உலகின் உயரம் குறைந்த மனிதர் உயிரிழந்தார்..!

உலகின் உயரம் குறைந்த மனிதர் உயிரிழந்தார்..! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

நேபாள நாட்டின் பாக்லங் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரா தாபா மகர். 27 வயது நிரம்பிய இளைஞரான இவர் தான் உலகின் மிகவும் குள்ளமான மனிதராக இருந்து வந்தார். 67 அங்குல உயரம் கொண்ட இவரது எடை 6 கிலோ ஆகும். உலகிலேயே மிகவும் உயரம் குறைந்த நபர் என அங்கீகரிக்கப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் கடந்த 2010ம் ஆண்டு கஜேந்திரா தாபா மகர் இடம் பெற்றார். அதன்பிறகு அதே நேபாள நாட்டைச் சேர்ந்த சந்திர பகதூர் டாங்கி உயரம் குறைந்தவராக கண்டறியப்பட்டார்.

சந்திர பகதூர் டாங்கியின் உயரம் 54.6 செ.மீ ஆகும். இதையடுத்து உலகின் உயரம் குறைத்த மனிதர் என்கிற பட்டத்தை கஜேந்திரா தாபா மகர் இழந்த நிலையில் 2015 ம் ஆண்டு சந்திர பகதூர் மரணடமடைந்தார். பின் மீண்டும் உயரம் குறைத்த நபராக கஜேந்திரா தாபா மகர் விளங்கி வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியின்றி காணப்பட்ட கஜேந்திரா தாபா மகர், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி தற்போது அவர் மரணமடைந்துள்ளார்.

Sat, 18 Jan 2020 15:53:37 +0530

கணவனின் உடலை 10 ஆண்டுகளாக பிரீசரில் வைத்திருந்த மனைவி

கணவனின் உடலை 10 ஆண்டுகளாக பிரீசரில் வைத்திருந்த மனைவி | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

அமெரிக்காவின் உடா மாநிலத்தின் டூயெலி நகரைச் சேர்ந்தவர் ஜீன் சவுரோன்-மாதர்ஸ் (வயது 75). இவரது கணவர் பால் எட்வர்ட்ஸ்  ஓய்வு பெற்ற படைவீரர் ஆவார். 

கடந்த மாதம் 22ம் தேதி ஜீன் சவுரோன்-மாதர்ஸ் வீட்டிற்கு வந்த முன்னாள் ராணுவ அதிகாரிகள், வழக்கமான பொதுநல சோதனையை மேற்கொண்டனர். அப்போது ஜீன் மாதர்ஸ் அங்கே இறந்து கிடந்தார். அவரது மரணம் இயற்கையானது போலீசார் தெரிவித்தனர். 

இதையடுத்து வீட்டை மேலும் சோதனை செய்ததில், ஜீன் மாதர்சின் கணவரான பால் எட்வர்ட்சின் உடல் அங்கிருந்த பிரீசரில் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலுடன் ஒரு கடிதமும் கண்டெடுக்கப்பட்டது.  

அதில் என் மனைவி என்னை கொல்லவில்லை என்று எழுதப்பட்டிருந்தது. அது பால் எட்வர்சின் கையெழுத்து எனவும் அந்த கடிதம் கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் எழுதப்பட்டது என்பதையும் போலீசார் உறுதி செய்தனர். 

ஜீன் மாதர்ஸ் அவரது கணவரை கொலை செய்தாரா அல்லது வேறு யார் உதவியுடனும் இதை செய்தாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

ஜீன் மாதர்ஸ் கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 1 லட்சத்து 77 ஆயிரம் டாலர்களை அரசு சலுகையாக பெற்றிருக்கலாம். மேலும் பால் எட்வர்சின் சமூக பாதுகாப்பு மற்றும் முன்னாள் ராணுவ விவகார தொடர்பான காசோலைகளை வாங்கியிருக்கலாம் என உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.

பால் எட்வர்ட்ஸ் உடலுடன் கண்டுபிடிக்கப்பட்ட கடிதத்தில் எழுதப்பட்டிருந்த மற்றும் சில தகவல்களை பற்றி போலீசார் கூற மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thu, 19 Dec 2019 00:02:10 +0530

தொலைக்காட்சி தொடராகும் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு

தொலைக்காட்சி தொடராகும் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது வாழ்க்கை வரலாற்றை ‘நெஞ்சுக்கு நீதி’ எனும் தலைப்பில் ஏற்கனவே புத்தக வடிவில் வெளியிட்டுள்ளார். இதுவரை 6 பாகங்கள் வெளியாகியுள்ளது. குழந்தை பருவம் முதல் தனது அரசியல் வாழ்க்கை வரை தான் கடந்து வந்த பாதைகளை கருணாநிதி அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தொலைக்காட்சி தொடர் ஒளிபரப்பாக உள்ளது. ‘நெஞ்சுக்கு நீதி’ என பெயரிடப்பட்டுள்ள அந்த தொடர் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் இன்று முதல் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9.30 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.

Sun, 03 Nov 2019 00:17:27 +0530

ஐ.எஸ். அமைப்பின் தலைவன் பாக்தாதி மீதான தாக்குதல் வீடியோ - அமெரிக்கா வெளியிட்டது

ஐ.எஸ். அமைப்பின் தலைவன் பாக்தாதி மீதான தாக்குதல் வீடியோ - அமெரிக்கா வெளியிட்டது | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

அமெரிக்காவையே அலற வைத்தவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவன், அபுபக்கர் அல் பாக்தாதி (வயது 48). அதனால்தான் அவரை கொல்ல வேண்டும் அல்லது உயிரோடு பிடிக்க வேண்டும் என்று அமெரிக்கா குறி வைத்தது.

அவர் சிரியாவில் இத்லிப் நகருக்கு அருகே பாரிஷா என்ற கிராமத்தில் ஒரு வளாகத்தில் பதுங்கி இருப்பதை துப்பு அறிந்து கடந்த 26-ந் தேதி அமெரிக்க சிறப்பு படை சுற்றி வளைத்தது. தப்பிக்க ஒரு வழியும் இல்லை என்ற நிலையில் தன் உடலில் கட்டி வைத்திருந்த குண்டுகளை வெடிக்க வைத்து பாக்தாதி பலியானார்.

இந்த தாக்குதல் தொடர்பான வீடியோவை முதல்முறையாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் வெளியிட்டுள்ளது. பாக்தாதி பதுங்கி இருந்த வளாகத்தில் இருந்த பயங்கரவாதிகளை நோக்கி அமெரிக்க படைவீரர்கள் துப்பாக்கியால் சுடும் காட்சி வீடியோவில் உள்ளது. அமெரிக்க படையின் தாக்குதலால் நிலை குலைந்து போன பாக்தாதி, அந்த வளாகத்தில் உள்ள குகைப்பாதைக்குள் ஓட, அமெரிக்க படையில் இடம் பெற்றுள்ள நாய் துரத்த, அதன்பின்னர்தான் பாக்தாதி தனக்கு தானே முடிவை தேடி கொண்டார்.

அமெரிக்க படை நடத்திய தாக்குதல்களை தொடர்ந்து அந்த வளாகம் பெரிய பள்ளங்களுடன் வாகனங்கள் நிறுத்துமிடம் போல காட்சி அளிப்பதையும் வீடியோ காட்டுகிறது. இதுபற்றி அமெரிக்க மத்திய ராணுவ தளபதி ஜெனரல் கென்னத் மெக்கென்சி நிருபர்களிடம் பேசுகையில், பாக்தாதியுடன் குகையில் 3 குழந்தைகள் பலியானதாக வந்த தகவல் சரியானதல்ல, 2 குழந்தைகள் பலியாகி இருக்கின்றன என கூறினார்.

அந்த வளாகத்தில் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டிருந்த ‘பெல்ட்’ அணிந்திருந்த 4 பெண்கள், ஒரு ஆண் ஆகியோரும் பலியாகினர் என்றார்.

பாக்தாதி உயிர்ப்பலியால், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பழிவாங்கும் வகையில் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Fri, 01 Nov 2019 13:49:36 +0530

ஆழ்துளை கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை மீட்க கருவி கண்டுபிடித்தால் ரூ.5 லட்சம் பரிசு

ஆழ்துளை கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை மீட்க கருவி கண்டுபிடித்தால் ரூ.5 லட்சம் பரிசு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

திருச்சி அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் சுஜித் தவறி விழுந்து பலியானான். இந்த சம்பவம் கடுமையான சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைபோன்று மீண்டும் ஒரு துயர சம்பவம் நடைபெறாத வகையில் தமிழக அரசு பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தநிலையில் ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழும் குழந்தைகளை மீட்கும் கருவியை கண்டுபிடித்தால் ரூ.5 லட்சம் பரிசு வழங்க திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சந்தோஷ்பாபு தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் போட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்த தீபாவளி, இந்தியாவில் உள்ள அனைவருக்கும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு சோகமாக அமைந்துவிட்டது. அலட்சியத்தால் மீண்டும் விலைமதிப்பற்ற ஒரு உயிரை இழந்துவிட்டோம். இதுவே இந்தியாவில் உயிரிழந்த கடைசி குழந்தையாக இருக்கவேண்டும். இதனை தடுப்பதற்கு அவசரமாக நமக்கு தீர்வு தேவைப்படுகிறது. தகவல் தொழில்நுட்பத்துறை இதற்கு தீர்வு காண திட்டமிட்டுள்ளது.

ஆழ்துளை கிணறு, சுரங்கங்களில் விழும் குழந்தைகளை மீட்க உதவும் சிறந்த கருவியை உருவாக்கினால் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்க திட்டமிட்டுள்ளோம். தனிநபர், புதிய நிறுவனங்கள், கம்பெனிகள் என யார் உதவினாலும் பரிசுத் தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Wed, 30 Oct 2019 11:01:02 +0530

போதும் நிறுத்துங்க... அது சுர்ஜித்தே அல்ல..!

போதும் நிறுத்துங்க... அது சுர்ஜித்தே அல்ல..! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி 80 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. ஆனால் மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்துவிட்டன. சுஜித்தின் உடலுக்கு மருத்துவமனையில் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர் சுஜித்தின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. சுஜித்தின் மறைவுக்கு அப்பகுதி மக்கள் மட்டுமின்றி இந்திய மக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சுஜித்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ட்விட்டரில் ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன.

பலரும் சுஜித்தின் புகைப்படங்களை பகிர்ந்து அவனின் இறப்புக்காக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேவேளையில் சுஜித் என்று கூறப்பட்டு வேறு ஒரு சிறுவனின் புகைப்படமும், வீடியோவும் அதிகளவில் பகிரப்படுகின்றன. நடனம் ஆடும் யாரோ ஒரு சிறுவனின் வீடியோ சுர்ஜித் என சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. உண்மை தன்மை அறியாமல் பலரும் அந்த வீடியோவையும், புகைப்படத்தையும் சோகமாக பதிவிட்டும், பகிர்ந்து வருகின்றனர்.

Tue, 29 Oct 2019 23:34:41 +0530

(வீடியோ) அவனது உடல் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து எடுக்கப்படவே இல்லை. உள்ளே வைத்து கொங்ரீட் போட்டுவிட்டார்கள்!

(வீடியோ) அவனது உடல் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து எடுக்கப்படவே இல்லை. உள்ளே வைத்து கொங்ரீட் போட்டுவிட்டார்கள்! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

அவனது உடல் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து எடுக்கப்படவே இல்லை. உள்ளே வைத்து கொங்ரீட் போட்டுவிட்டார்கள்! - Director Gouthaman

Tue, 29 Oct 2019 20:59:56 +0530

தமிழ்நாடடில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த  குழந்தைகள் இதுவரை எத்தனை?

தமிழ்நாடடில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த  குழந்தைகள் இதுவரை எத்தனை? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

தமிழ்நாடடில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த  குழந்தைகள் இதுவரை எத்தனை?

Tue, 29 Oct 2019 20:42:46 +0530

அமெரிக்காவில் ஆழ்துளை மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த குழந்தை ஜெசிகா

அமெரிக்காவில் ஆழ்துளை மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த குழந்தை ஜெசிகா | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

உலகளவில் ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும் சம்பவம் அதிக அளவில் நடப்பது இந்தியாவில் தான். அமெரிக்காவிலும் இது போன்ற ஒரு சம்பவம் கடந்த 1987-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந் தேதி நடந்தது.

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள தனது பாட்டி வீட்டின் பின்புறம் ஜெசிகா என்ற 18 மாத குழந்தை விளையாடி கொண்டு இருந்தது. அப்போது குழந்தையின் தாய் ரீபா செஸ்சியும் உடன் இருந்தார். டெலிபோன் அழைப்பு வரவே அவர் வீட்டிற்குள் சென்றார். டெலிபோனில் பேசி விட்டு, வெளியே வந்து பார்த்த போது ஜெசிகா மாயமாகி இருந்தாள். இதனால் பதட்டம் அடைந்த ரீபா செஸ்சி, ஜெசிகாவை தேடி பார்த்தார். அப்போது அங்கு திறந்து இருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து ஜெசிகாவின் அழுகை சத்தம் கேட்டது. இதனால் பதட்டம் அடைந்த அவர், குழந்தையை மீட்க போலீசாருக்கு உடனே தகவல் கொடுத்தார். அதன் பின் சிறிது மணித்துளிகளில் அந்த குழந்தையை மீட்க அமெரிக்க அரசு ஒட்டுமொத்த அரசு துறைகளையும் களம் இறக்கியது.

ஜெசிகா விழுந்த ஆழ்துளை கிணறு 22 அடி ஆழமும், 8 அங்குலம் அகலமும் கொண்டது. வெறும் 22 அடி தான் என்றாலும், குழந்தையை மீட்க அவர்கள் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் தோல்வியில் தான் முடிவடைந்தன. நேரம் செல்ல, செல்ல பதட்டம் அதிகரித்தது. ஒட்டுமொத்த அமெரிக்கர்களும் ஜெசிகா உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்டு ரீகன், “ஒவ்வொரு அமெரிக்கர்களும் ஜெசிகாவின் பெற்றோர்கள் தான். அந்த குழந்தையை காப்போம்” என்றார்.

அதன்பின் ஜெசிகாவை பத்திரமாக மீட்க, அருகில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து அதன் வழியே மீட்பு குழுவினரை அனுப்பி மீட்க திட்டமிடப்பட்டது. ஆனால் அங்கு பாறை அதிக அளவில் இருந்ததால் தோண்டும் பணி பெரும் சவாலாக இருந்தது. 22 அடியை தோண்டுவதற்கு மட்டும் சுமார் 45 மணி நேரம் ஆனது. அதன்பின் ஜெசிகாவை மீட்பதற்கு மீட்பு படையினர் ஆழ்துளை கிணற்றுக்குள் சென்றனர். அங்கு படுகாயங்களுடன் மயக்க நிலையில் இருந்த ஜெசிகாவை அவர்கள் பத்திரமாக மீட்டனர். ஒட்டுமொத்தமாக இந்த மீட்பு பணி 58 மணி நேரம் நடந்தது.

மீட்புக்கு பின், ஜெசிகா பல மாதங்கள் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றாள். அவருக்கு 15 அறுவை சிகிச்சைகள் செய்து டாக்டர்கள் காப்பாற்றினர். ஆஸ்பத்திரியில் ஜெசிகா சிகிச்சை பெற்ற போது, அவர் நலமுடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்கர்கள் அதிக அளவில் பரிசு பொருட்களையும், வாழ்த்து செய்திகளையும் அவரது வீட்டிற்கே அனுப்பி வைத்து வாழ்த்தினர். மேலும் அறக்கட்டளை ஒன்று, நிதி வசூலும் செய்தது. ஒட்டுமொத்த அமெரிக்கர்களின் மனதிலும் இடம் பிடித்த ஜெசிகா, அமெரிக்காவின் குழந்தை என்று அழைக்கப்பட்டாள்.

ஜெசிகாவின் மீட்பு பணியினை அப்போது சி.என்.என். டி.வி. நேரடி ஒளிபரப்பு செய்தது. இந்த நிகழ்வு தான் இன்றளவும் அமெரிக்காவில் அதிக நேரம் நேரலை செய்யப்பட்ட நிகழ்ச்சி ஆகும். ஜெசிகா மீட்கப்பட்டபோது எடுத்த புகைப்படத்திற்கு 1988-ம் ஆண்டு மிகவும் உயரிய விருதான புலிட்சர் விருது வழங்கப்பட்டது.

1989-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜார்ஜ் எச்.டபிள்யு புஷ், ஜெசிகாவை வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருது வழங்கி பாராட்டினார். தற்போது ஜெசிகாவிற்கு 33 வயது ஆகிறது. ஒரு தொடக்க பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். ஜெசிகாவின் 25-வயதின்போது, அவருக்கு ஏற்கனவே அறக்கட்டளை வசூலித்த சுமார் ரூ.9 கோடி நிதி வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் இந்த ஒரு சம்பவம் தான், அதற்கு பின் அங்கு ஆழ்துளை கிணற்றில் எந்த குழந்தையும் இதுவரை விழவில்லை. அமெரிக்கர்கள் ஆழ்துளை கிணற்றை திறந்து வைத்தால் அதில் குழந்தைகள் விழுந்து விடும் என்று பாடம் கற்றுக்கொண்டார்கள். எனவே பயன்படாத ஆழ்துளை கிணறுகள் அனைத்தையும் இரும்பு மூடி போட்டு மூடி விட்டார்கள். அதாவது நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பது போல.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவங்கள் அரங்கேறி உள்ளது. தமிழகத்தில் மட்டும் 12 சம்பவங்கள் நிகழ்ந்து இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது அதுபற்றி அதிக அளவில் பேசுகிறோம். ஆனால் சிறிது நாட்களில் அதனை மறந்து விடுகிறோம். இதனை நமது ஞாபக மறதி என்பதா அல்லது நமக்கு பழகி போய் விட்டது என்று சொல்வதா?.

Tue, 29 Oct 2019 11:04:40 +0530

நீங்கள் உருவாக்கியதை நீங்களே கொன்றிருக்கிறீர்கள் - ஐ.எஸ். தலைவன் கொல்லப்பட்டது குறித்து ஈரான் கருத்து

நீங்கள் உருவாக்கியதை நீங்களே கொன்றிருக்கிறீர்கள் - ஐ.எஸ். தலைவன் கொல்லப்பட்டது குறித்து ஈரான் கருத்து | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றுதான் ஐ.எஸ் எனப்படும் (இஸ்லாமிக் ஸ்டேட்) பயங்கரவாத அமைப்பு. 

ஈராக் நாட்டில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு படிப்படியாக சிரியாவிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியது. தாங்கள் கைப்பற்றும் நகரங்களில் உள்ள கட்டளைக்கு அடிபணிய மறுப்பு தெரிவித்த பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். 

மேலும் அழகிய இளம்பெண்களை கடத்திச் சென்று தங்களது பாலியல் தேவைக்கும் பயங்கரவாதிகள் பயன்படுத்திக் கொண்டனர்.

சிரியாவின் மோசூல் நகரை தலைமையாக கொண்டு இஸ்லாமிய அரசை நிறுவி அதன் மன்னனாக அபுபக்கர் அல்-பக்தாதி தன்னை 29-6-2014 அன்று பிரகடனப்படுத்தி கொண்டான்.

இந்த பயங்கரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா, ரஷியா, ஈராக், சிரியா உள்பட பல நாடுகள் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களை நடத்தினர்.

இதற்கிடையில், பல ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சிரியாவின் இட்லிப் பகுதியில் அமெரிக்காவின் அதிரடிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஐ.எஸ். அமைப்பின் தலைவன் அபுபக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டுவிட்டதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

இந்நிலையில், ஐ.எஸ். தலைவனை அமெரிக்கப்படைகள் கொன்றுவிட்டதாக வெளியான தகவலுக்கு ஈரான் கருத்து தெரிவித்துள்ளது. 

அந்நாட்டின் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி முகமது ஜாவத் அசாரி இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ' ஐ.எஸ். அமைப்பின் தலைவன் அபுபக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டது ஒன்றும் மிகப்பெரிய விஷயம் இல்லை. நீங்கள் உருவாக்கியதை நீங்களே கொன்றிருக்கிறீர்கள்’ என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரான் அரசின் செய்திதொடர்பாளர் அலி ரபிய் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ' பக்தாதி கொல்லப்பட்டு விட்டாலும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கான பாதை இன்னும் அழிக்கப்படவில்லை. அல்கொய்தா அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகும் அந்த பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. 

அதே போல் தான் ஐ.எஸ். அமைப்பும். வெடி குண்டுகளாலும், ஆயுதங்களாலும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை ஒழிக்கமுடியாது. அந்த அமைப்பு இன்னும் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது’ என அவர் தெரிவித்தார்.

Mon, 28 Oct 2019 17:22:53 +0530

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் 25.10.2019 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ரத்ததான முகாம் நடக்க இருக்கிறது. துபாய் ரத்ததான மையத்தின் ஆதரவுடன் இந்த முகாம் நடக்கிறது. இந்த முகாம் துபாய் சலாஹுத்தீன் சாலையில் உள்ள அஸ்கான் ஹவுஸ் அருகில் நடக்கிறது. 

அமீரகத்தில் இந்த ஆண்டு சகிப்புத்தன்மைக்கான ஆண்டாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த ரத்ததான முகாம் நடத்தப்படுகிறது. 

ரத்ததான முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் அமீரக அடையாள அட்டையுடன் வரவேண்டும்.

Muduvai Hidayath

Thu, 24 Oct 2019 13:54:42 +0530

ஜஸ்டின் ட்ரூடோ: இரண்டாவது முறையாக கனடா பிரதமராகிறார்

ஜஸ்டின் ட்ரூடோ: இரண்டாவது முறையாக கனடா பிரதமராகிறார் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

கனடாவின் 43ஆவது மக்களவை பொதுத் தேர்தலின் முடிவுகள் வெளிவர தொடங்கிய நிலையில், அந்நாட்டின் தேசிய ஊடகமான சிபிசி ஊடகத்தின் கணிப்பின்படி அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரண்டாவது முறையாக பிரதமராக வெல்லக்கூடும் என்ற நிலையில், அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

லிப்ரல் கட்சியின் ஆதரவாளர்கள் இதனை விமரிசையாக கொண்டாட தொடங்கியுள்ளனர்.

நிலப்பரப்பில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடாக விளங்கும் கனடாவில் நடந்த மக்களவை தேர்தல் முடிவுகளை உலகம் உன்னிப்பாக கவனித்துவரும் வேளையில், மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ வென்றால் அது சிறுபான்மை ஆட்சியாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்தல் முடிவுகள், ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு சாதகமாக வருவதை அறிந்தவுடன், மத்திய கனடாவில் அமைந்திருக்கும் ரெஜினாவிலுள்ள கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் தலைமையகத்தில் இருந்த உற்சாகம் குறைய தொடங்கிவிட்டது.

இந்த நாடளுமன்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி அதிக இடங்களை வெல்லும் என்று சில நாட்களுக்கு முன்னர் கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பியர் ட்ரூடோ 1972ம் ஆண்டு குறைவான வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், இப்போதைய தேர்தல், அப்போதைய வெற்றியை ஒப்பிட்டு பார்க்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, கனடாவின் புதிய அரசை அமைக்கும் கட்சியை தேர்தெடுப்பதற்காக மக்கள் வாக்களித்த நிலையில், அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி முன்னிலை பெற்றுள்ளதாக ஆரம்ப முன்னணி நிலவரங்கள் காட்டின.

ஜஸ்டின் ட்ரூடோவின் லிப்ரல் கட்சியும், ஷீரின் கன்சர்வேட்டிவ் கட்சியும் சுமார் 34% வாக்குகளை பெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த ஆண்ட்ரூ ஷீரிடம் இருந்து கடும் போட்டியை ட்ரூடோ எதிர்கொண்டார்.

நியூ டெமாகிரட்டிக் கட்சியை சேர்ந்த ஜக்மித் சிங், பசுமை கட்சியை சேர்ந்த எலிசபெத் மே மற்றும் புளக் கியூபெக்வா கட்சியை சேர்ந்த கியூபெக் ஆகியோரும் இந்த தேர்தலில் வெல்ல போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில்தான் கனடாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பெண்கள் போட்டியிட்டனர்.

ட்ரூடோவின் லிபரல் கட்சி முன்னிலை பெற்றுள்ளதை தொடக்க முடிவுகள் வெளிப்படுத்தியுள்ள நிலையில், லிபரல் கட்சி ஆதரவாளர்கள் மோன்ரியாலில் வெற்றியை கொண்டாட தொடங்கியுள்ளனர்.

கனடா இதுவரை கண்டிராத மிக நெருக்கமான போட்டி ஏற்பட்டுள்ள இந்த தேர்தலில், லிபரல் அல்லது கன்சர்வேடிவ் கட்சியினர் யார் முன்னேறினாலும் அது ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

முன்னதாக, மற்ற நாடுகளை போன்று கனடிய மக்களும் அரசியல் சார்ந்த கொள்கைகளை அடிப்படையாக கொண்டு தேர்தலில் வாக்களித்தாலும், நாட்டின் முக்கிய பிரச்சனைகளுக்கு தெளிவான தீர்வை முன்வைக்கும் கட்சிக்காக தங்களது முடிவை மாற்றும் போக்கும் மக்களிடையே காணப்படுவதாக வல்லுநர்கள் தெரிவித்தனர்.

Tue, 22 Oct 2019 11:01:16 +0530

ஜப்பானை மிரட்டும் இரண்டு புதிய புயல்கள்

ஜப்பானை மிரட்டும் இரண்டு புதிய புயல்கள் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பசிபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல் ஜப்பான் நாட்டின் டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கி பேரழிவை ஏற்படுத்தியது. கடந்த வாரம் ஏற்பட்ட இந்த புயலால் ஜப்பான் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது மற்றும் சூறைக்காற்று சுழன்றடித்தது. 

மழை வெள்ளம் காரணமாக 140 இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. பல லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த இடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

ஹகிபிஸ் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி 78 பேர் உயிரிழந்தனர். மேலும் 395 பேர் படுகாயமடைந்தனர். இந்த புயல் காரணமாக 11 பேரை காணவில்லை. 

79,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. புயல் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் தற்போதும் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மேலும் இரு புயல்கள் ஜப்பான் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

‘நியோகுரி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இவ்வாண்டின் 20வது புயலாகும். இந்த புயல் டோக்கியோ நகரின் தெற்கு மற்றும் தென்மேற்கு கடற்கரை பகுதிகளில் நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 162 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 21வது புயலாக ‘புலாய்’ எனும் புயல் வரும் 26 ம் தேதி இரவு ஜப்பானின் தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் எனவும், அப்போது மணிக்கு 180 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

ஹபிகிஸ் புயல் ஏற்படுத்திய விளைவுகளையே இன்னும் சரிசெய்யாத நிலையில் மேலும் இரு புயல்கள் நெருங்கி வருவதால் ஜப்பான் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Tue, 22 Oct 2019 08:31:18 +0530

கனடா நாடாளுமன்ற தேர்தல் - ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பிரதமர் ஆவாரா?

கனடா நாடாளுமன்ற தேர்தல் - ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பிரதமர் ஆவாரா? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

கனடாவில் 338 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பதவியை தக்கவைத்துக்கொள்ள போட்டியிடுகிறார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆதரவை பெற்றவரான ஜஸ்டின் ட்ரூடோ ஆரம்ப காலத்தில் கனடா மக்களிடம் பெரும் செல்வாக்கை பெற்றிருந்தார்.ஆனால் தனியார் நிறுவனம் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க அவர் தடை விதித்தது மற்றும் இனவெறியை தூண்டும் வகையிலான அவரது பழைய புகைப்படங்கள் வெளியானது ஆகியவை அவரின் செல்வாக்கை சரிய செய்தது. இந்த 2 விவகாரங்களையும் முன்னிலைப்படுத்தி எதிர்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி தீவிர பிரசாரம் செய்ததால் ஜஸ்டின் ட்ரூடோ இந்த தேர்தலில் பின்னடைவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறாது என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பிரதமர் ஆவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tue, 22 Oct 2019 08:28:31 +0530

(படங்கள்) சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் சின்ன வீடு!

(படங்கள்) சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் சின்ன வீடு! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

தொலைக்காட்சி விளம்பரங்களில் நிமிடத்துக்கு நிமிடம் கலர்ஃபுல் ஆடையில், கவர்ந்திழுக்கும் பெண்களுடன் கலக்கல் நடனம் ஆடி ஸ்டார் ஆகி விட்டார் சரவணா ஸ்டோர் அருள். அதை விட இப்போது ஹாட் டாபிக் ஆகி இருக்கிறது திருநெல்வேலியில் அவரது சின்ன வீடு.

முன்பெல்லாம் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடிகைகள் நடித்து வந்தனர். ஆனால் சமீபகாலமாக இந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தின் தலைவர் சரவணனே நடிக்கத் தொடங்கினார். சரவணனுக்கு ஜோடியாக ஹன்சிகா, தமன்னா உள்ளிட்ட நடிகைகளும் நடித்தனர்.

ஆரம்பத்தில் சரவணன் நடித்த விளம்பரங்களுக்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களும் மீம்ஸ்களும் குவிந்தன. ஆனால் அவர் தனது முடிவிலிருந்து பின் வாங்காமல் தொடர்ந்து நடித்து வந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க விழாவிலும் முன்னணி நடிகர்களுடன் சரவணன் கலந்துகொண்டார். இதன்மூலம் அவருக்கு சினிமா ஆசை இருக்கிறது என்று பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது அவர் நாயகனாக நடிக்க முடிவெடுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக அவர் கதை கேட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறாராம். அவருக்கு பிடிக்கும் கதையில் 2020-ம் ஆண்டு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் சினிமா இண்டஸ்ட்ரிக்குள் எண்ட்ரி கொடுப்பதை அறித்த அஜித், விஜய், சூர்யா என முன்னணி நாயகர்கள் கலக்கத்தில் இருப்பது தனிக்கதை.

சென்னையில் அண்ணாச்சிக்கு பிரம்மாண்டமாய் பல துணிக்கடை மாளிகைகள் இருப்பதை போல பலகோடி ரூபாய் மதிப்பில் சில சொகுசு வீடுகளையும் கட்டியிருக்கிறார் அருள். அதில் தான் தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார் அவர். இவருக்கு திருமணாகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இருவருக்கு திருமணமும் முடிந்துவிட்டது.

இந்த நிலையில் தனது சொந்த ஊரான திருநெல்வேலி புறநகர் பகுதியில் பிரம்மாண்டமாய் சின்ன வீடு ஒன்றை கட்டி கிரஹப்பிரவேசம் செய்துள்ளார் அருள். ’லெஜெண்ட் சரவணன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த மாளிகையில் அத்தனை வசதிகளும் உள்ளன. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்கும் வகையில் மூன்றடுக்கு மாளிகையில் சமையல் அறையே ஆயிரம் கன சதுரடிக்கு மேல் அமைக்கப்பட்டுள்ளது. உணவருந்தும் அறையில் ஒரே நேரத்தில் ஐம்பதுக்கும் மேலானவர்கள் சாப்பிடும் வகையில் பிரம்மாண்ட டேபிள் விலை உயர்ந்த சேர்கள் போடப்பட்டுள்ளன.

இந்த வீட்டை பார்த்து உள்ளூர்வாசிகள் வாயடைத்துப்போய் கிடக்கிறார்கள். சென்னையில் வசிக்கும் அருள், எப்போதாவது தனது சொந்த ஊரான நெல்லைக்கு சென்றால் இங்கு ஓரிரு நாட்கள் தங்கி ஓய்வெடுக்க இந்த ‘சின்ன வீட்டை’ பிரம்மாண்டமாய் கட்டியுள்ளார்.

பின் குறிப்பு: அருள் அண்ணாச்சி நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு நெல்லை பகுதில் நடைபெற இருப்பதாக தகவல். ஆகையால் அவரது இந்த புதிய வீட்டில் ஷூட்டிங் நடத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இரட்டை இயக்குநர்களான ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். இதனால் தமன்னா, ஹம்சிகா மோத்வானி, சினேகா, ஸ்ரேயா என பல ஹீரோயின்கள் வயிற்றெரிச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது.

Sun, 20 Oct 2019 01:19:46 +0530

விவசாய கூட்டுறவு அபிவிருத்தி வலையமைப்பின் மூன்று நாள் மாநாடு நிறைவு

விவசாய கூட்டுறவு அபிவிருத்தி வலையமைப்பின் மூன்று நாள் மாநாடு நிறைவு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

இந்தியாவின் புது டில்லியில் இடம் பெற்ற விவசாய கூட்டுறவு அபிவிருத்தி வலையமைப்பின் மூன்று நாள் மாநாடும், இந்திய சர்வதேச விவசாய கண்காட்சியும் இன்றுடன் முடிவுற்றன. இதன் போது கூட்டுறுவு துறையின் வளர்ச்சிக்கு இலங்கை ஆற்றும் பங்களிப்புக்கு  சிறப்பு  சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் வர்த்தக அமைச்சர் கலாநிதி தான்சிங் ரவாட் இலங்கை இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சங்கத்தின் தலைவரும், ஆசிய பசுபிக் விவசாய கூட்டுறவு அபிவிருத்தி வலையமைப்பின் பிரதி தலைவருமான முஹம்மத் றியாஸ் இதனை இலங்கை சார்பில் பெற்றுக் கொண்டார்.

கடந்த 3 தினங்களாக இடம் பெற்ற மேற்படி மாநாட்டில் 51 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தமது நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும்  கூட்டுறவு அபிவிருத்தி தொடர்பிலான முன்னேற்றத்தை சமர்ப்பித்து அதன் மீதான விசேட உரைகளும் இடம் பெற்றன. இலங்கையில் இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சங்கம் ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில்  சர்வதேச ரீதியில் இதற்கான அங்கத்துவம் கிடைக்கப் பெற்றதுடன், இதன் அங்கத்துவத்தின் அடிப்படையில் இலங்கைக்கு கிடைத்த மிக முக்கிய பதவியான பிரதி தலைவர் கோப்யெஸ் தலைவர் முஹம்மத் றியாஸ் அவர்களின் தனிப்பட்ட முயற்சிகளிலும் ஒன்றாகவே நோக்கப்பட வேண்டும்.

இலங்கையில் குறிப்பாக இளைஞர்களின் திறமைகளை இனம் கண்டு அதற்கு களம் அமைத்து கொடுக்கும் ஆலோசனனையினை தற்போதைய கைத்தொழில், வணிகத் துறை மற்றும் கூட்டுறவுத் துறை அபிவிருத்தி அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களினால் முஹம்மத் றியாஸின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து மேற்படி இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு அபிவிருத்தி சங்கம் உதயமானது என்றால் அது மிகையாகாது.பல் வேறு சவால்களுக்கு மத்தியில் மேற்படி சங்கம் தமது தடத்தினை பதித்த போதும்,இடை நடுவில் இதனை செயற்பபாட்டினை செயலிழக்க செய்யும் தடைகளும் வெளிச்சக்திகளின் மூலம் வநத போதும்,இதற்கு சளைக்காமல் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலில் இந்த சங்கம் முன்னோக்கி சென்றதை பார்க்க முடிந்தது.

இதற்கு அப்பால் தேசிய ரீதியில் மாவட்ட அடிப்படையில் இளைஞர்களை கட்டடைமப்புக்குள் கொண்டுவந்து அவர்களைது திறமைகளையும், தேவைகளையும் இனம் கண்டு ஆரம்பகட்டமாக சில உதவிகள் வழங்கப்பட்டன. இருந்த போதும் நாளுக்கு நாள் அங்கத்தவர்களின் பெருக்கம் எல்லோரையும் திருப்த்தி படுத்த முடியாத நிலையில் ஒரு வலையமைப்பினை ஏற்படுத்தி பொருட்களாக மட்டுமல்லாது கற்றல் சார் நடவடிக்கைகளுக்கும் உதவும் ஒரு அமைப்பாக இளைளுர் வலுவூட்டல் கூட்டுறவு சங்கம்  தமது நடவடிக்கைகளுக்கான வரைபு ஒன்றினை தயாரித்தது. இந்த செயற்பாட்டினை ஆரம்பிக்க திட்டமிட்ட வேளை ஏப்ரல் சம்பவம் கால நீடிப்பினை உருவாக்கியது.இதனை எதிர்காலத்தில் கோப்யெஸ் முன்னெடுக்கும்.

இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சங்கத்தின் வெற்றிக்கு தலைவர் முஹம்மத் றியாஸ்  உள்ளிட்ட பணிப்பாளர்கள் ஆற்றிவரும் சேவை இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சங்கத்தின் அதீத வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பாகும்.

எதிர்கால இளைஞர்கள் நாட்டின் முதுசங்கள் என்பதற்கமைய இளைஞர்களை உரிய துறையில் பயணிக்க வைக்கும் ஒரு சமூக சேவையினை மேற்படி இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சங்கம் மேற்கொண்டுள்ளது. இதற்கு கிடைத்த வெற்றியாகவே இந்தியாவில் புது டில்லியில் இடம் பெற்ற விவசாய கூட்டுறவு  அபிவிருத்தி வலையமைப்பின் மாநாட்டில் கிடைத்த கௌரவமாகும்.

Mon, 14 Oct 2019 09:53:33 +0530

காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்?

காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் என பள்ளித்தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி குஜராத் கல்வி அதிகாரிகளைஅதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதுகுறித்து காந்திநகர் மாவட்ட கல்வி அதிகாரி பார்த் வதேர் கூறுகையில், 'குஜராத்தில் பள்ளி ஒன்றில் இண்டெர்னல் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் 9ஆம் வகுப்பிற்கு கொடுக்கப்பட்ட வினாத்தாளில் காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதேபோல, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வில், 'உங்கள் பகுதியில் மதுபானங்களின் விற்பனை அதிகரித்து வருவது குறித்து புகார் கடிதம் ஒன்றை மாவட்ட காவல்துறை மேலதிகாரிக்கு எழுதவும்' என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கை வந்ததும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். மாநில கல்வித் துறைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வினாத்தாளை பள்ளி நிர்வாகமே தயாரித்துள்ளது.' எனத் தெரிவித்தார்.

Mon, 14 Oct 2019 09:19:50 +0530

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை- நடிகை குஷ்பு

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை- நடிகை குஷ்பு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

தூத்துக்குடி விமான நிலையத்தில் நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கேள்வி குறியாக உள்ளது. இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அ.தி.மு.க. அரசு எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வரவில்லை. வரி வசூல் மூலம் பெறப்படும் நிதி எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பது தெரிய வில்லை.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வில்லை. மாறாக தமிழகத்தில் கடன் சுமைதான் அதிகரிக்கிறது. இதுகுறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏராளமாக நிறைவேற்றப்பட்டன. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா இருந்த போதிலும் சரி, தற்போதும் சரி எந்தவித மக்கள் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை.

நாங்குநேரியில் அதிகார பலம், பணப்பலத்தை வைத்து அ.தி.மு.க. வெற்றி பெற நினைக்கிறது. ஆனால் அது நடக்காது. நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கோட்டை. இங்கு காங்கிரஸ் நிச்சயமாக வெற்றி பெறும். மக்கள் கேள்வி கேட்கும் நிலைக்கு மாறியுள்ளனர். அவர்கள் தெளிவாக உள்ளனர். எனவே அ.தி.மு.க. வின் பணப்பலம் இங்கு வெற்றி பெறாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Mon, 14 Oct 2019 00:19:09 +0530

மோடியின் குடும்பத்தாரிடம் இருந்து 56,000 ரூபாய், செல்போன் கொள்ளை

மோடியின் குடும்பத்தாரிடம் இருந்து 56,000 ரூபாய், செல்போன் கொள்ளை | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பிரதமர் மோடியின் சகோதரர் மகளிடம் இருந்து 56 ரூபாய் பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறித்த கொள்ளையர்களில் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் மோடி இவர் குஜராத்தில் வசிக்கிறார். பிரகலாத் மோடியின், மகள் தமயந்தி, டெல்லியில், குஜராத் சமாஜ் பவனில் தங்குவதற்கு, ஒரு அறையை முன்பதிவு செய்திருந்தார். இவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் இருந்து விமானம் மூலம் நேற்று டெல்லி வந்திருந்தார். அங்கிருந்து குஜராத் சமாஜ் பவனுக்கு ஆட்டோவில் சென்றார்.

பின்னர், குஜராத் பவனை ஆட்டோ நெருங்கிய போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கண் இமைக்கும் நேரத்தில், தமயந்தியிடமிருந்து பர்சை பறித்துக் கொண்டு அவர்கள் தப்பிச் சென்றனர். இதனால், தமயந்தி அதிர்ச்சியடைந்தார். அந்தப் பர்சில் 56 ஆயிரம் ரொக்கம், கிரெடிட், டெபிட் கார்டுகள், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் முக்கியமான ஆவணங்கள் வைத்திருந்தார். மேலும், இந்த கொள்ளை சம்பவம் துணை நிலை ஆளுநர் மற்றும் முதல்வர் இல்லத்தின் அருகே நடைபெற்றது.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பர்சை திருடியதாக இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Sun, 13 Oct 2019 11:58:33 +0530

ரூ.25 லட்சம் இன்சூரன்ஸ் பணத்துக்காக 4 வயது மகளை கொன்ற தந்தை கைது

ரூ.25 லட்சம் இன்சூரன்ஸ் பணத்துக்காக 4 வயது மகளை கொன்ற தந்தை கைது | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

நேபாளம் நாட்டில் இரண்டாவது மாகாணத்துக்குட்பட்ட சிராஹா மாவட்டத்தை சேர்ந்த மவுலாபூர் நகராட்சி பகுதியில் உள்ள ஒரு குட்டையில் கடந்த செவ்வாய்க்கிழமை சுமார் 4 வயது மதிக்கத்தக்க சிறுமியின் பிரேதம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தபோது அந்த சிறுமியின் கழுத்தை யாரோ நெரித்துக் கொன்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக இறந்த சிறுமியின் தந்தையான ராம் கிஷோர் யாதவ் என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. 

குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட அவர் தனது 4 வயது மகள் லட்சுமியின் பெயரால் வங்கியில் இன்சூரன்ஸ் கணக்கு தொடங்கியுள்ளார். இந்த இன்சூரன்ஸ் கணக்குக்கான முதல் தவணையாக ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாயையும் செலுத்தினார்.

இன்சூரன்ஸ் செய்யப்பட்ட தேதியில் இருந்து ஒரு மாதத்துக்குள் இறந்துப் போனாலும் முழுத்தொகையான 25 லட்சம் ரூபாய் கிடைத்து விடும் என்பதால் அவரது மூளை அவசரகதியில் திட்டமிட்டது.

அதன்படி, இன்சூரன்ஸ் பணத்தை அடையும் நோக்கத்தில் பெற்ற மகள் என்றும் கருதாமல் லட்சுமியின் கழுத்தை நெரித்து ராம் கிஷோர் யாதவ் கொன்ற விபரத்தை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Sat, 06 Jul 2019 14:36:37 +0530

கலிபோர்னியாவில் கடும் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு

கலிபோர்னியாவில் கடும் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நேற்று இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் உள்ள ரிட்ஜ்கிரெஸ்ட் நகரின் அருகே மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 அலகாக பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின.

கலிபோர்னியாவில் நிலநடுக்கத்தால் சாலையில் ஏற்பட்ட விரிசல்

ரிட்ஜ்கிரெஸ்ட் நகரில் நேற்று முன்தினம் ஏற்கனவே 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதிக்கு உள்ளாக்கி உள்ள நிலையில், நேற்று மீண்டும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நேற்று முன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்டபோதே, அதைவிட பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. 

Sat, 06 Jul 2019 14:34:48 +0530

ஜமால் கசோக்கி படுகொலையில் சவுதி மன்னருக்கு தொடர்பு - சர்வதேச விசாரணை நடத்த ஐ.நா.வுக்கு வலியுறுத்தல்

ஜமால் கசோக்கி படுகொலையில் சவுதி மன்னருக்கு தொடர்பு - சர்வதேச விசாரணை நடத்த ஐ.நா.வுக்கு வலியுறுத்தல் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி, சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். இதில் சவுதி அரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் சவுதி அரசு இதனை மறுக்கிறது.

இதற்கிடையே, ஜமால் கசோக்கியின் கொலை குறித்து விசாரணை நடத்த ஐ.நா சபையின் சிறப்பு அறிக்கையாளர் ஆக்னஸ் கலாமார்ட், கடந்த ஜனவரி மாதம் துருக்கி சென்றார். அங்கு அவர் பல்வேறு கட்ட விசாரணைகளை நடத்தி முதல் அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், “சவுதி அரேபிய அதிகாரிகளால் முன்னதாகவே திட்டமிடப்பட்டு மிருகத்தனமாக ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக குற்றவாளிகள் என்று 11 பேர் கைது செய்யப்பட்டு நடைபெற்று வரும் விசாரணையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை கவலை அளிப்பதாக உள்ளது. இது சம்பந்தப்பட்ட ஆதாரங்களை பெறுவதற்காக, சவுதி அரேபியாவிற்கு அதிகாரப்பூர்வமாக செல்ல அனுமதி கேட்டுள்ளேன். ஜமால் கசோக்கியின் கொலை தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கை வரும் ஜூன் மாதத்தில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிடம் சமர்ப்பிக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.

Thu, 20 Jun 2019 11:33:01 +0530

மொர்சியின் மரணம் குறித்து எகிப்திய அரசாங்கம் சர்வதேச நீதி மன்றில் விசாரிக்கப்படவேண்டும் - துருக்கிய ஜனாதிபதி

மொர்சியின் மரணம் குறித்து எகிப்திய அரசாங்கம் சர்வதேச நீதி மன்றில் விசாரிக்கப்படவேண்டும் - துருக்கிய ஜனாதிபதி | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

மொர்சியின் மரணம் குறித்ததான விசாரணைக்கு முழு எகிப்திய அரசாங்கமும் சர்வதேச நீதிமன்றில் விசாரணை செய்யப்படவேண்டும்என துருக்கிய ஜனாதிபதி தய்யிப் எர்துகான் தெரிவித்துள்ளார்.

தற்போது எகிப்தில் தடைசெய்யப்பட்டுள்ள முஸ்லீம் சகோதரத்துவக் அமைப்பின் முன்னணி உறுப்பினரான மொர்சி, உளவு குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணையில் கெய்ரோ நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை விசானைக்கு உட்படுத்தப்பட்டிருந்த சமயத்தில் மயங்கி விழுந்து பின்னர் உயிரிழந்தார்.

எகிப்தின் முதல் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான மொர்சி, தற்போதைய ஜனாதிபதி அப்தெல் பத்தா எல்-சிசியால் திட்டமிடப்பட்ட 2013 சதித்திட்டத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

"முகமது மோர்சி நீதிமன்ற அறையின் தரையில் சுமார் 20 நிமிடங்கள் விழுந்து கிடந்த போதிலும், அதிகாரிகள் அவருக்கு உதவவில்லை. இதனாலேயே மொர்சி இறக்கவில்லை, அவர் கொலை செய்யப்பட்டார்" என்று எர்துகான் புதன்கிழமை இஸ்தான்புல்லில் நடந்த தேர்தல் பேரணியில் ஆதரவாளர்களிடம் கருத்துரைத்தார்.

" மோர்சியின் மரணத்திற்காக எகிப்து அரசிடம் சர்வதேச நீதிமன்றங்களில் விசாரணை நடாத்த எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" என்று அவர் கூறினார், இந்த முடிவுக்கு ஆதரவளிக்கும்படி இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கும் அழைப்பு விடுத்தார்.

அத்தோடு, கடந்த செவ்வாய்க் கிழமை மோர்சியின் மரணம் குறித்து "முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு" ஐ.நா. அழைப்பு விடுத்திருந்ததுடன் பல விமர்சனங்களையும் எழுப்பியமை மொர்சியின் மரணத்தை "அரசியல்மயமாக்க" ஐ.நா நாடுவதாகவும் ஐ.நா.வின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

"காவலில் உள்ள எந்தவொரு நபரினது திடீர் மரணத்திற்கான காரணத்தை தெளிவுபடுத்துவதற்காக உடனடியானதும் பக்கச்சார்பற்றதும் முழுமையானதும் வெளிப்படையானதுமான விசாரணை சுயாதீன அமைப்பொன்றால் பெர்கொள்ளப்படவேண்டும்" என ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் செய்தித் தொடர்பாளர் ரூபர்ட் கொல்வில் கூறியிருந்தார்.

அத்தோடு துருக்கிய ஜனாதிபதி மொர்சியை ஒரு "தியாகி" என்று குறிப்பிட்டிருந்தார். அத்தோடு அவர் இயற்கை காரணங்களால் உயிரிழக்கவில்லை என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

Thu, 20 Jun 2019 11:28:35 +0530

கடல் அலையைப் போல மோதும் மேகக்கூட்டம் - பிரமிப்பூட்டும் காட்சி (வீடியோ)

கடல் அலையைப் போல மோதும் மேகக்கூட்டம் - பிரமிப்பூட்டும் காட்சி (வீடியோ) | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

வீடியோ >> https://www.facebook.com/watch/?v=2042991576009323

ஆஸ்திரேலியாவின் மிர்ட்டில்போர்ட் பகுதியில் கடந்த 11ம் தேதி பவுல் மெக்கல்லி என்பவர் வரப்பு அருகே வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். 

இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டிருந்த அவர் சற்று வானை பார்த்தார். அப்போது திடீரென ஆழ்கடல் வானில் கூடியது போன்ற அரிய காட்சி தென்பட்டுள்ளது. காரில் இருந்தபடியே இதனை புகைப்படம் எடுத்துள்ளார். 

வானில் மேகங்கள் தண்ணீரைப் போல காட்சி அளித்துள்ளது. இது குறித்து பவுல் கூறுகையில், ‘கடல் அலைகள் வேறு கோணத்தில் வானில் செல்வதுப் போன்று காட்சி அளித்தது. இதனை பார்த்து வியந்தேன். உடனடியாக காரை நிறுத்தி புகைப்படம் எடுத்தேன்’ என கூறியுள்ளார். 

இதேபோல் கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் மேகங்கள் கடல் அலையைப் போல் மோதுகின்ற அரிய வீடியோ தொகுப்பு வெளியிடப்பட்டது. இந்த மேகங்களின் தன்மை குறித்து 2017ம் ஆண்டு வரை கணிக்க முடியவில்லை.

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் புகைப்படம் காண்போரை பிரமிப்படையச் செய்துள்ளது. மேகக் கூட்டங்கள் வெவ்வேறு திசைகளில் இருந்து வரும்போது பல்வேறு கோணத்தில் பயணிக்கும். 

காற்றின் திசைக்கேற்ப மேகங்கள் கூடும். இதனால் இதுப்போன்று அரிய மற்றும் ஆச்சரியமூட்டும் வகையில் இயற்கையாக மேகங்கள் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Wed, 19 Jun 2019 15:01:29 +0530

ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

டோக்கியோ:

ஜப்பான் நாட்டின் யமகட்டாவின் சுரோகாவில் 6.8 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, யமகட்டா, நிகாட்டா மற்றும் இஷிகாவா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது 

மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.

Tue, 18 Jun 2019 21:34:59 +0530

மொர்சியின் மரணம் குறித்து பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமி

மொர்சியின் மரணம் குறித்து பாகிஸ்தான் ஜமாஅத்தே இஸ்லாமி | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பாகிஸ்தானின் இஸ்லாமிய-அரசியல் அமைப்பான  ஜமாஅத்தே இஸ்லாமி "முஸ்லிம் உலகம் ஒரு உண்மையான வீரனை இழந்துள்ளது!" என அறிக்கை வெளிடிட்டுள்ளது (Muslim world has lost a true hero).

"எகிப்து மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான தனது போராட்டத்தையும், பாலஸ்தீனத்திற்கு அவர் அளித்த ஆதரவையும் திரும்பப் பெறும்படி கட்டாயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அனைத்து அழுத்தங்களுக்கும் முகங்கொடுத்து மொர்சி கம்பீபமாக எதிர்த்து நின்றார்" என அவ் அமைப்பின் தலைமை செனட்டர் சிராஜ் உல் ஹக் ட்விட்டரில் பதிவு செய்த தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, செவ்வாய்க் கிழமை அக் கட்சி பாக்கிஸ்தான் முழுவதும் மொர்சியின் நினைவான பிரார்த்தனை நிகழ்வுகள் நடத்தவுள்ளதாகவும் அறிவித்தார்.

Tue, 18 Jun 2019 21:27:58 +0530

மொர்சியின் மரணம் குறித்து வெளிப்படையான விசாரணைக்கு ஐ.நா. அழைப்பு

மொர்சியின் மரணம் குறித்து வெளிப்படையான விசாரணைக்கு ஐ.நா. அழைப்பு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொர்சியின் திடீர் மரணம் குறித்ததான உடனடியானது பாரபட்சமற்றதும் முழுமையானதும் வெளிப்படையானதுமான விசாரணைக்கு ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.

மொர்சி சிறைக் காவலில் வைக்கப்பட்டிந்த நிலைமை தொடர்பாக எழுந்துள்ள சந்தேகத் கருத்துக்களைத் தொடர்ந்து, போதியளவான மருத்துவ பராமரிப்புக்கள், தனது வழக்கறிஞர் மற்றும் குடும்ப உறவினர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு என்பன மொர்சியின் 6 ஆண்டுகால சிறையில் சரியான முறையில் வழங்கப்படாமை குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.

இதன் காரணமாகவே குறித்த விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும் என மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் சார்பான பேச்சாளர் ருபர்ட் கொல்வில்லி நேற்று தெரிவித்துள்ளார்.

Tue, 18 Jun 2019 21:12:15 +0530

மொர்சிக்காக துருக்கியில் இறுதிப் பிரார்த்தனை நிகழ்வுகள்

மொர்சிக்காக துருக்கியில் இறுதிப் பிரார்த்தனை நிகழ்வுகள் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

கெய்ரோவில் திங்களன்று நடந்த நீதிமன்ற அமர்வின் போது திடீரென மரணமடைந்த எகிப்திய முன்னாள் ஜனாதிபதி மொஹமட் மொர்சிக்கு துருக்கி முழுவதும் பள்ளிவாசல்கள் இறுதி பிரார்த்தனை நடாத்தப்பட்டு வருகின்றன.

துருக்கியின் இஸ்லாமிய அமைப்பான டயியானட், நாட்டின் 81 மாகாணங்களில் இன்று நடைபெறவிருக்கும் தொடர் பிரார்த்தனைகளுக்கு மக்களை அழைப்பு விடுத்துள்ளது.

முஸ்லீம் சகோதரத்துவக் குழுவின் மூத்த உறுப்பினரான மொர்சி, 2012 ல் எகிப்தின் முதல் ஜனநாயக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார், இவரது வெற்றியானது நீண்டகால தலைவரான ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சியைக் கவிழ்த்த ஒரு மாபெரும் புரட்சியாகும். எகிப்தின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சரும் தற்போதைய ஜனாதிபதியுமான அப்தெல் பத்தா எல்-சிசி / தலைமையிலான இராணுவ சதித்திட்டத்தில் மொர்சியின் ஆட்சி ஜூலை 2013 இல் தூக்கி எறியப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மிகவும் குறுகிய காலமே மொர்சி பதவியில் இருந்தார்.

எனினும், துருக்கியின் ஆளும் ஏ.கே. கட்சி மொர்சியின் ஆட்சியினை ஆதரித்திருந்ததுடன் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் 2013 ல் எகிப்தில் அவ் அமைப்பின் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டதிலிருந்து துருக்கியில் தஞ்சம் அடைந்திருந்தனர்.

அரபு வசந்தம் தொடங்கிய காலப் பகுதியிலிருந்து துருக்கியில் வசித்து வரும் அரபு அதிருப்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மற்றும் சாதாரண மக்கள் மொர்சியின் பிரார்த்தனை நிகழ்வுகளில் பங்குபற்ற ஆர்வமாக வருகை தந்துள்ளனர்.

தலைநகர் அங்காராவில் உள்ள இஸ்தான்புல்லில் ஆயிரக்கணக்கானோர் பிரார்த்தனை நிகழ்வில் இணைந்துகொண்ட அதேவேளை, எகிப்திய தூதரகத்துக்கு அண்மையில் காணப்பட்ட வீதிகளில் சுமார் 500 பேர் போக்குவரத்தினை நிறுத்திய வண்ணம் பிரார்த்தனை நிகழ்வினை முன்னெடுத்துள்ளனர்.

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் இன்றைய நாளின் பிற்பகுதியில் இப் பிரார்த்தனை நிகழ்வுகளில் மனித உரிமைகள் அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் அரசியல் அதிருப்தியாளர்களுடன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொர்சியின் ஆதரவாளரான எர்டோகன் மொர்சியின் இறப்பு செய்தி அறிந்த சில பொழுதுகளில் மொர்சியைக் குறித்து "ஜனநாயகத்திற்கான தியாகி" என்று அழைத்திருந்தார்.

துருக்கியின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல்லில் ஒரு தொலைக்காட்சி உரையில் எர்டோகன் கூறுகையில், "மொர்சியை சிறையில் அடைத்து, மரணதண்டனை வழங்கப்போவதாக அச்சுறுத்தியதன் மூலம் அவரை கொலை செய்த கொடுங்கோலர்களை வரலாறு ஒருபோதும் மறக்காது” என தெரிவித்துள்ளார்.

Tue, 18 Jun 2019 20:39:34 +0530

மனைவியை துண்டு துண்டாக நறுக்கி வீசிவிட்டு நாடகமாடிய தமிழ்த் திரைப்பட இயக்குநர்

மனைவியை துண்டு துண்டாக நறுக்கி வீசிவிட்டு நாடகமாடிய தமிழ்த் திரைப்பட இயக்குநர் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

குப்பைக் கிடங்கில் துண்டு துண்டாக வீசிக் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணத்தில், அப்பெண்ணைக் கொலை செய்தவர் அவரது கணவரும் சினிமா இயக்குநருமான பாலகிருஷ்ணன் என்பது தெரிய வந்துள்ளது. இவர் ‘காதல் இலவசம்’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கிறார்.

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள குப்பைக் கிடங்கில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி ஒரு பெண்ணின் வலது கை மற்றும் 2 கால்கள் கண்டெடுக்கப்பட்டன. வேறு எந்த உடல் பாகங்களும் கிடைக்கவில்லை.

பெண்ணின் கையில் இருந்த டாட்டூவை வைத்து, அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பெண் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்பதும், திருமணமான இவர், கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இவரது கணவர் பாலகிருஷ்ணன், கடந்த 2010ஆம் ஆண்டு 'காதல் இலவசம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் மனைவி சந்தியா பெயரிலேயே தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அந்த படத்தை பாலகிருஷ்ணன் தயாரித்துள்ளார். முற்றிலும் புதுமுகங்களே நடித்திருந்த அப்படம் தியேட்டர்களில் ரிலீஸானதாகவே தகவல்கள் இல்லை.

இந்த படம் ஓடாத காரணத்தினால் வாய்ப்புகள் இல்லாமல், நண்பர்களின் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கணவன் மனைவி இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சமயத்தில் தமது மனைவி வேறு ஒரு நபருடன் பழகுவதை அறிந்த பாலகிருஷ்ணன், சென்னை ஜாபர்கான்பேட்டையில் வைத்து சந்தியாவை கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சந்தியாவை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை  பெருங்குடியில் வீசி எறிந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணனை கைது செய்த போலீசார், அவர் அளித்த தகவலின் பேரில் ஜாபர்கான்பேட்டை பகுதியில் காசி திரையரங்கம் அருகே, சந்தியாவின் மற்ற உடல் பாகங்களை தேடி வருகின்றனர்.

இந்த வழக்கில் பெண்ணின் ஒரு கை மற்றும் கால்கள் மட்டுமே கிடைத்த நிலையில் மிக சிறப்பாக செயல்பட்டு போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் துப்பு துலக்கியது எப்படி, பெண்ணை அடையாளம் கண்டது எப்படி என்கிற தகவலை விரைவில் வெளியிட உள்ளனர்.

Wed, 06 Feb 2019 11:00:16 +0530

பிறந்து 4 மாதமே ஆன குழந்தையை வைத்து ஆபத்தான வித்தை - ரஷிய தம்பதி கைது

பிறந்து 4 மாதமே ஆன குழந்தையை வைத்து ஆபத்தான வித்தை - ரஷிய தம்பதி கைது | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பிறந்து 4 மாதமே ஆன குழந்தையை வைத்து அபாயகரமான முறையில் வித்தை காட்டிய ரஷிய தம்பதியை மலேசிய பொலிஸார் கைது செய்தனர்.

ரஷியாவை சேர்ந்த ஒரு தம்பதி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை பொழுதுபோக்காக கொண்டுள்ளனர். இவர்களுக்கு 4 மாத பெண் குழந்தை உள்ளது. தற்போது இந்த தம்பதி தெற்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். பயண செலவிற்காக அவர்கள் தாங்கள் செல்லும் நாடுகளில் வித்தை காட்டி பணம் சேகரிக்கிறார்கள்.

அந்த வகையில் மலேசியா சென்ற ரஷிய தம்பதி தலைநகர் கோலாலம்பூரில் மக்கள் மத்தியில் வித்தை காட்டினர். அப்போது அந்த 4 மாத குழந்தையின் தந்தை குழந்தையை வைத்து அபாயகரமான முறையில் வித்தை காட்டினார்.

குழந்தையின் காலை பிடித்து தலைகீழாக சுற்றியும், குழந்தையை தலைக்கு மேல் வீசி ஏறிந்து கைகளால் பிடித்தும் வித்தை செய்ய, அருகில் உட்கார்ந்திருந்த தாய் கைதட்டி உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார். இதை ஒருவர் செல்போனில் படம் பிடித்து ‘பேஸ்புக்’கில் பதிவிட்டார்.

 இந்த வீடியோவை பார்த்த பொலிஸார் குழந்தையை வைத்து அபாயகரமான முறையில் வித்தை காட்டிய ரஷிய தம்பதியை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Wed, 06 Feb 2019 08:50:54 +0530

Loudspeaker | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பிரபலமானவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 09:37:22 +0530

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...