கேன்சரில் இருந்து மீண்டு... மறு ஜென்மம் எடுத்து வந்த "காதலர் தினம்" பட நடிகை!

கேன்சரில் இருந்து மீண்டு... மறு ஜென்மம் எடுத்து வந்த

கேன்சரில் இருந்து மீண்டு... மறு ஜென்மம் எடுத்து வந்த நடிகை சோனாலி பிந்திரே! இப்போது எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்கள்!

Thu, 09 Jan 2020 19:35:10 +0530

உருவகேலிக்காக மன்னிப்பு கேட்ட விஜய்

உருவகேலிக்காக மன்னிப்பு கேட்ட விஜய் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து திரைக்கு வந்துள்ள படம் பிகில். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாகவும், இந்துஜா, அமிர்தா, ரெபோ மோனிகா, வர்ஷா, இந்திரஜா உள்பட பலர் கால்பந்தாட்ட வீராங்கனைகளாகவும் நடித்து இருந்தனர். இவர்களில் இந்திரஜா, காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் ஆவார். உடல் பருமனாக இருக்கும் அவரை இந்த படத்தில் ஒரு காட்சியில் குண்டம்மா என்று சொல்லி திட்டி உசுப்பேற்றுவார் விஜய். உடல் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்த விஜய்க்கு சமூகவலைதளங்களில் எதிர்ப்புகள் எழுந்தன.

இந்த நிலையில், இந்திரஜா அளித்த ஒரு பேட்டியில், ''என்னை குண்டம்மா என்று சொல்வதற்கு விஜய் தயங்கினார். படத்தின் காட்சிக்கு அது தேவைப்பட்டதால் அப்படி நடித்தார். நானும் எந்தவித சங்கடமும் இல்லாமல் இயல்பாகவே நடித்தேன். ஆன போதும், அந்த காட்சியில் நடித்த பிறகு அவர் என்னிடம் வந்து குண்டம்மா என்று சொல்லி நடித்ததற்கு மன்னிப்பு கேட்டார்’ என தெரிவித்துள்ளார்.

Sun, 03 Nov 2019 00:15:42 +0530

ரூ 200 கோடி வசூல் எப்படி வந்தது! பட்டியலுடன் முழு விவரம் இதோ

ரூ 200 கோடி வசூல் எப்படி வந்தது! பட்டியலுடன் முழு விவரம் இதோ | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பிகில் தீபாவளி வெடி சத்தம் இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. உலகம் முழுக்க 4000 க்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது.

படம் ரிலீஸாகி 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்று படம் ரூ 200 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியானது. இது குறித்த ஸ்பெஷல் டிவிட்டர் டேக்கும் இடம் பெற்றது.

பல இடங்களில் இன்னும் வசூல் அதிகமாகியுள்ள நிலையில் இது குறித்த வசூல் விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

  • தமிழ்நாடு - ரூ 90 கோடி
  • ஆந்திரா / தெலுங்கானா - ரூ 14.40 கோடி
  • கர்நாடகா - ரூ 14.25 கோடி
  • கேரளா - ரூ 13.30 கோடி
  • வட இந்தியா - ரூ 3.50 கோடி
  • இந்தியா முழுக்க - ரூ 135.45 கோடி
  • ஓவர் சீஸ் - ரூ 65.95 கோடி

உலகம் முழுக்க - ரூ 201.40 கோடி

Thu, 31 Oct 2019 12:18:33 +0530

மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வில்லன் நடிகர்

மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வில்லன் நடிகர் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கிய இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

விஜய்யுடன் பிரபல வில்லன் நடிகர் தீனாவும் பிகில் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் விஜய்யின் ‘தளபதி 64’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்க இருக்கிறது.

Thu, 31 Oct 2019 11:43:14 +0530

சைலண்டாக பிகிலுக்கு டஃப் கொடுக்கும் “கைதி” - நாளுக்குநாள் அதிகரிக்கும் வசூல்!

சைலண்டாக பிகிலுக்கு டஃப் கொடுக்கும் “கைதி” - நாளுக்குநாள் அதிகரிக்கும் வசூல்! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் உருவானபடம் "கைதி". முழுக்க முழுக்க இரவிலேயே நடக்கும் கதை, ஹீரோயின், பாடல்கள் இல்லாத படம் என எக்கச்சக்க ஹைலைட்களுடன் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த இந்தப் படம், விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

எனினும் பெரும்பாலான திரையரங்குகளை பிகில் ஆக்கிரமித்ததால், கைதிக்கு குறைவான ஸ்கிரீன்களே கிடைத்தன. எனினும், படத்திற்கு கிடைத்த பாஸிட்டிவ் விமர்சனங்கள் மற்றும் ரசிகர்களின் வரவேற்பால் மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகள் உட்பட பல திரையரங்குகளில் கொஞ்சம் கொஞ்சமாக 'கைதி' படத்திற்கான ஸ்கிரீன்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் படத்தின் வசூலும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் 'கைதி' படம் இதுவரை ரூ. 15 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். சென்னையில் மட்டும் சுமார் ரூ.1.50 கோடியை வசூலித்துள்ளதாம். அதுமட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளதால், தற்போதே இந்தப் படம் லாபத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் அமெரிக்காவில் பிகிலையே ஓவர்டெக் செய்யும் அளவுக்கு 'கைதி' படத்தின் வசூல் வந்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'பிகில்' என்ற பிரமாண்ட படத்திற்கு போட்டியாக களமிறங்கி 'கைதி' படம் வசூலில் மிரட்டி வருவது தயாரிப்பு தரப்பை மட்டுமின்றி கார்த்தி ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளது.

Tue, 29 Oct 2019 20:38:48 +0530

Bigil Tamil Full Movie Leaked Online By Tamilrockers

Bigil Tamil Full Movie Leaked Online By Tamilrockers | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Kollywood Star Actor Vijay and Nayanthara‘s film Bigil has fallen victim to piracy on the day of its release itself.  It is reported that Vijay’s film Bigil has been leaked online by the pirated site Tamil Rockers.

A copy-wrint of Vjay’s film Bigil has been leaked online by TamilRockers. The impact of Bigil’s earnings can be seen from the film’s leaking. Let us know that Vijay’s film Bigil is going to knock on the box office on 25th October.

Actually, Vijay’s film Bigil has been released on 25th October i.e. on Friday only. Within 24 hours of the release, the film Bigil has been leaked online.

At the same time, the leaking of the film Bigil has also had a significant impact on the film’s earnings. People are downloading the movie Bigil from the TamilRockers website and watching it on their mobile and system.

Tamilrockers uploading the content on their website is generating more damage to the film as piracy print already available on these websites.

However, watching a movie by downloading the piracy content from websites like TamilRockers is an illegal activity according to the government.

As per the latest update ” Full Movie Leaked Online By Tamilrockers “ Producers Guild of India came up with a press release to avoid piracy. The press note goes as follows “Cabinet approves an amendment to Cinematograph Act, 1952. If anyone involved in this has to face 3 years jail term or fine of ₹ 10 lakh or both.”

Though this piracy problem cannot be resolved instantly, maybe to some extent we can witness favorable results with sort of action

Cast: Vijay, Nayanthara, and Jackie Shroff

Director: Atlee Kumar

Producer: Kalpathi Agaoram and Kalpathi

Musician: A R Rahman

According to some close source, Bigil full movie download will be available on Tamilrockers on the release date morning itself. The court has ordered not to leak the Bigil movie online in Tamilrockers, Tamilyogi, Tamilgun or similar other websites.

Bigil Download Tamilrockers, Tamilyogi, Tamilgun

If people find Bigil movie download leaked online anywhere, we request you to send an email to the anti-piracy team to remove that download link from the internet. The government of Tamilnadu already taking precautions to stop movies getting leaked and shared online which affects movie gross collection.

‘Bigil’ movie review: Vijay shines in a colourful sports drama that just grazes the goal post

Aren’t Deepavali gifts the flavour of the season? Most of these goodies come with colourful, jazzy packaging. There’s tonnes of packing material, bands and confetti even, but inside, after you struggle your way to unpack layer after layer, you find probably a diya that is the size of your palm.

The villains could have been written a lot better. As Sharma, Jackie Shroff is as uncharacteristic as his voice in the film, and one doesn’t know if he’s supposed to be the main villain, with Daniel Balaji lurking in the background. Had director Atlee got this match right, Bigil might have ended up being a far more entertaining sports drama.

The sad thing is Bigil movie download, Bigil tamilrockers, Bigil full movie download tamilrockers, Bigil tamilyogi are currently trending in Google trends India. The movie is not even released in India while writing this article.

Fri, 25 Oct 2019 14:28:50 +0530

சூப்பர்ஹீரோவாக சிவகார்த்திகேயன் - வைரலாகும் ஹீரோ டீசர்

சூப்பர்ஹீரோவாக சிவகார்த்திகேயன் - வைரலாகும் ஹீரோ டீசர் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், இவானா நாயகிகளாக நடிக்க, அர்ஜூன், ரோபோ சங்கர், பிரேம் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. பாலிவுட் நடிகர் சல்மான் கான் இப்படத்தின் டீசரை வெளியிட்டார். இதில் இடம்பெற்றுள்ள ‘நம்ம கல்வி முறைல எல்லாரும் படிக்க முடியும், ஆனா எல்லாராலையும் சாதிக்க முடியாது’ போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சூப்பர்ஹீரோ கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா, கே.ஜி.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் இணைந்த இந்த படத்தை தயாரிக்கின்றனர். 

Thu, 24 Oct 2019 14:17:13 +0530

பிகில் படத்துக்கு தடையில்லை!

பிகில் படத்துக்கு தடையில்லை! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

விஜய், நயன்தாரா உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் “பிகில்”. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் கதை தன்னுடையது என்று சென்னை ஐகோர்ட்டில் அம்ஜத் மீரான் என்ற இயக்குனர் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு மனுவில், பிரேசில் என்ற தலைப்பில் கால்பந்து விளையாட்டு தொடர்பான கதை ஒன்றை எழுதினேன். இந்த கதையை பயன்படுத்தி திரைப்படமும் எடுத்தேன். இந்த நிலையில் என் கதையை பயன்படுத்தி இயக்குனர் அட்லி “பிகில்” படத்தை எடுத்துள்ளார். கதையை ஆராய வக்கீல்கள் குழுவை அமைக்கவேண்டும்.

என் கதையை பயன்படுத்திய அட்லி மற்றும் தயாரிப்பு நிறுவனம் ரூ.10 லட்சம் எனக்கு தர உத்தரவிட வேண்டும். இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவில் பேனாவினால் திருத்தம் செய்யப்பட்டிருந்தது. இதை சுட்டிக்காட்டிய நீதிபதி, மனுவை டைப் செய்து தாக்கல் செய்ய வேண்டும். 

பேனாவினால் எழுதப்பட்ட, திருத்தப்பட்ட மனுவை ஏற்க முடியாது. எனவே புது மனுவை தாக்கல் செய்ய மனுதாரர் வக்கீலுக்கு உத்தரவிட்டார். அதற்கு மனுதாரர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால், விசாரணையை வருகிற நவம்பர் 5-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அதனால் நாளை வெளியாக உள்ள இந்த “பிகில்” படத்துக்கு சிக்கல் எதுவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Thu, 24 Oct 2019 14:15:07 +0530

தென்னிந்திய நடிகர்களை புறக்கணிப்பதா?- பிரதமர் மோடி மீது குஷ்பு பாய்ச்சல்

தென்னிந்திய நடிகர்களை புறக்கணிப்பதா?- பிரதமர் மோடி மீது குஷ்பு பாய்ச்சல் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்தி நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குனர்கள் இணைந்து மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு கொண்டாட்டத்தில் காந்திஜிக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியின் போது, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு 100 வினாடி கலாச்சார வீடியோ ஒன்றை பிரதமர் வெளியிட்டார். இந்த விழாவில் ஷாரூக் கான், அமீர்கான், சோனம் கபூர், கங்கணா ரணாவத், இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி, தயாரிப்பாளர் ஏக்தா கபூர், ரகுல் பிரீத்தி சிங், ஜாக்குலின், தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அனைவருமே பிரதமர் மோடியுடன் படங்கள் எடுத்துக்கொண்டனர். இவை சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்த நிகழ்ச்சியில் எந்த ஒரு தென்னிந்திய நடிகரும் கலந்து கொள்ளவில்லை. இதற்கு ராம்சரணின் மனைவி உபாசனா தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். அவரை தொடர்ந்து குஷ்பு தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்திய சினிமாவின் சார்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அனைவருக்கும் என் வணக்கங்கள். ஆனால், பிரதமருக்கு ஒன்று நினைவூட்ட விரும்புகிறேன். இந்தி திரைப்படங்கள் மட்டுமே நமது தேசத்தின் பொருளாதாரத்துக்கு பங்காற்றவில்லை.

நம் தேசத்தின் பிரதிநிதியாக இல்லை. தென்னிந்திய சினிமாதான் மிகப்பெரிய பங்களிக்கிறது. தென்னிந்திய சினிமாதான் நமது தேசத்துக்கு தேசிய அளவில் பிரதிநிதியாக இருக்கிறது. சிறந்த திறமைகள் எல்லாம் தென்னிந்தியாவில்தான் உள்ளன.

மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்கள் தென்னிந்தியாவில் இருந்துதான் வருகிறார்கள். இந்தியாவின் சிறந்த நடிகர்கள் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள்தான். சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் தென்னிந்தியர்கள்தான். பிறகு ஏன் தென்னிந்திய சினிமாவிலிருந்து யாரும் அழைக்கப்படவில்லை. ஏன் இந்த பாரபட்சம்?

தென்னிந்திய சினிமாவை நமது தேசத்தின் பெருமையாக உயர்த்திய எனது முன்னோடிகளும், ஆசான்களும் அழைக்கப்பட்டு, இதே மரியாதை காட்டப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் என்று நான் நினைக்கிறேன். பிரதமர் இந்த வி‌ஷயத்தைக் கவனிப்பார் என்று எதிர் பார்க்கிறேன்.

இவ்வாறு குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Tue, 22 Oct 2019 16:00:24 +0530

'பிகில்' படம் வெளியாவதில் வந்த புதிய சிக்கல்!

'பிகில்' படம் வெளியாவதில் வந்த புதிய சிக்கல்! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

'பிகில்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், அடுக்கடுக்காக பல பிரச்சனைகள் தலை தூக்கி வருகிறது.

அதில் ஒன்று தான், 'பிகில்' படத்தின் கதை தன்னுடையது என, துணை இயக்குனர் செல்வா, வழக்கு தொடர்ந்தது. இவர் ஏற்கனவே தொடர்ந்த வழக்கை, கீழமை நீதி மன்றம் நிராகரித்தால், தகுந்த ஆதாரங்களோடு, செல்வா, உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், கே.பி.செல்வா, உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த நீதி மன்றம், செல்வா 'பிகில்' காப்புரிமை கூறி வழக்கு தொடரலாம் என அனுமதி அளித்துள்ளது. மேலும் கீழமை நீதி மன்றத்தின் தீர்ப்பு செல்லாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

'பிகில்' படம் வெளியாக ஒரு சில நாட்களே உள்ள நிலையில், செல்வா இந்த படத்தின் கதைக்கு காப்புரிமை கேட்டு வழக்கு தொடர்ந்தால். பிகில் படம் ரிலீஸ் ஆவதில் மீண்டும் புதிய சிக்கல் ஏற்படுவது உறுதி. எனவே தற்போது பிகில் திரைப்படம் வெளியாவதில் பிரச்சனை எழுந்துள்ளது.

துணை இயக்குனர் செல்வாவிற்கு ஆதரவாக உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது, படக்குழுவினரை மட்டும் இன்றி, ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tue, 22 Oct 2019 15:19:38 +0530

பிகில் படத்தின் உண்மையான வியாபாரம் என்ன?

பிகில் படத்தின் உண்மையான வியாபாரம் என்ன? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பிகில் (Bigil (மொழிபெயர். Whistle) என்பது 2019 ஆம் ஆண்டில் வெளியாகவுள்ள தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படமானது விளையாட்டினை அடிப்படையாகக் கொண்டும் எடுக்கப்பட்டுள்ளது. இதனை அட்லீ இயக்கியுள்ளார். கல்பாத்தி எஸ். அகோரம் மற்றும் ஏ. ஜி. எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஜய் மற்றும் நயன்தாரா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். சூன் 22, 2019 இல் இதன் தலைப்பு வெளியானது.

Mon, 21 Oct 2019 15:15:42 +0530

(வீடியோ) தன்னைவிட அதிக வயது உள்ள பெண் போலீஸிடம் காதலை சொல்லி கெஞ்சிய 19 வயது இளைஞர் - பின் நடந்த விபரீதம்!

(வீடியோ) தன்னைவிட அதிக வயது உள்ள பெண் போலீஸிடம் காதலை சொல்லி கெஞ்சிய 19 வயது இளைஞர் - பின் நடந்த விபரீதம்! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பிராங்க் ஷோ எனப்படும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் பிரபலம் பல  யூடியூப் சானல்களில்  பிராங்க் செய்து அட்டகாசமாக செய்துவருகிறார்கள்.அந்த வகையில் தெலுங்கில் யூடியூப் சேனல் ஒன்றில் இளைஞர் ஒருவர் பணியில் இருந்த பெண் காவலரிடம் சென்று  ஐலவ்யூ சொல்ல அதற்க்கு உன்னோட  வயது என்ன என்னோட வயது என்ன எதற்கு பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்கானு கடைசி வரை வாதாடி அந்த பெண் காவலர் ஆத்திரமடைந்து  ஸ்டேஷனுக்கு போகலாம் வா, என்று கூப்பிட அதற்கு அந்த இளைஞர் தான் ஒரு யூடியூபர் என்றும், உங்களது சகோதரி ஒருவர்தான் இவ்வாறு செய்ய சொன்னார் என்றும் கூறுகிறார்.

அதைக்கேட்டும் அவருக்கு ஆத்திரம் அடங்கவில்லை. கெட்ட,கெட்ட வார்த்தைகளில் அவரை திட்டுகிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sun, 20 Oct 2019 19:12:53 +0530

அஜித் புதிய படத்தின் தலைப்பு வலிமை

அஜித் புதிய படத்தின் தலைப்பு வலிமை | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

’நேர்கொண்ட பார்வை' படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மீண்டும் அஜித் - எச்.வினோத் கூட்டணி இணைந்து படம் பண்ணுவதை தயாரிப்பாளர் போனி கபூர் உறுதி படுத்தினார். 

அதனை தொடர்ந்து நடிகர்கள் தேர்வு மும்முரமாகத் தொடங்கப்பட்டது. முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இப்படத்தின் படப்பூஜை இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றுள்ளது. 

மேலும் இந்த புதிய படத்திற்கு ‘வலிமை’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

Sat, 19 Oct 2019 09:00:00 +0530

சினிமாவில் 60 ஆண்டுகள் நிறைவு... கமல்ஹாசனுக்கு சிவாஜி கணேசன் இல்லத்தில் அறுசுவை விருந்து!

சினிமாவில் 60 ஆண்டுகள் நிறைவு... கமல்ஹாசனுக்கு சிவாஜி கணேசன் இல்லத்தில் அறுசுவை விருந்து! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

1960ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் தனது 60 ஆண்டு கால  பயணத்தை நிறைவு செய்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், சென்னை தி.நகரில் உள்ள சிவாஜிகணேசன் இல்லத்திற்கு கமல்ஹாசன் சென்றுள்ளார். அங்கு நடிகர் பிரபு சார்பில் கமல்ஹாசனுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதன்பின்னர் பிரபு குடும்பத்தாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்ட கமல்ஹாசன், அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்தும், வழக்கம் போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது என்றும், பிரபு வாசித்து அளித்த மடலின் வாசகங்கள்  கண்கலங்க வைத்தன என்றும் பதிவிட்டுள்ளார்.

Sat, 19 Oct 2019 01:35:44 +0530

ஹீரோ படத்தின் புதிய போஸ்டர்

ஹீரோ படத்தின் புதிய போஸ்டர் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஹீரோ’. இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேனுடன் இணைந்து அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷன், இவானா நாயகிகளாக நடிக்க, ரோபோ சங்கர், பிரேம் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். கே.ஜி.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் இந்த படத்தை தயாரிக்கின்றார். 

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Sat, 19 Oct 2019 01:24:14 +0530

15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்

15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

ரம்யா கிருஷ்ணன் 1983-ஆம் ஆண்டு வெளியான ’வெள்ளை மனசு’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 30 ஆண்டுகளாகத் திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன்  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2003-ம் ஆண்டு இயக்குனர் கிருஷ்ணா வம்சியை திருமணம் செய்து கொண்ட ரம்யா கிருஷ்ணன், திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் வெளியான பாகுபலி படத்தில் சிவகாமிதேவி வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார்.

தற்போது இவர் நடிக்க உள்ள அடுத்த படத்தை அவரது கணவர் கிருஷ்ணா வம்சி இயக்க உள்ளார். ஏற்கனவே கிருஷ்ணா வம்சி இயக்கத்தில் சந்திரலேகா(1998), ஸ்ரீ ஆஞ்சநேயம்(2004) ஆகிய படங்களில் நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன், தற்போது 15 ஆண்டுகள் கழித்து ’வந்தே மாதரம்’ படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Sat, 19 Oct 2019 01:21:49 +0530

'பிகில்' படத்தோட லாப நஷ்டக் கணக்கு தெரிஞ்சுக்கணுமா?...கொஞ்சம் இங்க வாங்க பாஸ்...

'பிகில்' படத்தோட லாப நஷ்டக் கணக்கு தெரிஞ்சுக்கணுமா?...கொஞ்சம் இங்க வாங்க பாஸ்... | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பிகில் படத்தின் பட்ஜெட் இயக்குநர் அட்லி சொன்னதை விட மிகவும் அதிகமாக ஆனதால் தயாரிப்பு நிறுவனத்துக்கு பல கோடிகள் நஷ்டம் வரும் என்று சொல்லப்பட்ட நிலையில், அப்படத்தின் மூலம் அவர்கள் 20 கோடிக்கும் மேல் லாபம் சம்பாதித்திருப்பதாக விநியோகஸ்தர் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் துவக்கத்திலிருந்தே பயங்கர ஆடம்பரமாக ஷங்கர் படம் போல் இஷ்டத்துக்கு அட்லி செலவழித்தார் என்று கூறப்பட்டது. இதற்கு முந்தைய படங்களில் சில கோடிகளை மட்டுமே இழந்து வந்த ஏ.ஜி.எஸ்.நிறுவனம் இப்படத்தில் மட்டும் சுமார் 20 கோடி வரை நஷ்டப்படும் என்று சொல்லப்பட்டது. இதற்கு ஆதாரமாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூட நிர்வாகத்தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி,’“படத்தின் கதையை அவர் சொன்னபோதே இதன் பிரமாண்டம் பற்றி என் அப்பா கல்பாத்தி அகோரம் புரிந்து கொண்டார். அப்போதே இது குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் அடங்காது என்று முடிவு செய்து விட்டோம். அதனால், எதிர்பார்த்த பட்ஜெட்டுக்கு மேல் போனபோது அதன் நியாயம் கருதி அதற்கு நாங்கள் உடன்பட்டோம்..!” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் அத்தனை வியாபார விபரங்கள் அத்தனையையும் புட்டுப்புட்டு வைத்திருக்கும் வட இந்திய இணையதளம் ஒன்று ‘பிகில்’படம் மூலம் ஏ.ஜி.எஸ் நிறுவனம் ரூ 20கோடி வரை லாபம் சம்பாதித்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. 

அதில் தியேட்டர் உரிமைகள் தமிழ்நாடு மட்டும் ...72 கோடி, ஆந்திரா...8கோடி,...கேரளா,கர்நாடகா ...14 கோடி,....வெளிநாட்டு உரிமைகள்....24 கோடி,...சாடிலைட் மற்றும் டிஜிடல் ரைட்ஸ்...50 கோடி,....மியூசிக் ரைட்ஸ்...2 கோடி, இந்தி டப்பிங் ரைட்ஸ்...28கோடி, படத்தில் இடம்பெறும் விளம்பரங்களுக்கான வருமானம் ...2கோடி என்று ரூ 200 கோடி வரை படம் சம்பாதித்துக்கொடுத்திருப்பதாகவும், படத்துக்கு விஜய் சம்பளமும் சேர்த்து 180 கோடிதான் செலவாகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. படம் ஹிட் ஆனால் இந்த நிலவரம் ஓ.கே. ஆனால் ‘சுறா’,’வில்லு’,’ஜில்லா’போல ஊத்திக்கொண்டால் ...மிகப்பெரிய தொகையாக காட்சி அளிக்கிறதே தமிழ் நாடு தியேட்டர் உரிமை, அவர்கள் எல்லாம் தயாரிப்பாளர் வீட்டு வாசலில் வந்து பிகில் ஊதுவார்கள்.

Mon, 14 Oct 2019 16:42:02 +0530

பிகில் டிரைலர் படைத்த சாதனை

பிகில் டிரைலர் படைத்த சாதனை | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

சர்கார் படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் அடுத்து தயாராகியுள்ள படம் பிகில். நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை, அட்லீ இயக்கியுள்ளார். தெறி, மெர்சல் படத்திற்கு பிறகு விஜய் - அட்லீ இணையும் 3வது படமான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தின் டிரைலர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது.

இந்த படத்தின் டிரைலர், தற்போது வரை 1.5 கோடி பார்வைகளை கடந்துள்ளது. டிரைலர் வந்து 15 மணி நேரங்களிலேயே 15 லட்சம் லைக்குகள் பெற்றது.

இது அஜித்தின் விஸ்வாசம் பட டிரைலர் மொத்தம் பெற்றுள்ள லைக்குகளை விட அதிகம். பிகில் டிரைலர் செய்துள்ள இந்த சாதனையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் தென்னிந்திய மொழி படங்களில் பிகில் படம் தான் அதிக லைக்குகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Mon, 14 Oct 2019 00:31:09 +0530

ரஜினியை தொடர்ந்து விஜய் படத்தை வெளியிடும் பிரபல நடிகர் யார் தெரியுமா?

ரஜினியை தொடர்ந்து விஜய் படத்தை வெளியிடும் பிரபல நடிகர் யார் தெரியுமா? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதுபோல், கேரளாவில் இப்படம் வசூலில் சாதனை படைத்தது. இப்படத்தை கேரளாவில் நடிகர் பிருத்வி ராஜ் வெளியிட்டிருந்தார்.

தற்போது இவர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிகில்’ படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார். இது கேரள விஜய் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் அதிகப்படியான திரையரங்களில் பிகில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பிகில் படத்தில் விஜய்யுடன், நயன்தாரா, கதிர், யோகிபாபு, ஜாக்கிஷெராப், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தீபாவளிக்கு இப்படம் வெளியாக இருக்கிறது.

Mon, 14 Oct 2019 00:25:44 +0530

பிகில் படத்தில் மூன்று விஜய்!?

பிகில் படத்தில் மூன்று விஜய்!? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பிகில் திரைப்படத்தில் விஜய்க்கு மூன்று வேடங்களா!?

Sat, 12 Oct 2019 23:22:31 +0530

இந்த விளையாட்டால தான் அடையாளமே மாறப்போது - யூடியூபில் டிரெண்டாகும் பிகில் டிரைலர்

இந்த விளையாட்டால தான் அடையாளமே மாறப்போது - யூடியூபில் டிரெண்டாகும் பிகில் டிரைலர் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

விஜய்  - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. இந்த படம், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

தீபாவளிக்கு படம் திரைக்கு வர உள்ள நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டது. யூடியூபில் வெளியான சில நிமிடங்களில் இந்த டிரைலர் வைரலானது. 

Sat, 12 Oct 2019 23:03:03 +0530

பேட்ட ரூ.100, விஸ்வாசம் 125 கோடி வசூல்... இதெல்லாம் அண்டப்புளுகு!! ஒப்பாரி வைக்கும் தியேட்டர் காரர்கள்...

பேட்ட ரூ.100, விஸ்வாசம் 125 கோடி வசூல்... இதெல்லாம் அண்டப்புளுகு!! ஒப்பாரி வைக்கும் தியேட்டர் காரர்கள்... | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பேட்ட 11வது நாளில்தான் 100 கோடி வசூலிக்கிறது, நாங்கள் இன்றே 125 கோடியைக் கடந்துவிட்டோம் என்று விஸ்வாசம் விநியோகஸ்தர் போட்டிப் போட்டுக்கொண்டு வசூல் விவரத்தை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை ஒரு படத்திற்கு என்ன வசூல் ஆனது என்று வெளிப்படை தன்மையுடன் தனிப்பட்ட தயாரிப்பாளரோ, விநியோகஸ்தர்களோ, புதிதாக தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளோ இதுவரை அறிவித்ததில்லை.

மூன்று நாட்களில் 100 கோடி வசூல் என விளம்பரப்படுத்துவார்கள், படம் தியேட்டரை விட்டு வெளியில் ஓடினாள் தான் தெரியும், ஒப்பாரி வைப்பார்கள் நடிகரின் அடுத்த படத்துக்கு போர்க்கொடி தூக்கி அந்த நடிகரின் வீட்டை முற்றுகையிடுவதாக காலம் காலமாக தமிழ் சினிமாவில் இப்படித்தான் நடந்து  வருகிறது.

இதுவரை, எந்த தயாரிப்பாளரும் வெளியிடும் வசூல் உண்மையானது என்று சொல்ல முடியாது.  இந்நிலையில் ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் இரண்டு படங்களின் வசூல் நிலவரம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் மோதல் நடந்து வருகிறது. 

இதுகுறித்து இரு படங்களின் தயாரிப்பாளர்களுமே  பதிலடி கொடுத்த சம்பவங்களும் அரங்கேறியது. இந்நிலையில், நேற்று பேட்ட படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் வெளிநாட்டு வினியோகஸ்தர் மாலிக் வெளிநாடுகளில் படம் 65 கோடி வசூலித்துள்ளது என்று  ஒரு வீடியோ வெளியிட்டனர்.

போதாத குறைக்கு, தியேட்டர் உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியம் பேட்ட படம்  வரும் ஞாயிறுக்குள் 100 கோடி  வசூல் சாதனை படைக்கும். தமிழ்நாட்டிலேயே மிகக் குறைந்த நாட்களில் ஒரு படம் 100 கோடி வசூலைக் கடப்பது இதுவே முதல் முறை என அடுத்த குண்டைப்போட்டார். அதுமட்டுமா, தமிழ்நாட்டில் எந்த ஒரு படமும் வெறும் 11 நாட்களில் 100 கோடி வசூலித்தது இல்லை எனக் கூறினார்.

அதாவது, விஸ்வாசம் இன்னும் தமிழகத்தில் 100 கோடி வசூலை கடக்கவில்லை என மறைமுகமாக  சொல்வதைப்போலவே இருந்தது.  ஆனால் இதற்கு முன்பே விஸ்வாசம் படத்தின் தமிழ்நாடு விநியோகஸ்தரான "கேஜேஆர் ஸ்டுடியோஸ்" விஸ்வாசம் படம் 125 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

இதெல்லாம் உண்மையா? என இரண்டு படத்தின் தியேட்டர் உரிமயாளர்களிடம் கேட்டால்  நமுட்டு சிரிப்புடன்  அதெல்லாம் சும்மா என சொல்கிறார்கள். சரி 11வது நாளில் பேட்ட படம்  100 கோடி வசூலிக்கும் என்று  கேட்டால் கைதட்டி பலமாக சிரிக்கிறார்கள்.  தமிழ்நாடு முழுவதும் இரண்டு படங்களும் திரையிட்ட தியேட்டர்களில் 50% இருக்கைகள் காலியாக உள்ளன. அப்புறம் எப்படி 100 கோடி? 

Sat, 19 Jan 2019 01:33:16 +0530

விஸ்வாசம் படமும் திருட்டுக்கதை!

விஸ்வாசம் படமும் திருட்டுக்கதை! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் திருட்டுகதை விவகாரம் தலைத்தூக்கி வருகிறது. சர்சார் மற்றும் 96 படங்கலும் இந்த பிரச்சனையில் சிக்கியது. தற்போது விஸ்வாசம் சிக்கியுள்ளது. 

அதாவது, 2007 ஆம் ஆண்டு வெளியான துளசி படத்தின் மையக்கருவும் விஸ்வாசம் படத்தின் மையக்கருவும் ஒன்றுதானாம். துளசி படத்தில் வெங்கடேஷ், நயன்தாரா ஆகியோர் நடித்திருந்தனர். 

10 ஆண்டு இடைவெளி இருப்பதால் திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்து இருக்கிறார்கள். மையக்கரு இரண்டு படங்களுக்கும் ஒன்றுதான். 

ஆனால் டைட்டிலில் கதையை எழுதியவர்களாக சிவா மற்றும் ஆதி நாராயணனின் என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தெலுங்கு படம் என்பதால் படத்தின் உரிமம் பெற்றுத்தான் படம் எடுத்தார்களா? என்ற கேள்வியும் உருவாகியுள்ளது.

Sun, 13 Jan 2019 10:46:36 +0530

தொடரும் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்... அப்துல் கலாம் ஆகப் போகிறார் அனில் கபூர்

தொடரும் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்... அப்துல் கலாம் ஆகப் போகிறார் அனில் கபூர் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறை ஆந்திராவைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர்கள் படமாக எடுக்கப்போவதாகத் தவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும் தொடர்ந்து வாழ்க்கை வரலாறு படங்கள் வெளியாகிவருகின்றன. சில்க் ஸ்மிதா, சாவித்திரி, கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் டோனி, சச்சின் தெண்டுல்கர், குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படங்கள் ஏற்கனவே வெளிவந்து கவனம் ஈர்த்தன. வாழ்க்கை வரலாறு படங்களுக்குக் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த ஆண்டு மட்டும் ஏராளமான வாழ்க்கை வரலாறு படங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகின. 

மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர்கள் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி ஆகியோரின் படங்கள் ஏற்கனவே உருவாகிவருகின்றன. இதேபோல மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின்  வாழ்க்கை வரலாறும் படமாக உருவாகிவருகிறது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறையும் படமாக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.

கட்சித் தலைவர்களைத் தாண்டி விளையாட்டுப் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறும் திரைப்படங்களாக எடுக்க பலத்த போட்டி நிலவிவருகிறது. பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், பிவி சிந்து, துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ் ஆகியோரின் வாழ்க்கையும் படமாக ஆக இருக்கின்றன. விஞ்ஞானி நம்பிநாராயணன் வாழ்க்கை திரைப்படமாகி வருகிறது. இதில் மாதவன் நடிக்கிறார். 

தொடர்ச்சியாக வாழ்க்கை வரலாறு படங்கள் உருவாகிவரும் வேளையில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறும் படமாக எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை தெலுங்கு பட அதிபர்கள் அனில் சுன்கரா, அபிஷேக் அகர்வால் ஆகியோர் தயாரிக்க இருப்பதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் அப்துல் கலாம் வேடத்தில் நடிப்பதற்காக இந்தி நடிகர் அனில்கபூருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும் தெரிகிறது. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க அவரது குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றார்களா என்ற தகவல் தெரியவில்லை. தற்போது படம் பற்றிய தகவல் மட்டுமே கசிந்துள்ளன.

Fri, 28 Dec 2018 10:13:44 +0530

சர்ச்சைக்கு நடுவே அடுத்த போஸ்டரை வெளியிட்ட மஹா படக்குழு

சர்ச்சைக்கு நடுவே அடுத்த போஸ்டரை வெளியிட்ட மஹா படக்குழு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

ஹன்சிகா தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ‘மஹா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். யு.ஆர்.ஜமீல் இயக்கும் இந்த படத்தின் இரு போஸ்டர்களை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

அதில் ஒரு போஸ்டரில் ஹன்சிகா புகைப்பிடிக்கும் தோற்றம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. சில சாமியார்களுடன் அமர்ந்து ருத்ராட்ச மாலை காவி உடையில் ஹன்சிகா கஞ்சா புகைக்கிறார். பின்னணியில் காசி கோவில் உள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. 

இதையடுத்து ஹன்சிகா மற்றும் படத்தின் இயக்குநர் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த போஸ்டரின் பின்னணியில் மசூதி இருக்கும்படியும், ஹன்சிகா தொழுவது போலவும், பின்னால் நிழல் உருவத்தில் துப்பாக்கியுடன் இருப்பது போன்றும் காட்சி உள்ளது. இந்த புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Wed, 26 Dec 2018 13:51:57 +0530

அதிர்ச்சி! - ரஜினியின் பேட்ட ரிலீஸ் எப்போது தெரியுமா??

அதிர்ச்சி! - ரஜினியின் பேட்ட ரிலீஸ் எப்போது தெரியுமா?? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படம் வருகிற பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது.

பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி, குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

சமீபத்தில் வெளியான பாடல் மற்றும் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் வருகிற 28-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இதற்கிடையே படத்தின் சர்வதேச திரையீட்டு உரிமையை டத்தோ மாலிக்கின் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்பரே‌ஷன் நிறுவனம் வாங்கி இருக்கிறது. இதற்கு முன் இந்நிறுவனம் ’கபாலி’, ’தெறி’, ‘பிச்சைக்காரன்’, ‘திமிரு பிடிச்சவன்’, ’மொட்ட சிவா கெட்ட சிவா’, ’வி ஐ பி 2’, ’துப்பாக்கிமுனை’ உள்ளிட்ட படங்களை உலக நாடுகளில் வெளியிட்டது. 

பேட்ட படத்தின் ரிலீஸ் 10-ம் தேதியா? 14-ம் தேதியா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதில் சொல்லும் விதமாக வெளிநாடுகளில் பிரீமியர் காட்சிகள் 9-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 10-ம் தேதியே படம் வெளியாவது உறுதியாகி உள்ளது.

Wed, 26 Dec 2018 13:42:04 +0530

அஜித்தால் நிறைவேறிய நடிகை ஸ்ரீதேவியின் கடைசி ஆசை! கண்கலங்கிய போனிகபூர்!

அஜித்தால் நிறைவேறிய நடிகை ஸ்ரீதேவியின் கடைசி ஆசை! கண்கலங்கிய போனிகபூர்! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

தல அஜித் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக நடித்துள்ள விசுவாசம் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் மூலம் ரஜினியுடன் மோதுகிறார் அஜித் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான்.

இந்நிலையில் அஜித் அடுத்ததாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அஜித்தின் 59 ஆவது படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இது சம்பந்தமான புகைப்படங்கள் வெளியாகி இந்த தகவலை உறுதி செய்துள்ளது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர்ராஜா இசையமைக்க உள்ளதாவும், நிரவ்ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்றுவார் என்றும் முடிவாகியுள்ளது.

மேலும் இந்த படத்தில் அஜித் நடிக்க முக்கிய காரணம் மறைந்த நடிகை ஸ்ரீதேவி தானாம். ஸ்ரீதேவி நடித்த 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தில் அஜித் கெஸ்ட்ரோலில் நடித்தபோது, கண்டிப்பாக தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு தமிழ் படம் நீங்கள் நடிக்க வேண்டும்  என்று அவர் கேட்டுக்கொண்டதால். அந்த ஆசையை நிறைவேற்றும் விதமாக தற்போது அவருடைய கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் நடிக்க உள்ளார் அஜித். 

இப்படம் தல பிறந்தநாளான மே1ம்தேதி வெளியாகவுள்ளதாகவும் படத்தின் பூஜையில் போனி கபூர் தன்னுடைய மனைவி ஸ்ரீதேவியின் ஆசை நிறைவேறியதால் கண்கலங்கியதாகவும் கூறப்படுகிறது. 

Sat, 15 Dec 2018 13:16:52 +0530

மாமனாரை வைத்தே மருமகனின் ஆணவத்திற்கு முடிவு கட்டிய விஷ்ணு விஷால்!

மாமனாரை வைத்தே மருமகனின் ஆணவத்திற்கு முடிவு கட்டிய விஷ்ணு விஷால்! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

வரும் டிசம்பர் 21 ரிலீஸ் ஆகும்  படங்களை  தயாரிப்பாளர் சங்கம் ஆர்டராக வைத்திருந்தது.  தயாரிப்பாளர்கள் சங்கத்தின்  கட்டுப்பாட்டை  தூக்கிப்போட்டு மிதித்தார் தனுஷ். ஆமாம் தனது மாரி - 2 பெரிய அளப்பறையை ஏற்படுத்தியது. தனுஷுக்கு பணிந்த தட்டிக் கேட்கமுடியாமல் திணறிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், ‘டிசம்பர் 15, 21 அன்று யார் வேண்டுமானாலும் படங்களை ரிலீஸ் செய்து கொள்ளலாம் என அறிவிக்க வேண்டிய இயலாமை ஏற்பட்டது. 

இதனால் பயங்கர அப்சட் ஆன  விஷ்ணு விஷால் ‘தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அரசியல் நுழைந்துவிட்டது இதற்கு தலைவர் விஷால் காரணமல்லை’,  தமிழகத்தில் சிஸ்டம் சரி இல்லை, சிஸ்டம் கெட்டுப் போச்சு என சொல்பவர்கள் தங்களது குடும்பத்தில் உள்ளவர்களால் தயாரிப்பாளர்கள் சங்க  ஒழுங்கு முறையில் சிஸ்டம் குளறுபடியானது. இந்த குளறுபடி ஏற்படக் காரணமாக இருந்தது ரஜினியின் மருமகன் தனுஷ் நடித்துள்ள மாரி - 2. ரிலீஸ். தயாரிப்பாளர்  சங்கத்தை மதிக்காமல் அறிவித்தது. இதனால், விஷ்ணு விஷால்  நடித்துள்ள "சிலுக்குவார்பட்டி சிங்கம் " படத்திற்கு தியேட்டர் கிடைக்காமல் தடுமாறியதே அவரின் கடுமையான விமர்சனத்திற்கு காரணம்.

மாரி - 2, அடங்க மறு, சீதக்காதி, கனா படங்களுக்கு அடுத்ததாக தியேட்டர் ஒதுக்கீட்டில் சிலுக்குவார்பட்டி சிங்கம் தள்ளப்பட்டது. நெருக்கடியை சமாளிக்க படத்தை ரிலீஸ் செய்யும் பொறுப்பை வேறு வழியின்றி உதயநிதியின் ரெட்ஜியண்ட் நிறுவனத்திடம் விஷ்ணு விஷால் ஒப்படைத்திருக்கிறார்.  விஷ்ணு விஷால் செய்த இந்த வேலையால்   திரையரங்க உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரெட் ஜியண்ட் நிறுவனத்திற்கு என்று தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட திரையரங்குகள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இவர்கள் டிசம்பர் 21 ரிலீஸ் படங்களில் வசூல் முக்கியத்துவமிக்க படங்களைத் திரையிட ஒப்பந்தம் செய்துள்ளனர். சில தினங்களுக்கு முன் பேட்ட படத்தின் ஏழு ஏரியா உரிமையை ரெட்ஜியண்ட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது சன் பிக்சர்ஸ்.

விஸ்வாசம் படத்திற்கு மதுரை, சேலம் ஏரியாவில் உள்ள 70% தியேட்டர்களை அப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் ஒப்பந்தம் செய்து முடித்துவிட்டனர். இதே நிலை மற்ற ஏரியாக்களில் ஏற்பட்டுவிடக் கூடாது; அதற்கு பலம் பொருந்திய விநியோக தொடர்பு, தியேட்டர் தொடர்புள்ள குடும்ப உறவு நிறுவனமான உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்தது சன் பிக்சர்ஸ். அதனால் தான் கோவை தவிர்த்து அனைத்து விநியோகப் பகுதியிலும் பேட்ட படத்திற்கு தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்யும் பொறுப்பை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியது.

இந்நிலையில், சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் கோவை விநியோகஸ்தர் கந்தசாமி ஆர்ட்ஸ் தான், பேட்ட படத்தின் விநியோக உரிமையை வாங்கியுள்ளது. சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்திற்கு தியேட்டர் கொடுப்பவர்களுக்கே பொங்கலுக்கு "பேட்ட" படம் எனக் கூறி தியேட்டர்களுக்கு நெருக்கடியை கொடுக்கத் தொடங்கிவிட்டது ரெட் ஜியண்ட் நிறுவனம். இதனால் மாரி - 2 வெளியிடும் தியேட்டர்கள் விழி பிதுங்கி இருக்கிறது. அதுமட்டுமல்ல கனா, சீதக்காதி, அடங்க மறு படங்களால் தியேட்டர் கிடைக்காமல் தடுமாறிக்கொண்டிருந்த சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் தனுஷின் புண்ணியத்தால் அதிக தியேட்டரில் வெளியாகும் சூழல் உருவாகியுள்ளது. சங்கத்தின் சட்ட திட்டங்களை மதிக்காமல் ஆணவத்தில் ஆடிவந்த தனுஷின் மாரியை  மாமனார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தை வைத்தே  மர்கயா செய்துள்ளார் விஷ்ணு விஷால்.  

Tue, 11 Dec 2018 23:48:14 +0530

ஹன்ஷிகா மோத்வாணி கஞ்சா அடிக்கிறாக...ஐயா டாக்டர் அன்புமணி எங்கே இருக்கீக...?

ஹன்ஷிகா மோத்வாணி கஞ்சா அடிக்கிறாக...ஐயா டாக்டர் அன்புமணி எங்கே இருக்கீக...? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

’நடிகர்கள் ‘தம்’ அடிக்கும் போஸ்டர்களைப் பார்த்தவுடன் பொங்கி எழுந்துவரும் ஐயா அன்புமணி ராமதாஸ் அவர்கள் உடனே மேடைக்கு வரவும்’ என்று இன்று வலைதள வாசிகள் அவரை வலைவீசித் தேடிவருகின்றனர்.

காரணம் ‘மஹா’ படத்திற்காக நடிகை ஹன்ஷிகா மோத்வாணி ஹாய்யாக கஞ்சா புகைத்தபடி வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். ஜிப்ரான் இசையில் அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்கும் ‘மஹா’ என்னும் க்ரைம் த்ரில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

வாரணாசியின் பின்னணியில் சில சாமியார்கள் அமர்ந்திருக்க, காவி உடை மற்றும் ருத்திராட்ஷ மாலைகள் சகிதமாக ஒரு நாற்காலியில் தெனாவெட்டாக அமர்ந்தபடி கஞ்சா புகைத்துக்கொண்டிருக்கிறார் நடிகை ஹன்ஷிகா மோத்வாணி.

விஜய், அஜித், விஷால் போன்றவர்கள் இது போன்ற போஸ்டர்களை வெளியிடும்போது மூக்கு வியர்த்து சில நிமிடங்களிலேயே அறிக்கை வெளிக்கையிடும் அன்புமணி ராமதாஸ் இதுவரை மவுனம் காப்பதால் ‘ஐயா எங்கே இருக்கீக. ஹன்சிகா கஞ்சா அடிக்கிறாக. உடனே கொஞ்சம் தட்டிக்கேளுங்க’ என்ற கோரிக்கைகள் வலைதளங்களில் குவிந்து வருகின்றன.

Tue, 11 Dec 2018 15:18:19 +0530

கேரளாவில் விஜய்க்கு எதிராக வழக்கு..! குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறை!

கேரளாவில் விஜய்க்கு எதிராக வழக்கு..! குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறை! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான சர்கார் படம், சர்ச்சைகளை தாண்டி டாப் கியரில் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வந்தாலும். திடீர் திடீர் என சடன் பிரேக் போடா வைக்கிறது சிறு சிறு பிரச்சனைகள். 

ஏற்கனவே படத்தின் வெற்றியை உறுதி படுத்த சக்ஸஸ் பார்ட்டி வைத்து ஜாமாய்த்த படக்குழுவினர். இப்போது மேலும் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளனர். அதுவும் விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருக்கும் கேரளாவில்.

ஆம்... சர்கார் பட போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவிலும் தற்போது  வழக்கு பதியப்பட்டுள்ளது. 

ஏற்கனவே படத்தில் இடம்பெற்றிருக்கும் சில சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என அதிமுகவினர் பல ஆர்பாட்டம், பேனர் கிழிப்புகளில் ஈடுபட்ட நிலையில் இது சர்கார் படக்குழுவிக்கு மேலும் தலைவலியை கொடுத்துள்ளது.

கேரளாவில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா மாநிலம் திருச்சூரில் சுகாதாரத் துறையின் புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில், சர்கார் திரைப்பட விநியோக நிறுவனமான கோட்டயம் சயூஜியம் சினி ரிலீஸ், சன் பிக்சர்ஸ், திருச்சூர் ராம்தாஸ் திரையரங்க உரிமையாளர் ஆகியோர் அடுத்தடுத்து சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Wed, 14 Nov 2018 08:21:07 +0530

Loudspeaker | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பிரபலமானவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 09:30:16 +0530

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...