும் போது, இடது புறமாக படுத்து உறங்குவது சிறந்தது என்பார்கள். கர்ப்பகாலத்தில் உறங்கும் நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இங்கு கர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவற்றை பார்க்கலாம்.

புரண்டு படுத்தால் குழந்தை கொடி சுற்றிப் பிறக்கும் எனக் கூறப்படுவது உண்மையல்ல. இருப்பினும் எழுந்து உட்கார்ந்து பிறகு மெதுவாக படுக்க வேண்டும். ஏதாவது ஒரு கை புறமாக படுப்பதே நல்ல படுக்கை முறை. அதிலும் இடது கைப்புறமாக படுப்பது மிகவும் சிறந்தது. மல்லாந்து படுக்கும் போது கருப்பை இரத்தக் குழாய்களை அழுத்துவதால் மூச்சுத்திணறல், இரத்த ஓட்டக்குறை போன்றவை உண்டாகலாம். கர்ப்பிணிகள் எக்காரணத்தை கொண்டும் குப்புற படுக்க கூடாது. இரவு நேரத்தில் எளிதில் உறக்கம் வராது எனவே சிறிது தூரம் மெதுவாக நடந்துவிட்டு வந்து உறங்கலாம். அசதியில் உறக்கம் வரும்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாக வெது வெதுப்பான நீரில் குளித்து விட்டு உறங்கச் செல்வது நன்மை தரும். எந்த காரணம் கொண்டும் குப்புற படுத்து உறங்கக் கூடாது. ஏனெனில் அது கருப்பையை அழுத்துவதோடு குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உறங்கும் முன் தலைக்கு அருகில் செல்போன் வைத்துக்கொண்டு உறங்குவதை தவிர்க்கவேண்டும். அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தலையணையை வசதியான வகையில் வைத்து உறங்குவது நல்லது. கால்களுக்கும் வைத்து உறங்குவதன் மூலம் கால் வீக்கம் வலி ஏற்படுவதை தவிர்க்கலாம். கடைகளில் கிடைக்கும் சிறிய அளவிலான கர்ப்பகால தலையணைகளை வாங்கி உபயோகிக்கலாம். இரவு நேரங்களில் அதிக இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் மார்ப்பக வளர்ச்சி, இடுப்பு பகுதிகள் விரிவடையும். அப்பொழுது ஏற்படும் சிரமத்தை தவிர்க்க இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும்.

பெரும்பாலான கர்ப்பிணிகள் நெஞ்செரிச்சல், செரிமான கோளறுகளினால் சிரமப்படுவார்கள். இவர்கள் உண்ட உடன் உறங்கச் செல்லக்கூடாது. இதுவே நெஞ்செரிச்சல் ஏற்பட காரணமாகிறது. எனவே எளிதில் ஜீரணமாகும் உணவுகளை மட்டுமே உண்ணவேண்டும். படுக்கும் முன் வெது வெதுப்பாக பால் குடித்தால் உறக்கம் வரும். அதே சமயம் குளிர்பானங்கள், காபி போன்றவைகளை இரவு நேரங்களில் குடிப்பதை தவிர்க்கவேண்டும். கர்ப்பிணிகள் குறிப்பாக மன அழுத்தத்தினால் பாதிக்கப்படாமல் இருக்க யோகா, மனதிற்கு இதம் தரும் பாடல்கள் போன்றவற்றை கேட்கலாம். அப்பொழுதுதான் ஆழ்ந்த உறக்கம் வரும் கரு வளர்ச்சியும் சீராக இருக்கும்.

Sun, 03 Nov 2019 00:20:06 +0530

டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள்

டெங்கு காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

டெங்கு காய்ச்சல் தற்போது தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் டெங்கு வைரஸ்களால் உருவாகிறது. டெங்கு காய்ச்சல் வைரஸ்கள் நான்கு வகைகளை உடையது. டென்வி-1, டென்வி-2, டென்வி-3 மற்றும் டென்வி-4 வகை வைரஸ்கள் மனிதனை தாக்கி டெங்கு காய்ச்சலை உருவாக்கும். இந்த வைரஸ் கிருமிகள் ஏடிஸ் வகை கொசுக்கள் பலவற்றினால் பரப்பப்படும். குறிப்பாக ஏடிஸ் ஈஸிப்டி வகை கொசுக்களால் பரவுகிறது.

இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு நோய் அறிகுறிகள் இல்லாமல் சாதாரண காய்ச்சலுடன் இருக்கும். நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கு சராசரியாக 3 முதல் 14 நாட்கள் பிடிக்கும். ஆனால், பெரும்பாலும் 4 முதல் 7 நாட்களுக்குள் நோய் அறிகுறிகள் தோன்றும். குழந்தைகளுக்கு சாதாரணமாக தோன்றும் ஜலதோஷம், வாந்தி, பேதியுடன் அறிகுறிகள் தொடங்கும். பெரியவர்களுடைய அறிகுறியை விட குறைவாக குழந்தைகளுக்கு தோன்றும் நோய்தாக்கம், பின்னர் அதிபயங்கர நோய் தாக்குதலுக்கு உள்ளாக்கும்.

நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் 20 சதவீதத்தினர்களுக்கு நோய் அறிகுறியான, அதிவிரைவு காய்ச்சல், கண்ணிற்கு பின்னால் வலி, தசை வலி மற்றும் தோலில் தடிப்புகள் உருவாகும். நோய் உடலில் தங்கும் நேரத்தை மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பருவம், அபாயகரமான பருவம் மற்றும் மீழும் பருவம் என பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பருவத்தில் பயங்கர காய்ச்சலோடு ஆரம்பிக்கும் நோயானது அதிகபடியான உடல் வலியையும், தலைவலியையும் குறைந்தது 2 முதல் 7 நாட்களுக்கு கொடுக்கும். இந்த நேரத்தில் 50 முதல் 80 சதவீத நோயாளிகளுக்கு தோல் தடித்து பின் தோலில் ஏற்படும் தடிப்புகள்போல் உருவாகும். சிலருக்கு லேசான ரத்தப்போக்கு வாயிலும், மூக்கிலும் ஏற்படலாம்.

நோய் அபாயகரமான கட்டத்திற்கு செல்லும் போது ரத்த நாளங்களும், சிறு நரம்புகளின் சுவர்களும் பலவீனமடைந்து இவற்றிலிருந்து திரவங்கள் நெஞ்சு கூட்டிற்கும், வயிற்றிற்குள்ளும் வந்து சேரும். இதனால் ரத்தத்தில் நீரின் அளவு குறையும், முக்கிய உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவும் குறைவுபடும். இதனால் இந்தக்கட்டத்தில் உறுப்புகள் செயலிழப்பதும், அதிக ரத்தப்போக்குகளும் குறிப்பாக குடல் பகுதிகளில் ஏற்படும். நோயிலிருந்து மீழும் கட்டத்தில் ரத்த நாளங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட நீரானது மீண்டும் நாளங்களுக்குள் உள்ளிழுக்கப்படும். இந்த நிகழ்வுகள் 2 முதல் 3 நாட்களுக்கு நடைபெறலாம். இந்நிகழ்வு பயங்கர உறுத்துதல்களையும, இதயத் துடிப்பை குறைக்கவும் செய்யும்.

சில நேரங்களில் ரத்த நாளங்களில் அதிகப்படியான நீர்சேர்க்கை உருவாகும். இதனால் மூளை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் 67 சதவீத சுயநினைவிழப்பு ஏற்படும். இதை தொடர்ந்து இதய தொற்றுகள் மற்றும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படும். இவ்வாறாக இந்நோய் பாதிப்புகள் இரண்டு வகையான பாதிப்பை உருவாக்கும் ஒன்று மரணத்தை ஏற்படுத்தும் டெங்கு ஹெமரோஜிக் காய்ச்சல். இவை அதிக ரத்தப் போக்கையும், ரத்த தட்டையணுக்களையும், ரத்தத் திரவங்களையும் குறைவுபடச் செய்யும். இரண்டாம் வகை டெங்கு, ஷாக் அறிகுறியை உருவாக்கி இதயத்துடிப்பை வெகுவாக குறைத்து அபாயக் கட்டத்தை அடையச் செய்யும்.

டெங்கு வைரஸ்களை தாங்கி வரும் ஏடிஸ் கொசுக்கள் மனிதர்களைக் கடிக்கும்போது அதன் எச்சிலோடு வைரஸ் கிருமிகள் மனித தோல்களுக்குள் உட்புகும். இந்த வைரஸ் கிருமிகள் பின்னர் தந்திரமாக நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ரத்த வெள்ளை அணுவுக்குள் நுழைந்து, தன் இனத்தை பெருக்கிக் கொண்டு உடலில் உலாவரும். இந்த ரத்த வெள்ளையணுக்கள் மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தன்னுள் இருக்கும் வைரஸ் கிருமிகளை அழிப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கும்.

இந்த செல்கள் வைரஸ்களை அழிக்கும் “இன்டர்பெரான்” எனும் பொருள்களை உடலில் உருவாக்க சமிக்ஞைகளை வெளியிடும். இதன் மூலம் உடலில் அதிகபடியான இன்டர்பெரான் எனும் புரத பொருள்கள் உருவாகும். இதனால், உடல் வெப்பம் மிக விரைவாக அதிகரிக்கும், உடல் வலியையும் உருவாக்கும். அதே சமயம் வைரஸ்களும் முடிந்தவரை தன் இனத்தைப் பெருக்க முயற்சியெடுக்கும். இதனால், எலும்பு மஜ்ஜைகளும், கல்லீரலும் பாதிப்படையும். இதனால், ரத்தத்தை உறையவைக்கும் தட்டையணுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும். விளைவுரத்த நாளங்களின் துவாரங்கள் வழியாக திரவங்கள் வெளியேறி மேலே குறிப்பிட்ட விளைவுகள் ஏற்படும்.

பகல் நேரங்களில் கடிக்கும் தன்மையுடைய இக்கொசுக்கள் ஒரு கடி மூலம் நோய்களை உருவாக்கும் சக்தியுடையது. பெண் கொசுக்கள் நோய் தாக்கிய மனிதர்களைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சும்போது வைரஸ் கிருமிகள் கொசுவின் உடலுக்குள் செல்கின்றன. பின் கொசுக்களின் குடல் சுவரில் 8 முதல் 10 நாள்கள் ஒட்டிக் கொண்டிருக்கும், பின்னர் கொசுக்களின் பிற உடல் உறுப்புகளுக்குள் செல்லும், பின்னர் கொசுவின் எச்சில் வழியாக வெளிப்பட்டு பிறரை கடிக்கும்போது அந்த மனிதர்களுக்குள் செல்லும். இந்த வைரஸ் கொசுக்களுக்கு எந்த பிரச்சினைகளையும் உருவாக்காது. டெங்கு கொசுக்கள் மனிதர்கள் வாழும் பகுதிகளின் மிக அருகிலுள்ள நல்ல தண்ணீர்தேக்கங்களில் முட்டையிட்டு குஞ்சுபொரிக்கும்.

இந்நோயை கண்டறிவது எளிதான காரியமில்லை, சாதாரணமாக வெள்ளையணுக்கள் எண்ணிக்கை, தட்டையணுக்கள் எண்ணிக்கையை வைத்து டெங்கு காய்ச்சலைக் கண்டறிவது சரியான வழிமுறையில்லை. ஏனென்றால், பல நோய்களுக்கு இவற்றின் எண்ணிக்கை குறைவுபடலாம். டெங்கு காய்ச்சலை சரியாக கண்டறிய, உடலிலுள்ள வைரஸ்களை வளர்த்தெடுக்கும் முறையையோ, வைரஸ் பி.என்.ஏ. மூலக்கூறுகளைக் கண்டறியும் பி.சி.ஆர் முறையையோ, வைரஸ் புரதங்களைக் கண்டறியும் முறையையோ அல்லது வைரஸ் நோய்களின் தொற்றுகளால் உடலில் உருவாகும் எதிர்ப்பு அணுக்களைக் கண்டறியும் முறையையோ பயன்படுத்தலாம்.

டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்ட மருத்துவ முறைகள் இல்லாததால் நோய்களை வரும் முன் தடுப்பதே எளிய வழி. இந்நோயை பரப்பும் கொசுக்கள் நன்னீரில் வளருவதால் வீட்டின் உள்ளேயும், அருகேயும் தண்ணீர்தேங்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த கொசுக்கள் பகல் வேளைகளில் கடிப்பதால் அந்த நேரங்களில் கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கை, கால்களை மறைக்கும் உடைகளை உடுக்க வேண்டும். நோய் அறிகுறி தென்பட்ட உடனே மருத்துவரை அணுக வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அந்த வீடுகளில் டெங்கு வைரஸ் தாங்கிய கொசுக்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

முனைவர் எஸ்.பிரகாஷ்,
நுண்ணுயிரியல்துறை,
தனியார்கல்லூரி, சேலம்.

Tue, 29 Oct 2019 20:32:19 +0530

முகப்பருக்கு ஒரே வாரத்தில் தீர்வு..! பருவும் வராது வடுவும் தெரியாது..!

முகப்பருக்கு ஒரே வாரத்தில் தீர்வு..! பருவும் வராது வடுவும் தெரியாது..! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பொதுவாகவே இளம் வயதினருக்கு குறிப்பிட்ட வயதில் முகத்தில் பருக்கள் ஏற்படுவது சாதாரண விஷயம். ஆனால் அதே பருக்கள் அதிகமாக வந்தால் நம் அழகை கெடுப்பதோடு வலி ஏற்படும். அதன் அடையாளங்கள் முகத்தில் தென்படும். இதனால் மனதளவில் தாழ்வு மனப்பான்மை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

இது போன்றவர்கள் மிக எளிதாக முகப்பருவை வரவிடாமல் தடுக்கலாம். அதற்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான் நம் வீட்டில் உள்ள உப்பை பயன்படுத்தி முகப்பரு வராமல் தடுக்க முடியும். அதாவது வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து நன்கு கலக்கி அதனை ஒரு பஞ்சு கொண்டு நனைத்து முகத்தில் மெதுவாக தடவி வர நல்ல மாற்றம் ஏற்படும். மேலும் இவ்வாறு செய்யும் போது சருமத்தில் அதிக அளவு எண்ணெய் சுரப்பு மற்றும் ஈரத்தன்மையை சற்று குறைக்கும்.

ஒரு சிலருக்கு உப்பு தண்ணீரை முகத்தில் வைக்கும்போது வலி ஏற்பட வாய்ப்பு உண்டு. இது போன்றவர்கள் நான்கு ஸ்பூன் தேனுடன் இரண்டு ஸ்பூன் கல் உப்பு சேர்த்து கலந்து முகத்தில் தடவி வர பருக்கள் வரவே வராது. இவ்வாறு தினமும் 15 நிமிடங்கள் செய்து வரலாம். மேலும் தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு மிகமிக நல்லது தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து ஒரு மாஸ்க் போன்று தயாரித்து முகத்தில் போட்டு வரலாம்.

இதனால் நம் சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு சிறப்பான நன்மையை கொடுக்கக் கூடியது. இது எனவே தேங்காய் எண்ணெய் இப்படியும் பயன்படுத்தி பாருங்கள். அதனால் ஏற்படக்கூடிய வடுவும் இருக்காது.

Mon, 28 Oct 2019 17:44:44 +0530

முப்பது வயதை கடந்த பெண்களுக்கு இந்த இடத்தில் கொழுப்பு இருந்தால் ஆபத்து

முப்பது வயதை கடந்த பெண்களுக்கு இந்த இடத்தில் கொழுப்பு இருந்தால் ஆபத்து | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பெண்களுக்கு உடலில் கொழுப்பு எளிதில் சேர்ந்துவிடும். அதனால்தான் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் விரைவில் வயதிற்குப் பொருந்தாத உடல் பருமனை அடைந்து விடுவார்கள். இதற்கு உணவு மட்டுமல்ல. உடல் சார்ந்தும், மனம் சார்ந்து பல பிரச்னைகளை முன் வைக்கின்றனர்.

அப்படி பெண்களுக்கு உடலில் சில இடங்களில் கொழுப்பு சேர்ந்தால் அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுக் கட்டுரைகள் கூறுகின்றன. சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வில் மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களுக்கு அதிகமாக தொடையில் கொழுப்பு சேர்வதாகவும், அவர்களுக்கு இதய நோய் அதிகமாக தாக்குவதில்லை என்றும் கூறியுள்ளனர்.

அதேசமயம் இதய நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும்பாலானோருக்கு கால்களைக் காட்டிலும் வயிற்றில் அதிக கொழுப்பு கொண்டவர்களாக இருந்துள்ளனர். இதை யூரோபியன் ஹார்ட் ஜர்னல் வெளியிட்டுள்ள ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.

இந்த இடத்தில் மற்றொரு எச்சரிக்கையையும் ஆய்வாளர்கள் முன் வைக்கின்றனர். அதாவது ஆப்பிள் உடல் அமைப்புக் கொண்ட பெண்கள் உடனடியாக தொப்பையைக் குறைக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

ஆனால் இதயப் பிரச்னை, பக்கவாதம் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் ஆழமான ஆய்வு தேவைப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வில் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்ட 2,600 பெண்களை ஈடுபடுத்தியுள்ளனர். அதில் இடுப்பு, தொடையில் அதிகக் கொழுப்புக் கொண்ட பெண்களைக் காட்டிலும் வயிற்றில் அதாவது தொப்பை அதிகமாகக் கொண்ட பெண்களுக்குத்தான் அதிக அளவிலான இதயப் பிரச்னை இருப்பது தெரியவந்துள்ளது.

அதேசமயம் முப்பது வயதைக் கடந்த பெண்களுக்கே அதிகமாக இந்தப் பிரச்னை தாக்குவதால் அவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம் என்கிறது ஆய்வு.

"பெண்ணின் உடல் அமைப்பு என்பது அவர்களுக்கு அதிகமாக கொழுப்பு எங்கு சேர்கிறதோ அதைப் பொருத்தே அமைகிறது. இவற்றைக் கரைக்க எந்த மாதிரியான உணவுப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற ஆலோசனைக்கான ஆய்வு இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் மருத்துவரின் ஆலோசனைப் படி உங்கள் உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உணவுப் பழக்கத்தை மாற்றி அமைப்பது அவசியம்" என ஆய்வின் பேராசிரியர் கூறியுள்ளார்.

Sat, 12 Oct 2019 22:43:10 +0530

உங்கள் மனைவியை ‘தூக்கி’ விளையாடுங்கள்..

உங்கள் மனைவியை ‘தூக்கி’ விளையாடுங்கள்.. | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

உண்மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண்ணைத் தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா..! 

சினிமாக்களில் மட்டும்தான் ஹீரோக்கள் ஹீரோயின்களை தூக்கி விளையாடனுமா, என்ன.. நிஜத்திலும் கணவர்களும், காதலர்களும்தான் ஹீரோக்கள்.. மனைவியரும், காதலியரும்தான் ஹீரோயின்கள். எனவே இவர்களும் கூட இப்படித் தூக்கி தூக்கி விளையாடலாம் தப்பே இல்லை காதலிலும், காமத்திலும் அன்னியோன்யத்திற்கு நிறைய முக்கியத்துவம் உண்டு. உடல் ஸ்பரிசமும், உள்ளக் கிளர்ச்சியும் இங்கு கொளுந்து விட்டு எரியும்போது உடலும், உள்ளமும் ஒரு சேர சந்தோஷப்படும்.

செக்ஸ் உறவின்போதும், ஜாலியான மன நிலையில் இருக்கும்போதும் பெண்களை ஆண்கள் தூக்குவது என்பது ரொம்ப வித்தியாசமானதாக இருக்கும். மற்ற நேரத்தி்ல் மனைவி அல்லது காதலியைத் தூக்க சிரமப்படும் ஆட்கள் கூட அந்த சமயத்தில் ஒரே தூக்காக தூக்கி விடுவார்கள்.

அப்போது அந்தப் பெண்கள் படும் சந்தோஷம் இருக்கே.. சொல்லி மாள முடியாது. தூக்குவதில் என்ன சந்தோஷம் இருக்கிறது என்பது தெரியவில்லை. இதுகுறித்து விஞ்ஞானப்பூர்வமாகவும் எதுவும் கூறப்பட்டதாக தெரியவில்லை. பெரும்பாலும் செக்ஸ் உறவு சமயத்தில்தான் இப்படி தூக்கி விளையாடுவதை அதிகம் செய்கிறார்கள் ஆண்கள்.

இப்படி செய்வதால் அந்தப் பெண்களுக்கு, தங்களது துணைவர்கள் மீது நிறைய மதிப்பும், ஆசையும் பெருகுகிறதாம். நம்மாளு நல்லா ஸ்டிராங்காதன் இருக்காரு என்று அவர்களுக்கு பெருமையாகவும் இருக்குமாம்.

இதனால்தான் தங்களைத் தூக்கும் கணவர் அல்லது காதலரை பெண்கள் ரசிக்கிறார்களாம். உங்களால் எளிதில் தூக்க முடியும் என்று தோன்றினால் ஏதாவது சின்னதாக ஒரு ரொமான்ஸ் கவிதையை சொல்லியபடியே தூக்குங்குள். அப்படியே ரூமுக்குள் அல்லது வீட்டுக்குள் சின்னதாக ஒரு வலம் வாருங்கள். தூக்கிய நிலையி்ல் உதடுகளில் அழகாக ஒரு முத்தம் வையுங்கள், கண்களில் அழகாக முத்தமிடுங்கள், காதுகளில் சின்னதாக கிஸ் பண்ணுங்கள்.

சங்குக் கழுத்தில் சிக்கென்று ஒன்று வைத்து சிலிர்ப்ப்பூட்டுங்கள். கையில் தூக்கியிருக்கும்போது இடுப்பில் சின்னதாக விளையாட்டுக் காட்டுங்கள். மீன் போல அவர் துள்ளிக் குதிக்கும்போது மார்போடு கட்டி அணைத்து தாலாட்டுங்கள்.

தூக்கிய நிலையிலேயே அப்படியே ஏதாவது ஒரு டேபிளில் மெல்ல படுக்க வைத்து நீங்கள் அவர் மீது சாய்ந்து அப்படியே உள் வாங்கிக் கொண்டு உற்சாகமூட்டுங்கள் முத்த மழையால். பிறகு முக்கியமான விஷயம், முடிந்தவரை நல்ல திடமாக பாலன்ஸ் செய்து கொண்டு துணையை தூக்குவது நல்லது

Wed, 06 Feb 2019 11:12:32 +0530

தொப்பையைக் குறைக்கும் அர்த்த சந்திராசனம்

தொப்பையைக் குறைக்கும் அர்த்த சந்திராசனம் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

விரிப்பில் கால்களை ஒன்றாக வைத்துக் கொண்டு நிற்கவும். இப்போது உங்கள் கைகளை தலைக்கு மேலாக உயர்த்து, உங்கள் உள்ளங்கைகளை ஒன்றாகப் பிடித்துக் கொள்ளவும், உச்சவரம்பை அடைய முயற்சி செய்து  நீட்டிக்கவும். வளர்ந்தவர்கள், மூச்சை வெளியே விட்டு, மெதுவாக உங்கள் கைகளை ஒன்றாக வைத்துக் கொண்டு உங்கள்  இடுப்பிலிருந்து பக்கவாட்டாக குனியவும். மற்றும் நேராக உங்கள் முழங்கைகளை ஒன்றாக வைத்து, முன்பக்கம்  வளையாமலிருக்க நினைவில் வைத்துக் கொள்ளவும்.

நீங்கள் உங்கள் விரல் நுனிகளிலிருந்து தொடைகள் வரை, ஒரு  நீட்டிப்பை உணர வேண்டும். நீங்கள் உங்கள் வயிற்றின் பக்கவாட்டிலும் மற்றும் முதுகிலும் வலுவான நீட்டிப்பை உணர்வீர்கள். உங்களால் முடிந்த வரை இந்த ஆசனத்தில் நீடிக்கவும். மூச்சை உள்ளிழுத்து, திரும்பவும் பழைய நிற்கும் நிலைக்கு வரவும்.  இதே ஆசனத்தை மறுபக்கம் செய்யவும்.

செரிமான கோளாறுகள், முதுகெலும்பு காயம் அல்லது உயர் இரத்த அழுத்தம் இருந்தால், இந்த ஆசனம் செய்வதைத் தவிர்க்கவும்.

பயன்கள்:

 • உடலின் முதுகுத் தண்டு இடப்புறமும், வலப்புறமும் மாறி, மாறி வளைவதால் உடலுக்குப் புத்துணர்வு கிடைப்பதுடன் நரம்புகள் வலுப்பெறும். 
 • கழுத்துவலி, தோள்பட்டை வலி போன்றவை நீங்குவதுடன் உடல் பலமடையும்.
 • தொப்பையைக் குறைக்கும். இடுப்பு பகுதி வலுப்பெறும்.
 • நன்கு பசியைத் தூண்டும், அஜீரணத்தைப் போக்கும்.

உடலில் உள்ள தேவையற்ற நீர்களைப் போக்கும். சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். இவ்வாசனத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செய்யலாம். 

Wed, 06 Feb 2019 11:10:06 +0530

உலகளாவிய ரீதியில் சிறப்பான சுற்றுலா நகரமாக கொழும்பு!

உலகளாவிய ரீதியில் சிறப்பான சுற்றுலா நகரமாக கொழும்பு! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

உலகளாவிய ரீதியில் சிறப்பான சுற்றுலா நகரமாக கொழும்பு பெயரிடப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டுக்கான தரப்படுத்தலில் சிறந்த சுற்றுலா நகரமாக அண்மையில் கொழும்பு தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.
கொழும்பில் நிர்மாணிக்கப்படும் பாரிய வீட்டுத் தொகுதிகள், கடைகள், பாரிய கட்டடங்கள் காரணமாக கொழும்பின் அழகு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுக நகரம், கங்காராமைக்கு அருகில் உள்ள பேரே ஏரியிலுள்ள தீவு, எல்டயார் வீட்டுத்தொகுதி ஹில்டன் ரெசிடன்ஸ் வீட்டுத் தொகுதிக்கு பின்னால் கட்டப்பட்டுள்ள தாமரை கோபுரம் ஆகியவைகள் முக்கிய இடங்களாக தெரிவிக்கப்படுகின்றது.
அழகான இலங்கைத் தீவை காண நாளாந்தம் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வந்து செல்கின்றனர்.
கொழும்பை அழகுபடுத்தும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

 

Mon, 28 Jan 2019 08:26:00 +0530

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு காமினி ஜயவிக்ரம பெரேரா ஜனாதிபதிக்கு கடிதம்

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு காமினி ஜயவிக்ரம பெரேரா ஜனாதிபதிக்கு கடிதம் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் வண.கலகொட அத்தோ ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஜனாதிபதிக்கு எழுதியுள்ள  கடிதம்.

இதேவேளை,ஞானசார தேரர், பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, ஜனாதிபதியால் விடுதலை செய்யப்படுவார் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பி துமிந்த திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள தேரரை, நேற்று சந்தித்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தேரரின் விடுதலை குறித்து, ஜனாதிபதியுடன் உரையாடியுள்ளதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

நாட்டு மக்களுக்காகவும் சிங்கள பௌத்தர்களுக்காகவும், பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்காகவும் என்று, அவர் செய்த சேவைகளைக் கருத்தில் கொண்டு, சுதந்திர தினத்தன்று, அவர் விடுதலை செய்யப்படவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Sat, 26 Jan 2019 09:48:08 +0530

நாயால் பரவக் கூடிய நோய் தொடர்பில் மக்கள் அவதானம்

நாயால் பரவக் கூடிய நோய் தொடர்பில் மக்கள் அவதானம் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களில் பரவக் கூடிய ஒருவகை நோய் முதன்முதலாக இலங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த நோய் தென்னாபிரிக்க நாடுகளில் பரவலாக இருக்கிறது. இது மனிதர்களுக்கும் தொற்றக்கூடியது என்பதை பேராதனை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த நோய் பாரதூரமானது அல்ல. எனினும் இதன்மூலம் தோளில் பாதிப்பு ஏற்படக் கூடுமென பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் அசோக்க தங்கொல்ல தெரிவித்தார். 

கண் நோயால் பாதிக்கப்பட்ட செல்லப் பிராணி பேராதனை கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. 

அந்த செல்லப் பிராணியை சோதித்த போது அதற்கு ட்ரை-பெனசோமா என்ற நோய் ஏற்பட்டிருந்தமை தெரிய வந்ததாக பேராசிரியர் தங்கொல்ல குறிப்பிட்டார்.

Sat, 12 Jan 2019 18:34:24 +0530

உங்களுக்கு ரத்த அழுத்தமா..? செய்ய வேண்டியது இதை தான் ..!

உங்களுக்கு ரத்த அழுத்தமா..? செய்ய வேண்டியது இதை தான் ..! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

ஒரு குறிப்பிட்ட வயது நிரம்பிய உடன், வேலைப்பளு தேவை இல்லாத மன அழுத்தம், தொய்வு, அளவுக்கு அதிகமான உடல் உழைப்பு என  ஒவ்வொன்றாக உணர முடியும்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் 40 அல்லது 45 வயதை தாண்டும் போது கண்டிப்பாக நமக்குள் ஒரு விதமான கட்டுப்பாட்டை கொண்டு வருவது நல்லது. அதன்படி, வயதான காலத்தில் காரம், சர்க்கரை, உப்பு, கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவுகள் இவை அனைத்தயும் குறைவாக சேர்த்துக்கொள்வது நல்லது.

ஒரு வேலை ஏற்கனவே ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என்றால், உப்பு எடுத்துக்கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். உப்பில் உள்ள சோடியம்  ரத்த நாளங்களை அதிக அளவில் பாதிப்படைய செய்து, ரத்த அழுத்தம் அதிகமாகி, சீரான ரத்த ஓட்டம் இல்லாமல் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

அதுமட்டுமல்லாமல் சிறிது தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. தினமும் யோகா செய்து வந்தாலும் நம் மனம் மற்றும் உடல் ஒரே பாதையில் சீராக இயங்க முடியும்.

ஆக மொத்தத்தில் உணவு கட்டுப்பாடு என்பது ஆரம்பம் முதலே கடைப் பிடிப்பது நல்லது. உணவு கட்டுப்பாடு என்றால், குறைவாக உண்ண வேண்டும் என்பது அல்ல பொருள். அதற்கு மாறாக எந்த உணவை, எந்த நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். எந்தெந்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும் என்பதில் உள்ளது விஷயம்.

Tue, 08 Jan 2019 14:05:07 +0530

திருமணத்திற்கு முன் கர்ப்பம்.. அதன் பின்பு குழப்பம்..

திருமணத்திற்கு முன் கர்ப்பம்.. அதன் பின்பு குழப்பம்.. | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

திருமணத்திற்கு முன்பே பெண் கர்ப்பம் அடைவது என்பது நமது கலாசாரத்தில் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாத விஷயம். காலம் மாறிவிட்டது என்று நாம் வாய்வலிக்க பேசினாலும், இது போன்ற கலாசாரம் சார்ந்த நடைமுறையில் நாம் எந்த மாற்றத்தையும் அனுமதிக்கமாட்டோம். திருமணத்திற்கு முன் கர்ப்பம் என்பதை சமூக சீர்கேடாகவும், அவமானத்திற்குரியதாகவும்தான் கருதுகிறோம்.

இது பற்றி பெண்களிடம் போதிய விழிப்புணர்வு இ்ல்லை. நகரத்து பெண்களைவிட கிராமத்து பெண்களே, திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இது தொடர்பான ஆய்வு ஒன்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அஜ்மீர் பகுதியில் 4500 இளம் பெண்களிடம் ஆய்வு நடத்தியுள்ளார்கள். 8 கிராமங்களிலும், 8 நகரங்களிலும் ஆய்வு நடந்துள்ளது. 

ஆய்வு முடிவில், ‘படிக்கச் செல்லும் பெண்களைவிட வீட்டில் இருக்கும் பெண்கள்தான் அதிகமாக, திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் அடைகிறார்கள். முறையற்ற கர்ப்பத்திற்கு பின்னால் எடுக்கப்படும் சில பிரச்சினைக்குரிய நடவடிக்கைகளால் அவர்கள் பலியாகவும் செய்கிறார்கள். குறிப்பிட்ட பகுதிகளில் கிராமப் பெண்கள் 60 சதவீதம் பேர் திருமணத்திற்கு முன் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். நகரத்து பெண்களில் இது 40 சதவீதமாக இருக்கிறது’ என்று கூறப்பட்டிருக்கிறது.

குடும்ப நல அமைச்சகம் இது பற்றிய விவரங்களை சேகரித்து, குறிப்பிட்ட பகுதிகளில் ஊர் ஊராகச் சென்று ஆய்வு நடத்தியது. பின்பு அவர்கள் ‘கிராமத்து பெண்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. மேலும் கிராமங்களில் தனிமைக்கான இடங்கள் அதிகமாக இருப்பதால் இது போன்ற தவறுகள் அதிகம் நடைபெறுகிறது. பின்விளைவுகளைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் கிராமத்துப் பெண்கள் இதற்கு அப்பாவித்தனமாக பலியா கிறார்கள்’ என்று கூறி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

நகரத்துப் பெண்கள் ஓரளவு விஷயம் தெரிந்து தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள். திருமணத்திற்கு முன் ஏற்படும் வேண்டாத கர்ப்பத்தை சிதைத்துவிடும் வழிமுறைகளும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. மாட்டிக்கொள்ளும் பெரும்பாலான கிராமத்து பெண் களுக்கு கர்ப்பத்தை மறைக்கத் தெரிவதில்லை. அந்த சிக்கலிலிருந்து விடுபட முடியாமல் சமூகத்திற்கு பயந்து தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுகிறார்கள்.

இந்த ஆபத்தான நிலையை மாற்ற, குடும்பநல அமைச்சகம் இதற்கென பணியாளர்களை நியமித்து கிராமம் கிராமமாகச் சென்று அங்கு வசிக்கும் திருமணமாகாத பெண்களை சந்தித்து இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இது அவர்களுடைய எதிர்காலத்தை காப்பாற்றும் முயற்சியாக வரவேற்கப்படுகிறது.

16 வயதிற்கும் குறைவான பெண்கள், திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுவதாக இன்னொரு ஆய்வு குறிப்பிடுகிறது. அவர்களில் பெரும்பாலான பெண்கள் என்னவென்றே புரியாத வயதில் தங்களிடம் கட்டாய உறவுகொண்டதாக கூறியிருக்கிறார்கள். விளைவுகளை எதிர்கொள்ளும்போதுதான் அதன் தீவிரம் அவர் களுக்கு புரிகிறது. 

தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணரும்போது வாழ்க்கையில் விரக்தியடைகிறார்கள். இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் பெற்றோர்களாலேயே வெறுக்கப்படுகிறார்கள். சமூகம் தங்களை மட்டுமல்லாமல் குடும்பத்தாரையும் இழிவாக பேசுவதால் மிகுந்த மனஉளைச்சலுக்குள்ளாகிறோம் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் பரிதாபமாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இந்த அறியாப் பெண்களை பெற்றோர்களும் கைவிடுவது ஆபத்தின் உச்சம்.

பெரும்பாலான வெளிநாடுகளில் திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் ஒரு இயல்பான விஷயமாகவே கருதப்படுகிறது. அதனால் அந்நாட்டு பெண்கள் அதனை அவமானகரமானதாக கருதுவதில்லை. எந்த மன உளைச்சலுக்கும் அவர்கள் உள்ளாவதில்லை. ஒருவேளை மனஉளைச்சலுக்கு உள்ளாகினாலும், பெற்றோர்களும், மனநல அமைப்புகளும், அரசாங்கமும் அவர்களுக்கு ஆதரவாக இருந்து, அந்த தாக்கத்தில் இருந்து அவர்களை மீட்டெடுத்துவிடுகிறது.

இங்கு அத்தகைய நெருக்கடி ஏற்பட்டுவிட்டால், பாதிக்கப்பட்ட பெண் அதனை தனது பெற்றோரிடம் சொல்லவே பயப்படுகிறாள். மகள் அதை சொன்னாலும், உடனே பெற்றோர் மனஅழுத்தத்திற்கு உள்ளாகி பிரளயத்தை உருவாக்கிவிடுகிறார்கள். நெருக்கமானவர்களிடம் ஆலோசனை கேட்டாலும் தவறான வழியைக்காட்டி அவர்களை பெரும் சிக்கலுக்குள்ளாக்கிவிடுகிறார்கள். பாதிக்கப்பட்ட சில பெண்கள், அதற்கு காரணமான குற்றவாளிகளுக்கே திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். சிலருக்கு சொந்தத்தில் உடனடியாக மாப்பிள்ளை தேடிப்பிடித்து அவசர திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள்.

விடுதிகளில் தங்கிப்படிக்கும் பெண்கள், வேலைக்குப்போகும் பெண்கள், பெற்றோரைப் பிரிந்து உறவினர்களிடத்தில் வசிக்கும் பெண்கள் போன்றோரே திருமணத்திற்கு முன்பு அதிக அளவில் கர்ப்பமடைவதாக இன்னொரு ஆய்வு குறிப்பிடுகிறது. காதல் என்ற பெயரில் கற்பை பறிகொடுக்கும் பெண்கள் அதிகரித்துக்கொண்டிருப்பதாகவும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

ஜெய்ப்பூரில் உள்ள அஸ்ரா என்ற பெண்கள் பாதுகாப்பு மையத்தின் தலைவியான யாமினி ஸ்ரீவாஸ்தவ் இது பற்றி கூறுகையில், “சிறு வயதிலே பெண்களுக்கு சமூகத்தில் நிலவும் நெருடலான விஷயங்களை பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டும். பள்ளிகளில் பாலியல் கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும். விஞ்ஞானரீதியான விளக்கங்களை அவர்கள் பெறும்போது, அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பாதுகாப்பு சூழலையும் உணர்வார்கள். காதல் என்ற பெயரில் வீட்டை விட்டு ஓடிவந்த பெண்கள்தான் திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 

காதலிப்பது தவறல்ல. பெற்றோருக்கு தெரியாமல் வீட்டைவிட்டு ஓடிப்போவது தவறு. இந்தியாவில் 1000 பெண்களில் 86 பேர் திருமணத்திற்கு முன் கர்ப்பமாகிறார்கள் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. அதனால் பெண்கள் அனைவரும் இதில் விழிப்புடன் இருக்கவேண்டும். திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் அடைவதை தடுக்க கல்வி நிலையங்களும், சமூக அமைப்புகளும் முழு முயற்சி எடுக்கவேண்டும்” என்கிறார்.

Tue, 25 Dec 2018 23:41:08 +0530

பொடுகு தொல்லை தீர இப்பவே இதை செய்யுங்கள்....! இதற்கு போய் கவலை படலாமா..?

பொடுகு தொல்லை தீர இப்பவே இதை செய்யுங்கள்....! இதற்கு போய் கவலை படலாமா..? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

தேங்காய்ப்பால் அரை கப் எலுமிச்சை சாறு நான்கு தேக்கரண்டி, ஊற வைத்து அரைத்த வெந்தையம் இவற்றை கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். மேலும் கூந்தலின் நுனி வெடிக்காமல் இருக்கும்.

கரிசலாங்கண்ணி கீரை, முட்டையின் வெள்ளைக்கரு, எலுமிச்சை பழச்சாறு, தயிர், துளசி, வேப்பிலை, தேயிலை நீர் இவற்றை ஒன்றாக கலந்து ஒரு பேக் மாதிரி செய்துக்கொண்டு பொடுகு தொல்லை நீங்கி கூந்தல் மிகவும் நன்றாக இருக்கும்.ஒரு கப் ஆப்பிள் சாற்றுடன், அரை கப் தண்ணீர் கலந்து, தலை முழுவதும் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். மிளகு எண்ணெய், தயிர் செம்பருத்தி பூ இவற்றை கொண்டு மசாஜ் செய்தாலும் பொடுகு தொல்லை நீங்கும்.

வசம்பை தட்டி சிறிது நல்லெண்ணையில் நன்றாக கருக வறுத்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து பூசி வர பொடுகு தொல்லை நீங்கும்.முல்தானிமட்டி, மருதாணி, முட்டையின் வெள்ளைக்கரு மூன்றையும் கலந்து தேய்த்து அரைமணி நேரம் ஊற வைத்து குளித்தால் பொடுகு நீங்கும். தலையில் தயிர் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து விட்டு பிறகு குளிக்க பொடுகு நீங்கும்.

பொடுகு தொல்லையை கவனிக்க நேரம் இல்லையே என வருந்துபவர்கள், குளிக்க வைக்கும் வெந்நீரில் வேப்பிலையை போட்டு கொதிக்க வைத்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்குவதோடு, கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. வசம்பு சாறு, பொடுதலை சாறு இரண்டையும் கலந்து இரவில் பூசி காலையில் தலைக்கு குளிக்க வேண்டும்.

பொடுதலையை பொடுகு உள்ள தலைக்கு உபயோகித்தால் நல்ல பலன் கிடைக்கும். இதனால் தான் இதற்கு பொடுதலை என பெயர் வந்தது. நாட்டு வெங்காயத்தை உரித்து, அரைத்து தலையில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து, குளித்தால் பொடுகு நீங்கும். 

வேப்பம் பூவையும், வெல்லத்தையும் நல்லெண்ணையில் காய்ச்சி வடிக்கட்டி அந்த எண்ணெய்யை உபயோகித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். வெள்ளை மிளகு நான்கு தேக்கரண்டி, வெந்தயம் இரண்டு தேக்கரண்டி, இரண்டையும் காய்ச்சாத பசும்பலில் அரைத்து தாளிக்கு பேக்போட்டு அரை மணி நேரம் ஊற வைத்து மிதமான வெந்நீரில் குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும் 

தேங்காய் எண்ணையில் வெந்தயத்தை போட்டு காய்ச்சி தினமும் தலைக்கு தடவி வர பொடுகு மறையும் .பசலைக்கீரையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர பொடுகு நீங்குவதோடு நல்ல கன்டிஷினராகவும் பயன்படும் மேல் குறிப்பிட்டு உள்ள பல டிப்ஸ்ல உங்களுக்கு பிடித்த டிப்ஸ் எதையோ அதனை கொண்டு முயற்சி செய்து பாருங்க.. கண்டிப்பாக அதற்கான பலன் கிடைக்கும்.

Tue, 11 Dec 2018 15:12:06 +0530

குழப்பமான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் பதவியிலிருந்து விலகும் மஹிந்த

குழப்பமான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் பதவியிலிருந்து விலகும் மஹிந்த | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு மத்தியில் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட பிரதமர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்து கொள்வதாக மஹிந்த ராஜபக்ச கடிதம் மூலம் அனுப்பி அறிவித்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் சட்ட விரோத பிரதமர் பதவியை தான் வைத்திருப்பது தனது சுயமதிப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தும். எனவே பதவியை இராஜினாமா செய்கிறேன் என மஹிந்த குறிப்பிட்டுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எப்படியிருப்பினும் இது தொடர்பில் ஜனாதிபதி ஊடக இயக்குனரிடம் வினவ முற்பட்ட போது அவரது தொலைபேசி செயழிலந்து காணப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைத்தமைக்கு எதிராக உயர் நீதிமன்றினால் இடைக்கால தடை உத்தரவு விதித்துள்ள நிலையில், மஹிந்தவின் ராஜினாமா தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

மஹிந்தவு ஆதரவான பெரும்பான்மை நிரூபிக்க முடியாத காரணத்தால் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் உயர் நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை உத்தரவுக்கு அமைய அடுத்து வரும் சில நாட்களில் நாடாளுமன்றம் கூடவுள்ளது. இதன்போது பதவி நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மை நிரூபித்து மீண்டும் பிரதமர் பதவியை பெற்றுக்கொள்வார்.

இதனை முன்னரே அறிந்த கொண்ட மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை ராஜினாமா செய்யும் நிலைப்பாட்டுக்கு தள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மஹிந்தவுக்கு ஆதரவாக 63 உறுப்பினர்கள் மாத்திரமே கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி : தமிழ்வின்

Tue, 13 Nov 2018 09:03:07 +0530

சாரதிக்கு தலைச்சுற்று வந்ததால் பாலம் ஒன்றில் குடை சாய்ந்த பஸ் வண்டி

சாரதிக்கு தலைச்சுற்று வந்ததால் பாலம் ஒன்றில் குடை சாய்ந்த பஸ் வண்டி | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகருக்கு சென்றுகொண்டிருந்த 786 இலக்க  இ.போ.ச. பஸ் பொன்னாலை பாலத்தில் குடைசாய்ந்துள்ளது.

நேற்று(27) இடம்பெற்ற இச்சம்பவத்தில்  பஸ்ஸை ஓட்டிச் சென்ற  சாரதிக்கு ஏற்பட்ட திடீர் தலைச்சுற்று காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்

வீதியின் அருகில் உள்ள  குடிநீர் விநியோக குழாய் பொருத்தப்பட்ட தூணில் குறித்த பஸ்  தாங்கி சரிந்து நின்றமையினால்  பஸ்ஸில் பயணித்த மக்கள் மயிரிழையில் தப்பினர்.

Fri, 27 Jul 2018 22:10:22 +0530

ஆண்கள் எந்த லிமிட்டுடன் பெண்களிடம் பழக வேண்டும் தெரியுமா ..?

ஆண்கள் எந்த லிமிட்டுடன் பெண்களிடம் பழக வேண்டும் தெரியுமா ..? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

வாலிப வயதில், வயது வந்த பெண்களை பார்க்கும் போது ஒரு விதமான காதல் கொள்ள மனம் முற்படும்.

இது இயல்பான ஒன்றாக தான் இருக்கும்.பொதுவாகவே பெண்களின் உடல் அமைப்பை பார்க்கும் போது ஆண்களுக்கு, அந்த பெண்ணின் மார்பு மற்றும் இடுப்பு பகுதியில் கண் பார்வை செல்வது  இயல்பு. ஆண்களின் இயற்கை குணமே அப்படித்தான்...

இது போன்ற தருணத்தில் தான் ஆண் பெண்ணை நோக்கி செல்வது, அவள் மீது ஆசைக்கொள்வது என எது வேண்டுமென்றாலும் தோன்றலாம்.ஆனால் இந்த தருணத்தில் நாம் அடுத்து எடுத்து வைக்கும் படி தான் மிக மிக முக்கியம்.

ஒரு பெண்ணை பார்த்து பிடித்து விட்டால், அந்த பெண்ணை எதற்காக பிடிக்கிறது ..? அவள் மீது காதலா..? தன்னுடைய விருப்பத்தை சொல்லலாமா..? என பல்வேறு  கேள்விகள் எழும் 

அப்போது அந்த பெண்ணுக்கும் தன் மீது விருப்பம் உள்ளது என்பதை உறுதி செய்த  பின்னரே அந்த பெண்ணிடம் எவ்வாறு பழக வேண்டும் என்பதை பற்றி கவனிக்க வேண்டும்..

அந்த பெண்ணிற்கு தான் தன் மீது விருப்பம் உள்ளதே என  நினைத்து, அத்துமீறி நடக்க  துணிய கூடாது .

அந்த பெண்ணுக்கு தான் தன்னை பிடித்து விட்டதே என்று எண்ணி, அவளை தொட  முற்படுவது உங்கள் மீதான மரியாதையை இழக்க செய்யும்.

அதுமட்டுமில்லாமல், உங்களிடம் ஒரு பாதுகாப்பு தன்மையை உணர மாட்டார்கள்..முடிவில் பிரிந்து போக நேரிடும்...

அதற்காக, ஒரு பெண்ணை தொட்டு கூட பேச கூடாத என்பது அல்ல...ஆனால் ஒரு பெண்ணை தொட்டு பேசும் போது அதில் அன்பு இருக்க வேண்டும்..முதல் தொடுதலே  காமம்  இருக்க கூடாது என்பது தான் முக்கியமே.

Tue, 24 Jul 2018 09:17:53 +0530

பெண்கள் எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்வது நல்லது...

பெண்கள் எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்வது நல்லது... | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

மார்பகப் புற்றுநோய்

ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை இரண்டு வழிமுறைகளில் அறிய முடியும். ஒன்று, சுய பரிசோதனை அடுத்தது மேமோகிராஃபி பரிசோதனை.

பெண்கள் அவர்கள் கைகளினால் மார்பகத்தை அழுத்திப் பார்க்க வேண்டும். ஏதேனும் கட்டி தென்பட்டாலோ, அல்லது வலி இருந்தாலோ, உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும். மேலும் மார்பகக் காம்புகளில் நீர் அல்லது ரத்தம் வடிந்தாலும் ஆபத்தே. சிலருக்கு கட்டி இருந்து வலி இல்லை என்றாலும் அபாயமே. அதனால் அவர்களும் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

1. மேமோகிராஃபி:-

மேமோகிராஃபி என்று அழைக்கப்படும் முலை ஊடு கதிர்ப் படம். மேமோகிராஃபி இயந்திரத்தில் தட்டு ஒன்று இருக்கும். அதன் மேல் மார்பகத்தை வைக்க வேண்டும். அந்த மார்பகத்தின் மீது ஒரு அழுத்தும் கருவி வைக்கப்படும். மார்பகத்தின் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம் புற்று நோய் பாதிக்கப்பட்ட திசுக்களைத் தெளிவாக அறிய முடியும்.

பல்வேறு கோணங்களில் மார்பகத்தைப் படம்பிடித்து ஆராய வேண்டும். இந்த முறையில் கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக, பெண்ணுக்கு வேதனை அதிக அளவில் இருக்கும். இதனால், பல பெண்கள் மேமோகிராஃபி பரிசோதனை என்றாலே பயந்து அதைத் தவிர்ப்பார்கள்.

2. நவீன மேமோகிராஃபி பரிசோதனை:-

மேமோகிராஃபி இயந்திரம் நவீனமாகிவிட்டது. மார்பகத்தை வைக்கும் தட்டு அப்படியே இருக்கும். ஆனால், முன்பைப்போல அழுத்தம் கொடுக்கும் கருவி தேவை இல்லை. அதற்குப் பதில் ஊடு கதிர் அலைகளை வெவ்வேறு கோணங்களில் மார்பில் செலுத்தி மார்பின் குறுக்கு வெட்டுத் தோற்றங்களை முப்பரிமாண வடிவத்தில் கணிப்பொறியில் காண முடிகிறது. இதில் புற்று நோய் பாதிக்கப்பட்ட திசுக்களைத் தெளிவாகக் கண்டுபிடிக்க முடியும்.

இந்த ஊடு கதிர்களால் ஆபத்து விளையுமோ என்று அச்சப்படத் தேவை இல்லை. இந்த ஊடு கதிர்களின் அபாயத்தன்மை மிக மிகக் குறைவு. மேலும், இந்தப் பரிசோதனை முழுக்க முழுக்கப் பெண்களாலே செய்யப்படுவதால், கூச்சப்படவும் அவசியம் இல்லை.

புற்று நோய்க்கு ஆரம்பத்தில் சிகிச்சை மேற்கொண்டால், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 95 சதவிகிதம் உறுதி. தாமதமாகக் கண்டறியும் பட்சத்தில், முதலில் மார்பகத்தை எடுக்க வேண்டி வரும். அப்போதும் எலும்புகள் வரை புற்று நோய் பரவி இருந்தால், உயிர் பிழைப்பது கடினம்!

ஒரு பக்கத்தின் மார்பகத்தில் புற்றுநோய் ஏற்பட்டால், இன்னொரு பக்கத்தின் மார்பகத்திலும் புற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். ஆகவே, மார்பகப் புற்று நோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாகப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

இளம் பெண்களுக்கு இந்த நோய் தாக்குதல் மிகவும் குறைவாகவே இருக்கிறது. அவர்களுக்கு மார்பகத்தில் வீக்கம் ஏற்படுவதை, ப்ரீஸ்ட் லம்ப் என்பார்கள். இதனை அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மூலமே கண்டறிந்துவிட முடியும். தேவைப்பட்டால் மட்டுமே, மேமோகிராஃபி மேற்கொள்ள வேண்டும்.

வயதான பெண்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரை சந்தித்து மேமோகிராஃபி பரிசோதனை செய்துகொள்வது மிகவும் அவசியமானதும், மார்பகப் புற்றுநோயை விரைவில் கண்டறிந்து அதிலிருந்து தப்புவதற்கான வழியும் ஆகும்.

Sun, 22 Jul 2018 13:43:45 +0530

உங்களுக்கு குளிக்க தெரியுமா...? இதுவரை இப்படி குளித்தது தவறு..!

உங்களுக்கு குளிக்க தெரியுமா...? இதுவரை இப்படி குளித்தது தவறு..! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

குளிக்காமல் எந்த காரியத்தையும் செய்ய மனதே வராது அல்லவா...வெளியில் கூட செல்ல முடியாது அல்லவா..? சரி ஒரு சிலர் காக்கா குளியல் போட்டு உடனே வெளியில் வந்து விடுவார்கள்....

குளிக்கும் முறையில் கூட ஒரு சில முறைகள் உள்ளது.. நாம் எப்படி குளிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க...

குளியல் = குளிர்வித்தல்

மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். உடலில் அதிகமாக உள்ள வெப்பத்தை குளியல் மூலம் எப்படி வெளியேற்ற முடியும் என்பதை பார்க்கலாம்

இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக்கழிவுகள் தேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இந்த வெப்பக்கழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்த நீரில் குளிக்கிறோம்.

பொதுவாகவே வெந்நீரில் குளிக்க கூடாது. ஆனால் குளிர் காலத்தில் வெந்நீரில் குளிக்கலாம்

குளிக்கும் முறை :

நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.

அதனால் தான் நம் முன்னோர்கள், குளத்தில் இறங்கும் போது ஒவ்வொரு படியாக இறங்குவார்கள். நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.

இதேபோன்று உச்சதலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது என்பதற்காக சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.

இதேபோன்று குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.

குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்

குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.

இனியாவது எந்த நேரத்தில் எப்படி குளிக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு குளிப்பது ஆக சிறந்தது

Sun, 22 Jul 2018 02:48:01 +0530

இந்த 4 டிப்ஸை பயன்படுத்தி வழுக்கை தலையிலும் முடி வளர செய்யலாம் : அட நம்புங்க...

இந்த 4 டிப்ஸை பயன்படுத்தி வழுக்கை தலையிலும் முடி வளர செய்யலாம் : அட நம்புங்க... | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

நம் தலையில் 1 இலட்சத்துக்கும் மேலான முடி இருக்கும். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட அளவில் முடி உதிர்த்து, அவ்விடத்தில் புதிய முடி வளரும். 

ஆனால், எப்போது ஒருவருக்கு அளவுக்கு அதிகமான அளவில் தலைமுடி உதிர்கிறதோ, அப்போதுதான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. இதைதான் "அலோப்பேசியா ஏரியேட்டா" என்று அழைப்பர். 

இந்நிலை இருந்தால், தலைமுடி அதிகம் உதிரும் ஆனால் மீண்டும் முடி வளராமல் வழுக்கை ஏற்படும். பொதுவாக இப்பிரச்சனையால் 40-45 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 

ஆனால் தற்போது இளம் தலைமுறையினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆயுர்வேதத்தில் பித்தம் உடலில் அதிகம் இருந்தால், தலைமுடி உதிர்ந்து வழுக்கை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. 

இதற்கு  மருந்தையும் ஆயுர்வேத மருத்துவமே கூறுகிறது. அதன்படி செய்தால் வழுக்கை ஏற்பட்ட இடத்தில் மீண்டும் தலைமுடியை வளரச் செய்யலாம். 

டிப்ஸ் 1:

பெரும்பாலான வீடுகளில் இருக்கும் ஒரு மருத்து குணம் நிறைந்த மூலிகை தான் துளசி. இந்த துளசி தலைமுடியின் வலிமையை மேம்படுத்தவும், நரைமுடியைத் தடுக்கவும் உதவும்.

பயன்படுத்தும் முறை 

துளசி விதைகளை பொடி செய்து விளக்கெண்ணெயுடன் சேர்த்து கலந்து, தினமும் தலைக்கு தடவி வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்படும்.

டிப்ஸ் 2:

பிராமி என்னும் ஆயுர்வேத மூலிகை, பழங்காலம் முதலாக தலைமுடி பிரச்சனைகளுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் கொடுக்கப்பட்டு வருகிறது. இது தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும். மேலும் இந்த மூலிகை மயிர்கால்களை வலிமையடையச் செய்யும்.

பயன்படுத்தும் முறை 

நாட்டு வைத்திய கடைகளில் பிராமி எண்ணெய் விற்கப்படும். அந்த எண்ணெயை வாரத்திற்கு 2-3 முறை ஸ்கால்ப்பில் தடவி வந்தால், வழுக்கை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

டிப்ஸ் 3:

திரிபலா என்பது மூன்று மூலிகைகள் அடங்கிய ஆயுர்வேதத்தில் தலைமுடி பிரச்சனைகளுக்கு வழங்கப்படும் ஓர் அற்புதமான பொருள். இதனை மாத்திரை வடிவிலோ, டீ அல்லது பொடி வடிவிலோ பயன்படுத்தலாம். இது தலையில் உள்ள திசுக்களை புத்துணர்ச்சியடையச் செய்யும் மற்றும் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் செய்யும்.

பயன்படுத்தும் முறை 

திரிபலா பொடியை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து கலந்து, வாரத்திற்கு 3-4 முறை தடவி ஊற வைத்து அலசி வர வேண்டும்.

டிப்ஸ் 4:

ஆளி விதையில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. இதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி அமிலம், வழுக்கையைத் தடுக்கும் மற்றும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும். ஆளி விதையை உணவில் சேர்த்து வருபவர்களின் தலைமுடி ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்கும். இதற்கு ஆளி விதையில் உள்ள சத்துக்கள் தான் காரணம்.

பயன்படுத்தும் முறை 

ஆளி விதையை உணவில் சேர்த்து வருவதன் மூலம் தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். அதற்கு ஆளி விதையை மில்க் ஷேக் உடன் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது தினமும் காலையில் ஆளி விதையை பொடி செய்து நீரில் கலந்து குடித்து வரலாம்.

Sun, 22 Jul 2018 02:45:22 +0530

35 வயதிற்கு மேல் பெண்கள் அவசியம் செய்து கொள்ள வேண்டிய பரிசோதனைகள்

35 வயதிற்கு மேல் பெண்கள் அவசியம் செய்து கொள்ள வேண்டிய பரிசோதனைகள் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

குடும்பத்தில் உள்ளவர்களுக்காக வீட்டிலும், வேலையிடத்தில் உள்ளவர்களுக்காக அலுவலகத்திலும் உழைத்துத் தியாகி பட்டம் சுமக்கும் பெண்களை எல்லா வீடுகளிலும் பார்க்கலாம். பிரச்சனை வந்தால் மட்டுமே மருத்துவரைப் பார்க்கும் பெண்களுக்கு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் செய்து கொள்ள வேண்டிய அவசிய பரிசோதனைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

* ஹீமோகிராம் ரத்த சோகை இல்லாத பெண்களே இல்லை எனலாம். அதீத சோர்வு, எப்போதும் தூக்கம், முகம் உப்பி, வெளிறிக் காணப்படுதல், கண்கள், நாக்கு வெளிறி காணப்படுவதெல்லாம் ரத்தசோகைக்கான அறிகுறிகளாகும். தவிர முடி உதிர்தல், மூச்சு வாங்குதல், குளிர்ச்சியான சூழலைத் தாங்க முடியாமை, மாதவிலக்குப் பிரச்சனை போன்றவை எல்லாம் கூடுதல் அறிகுறிகள். பெண்களுக்கு மாதவிலக்கு தவிர்க்க முடியாத நிகழ்வு என்பதால், அதுவும் அவர்களது ரத்த சோகைக்கான முக்கிய காரணமாகிறது.

6 மாதங்களுக்கொரு முறை முழுமையான ரத்தப் பரிசோதனை மேற்கொள்வதன் மூலம், ஹீமோகுளோபின் அளவு, ரத்தத்தில் உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை செல்கள், ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையைத் தெரிந்துகொண்டு, மேற்சொன்ன பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சரி செய்ய முடியும். 

பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 11 முதல் 12 கிராம் இருக்க வேண்டும். இது குறைகிற போது கவனம் தேவை.ஹீமோகுளோபின் அளவு வெகுவாகக் குறையும்போது அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

* தலை முதல் கால் வரை பாரபட்சமின்றி, உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக்கூடிய நீரிழிவு, யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குடும்பப் பின்னணியில் நீரிழிவு உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் கொஞ்சம் அதிகம். இதற்கான ரத்தப் பரிசோதனையை வெறும் வயிற்றிலும், பிறகு சாப்பிட்ட 2 மணி நேரம் கழித்தும் செய்ய வேண்டும். வெறும் வயிற்றில் 100 மி.கிராமுக்குக் குறைவாகவும், சாப்பிட்ட பிறகு 140 மி.கி-க்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.

தாகம், புண்கள் ஆறாதது, சருமத்தில் அரிப்பு மற்றும் மாற்றம், பார்வைப் பிரச்சனை என திடீரென உங்கள் உடலில் எந்த மாற்றம் தெரிந்தாலும் சர்க்கரை நோய்க்கான சோதனையை செய்து பார்ப்பது நல்லது. 

* கொலஸ்ட்ராலுக்கும் உங்கள் உடல் தோற்றத்துக்கும் சம்பந்தமில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். ஒல்லியான தோற்றம் கொண்டவர்களுக்கும் உள்ளுக்குள் கொழுப்பின் அளவு அதிகமாக இருக்கலாம். கொலஸ்ட்ரால் என்பது எல்லாவிதமான பயங்கர நோய்களையும் வரவேற்கும் ஆபத்தின் வாயில் என்பதால் அலட்சியம் வேண்டாம்.

* தைராய்டு பாதிப்பின் தீவிரமும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தலை முதல் கால் வரை ஒட்டுமொத்த உடலையும் கட்டுப்படுத்துகிற ஒருவித ஹார்மோன். இது சரியில்லாவிட்டால், மூளை வளர்ச்சி பாதிப்பது, ரத்த செல்கள் முதிர்ச்சியடையாமை, மாதவிலக்கு, தலைமுடி உதிர்வது என ஏகப்பட்ட பாதிப்புகள் வரலாம். 

தைராய்டு சுரப்பு கூடினாலும் பிரச்சனை, குறைந்தாலும் பிரச்சனை. எளிமையான ரத்தப் பரிசோதனை மூலம் இதைத் தெரிந்து கொள்ளலாம். 50 வயதுக்கு மேலானவர்கள், குடும்பப் பின்னணியில் தைராய்டு பாதிப்புள்ளவர்கள், டைப் 1 வகை நீரிழிவு உள்ளவர்கள், காரணமின்றி உடல் எடை கூடியவர்கள் அல்லது குறைந்தவர்கள் போன்றோருக்கு இந்த சோதனை மிக மிக முக்கியம்.

* இன்று யாருக்கு வேண்டுமானாலும் எந்தக் காரணங்களும் இல்லாமல் புற்றுநோய் தாக்குவதைப் பார்க்கிறோம். சர்க்கரை நோய் மாதிரிதான் இதுவும். போன வருடம் செய்த சோதனையில் நார்மல் எனக் காட்டியிருக்கும். இந்த வருடம் வேறு மாதிரி காட்டலாம். எனவே,பெண்கள் மார்பகங்கள் மற்றும் கர்ப்பவாய்க்கான புற்றுநோய் பரிசோதனைகளை வருடம் தவறாமல் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

குடும்பப் பின்னணியில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்தால், அந்த வழியில் வருபவர்களுக்கும் அது பாதிக்கும் அபாயங்கள் அதிகம். சமீபகாலமாக, அப்படி குடும்பப் பின்னணி இல்லாதவர்களையும் மார்பகப் புற்றுநோய் அதிகம் தாக்குவதைப் பரிசோதனை செய்து, கட்டிகளோ, வீக்கமோ, கசிவோ இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். தவிர வருடம் ஒரு முறை மோமோகிராம் சோதனையும் அவசியம். எக்ஸ் ரே மாதிரியான எளிய சிகிச்சைதான் அது. ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்தால், மார்பகங்களை நீக்கும் அளவுக்குப் போக வேண்டிஇருக்காது.

Tue, 14 Nov 2017 13:17:30 +0530

கர்ப்ப காலத்தில் அடிக்கடி ஸ்கேன் எடுக்கலாமா?

கர்ப்ப காலத்தில் அடிக்கடி ஸ்கேன் எடுக்கலாமா? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணும் இல்லற வாழ்வில் எதிர்நோக்கும் அற்புதத் தருணம். ‘கருவுறுதல்’ தாய்மைக்குப் பாதை அமைக்கிறது. தன் உடலுக்குள்ளேயே ஓர் உயிர் மொட்டு விடுவதை உணர்கின்ற பெண்ணின் உடலியல் அதிசயம்தான் கருவுறுதல்.

நவீன தொழில்நுட்ப வசதிகளும் பரிசோதனை முறைகளும் புதிய உயரத்தை எட்டியிருக்கும் இன்றைய நிலையில், கரு உருவானதில் இருந்து பிரசவம் ஆகும்வரை உள்ள கர்ப்ப காலத்தைத் தாய்க்கும் சேய்க்கும் பாதுகாப்பானதாக ஆக்க முடிகிறது.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் எல்லா குறைபாடுகளையும் ஒரே நேரத்தில் கண்டுபிடிப்பது கடினம். உதாரணத்துக்கு, குழந்தையின் மூளையில் திரவம் சேரும் நிலை (Hydrocephalus) முதலில் எடுக்கப்படும் ஸ்கேனில் தெரியாமல் போகலாம். அந்தக் கோளாறு கர்ப்பத்தின் பிற்பகுதிக் காலத்தில் தெரிய வரலாம். இப்படிச் சந்தேகம் உள்ளவர்களுக்கு இடைப்பட்ட காலத்திலும் ஒரு ஸ்கேன் எடுக்கப்படுவதுண்டு.

கருப்பையில் குழந்தை படுத்திருக்கும் நிலையைப் பொறுத்தும் சில கோளாறுகளை வழக்கமான ஸ்கேனில் பார்க்க முடியாமல் போகும். அப்போது சில நாட்கள் கழித்து வரச்சொல்லி, மறுபடியும் ஸ்கேன் எடுப்பார்கள். இந்த இடைப்பட்ட நாட்களில் குழந்தை சற்றே நகர்ந்திருக்கும். அதனால் சில பாகங்கள் சரியாகத் தெரியும். ஒல்லியான உடல்வாகு உள்ளவர்களுக்கு குழந்தையின் குறைபாடுகளை எளிதாகக் காண முடியும். ஆனால், உடற்பருமன் உள்ளவர்களுக்கு அவ்வளவு எளிதாகப் பார்க்க முடியாது. அப்போது கூடுதலாக சில முறை ஸ்கேன் எடுக்கப்படுவதுண்டு.

Tue, 14 Nov 2017 13:15:42 +0530

குழந்தைகளின் மன அழுத்தம் போக்கும் வழிமுறைகள்

குழந்தைகளின் மன அழுத்தம் போக்கும் வழிமுறைகள் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும் நேரத்தில் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. 

1. மன அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக நீங்கள் செயல்படுவதை அவர்களுக்கு முதலில் உணர்த்துங்கள்.

2. இதன் மூலமாக அவர்களுடைய சரியான ஓத்துழைப்பை நீங்கள் பெறமுடியும்.

3. குழந்தைகள் அடிக்கடி தங்களை குறைகூறிக் கொண்டால், அவ்வாறு நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.

4. தேவைப்பட்ட மாறுதல்களை உண்டாக்குங்கள். உதாரணமாக தொல்லை கொடுக்கும் நண்பர்களை மாற்றுவது. வகுப்பறையில் வம்பு செய்யும் மாணவனை விலக்க, உங்கள் மகனை வேறு இடம் மாற்றி உட்கார வைப்பது. புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பது, புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது, புதிய விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவது, வளர்ப்புப் பிராணிகளைப் பரிசளிப்பது போன்றவை.

5. தங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், உதவியும் கிடைப்பதை உணர்ந்ததும் குழந்தைகள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள்.

6. பெற்றோரின் மரணம், விவாகரத்து, எதிர்பாராத அதிர்ச்சி போன்றவைகளினால் மனஅழுத்த நோய்க்கு ஆளான குழந்தைகள் நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகே நோயிலிருந்து விடுபடுவார்கள்.

7. குழந்தைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக் கொடுங்கள்.

8. தங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். பெண் குழந்தைகள் அழுவதன் மூலமாக தங்கள் மனதை லேசாக்கிக் கொள்வார்கள். ஆண் குழந்தைகளுக்கு இதை நாம் சொல்லித் தருவது அவசியம்.

9. தோல்விகளும், துயரங்களும் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே இது ஏதோ விபரீதமானதோ, அல்லது நடக்கக் கூடாததோ அல்ல என்பதை குழந்தைகளுக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுங்கள்.

10. அவர்களுக்கு மனமகிழ்ச்சி அளிக்கின்ற செயல்களை செய்வதற்கு அனுமதி அளியுங்கள். அது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுங்கள்.

11. மனஅழுத்தத்திற்கு ஆளான குழந்தை மற்ற பள்ளித் தோழர்களுடன் சுற்றுலா செல்ல விரும்பினால் மன அழுத்தத்தைக் காரணம் காட்டி அதைத் தடுக்காதீர்கள். இந்த மாறுதல் அந்த குழந்தைக்கு மிகவும் அவசியமான சிகிச்சை போன்றது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.

12. குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களை அவர்கள் செய்யும் போது, சரியாகச் செய்கிறார்களா என்பதை கவனியுங்கள். சரியான முறையில் செய்யும் போது தவறாமல் பாராட்டுங்கள்.

13. தேவைப்பட்ட போது மருத்துவரிடம் அழைத்துச் சென்று இரத்தம், சிறுநீர், ஆகியவற்றை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

14. குழந்தைகள் நன்றாக உண்ணும் படியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை கொடுத்து வயிறார சாப்பிடச் செய்யுங்கள்.

15. சில சாதாரண உடற்பயிற்சிகளை வேகமாக நடப்பது, ஓடுவது, போன்றவற்றை செய்யச் சொல்லி குழந்தையின் மனஉளைச்சலைக் குறையுங்கள்.

16. மேற்கண்ட முறைகளை கடைப்பிடித்த பிறகும், மன அழுத்தத்திற்கான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ அல்லது குழந்தையின் மனஅழுத்தம் குறையவில்லை என்றாலோ குழந்தை மனநல மருத்துவரின் உதவியை தயக்கம் இல்லாமலும், காலதாமதம் செய்யாமலும் நாடுங்கள்.

17. மற்றவர்கள் குழந்தையைக் கேலி செய்வார்களோ அல்லது பைத்தியம் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயந்து கொண்டு, விஷயத்தை வெளியே தெரியாமல் மூடி வைக்காதீர்கள்.

18. மருத்துவ உதவியை சரியான நேரத்தில் சரியான மருத்துவரிடம் செய்யாமல் போனால் மற்றவர்களை வேண்டுமானால் நீங்கள் திருப்திப் படுத்தலாம், ஆனால் உங்கள் செல்லக் குழந்தையின் எதிர்காலம் பாழாகி விடக்கூடும். எனவே இதை மனதில் கொண்டு உறுதியோடு செயல்படுங்கள்.

19. குழந்தையின் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, மற்றவர்களின் வீண்பேச்சை அலட்சியம் செய்வதே, குழந்தையின் மனநலம் சீர்படுவதற்கு விரைவாக உதவி செய்யும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

20. உண்மையில் உங்களது நண்பர்களும், உங்கள் குழந்தை மீது அக்கறை கொண்டவர்களும் நீங்கள் மருத்துவரின் உதவியை நாடுவதை ஆதரிப்பார்கள். நீங்கள் செய்வது சரியானது தான் என்று பாராட்டுவார்கள்.

Tue, 14 Nov 2017 13:13:51 +0530

குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீர் பிரச்சனை

குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீர் பிரச்சனை | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

இன்றைய எந்திரத்தனமான வாழ்க்கை சூழலில், வீட்டில் பாட்டி, தாத்தா போன்ற அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் இல்லாத நிலையில் குழந்தையை நல்லபடியாக வளர்த்தெடுக்க இளம் தாய்மார்கள் படுகின்ற பாடு கொஞ்சநஞ்சமல்ல.

அதுவும், அடிக்கடி உடுத்தி இருக்கிற ஆடையை அசிங்கப்படுத்தி, படுக்கையை ஈரமாக்கும் குழந்தை என்றால், சொல்லவே தேவையில்லை. உடை மாற்றுதல், படுக்கையை சுத்தம் செய்தல், குழந்தை அசிங்கப்படுத்திய துணிகளை துவைத்தல் என வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டே இருக்கும்... இவற்றோடு, ‘யூரினரி இன்ஃபெக்ஷன்’ எனும் சிறுநீரகத் தொற்று, சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பும் சேர்ந்து கொள்ளும்.

‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்பார்கள். அதனால், பெற்றோர் குழந்தையின் சிறுநீர் பிரச்சனையில் கவனமாக இருக்க வேண்டும். 

பிறந்த குழந்தைகள் இயற்கை உபாதையான சிறுநீர் கழிப்பதற்கு முன் அழுவது இயல்பான செயல். அதில் ஒன்றும் தவறில்லை. உண்மையில், பிறந்த குழந்தை ஆண், பெண் என எந்தப் பாலினத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், சொட்டுச் சொட்டாக சிறுநீர் கழிப்பதுதான் முக்கிய பிரச்சனை.

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு மூன்றிலிருந்து 6 மாதம் வரை சிறுநீர்பை, சிறுநீர் வெளியேறும் துளை இரண்டும் ஒன்றாக வேலை செய்யாது. இது குழந்தையின் ஒன்றரை வயது வரை நீடிக்கும். ஆண் குழந்தைகளுக்கு சிறுநீர் வெளியேறும் இடம் இறுக்கமாக இருக்கும். இதன் காரணமாக, சிறுநீர் கழிப்பது மிகவும் சிரமமாக இருக்கும். 1 வயது வரை சிறுநீர் வெளியேறும் இடம் இறுக்கமாக இருப்பது இயல்பானது. அதனால், குழந்தைகளுக்கு ஒரு பிரச்சனையும் ஏற்படாது. அதற்குப்பிறகும், சிறுநீர் வெளியேறும் இடம் ‘டைட்’ ஆக இருந்தால்தான் பிரச்சனை.

 

இதனால் குழந்தைகளுக்கு யூரினரி இன்ஃபெக்ஷன் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. சிறுநீர் உடலிருந்து சீராக வெளியேற முடியாத காரணத்தால், பிளாடருக்குள் போய் மீண்டும் கிட்னியை அடையும். இதனால் குழந்தைப் பருவத்திலேயே கிட்னி ஃபெயிலியர் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பிறந்த குழந்தைகள் 6 மாதம் வரை ஒரு நாளில்8 முதல் 10 முறை சிறுநீர் போகும். அதன் பிறகு, 5 அல்லது 6 முறை சிறுநீரை வெளியேற்றும். 1 வயது கடந்த குழந்தைகள் ஒரு நாளில் மூன்றிலிருந்து 5 தடவை சிறுநீர் போகும்.

3 மணி நேரத்துக்கு ஒரு தடவை யூரினை வெளியேற்றிவிட்டு, சிறுநீர்பையை காலியாக வைத்திருக்க வேண்டும். இந்தப் பழக்கம் வருவதற்கு 2 வயதில் இருந்தே பயிற்சி கொடுக்க வேண்டும். குழந்தைகளிடம் வெறுமனே ‘பாத்ரூம் போய்ட்டு வா’ என்றால் போகாது. பெற்றோரும் குழந்தையுடன் சேர்ந்து பாத்ரூம் சென்று வரவேண்டும்.

அம்மா, அப்பா அறையிலோ, பாத்ரூமுக்கு வெளியிலோ நின்று கொண்டு, ‘யூரின் பாஸ் பண்ணிவிட்டு வா’ என்றால் குழந்தைகள் போகாது. தன்னை அதட்டுவதாகத்தான் குழந்தைகள் புரிந்து கொள்ளும். குழந்தைகளுக்கு உணவு உண்ணும் பழக்கம் இயல்பாக வரவேண்டும் என்பதற்காக, எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுகிறோம் அல்லவா? அதைப்போன்றுதான், குழந்தைகளுக்குத் தனியாக சிறுநீர் கழிக்கும் பழக்கம் வரும்வரை பெற்றோரில் எவரேனும் ஒருவர் குழந்தையுடன் பாத்ரூம் சென்றுவருவது நல்லது.

குழந்தைகள் சிறுநீர் கழிக்க பழக்கப்படுத்த வேண்டும். சிறுநீர் கழிக்கும் நேரங்களில் குழந்தைகளை ‘சீக்கிரம் சீக்கிரம்’ என அவசரப்படுத்தக் கூடாது. போதுமான கால அவகாசம் கொடுக்க வேண்டும். இப்படி குழந்தைகள் தானாகவே சிறுநீர் கழிக்கிற பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

5 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளுக்கு சளி, இருமல் போன்றவை இல்லாமல் காய்ச்சல் மட்டும் இருந்தால், யூரினரி இன்ஃபெக்ஷன் இருக்கலாம். வீட்டில் ஒரு குழந்தைக்கு கிட்னி பிராப்ளம் இருந்தால் மற்றொரு குழந்தையையும்பரிசோதனை செய்வது நல்லது.

 

1 வயது வரை குழந்தைகளுக்கு படுக்கையில் சிறுநீர் கழிப்பது தெரியாது. ஒரு வயதைக் கடந்த பிறகு குழந்தைகளுக்கு படுக்கையை ஈரமாக்குவது தெரியும். 2 வயதுக்கு மேலே, குழந்தைகளால் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை கட்டுப்படுத்த முடியும். வாரத்தில் 2 தடவையாவது குழந்தைகள் படுக்கை மற்றும் போர்வைகளை ஈரப்படுத்தும். இப்பழக்கம் 5 வயது வரை நீடிக்கும். சில குடும்பங்களில், 10 வயது வரை கூட படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கும். இதற்கும் பரம்பரைத்தன்மைக்கும் தொடர்பு உள்ளது.

குழந்தைகள் படுக்கையை ஈரமாக்குவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆழ்ந்த உறக்கம் இல்லாமை, சிறுநீர்பை அளவில் சிறியதாக இருத்தல் போன்றவை முக்கிய காரணங்கள். இப்பழக்கத்தைத் தடுப்பது மிகவும் எளிதான செயல். மாலை 6 மணிக்குமேல், குழந்தைகள் கேட்டால்தான் குடிப்பதற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும்.

இரவில் குளிர்பானங்கள், ஜூஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். படுக்கை அறையில் ஏ.சி. அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்து உள்ள உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். மாலை வேளையில் கண்டிப்பாக டாய்லெட் போக வைக்க வேண்டும். தூங்கச் செல்லும் 1 மணி நேரத்துக்கு முன்பும் படுக்கச் செல்லும் வேளையிலும் மறக்காமல் சிறுநீர் கழிக்க செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், குழந்தைகளிடம் உள்ள தேவையில்லாத எந்தப் பழக்கத்தையும் எளிதாக மாற்றலாம்...’’

‘‘3 மணி நேரத்துக்கு ஒரு தடவை யூரினை வெளியேற்றிவிட்டு, சிறுநீர்பையை காலியாக வைத்திருக்க வேண்டும். இந்தப் பழக்கம் வருவதற்கு 2 வயதில் இருந்தே பயிற்சி கொடுக்க வேண்டும்.’’

‘‘குழந்தைகள் படுக்கையை ஈரமாக்குவதற்கு ஆழ்ந்த உறக்கம் இல்லாமை, சிறுநீர்பை அளவில் சிறியதாக இருத்தல் போன்றவை முக்கிய காரணங்கள். பரம்பரைத் தன்மையும் காரணமாகலாம்.’’

Fri, 11 Aug 2017 19:16:11 +0530

Loudspeaker | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பிரபலமானவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 08:55:43 +0530

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...