வேலியே பயிரை மேயலாமா? சட்டத்தை போதிக்கவேண்டிய அரசியல்வாதிகள் சட்டத்தை மீறலாமா?

வேலியே பயிரை மேயலாமா? சட்டத்தை போதிக்கவேண்டிய அரசியல்வாதிகள் சட்டத்தை மீறலாமா? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

ஒலிபெருக்கியை பாவித்து தேர்தளுக்கான பிரச்சார பொதுக்கூட்டம் நடாத்துவதற்காக பொலிசார் அனுமதி வழங்குகின்றபோது குறித்த நேரத்துக்குள் பொதுக் கூட்டத்தை முடிக்கவேண்டும் என்பது பொலிசாரின் அனுமதியில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

குறிப்பாக நல்லிரவு பன்னிரெண்டு மணியுடன் கூட்டத்தை முடிக்க வேண்டும் என்பது பொலிசாரின் கட்டளையாகும். அதற்கு உடன்பட்டவாறே நாங்கள் அனுமதியைப் பெற்று ஒலிபெருக்கி பாவித்து பொதுக்கூட்டத்தினை நடாத்துகின்றோம்.  

அவ்வாறு பெற்றுக்கொண்ட அனுமதிக்கு அமைவாக நல்லிரவு பன்னிரண்டு மணியுடன் பொதுக்கூட்டத்தினை நிறைவு செய்தால் மட்டுமே நாங்கள் சட்டத்தினை மதிப்பதாக அமைகின்றது.

ஆனால் பொலிசாரினால் அனுமதிக்கப்பட்ட நேரத்தினையும் தாண்டி தொடர்ந்து பொதுக்கூட்டம் நாடாத்துகின்றபோது நாங்கள் சட்டத்தினை மீறுகின்றோம். அவ்வாறு மீறுகின்றபோது ஒலிபெருக்கியை அணைக்குமாறு அறிவுறுத்துவது பொலிசாரின் கடமையாகும்.

அவ்வாறு பொலிசாரின் அறிவுத்தலை மீறினால் அவர்கள் ஒலிபெருக்கியின் வயர்களை கழட்டுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும்.

அவ்வாறு பொலிசார் ஒலிபெருக்கியின் வயரை துண்டிக்கும்வரைக்கும் இருந்துவிட்டு தங்களது அல்லக்கைகள் இருக்கின்றார்கள் என்ற தைரியத்தில் பொலிசாருடன் வாய்த்தர்க்கம் செய்து மக்கள் முன்பாக தங்களை வீரர்களாக காண்பிக்க முற்படுவதும் ஒரு அரசியல் நாடகமாகும்.  

அதாவது நாங்கள் சட்டத்தை மீறியவாறு பொலிசாருடன் வாய்த்தர்க்கம் செய்வது ஒன்றும் வீரமல்ல. அது மக்கள் முன்பாக காண்பிக்கும் நாடகமாகும். வீரமென்றால் எமது மக்களுக்கு எதிராக எத்தனையோ அசம்பாவிதங்கள் நடைபெற்றிருக்கின்றது. அப்போது கோழைகளாக இருந்துவிட்டு பொலிசாரிடம் வாய்த்தர்க்கம் செய்வது மட்டும் வீரமாகாது.

மக்களை வழிநடாத்துகின்ற நாங்கள் முதலில் சட்டத்தினை மதிக்க தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அதிகாரத்துக்கு வந்தபின்பு மக்களுக்கு சட்டத்தினை போதிக்க முடியும். இல்லாவிட்டால் அவ்வாறு அறிவுறுத்துவதற்கு எங்களுக்கு எந்த தகுதியும் இருக்காது.

Mon, 20 Jul 2020 01:23:20 +0530

ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை வைத்திருக்க முடியுமா?

ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை வைத்திருக்க முடியுமா? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

புதிய அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை. அதேநேரம் 19வது திருத்தத்தின்கீழ் ஜனாதிபதி எந்தவொரு அமைச்சையும் வைத்திருக்கமுடியாது; என்றொரு கருத்து நிலவிகிறது. இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சராக யாரையும் நியாமிக்காததது; எதிர்க்கட்சியினரால் கேள்விக்குட்படுத்தப்படுகின்றது.

இது தொடர்பான சட்டநிலைப்பாடு என்ன?

ஜனாதிபதி எந்த அமைச்சையும் வைத்திருக்க முடியாது; என்பவர்களின் வாதம்:

(19இற்கு முன்னும் பின்னும்) ஒரு பாராளுமன்ற உறுப்பினரைத்தான் ஓர் அமைச்சராக நியமிக்கமுடியும்.( சரத்து 44(1)(b) 19 இற்கு முன். 43(2) -19 இற்குப்பின்)

ஜனாதிபதி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இல்லை. எனவே, அவர் எந்தவொரு அமைச்சையும் வைத்திருக்க முடியாது. 19இற்கு முன் அரசியலமைப்பு சரத்து 44(2) இனூடாக ஜனாதிபதிக்கு ஒரு விதிவிலக்கை அளிக்கப்பட்டிருந்தது. அதன்பிராகாரம்;

அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இல்லாதபோதும் அவர் (1) தனக்கு வேண்டிய விடயதானங்களை அவர் வைத்திருக்கலாம் (2) அதேநேரம் எந்தவொரு அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத விடயதானங்களுக்கும் அவரின்கீழேயே இருக்கும். இந்த இருவகையான விடயதானங்குக்குரிய அமைச்சுக்களின் எண்ணிக்கையையும் அவர் தீர்மானிக்கலாம்.

சுருங்கக்கூறின் தனக்கு வேண்டிய அமைச்சுக்களையும் யாருக்கும் வழங்காத அமைச்சுக்களையும் அவர் வைத்திருக்கலாம். இந்த சரத்து 19இன் மூலம் நீக்கப்பட்டுவிட்டது. எனவே, அந்த விதிவிலக்கு தற்போது இல்லை.

19வது திருத்தத்தில் அதற்குப் பதிலாக முன்னாள் ஜனாதிபதிக்கு ( மைத்ரி) மட்டும் மூன்று அமைச்சுக்களை வைத்திருக்க சலுகை வழங்கப்பட்டது. ( S.51) அவை பாதுகாப்பு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடலாகும். தற்போதைய ஜனாதிபதிக்கு அந்த சலுகையும் இல்லை.

எனவே, ஜனாதிபதி ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் இல்லை. முன்னைய ஜனாதிபதிகளுக்கிருந்த விதிவிலக்கும் இல்லை. எனவே, ஜனாதிபதி எந்தவொரு அமைச்சையும் வைத்திருக்க முடியாது. பாதுகாப்பு அமைச்சு ஏன் இன்னும் ஒருவருக்கும் வழங்கப்படவில்லை; எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.

இங்கு கவனிக்கவேண்டிய ஒருவிடயம், ஜனாதிபதி ஒரு அமைச்சை தன்னகத்தே வைத்திருக்கும்போது அவ்வமைச்சிற்குரிய அமைச்சர் என்ற கருத்தைப் பலர் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக ஊடகங்களிலும் நடைமுறையிலும் அவ்வாறே அழைப்பதுண்டு. அந்த எண்ணமும் இந்த குழப்பத்திற்கு ஒரு காரணமாகும். ஆனாலும் சட்டத்தின் பார்வையில் அவர் அமைச்சை வைத்திருந்தாலும் அமைச்சரல்ல. அவர் ஜனாதிபதி மாத்திரம்தான்.

எனவே, ஒருவர் அமைச்சராக இருப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவேண்டுமென்பது சரியாகும். ஆனால் ஜனாதிபதி ஒரு போதும் அமைச்சராக இருந்ததில்லை.

ஜனாதிபதி அமைச்சரில்லை என்பதை இன்னுமொரு சரத்து உறுதிப்படுத்துகின்றது. அதாவது சரத்து 42(3) [19 இற்கு முன் 43(2)] இன் பிரகாரம் ஜனாதிபதி அமைச்சரவையின் அங்கத்தவரும் தலைவருமாவார்.

இங்கு கவனிக்க வேண்டியது “ அங்கத்தவர்” என்ற சொல். ஜனாதிபதி அமைச்சராக இருந்திருந்தால் “ அங்கத்தவர்” என்ற சொல் அவசியமில்லை. ஏனெனில் அமைச்சர்கள் எல்லோரும் அமைச்சரவையின் அங்கத்தவர்கள்தான். பிரதமரும் அமைச்சரவையின் அங்கத்தவர் என்று குறிப்பிடப்படவில்லை. ஏனெனில் அவர்தான் பிரதம அமைச்சர். எனவே அவரும் ஒரு அங்கத்தவர்.

அதேபோல் ஜனாதிபதி அமைச்சரவையின் தலைவர் என்றமுறையில் அவரும் அங்கத்தவராகத்தான் இருக்கவேண்டும். அங்கத்தவர் என்று குறிப்பிடப்படவேண்டிய அவசியமில்லை. ஆனாலும் குறிப்பிடப்பட்டுள்ளது; ஏனெனில், அவர் அமைச்சர் இல்லை என்பதனால் அவர் அமைச்சரவையின் அங்கத்தவரா? என்ற கேள்வி, சந்தேகம் எழக்கூடாது; என்பதற்காக.

மட்டுமல்ல, 19 இற்கு முந்திய சரத்து 44(2) இல் “
ஜனாதிபதியின் பொறுப்பில் அவ்வாறு அமைச்சுக்கள் இருக்கும்போது அரசியலமைப்பிலோ அல்லது ஏதாவது எழுதிய ஓர் சட்டத்திலோ “ அந்த விடயதானங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்” எனக்குறிப்பிடப்பட்டிருந்தால் அதனை “ ஜனாதிபதி “ என வாசிப்பதோடு அவ்வாறே பொருள் கொள்ளவும் வேண்டும்; என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவிதமான குறிப்பே 19வது திருத்தத்தின் S 51 இலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ஜனாதிபதி ஒரு அமைச்சை வைத்திருந்தாலும் அவர் அதற்குரிய அமைச்சர் என்ற சொற்பதம் பொருந்தாதது. மாறாக ஜனாதிபதி என்ற முறையிலேயே அந்த அமைச்சை அவர் வைத்திருக்கின்றார்; என்றே பொருள் கொள்ளவேண்டும்.

மேலும் சரத்து 35 ( 19இற்கு முன்) ஜனாதிபதிக்கெதிராக, தனிப்பட்டரீதியிலோ, ஜனாதிபதி என்ற ரீதியிலோ வழக்குத் தொடரமுடியாது. ஆனால் ஜனாதிபதி வைத்திருக்கின்ற விடயதானங்கள் ( அமைச்சு) தொடர்பாக வழக்குத் தொடுக்கலாம், சட்டமாஅதிபரை பிரதிவாதியாக குறிப்பிட்டு; எனக் குறிப்பிட்டிருந்தது .

இங்கும் “ ஜனாதிபதி தான் வைத்திருக்கும் விடயதானங்கள்” என்று ‘ ஜனாதிபதி ‘ என்ற சொல்தான் பாவிக்கப்பட்டிருக்கின்றதே தவிர, அவர் அமைச்சரென்ற முறையில் அவருக்கெதிராக வழக்குத் தொடுக்கலாம்; என்று குறிப்பிடப்படவில்லை.

அதேபோன்றுதான் 19 வது திருத்தத்திலும் ( சரத்து 35) ஜனாதிபதிக்கெதிராக தனிப்பட்டமுறையில் வழக்குத் தொடரமுடியாது. உத்தியோக கடமை தொடர்பாக ( official capacity) வழக்குத் தொடரலாம்; எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு மிகவும் வலுவான ஒரு விடயம் என்னவென்றால் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வக் கடமைகள் தொடர்பாக வழக்குத் தொடுத்தல் எனும்போது இரு விடயங்கள் உள்ளடக்கப்படுகின்றன.

ஒன்று: நிறைவேற்று ஜனாதிபதி என்றமுறையில் அவரது கடமையுடன் தொடர்புபட்டது. உதாரணமாக, முன்னைய ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தபோது நீதிமன்றம் சென்றமை.

இரண்டு: அவரிற்குகீழ் வருகின்ற அமைச்சு தொடர்பாக நீதிமன்றம் செல்வது.

இந்த இரண்டையும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கடமை; என்ற பதத்திற்குள்ளேயே உள்ளடக்கப்பட்டிருக்கின்றதே தவிர, முதலாவது ஜனாதிபதி என்றமுறையிலும் இரண்டாவது குறித்த விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் என்றமுறையிலும் என்று குறிப்பிடப்படவில்லை.

எனவே, ஜனாதிபதி அமைச்சுக்களை வைத்திருந்தாலும் அவர் ஜனாதிபதியாகத்தான் அவற்றை வைத்திருக்கிறார். அவ்விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சராக இல்லை. அதன்பின்னாலுள்ள தத்துவம் அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினரல்ல. எனவே, அவர் அமைச்சராக முடியாது. வரலாற்றில் எந்தவொரு ஜனாதிபதியும் அமைச்சராக இருந்ததுமில்லை.

அமைச்சராக இல்லாமல் அமைச்சை வைத்திருக்க அரசியலமைப்பின் அனுமதிதேவை. அந்த அனுமதி தற்போது இல்லை; என்ற வாதம் சரியா? என்பதை அடுத்த பாகத்தில் பார்ப்போம்; இன்ஷாஅல்லாஹ்.

Sat, 25 Jan 2020 19:54:34 +0530

கல்குடா அரசியல் கள நிலைமை! கல்குடா முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்துவது சிரமமானதா?

கல்குடா அரசியல் கள நிலைமை! கல்குடா முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்துவது சிரமமானதா? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடா தேர்தல் தொகுதியில் 115,974 மொத்த வாக்காளர்களில் 35,338+ முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். (KPW & KPC) (இதில் புணானை கிழக்கு வாக்காளர்கள் உள்ளடக்கப்படவில்லை) இவ்வாக்காளர் தொகையானது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏனைய இரு முஸ்லிம் பிரதேசங்களான காத்தான்குடி, ஏறாவூர் உடன் ஒப்பிடும்போது கணிசமானளவு அதிகமாகும். 

அதன்படி மட்டக்களப்பு மாவட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட 5 பாராளுமன்ற ஆசனங்களில் ஆகக்குறைந்த 1 ஆசனம் கல்குடாப் பகுதிக்கே கிடைக்கும் சந்தர்ப்பம் அதிகமாகும். இது இவர்களது ஒருமித்த வாக்களிப்பிலேயே தங்கியுள்ளது. கடந்த கால தேர்தல்கள் இதற்குச் சான்றாகும். 2005 இல் காத்தான்குடியில் போட்டியிட்ட ஹிஸ்புல்லாவும், ஏறவூரில் போட்டியிட்ட பசீர் சேகுதாவூதும் தோல்வியடைய கல்குடாவில் அமீர் அலி வெற்றிபெற்றிருந்தார்.

கடந்த கலத்தை நோக்குவோமாயின் :
கடந்த 9 வது பாராளுமன்றத் தேர்தலில் (1989) மட்டக்களப்பு மவட்டத்திலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அறிமுகத்துடன் போட்டியிட்ட M.L.A.M. ஹிஸ்புல்லா வெற்றி பெற்றதுடன் அதற்கடுத்த 10 வது தேர்தலிலும் வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டார். இவ்வாறு இரு தடவைகள் ஹிஸ்புல்லா தெரிவாவதற்கு கல்குடா முஸ்லிம்களது பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. கல்குடா வாக்காளர்கள் அதுவரை பிரதேசவாதமின்றி ஒரே சமூகமென்ற வகையில் வாக்களித்திருந்தனர். 

எனினும் 2 வது தடவை ஹிஸ்புல்லா போட்டியிடும் சந்தர்ப்பத்தில் கல்குடா முஸ்லீம்களது அரசியல் அபிலாஷைகளில் ஒன்றான பாராளுமன்ற பிரதிநிதித்துவ அவாவினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினூடாக அவரிடம் தெரிவித்தபோது கல்குடா அவருக்குச் செய்த நன்றிக் கடனுக்காக 2 வது தடவை (1994) தான் தெரிவானால் தனது பதவிக் காலத்தில் 2 வருடங்களை நிச்சயமாக கல்குடா தொகுதி வேட்பாளரான முகைதீன் அப்துல் காதருக்கு வழங்குவதாக அவர் வாக்களித்திருந்தார்.

எனினும் பின்னர் கல்குடா வாக்காளர்களது பெரும் பங்களிப்புடன் அவர் வெற்றி பெற்றதும் வழங்கப்பட்ட வாக்குறுதியானது காற்றில் பரக்கவிடப்பட்டது. முனாபிக் தனமாக அன்று ஹிஸ்புல்லா கல்குடா முஸ்லிம்களை ஏமாற்றினார். 

அன்றிலிருந்துதான் அதுவரைக்கும் காணப்படாத பிரதேசவாதம் கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் மெல்ல மெல்ல தலைதூக்கியது. அதற்கு முழுக் காரணமாக ஹிஸ்புல்லா இருந்தார். அதாவது பிரதேசவாத சிந்தனை வளர பிரதான காரணமாக ஹிஸ்புல்லாவின் அரசியல் போக்கு காரணமாயிருந்தது.

எந்தளவுக்கு ஹிஸ்புல்லாவின் இந்த வாக்கு மாறல் இப்பிரதேசத்தில் உச்ச நிலையை அடைந்திருந்ததென்றால் அதுவரை ஓட்டமாவடி நகர்ப் பிரதேச பிரதான வீதியில் அமைந்திருந்த ஜவுளிக் கடைகள் உட்பட பெரும்பாலான கடைகளை உரிமையாகவும் வாடகை அடிப்படையிலும் வைத்திருந்த காத்தான்குடி வர்த்தகர்கள் அனைவரையும் இப்பிரதேசத்தை விட்டும் 100% அப்புறப்படுத்தும் அளவுக்கு உச்ச நிலையை அடைந்திருந்தது. வாதப்பிரதிவாதங்களுக்கும் மத்தியில் அன்று காத்தான்குடி வர்த்தகர்கள் அனைவரும் ஓட்டமாவடி பஸாரிலிருந்து துரத்தப்பட்டனர்/அப்புறப்படுத்தவும் பட்டனர். 

ஆம் அதன் பயனாக 2000-10-18ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் 11 வது பாராளுமன்றத் தேர்தலில் கல்குடா முஸ்லிம் வாக்காளர்கள் ஏறக்குறைய 100% ஒற்றுமையாகவும் திட்டமிட்டும் வாக்களித்து ஹிஸ்புல்லா போட்டியிட்ட அதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஊடாகவே அவரைத் தேர்தலில் தோற்கடித்து தமது 1 வது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை பெற்று வெற்றியீட்டினர். இவ்வெற்றியானது அக்காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்திலன்றி இலங்கை முஸ்லிம்களால் வியந்து நோக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய வெற்றியாகுமென்று சொன்னால் அது மிகையல்ல.

ஏன், ஒட்டு மொத்த இலங்கை முஸ்லீம்களும் கல்குடா முஸ்லீம்களைப் போல் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று மூக்கின்மேல் விரல் வைத்து பேசுமளவுக்கு அன்றைய கல்குடவின் முதலாவது அரசியல் வெற்றி சரித்திரம் படைத்திருந்தது. அந்த சரித்திரத்தின் கதாநாயகன்தான் கல்குடாவின் 1 வது பாராளுமன்றப் பிரதிநிதி M.B. முகைதீன் அப்துல் காதர் அவர்களாகும்.

அதன் பின்னர் சொற்ப காலத்தில் கல்குடாவின் முதல் கதாநாயகனாகிய முகைதீன் அப்துல் காதர் நோய்வாய்ப்பட்டு 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மரணமானர். 

முதலாவது பாராளுமன்றப் பிரதிநிதியான முகைதீன் அப்துல் காதரைப் பொறுத்தவரை அவர் மேட்டுக் குடி என்று சொல்லக்கூடிய வர்த்தகப் பரம்பரையைச் சேர்ந்தவராக இருந்தபோதும் ஊரிலுள்ள அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்றக் கூடியவராகவும் எல்லோரையும் மதிக்கக் கூடியவராகவும் எல்லோராலும் மொஹிதீன் நாநா என்று செல்லமாக அழைக்கப்படக் கூடியவராகவும் மிகவும் சிறந்த குணமுடையவராகவும் வாழ்ந்து மறைந்தார். 

அவர் மீன்பிடி பிரதி அமைச்சராகப் பதவி வகித்தபோது தற்போதைய பிரதமராயிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீன்பிடி அமைச்சராக இருந்தமையும் இருவரும் மிக நெருங்கிச் செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். மொஹிதீன் அப்துல் காதர் மரணித்தபோது மஹிந்த ராஜபக்ஷ அவரது ஜனாசா நல்லடக்க வேளையில் இங்கு சமூகமளித்திருந்தார்.

முகைதீன் அப்துல் காதர் அவர்களது நற்குணங்களுக்காகவே கல்குடா மக்களும் அன்று ஓரணியில் திரண்டனர் என்றாலும் அது மிகையல்ல.

அவர் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னர் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளராக செயற்பட்டபோது அவரது தலைமையில் செயற்பட்ட ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களாக இருந்தவர்களில் ஈஸஸாலெவ்வை மாஸ்டர், மஃரூப் (ரியோ ஸ்டூடியோ), புர்கான், இஸ்ஹாக் மௌலவி முஸ்தபா (GM MPCS), செய்னுதீன் ஷாப் (காவத்தமுனையின் முதல் பிரதேச சபை உறுப்பினர்) என்பவர்கள் விசேடமாகக் குறிப்பிடக் கூடியவர்களாவர். 

தற்போதைய உறுப்பினர்களுக்குள்ள தீவிர விமர்சனங்கள் இவர்களுக்கு இருந்ததில்லை என்பதும் ஒரு விசேடமாகும். இவர்களில் எதிர்க்கட்சி உறுப்பினராகச் செயற்பட்ட இஸ்ஹாக் மௌலவி செல்வாக்குள்ளவராகக் காணப்பட்டார். அக்காலத்தில் ஜனரஞ்சகம் வாய்ந்த ஒருவராகக் காணப்பட்ட இஸ்ஹாக் மௌலவி மக்களுடன் மிகவும் நெருக்கமானவராகவும் அன்பானவராகவும் காணப்பட்டார். அக்காலப் பகுதியில் வாழ்ந்த மக்களும் அவரை வித்தியாசமான கண்ணோட்டத்தில் நோக்கவில்லை. ஷியா என்ற வேறுபாடும் கோசமும் ஏற்படுத்தப்படும் வரை அவரை மக்கள் தங்களில் ஒருவராகவே நேசித்தனர்.

சியோனிச இஸ்ரேல் நாட்டுக்கு எதிராக பேரணிகள் ஆர்ப்பாட்டங்களை எமது பகுதியில் அதிகம் நடாத்திக் காட்டிய ஒருவராக இஸ்ஹாக் மௌலவி திகழ்ந்தார். அக்காலப் பகுதியில் மக்களை ஒன்றுதிரட்டக்கூடிய ஆளுமையும் அவரிடம் காணப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான பதவியான கட்சியின் பொருளாளர் பதவியை மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் எமது மொஹிதீன் அப்துல் காதருக்கே வழங்கியிருந்தார். இது அவரது நேர்மைக்கும் நம்பிக்கைக்கும் வழங்கப்பட்டதாகும். அவர் பொருளாளராயிருந்தபோது விமர்சனங்கள் எதுவும் எழவுமில்லை. கட்சியிலிருந்து எதையும் பெற்றுக்கொண்டு நயவஞ்சகமாக கட்சிக்கு துரோகம் செய்யவுமில்லை. 

இவ்வாறு முகைதீன் அப்துல் காதர் அவர்களால் 100% ஒன்றுதிரட்டப்பட்ட கல்குடா முஸ்லிம்களை அவரது மறைவுக்குப் பின்னர் தலைமை ஏற்றவரால் நீண்ட காலம் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

ஆம், முகைதீன் அப்துல் காதர் அவர்கள் மரணப்படுக்கையில் இருதித் தருவாயில் இருந்தபோது அவரது ஒப்புதலுடனேயே அமீர் அலி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தார். அவர் கையெழுத்திடா விட்டிருந்தால் அமீர் அலி அரசியலில் மக்களிடம் பிரபல்யமடைந்திருக்க வாய்ப்பின்றிப் போயிருக்கும். அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து கையெழுத்திட்ட பெருமை முகைதீன் அப்துல் காதரையே சாரும். 

ஆரம்பத்தில் அமீர் அலியை வேட்பாளராக அறிவிக்கும் பத்திரத்தில் முகைதீன் அப்துல் காதர் கையொப்பமிட மறுத்ததாகவும் எனினும் இப்பகுதியில் செல்வாக்குமிக்க சில ஹாஜிமார்களான அஸீஸ் ஹாஜி, லெப்பை ஹாஜி, ஹனீபா ஹாஜி, இஸ்மாயில் ஹாஜி போன்றவர்களது வற்புறுத்தலாலேயே கையெழுத்திட்டதாகவும் குறித்த ஹாஜிமார்களே கூறியிருந்தமை இங்கு விசேடமாகக் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் 2004 இல் இரண்டாந் தர வேட்பாளராக கல்குடாவில் அமீர் அலி முகைதீன் நாநாவின் சிபாரிசில் அரசியலில் காலடியெடுத்து வைத்தார். 

அமீர் அலியின் அரசியல் ஆரம்ப பிரவேசத்தைக் கூறுவதென்றால் அவர் அறிமுகமான வேளையில் பிரபலமிக்கவராக இருக்கவில்லை என்பதே உண்மை. அவர் சிறு வயதைத் தவிர அதிக காலம் ஊரில் வசிக்கவில்லை. காரணம் அவர் சுங்கத் திணைக்களத்தில் கடமையாற்றியதால் கொழும்பில் வாழ்ந்துகொடிருந்தார். 

வெளிப்படையாகச் சொல்வதென்றால் அவர் கல்குடாவில் 2004 இல் களமிறக்கப்பட்டபோது கொழும்பிலிருந்து அவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் நாவலடியிலிருந்து வாகன பவனியாக ஊருக்குள் அழைத்துவரப்பட்டபோது ஊருக்குப் புத்தம் புதிதான அவர் எப்படி தோற்றமானவராக இருப்பார் என்பதை பார்ப்பதற்கே மக்கள் வீதிகளில் ஆவலுடன் ஒன்று கூடினர். அந்தளவு ரெடிமேட் அரசியல் வாதியாக அவர் களமிறங்கினார். 

அன்று அமீர் அலி அல்ல எவர் களமிறக்கப்பட்டாலும் வெற்றிபெறக்கூடிய ஆதரவும் ஊர்களின் ஒற்றுமையும் மேலோங்கியிருந்தது.

அதன் காரணமாக எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் எதுவித சிரமமுமின்றி மிக இலகுவாக 2-4-2004 இல் இடம்பெற்ற 13 வது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். இது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டுப் பெற்ற வெற்றியாகும்.

இது எதிர்பார்க்கப்பட்ட ஒரு வெற்றியாக அமைந்திருந்தது. அத்தேர்தலில் மனாப்ப என்று சிங்களத்தில் சொல்லப்படும் விருப்பு வாக்குகள் அமீர் அலிக்கு ஏறாவூரிலோ காத்தான்குடியிலோ ஏறக்குறைய அறவே கிடைக்கவில்லை. எனினும் அங்கு கட்சிக்குக் கிடைத்த வாக்குகளுடன் கல்குடாவில் அவருக்கு அளிக்கப்பட்ட அறுதிப் பெரும்பான்மை வாக்குகளாலும் வெற்றி பெற்றார்.

எனினும் அன்றைய நிலையுடன் தற்போதைய செல்வாக்கினை ஒப்பிம்போது அது படிப்படியாக குறைந்து சென்று இன்று அரைவாசிக்கும் குறைந்த மக்கள் ஆதரவே அவருக்கு உள்ளமை வெளிப்படையானது. 

பின்னர் தன்னை ஊருக்கும் நாட்டுக்கும் அறிமுகப்படுத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவரது தாய்க் கட்சியை விட்டும் வெளியேறி ரிஷாட் பதியுதீன் போன்றோருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) என்ற கட்சியை உருவாக்கி அதனூடாக அரசியல் தாவுதலை ஆரம்பித்தார்.

ஊர் அபிவிருத்தி என்று கனிசமான கொந்தராத்து வேலைத் திட்டங்களை அவர் செய்தபோதிலும் 2010 இல் இடம்பெற்ற 14 வது பாராளுமன்றத் தேர்தலில் அவரது பரம எதிரியான ஹிஸ்புல்லாவிடம் தோல்வியடைந்தார். பின்னர் 2012 இல் மாகாண சபை உறுப்பினரானார். மாகாண சபை உறுப்பினராவதற்கு அவ்வளவு பெரும்பான்மை வாக்குகள் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு படிப்படியாக இவரது செல்வாக்கு குறைந்து செல்வதை படித்த , அரசியல் அடிப்படை தெரிந்த எவரும் மறுப்பதற்கில்லை.

ஏன் இறுதியாக 2018 இல் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் அவரது ACMC கட்சிக்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு 7 உறுப்பிர்கள் தெரிவாகிய அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு 8 உறுப்பினர்கள் தெரிவாகினர்.

தற்போதைய நிலையில் கல்குடாவிலுள்ள மொத்த வாக்குகளில் அரைவாசி (1/2) எண்ணிக்கையிலும் குறைந்த வாக்காளர்களையே அமீர் அலி தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். இது அவர் மேடைகளில் பேசித்திரிகின்ற 'அபிவிருத்தி' என்ற கொந்தராத்து மாயயை மக்கள் ஏற்றுக்கொள்ளாத நிலைமையினையும் கல்குடா மக்களை ஒற்றுமைப்படுத்த இயலாத அவரது கையறு நிலைமையினையும் காட்டிநிற்கிறது.

காத்தான்குடியில் ஹிஸ்புல்லா தக்கவைத்துக் கொண்டுள்ள வாக்காளர்களையும் (நகர சபையின் மொத்த ஆசனங்கள்), ஏறாவூரில் ஒரே கட்சியைச் சேர்ந்த ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் அலிஸாஹிர் மௌலானா இருவரும் தக்கவைத்திருக்கும் வாக்குகளையும் நோக்கும்போது அவர்கள் தத்தமது பிரதேசங்களில் சுமார் 80-90% வீதமான வாக்குகளைப் பெறக்கூடிய நிலையிலும் ஏனைய பிரதேசங்களிலிருந்தும் கணிசமான வாக்குகளையும் பெறக்கூடிய நிலையிலும் காணப்படுகின்ற அதேவேளை அமீர் அலியோ சொந்தத் தொகுதியிலேயே 40-50% வீதமான வாக்குகளையே பெறக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. இது அவரது குறைந்து செல்லும் பலவீனமான ஆளுமையினை பறைசாற்றுகிறது.

அந்த வகையில் இலங்கை தேர்தல் வரலாற்றில் 100% ஒற்றுமையை உதாரணமாகக் காட்டிய கல்குடா முஸ்லிம்களையோ இளைஞர்களையோ யாரும் விரல் நீட்டிக் குற்றஞ்சாட்ட அருகதையில்லை. மாறாக ஒற்றுமையாயிருந்த அவர்களை SLMC என்றும் ACMC என்றும் இரு துருவங்களாக/இரு அணிகளாக பிரித்து வைத்திருக்கும் வக்கற்ற சுயநல அரசியல்வாதிகளே முழுக் காரணமாகும்.

எனினும் இவ்விரண்டு கட்சிகளிலுமுள்ளவர்களில் தீவிரமான சிலரைத்தவிர ஏனைய பெரும்பான்மையினர் நல்ல நோக்கத்திற்காகவும் சமூக நலனுக்காகவும் ஒன்றுபடக் கூடியவர்கள்.

இவர்களுக்கு இன்றைய நிலையில் சரியான வழிகாட்டல்கள் ஒருங்கிணைப்புக்கக்கள் வழங்கப்படுமாயின் கல்குடாவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. 

இதற்கான பொறுப்பும், கடமையும் தற்போது கல்குடா சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகளின் கைகளில்தான் தங்கியுள்ளது.

கட்டுரையாளர் - கல்குடா ஜெமீல்

Fri, 10 Jan 2020 19:56:16 +0530

ஈரான் தாக்குதல் நடாத்தியும் அமெரிக்கா திருப்பி தாக்காதது ஏன்? அமெரிக்காவின்நண்பர்கள் எங்கே?

ஈரான் தாக்குதல் நடாத்தியும் அமெரிக்கா திருப்பி தாக்காதது ஏன்? அமெரிக்காவின்நண்பர்கள் எங்கே? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

உண்மையான வீரர்கள் தனிமையாக சென்று எதிரியுடன் சண்டை செய்வார்கள். அந்த சண்டையானது நியாயமானதாக இருக்கும். ஆனால் வெளியே வீரனாகவும், உள்ளே கோழையாகவும் இருப்பவர்கள் தனியாக சென்று சண்டை செய்ய தயங்குவார்கள்.

இவ்வாறான கோழைகள் தனது நண்பர்களையும் அழைத்துக்கொண்டு படையோடு சென்று அப்பாவியை தாக்கிவிட்டு தன்னை ஓர் வீரனாக காண்பித்துக்கொண்டு உண்மையான வீரர்களை மிரட்ட முற்படுவார்கள்.

அமெரிக்காவின் நிலையும் இதுதான். அமெரிக்கா எப்போதும் தனது எதிரி நாடுகள் மீது தனியாக சென்று யுத்தம் செய்ததில்லை. பிரிட்டன், பிரான்ஸ் உற்பட ஐரோப்பிய நாடுகள், மற்றும் மத்தியகிழக்கில் உள்ள தனது அரபு நண்பர்களையும் அழைத்துக்கொண்டே போருக்கு செல்வது வழக்கம்.

1990 இல் குவைத்தை ஈராக் ஆக்கிரமித்தபோது சுமார் நாற்பது நாடுகளுடன் சென்று ஈராக்குக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுத்து குவைத்தை மீட்டது. அதுபோல் 2001 இல் ஆப்கானிஸ்தானிலும், 2003 இல் சதாம் ஹுசைனுக்கு எதிராகவும் இதேபோன்று சுமார் 33 நாடுகளுடன் சென்று அமெரிக்கா போர் தொடுத்து தன்னை வீரனாக காண்பித்தது.

அப்போது ஈராக்குக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் உலகில் நண்பர்கள் இருக்கவில்லை. தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும், பொருளாதார தடையினால் பலமிழந்த நிலையிலும் இவ்விரு நாடுகளும் காணப்பட்டது.

ஆனால் ஈரானின் நிலை அப்படியல்ல. ஈரானுக்கு உலகில் நண்பர்கள் அதிகம். அத்துடன் இஸ்லாமிய நாடுகளில் அதிக பலமிக்கதும், வல்லரசு என்று கூறுகின்ற நிலையில் ஈரான் உள்ளது.

வெளிநாடுகளை நம்பியிருக்காமல் தனது சொந்த முயற்சியினால் முன்னேறியதுடன், ஆயுத உற்பத்தி மற்று குறுந்தூர, நீண்டதூர ஏவுகணைகளை பரிசோதனை செய்து இஸ்ரேலுக்கு அச்சத்தை வழங்கிவருகின்ற நாடுதான் ஈரான்.  

நேற்று அதிகாலை ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடாத்தியது. ஆனால் தனக்கு கட்டுப்பட மறுக்கின்ற நாடுகளை மிரட்டுகின்ற அமெரிக்கா, ஈரானின் தாக்குதலுக்கு எதிராக பதில் தாக்குதல் நடாத்தவுமில்லை, போர் பிரகடனம் செய்யவுமில்லை.

எடுத்ததுக்கெல்லாம் அமெரிக்காவுடன் சென்று போர் செய்கின்ற நிலையில் ஐரோப்பிய நாடுகள் இப்போது இல்லை. ஐரோப்பாவிலும் ஈரானுக்கு நண்பர்கள் அதிகம். அதனால் ஈரானுக்கெதிராக போர் செய்ய விரும்பாது பல நாடுகள் பின்வாங்கியுள்ளது.

அமெரிக்காவின் ஈராக்கிய நிலைகளில் ஈரான் தாக்குதல் நடத்திய உடனேயே ஈராக்கில் நிலைகொண்டிருந்த ஜேர்மன், பிலிப்பைன்ஸ், டென்மார்க் ஆகிய நாட்டு படைகள் ஜோர்தான் வழியாகவும், குவைத் வழியாகவும் ஈராக்கைவிட்டு வெளியேறியதுடன், இன்னும் பல நாட்டு படைகள் ஈராக்கிலிருந்து வெளியேற தயார் நிலையில் உள்ளது.

எனவேதான், தான் கைவிடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நிலையை உணர்ந்த அமெரிக்கா ஈரானுக்கு எதிராக போர் பிரகடம் செய்யவோ. அச்சுறுத்தவோ, திருப்பி தாக்குதல் நடாத்தவோ முற்பவில்லை.

முன்புபோன்று தனது நண்பர்கள் அமெரிக்காவுடன் சேர்ந்து ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்திருந்தால், இப்போது அமெரிக்காவின் நிலைப்பாடு வேறுவிதமாக இருந்திருக்கும். கள நிலவரமும் மாற்றமடைந்திருக்கும்.

Thu, 09 Jan 2020 19:25:50 +0530

நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து செய்யப்படும் குற்றங்கள் தொடர்பில் இளைஞர்களும் பெற்றோர்களும் அறிந்திருக்கவேண்டியவை

நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து செய்யப்படும் குற்றங்கள் தொடர்பில் இளைஞர்களும் பெற்றோர்களும் அறிந்திருக்கவேண்டியவை | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

இன்றைய காலகட்டத்தில் பிரச்சினைகள் ஆரம்பிக்கும் வரை பாராமுகமாக இருந்துவிட்டு அதனை பின் தொடர்ந்து வரும் இக்கட்டான நிலைகளுக்கு வருந்தும் பிள்ளைகளாகவும் பெற்றோர்களாகவும் நாம் இருந்து வருகின்றோம். எனது இப்பதிவு காலத்தின் தேவையாகக் கருதி பதிவடப்படுகிறது.

சில பிள்ளைகள் தமது நண்பர்களுடன் இரவு நேரங்களில் அல்லது வேறு பொருத்தமற்ற நேரங்களில் கூட்டுச் சேர்ந்து செய்யும் சில சட்ட விரோத வேலைகளின் காரணமாக தங்களது பிள்ளைகளும் அகப்பட்டு சட்டத்தின் முன்  குற்றவாளியாகக் காணப்படும் சந்தர்ப்பங்களில், பெற்றோர்களாகிய நாம் “எனது பிள்ளை அப்படிப்பட்டவன் அல்ல. நான் அவ்வாறு வளர்க்கவில்லை” என்று கதை கூறினாலும் சட்டத்தில் அது எவ்வாறு கருதப்படும் என்பதனை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருத்தல் அவசியமாகும்.

வழக்கொன்றில் சிலர் கூட்டுச் சேர்ந்து ஒருவருடைய வீட்டிற்குச் சென்று அவரைக் கத்தியால் குத்தி மரணமுண்டாக்கியதுடன் அவருடைய சகோதரனையும் பொல்லால் தாக்கியிருந்தார்கள். இச் சம்பவத்தில் தொடர்புடைய பிரதான குற்றவாளிக்கும் அவருடன் கூடச்சென்ற ஏனையோருக்கும் சமமான தண்டனை வழங்கப்பட்டிருந்தது. பின்னர் குறித்த வழக்கின் தண்டனையானது மீள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் “வருமுன் காப்பதே சாலச் சிறந்தது” (Prevention is better than cure) என்ற பழமொழிக்கு அமைவாக, நாம் முன் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியது முக்கியமானதாகும்.

இக் குற்றங்கள் தொடர்பான சட்டப் பிரிவுகளைப் பார்ப்போம்.

2006ஆம் ஆண்டு 16ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவை அத்தியாயம் 19 இன் பிரகாரம் 32, 140, 146, 296, 300 ஆம் பிரிவுகள் இக் குற்றங்கள் சார்பில் ஒன்றோடொன்று தொடர்பு பட்டவை.

குறித்த சட்டக் கோவையின் பிரிவு 32 இல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவான கருத்தினை நிறைவேற்றும் பொருட்டு பல்வேறு நபர்களினால் குற்றச் செயலொன்று புரியப்பட்டால், அத்தகையக ஒவ்வொருவராலும் அக் குற்றச் செயல் தனித்து அவரவரால் செய்யப்பட்டது போன்று அதே முறையில் அச் செயலுக்குப் பொறுப்பாளியாகிறார்கள். இதன் பிரகாரம், நபரொருவரை குறிப்பிட்ட நண்பர் குழுவொன்று கூட்டிச்சென்று அக் குழுவினால் ஏதாவது குற்றங்கள் புரியப்பட்டிருந்தால், அக் கூட்டத்தில் காணப்படும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அவர்கள் குற்றமிழைத்ததற்கான சமமான தண்டனை அளிக்கப்படலாம். இங்கு, குறித்த குற்றமானது நிகழவுள்ளமை குறித்து அந்த நபர் ஏலவே அறிந்திருந்தாலும் அல்லது அறியாதிருந்தாலும் சட்டத்தின் முன் குற்றமிழைத்தவர் போன்றே கருதப்படுவார். எனவே, தமது பிள்ளைகளது நண்பர்கள் தொடர்பில் பெற்றோர்கள் அறிந்திருத்தல் பாரிய விளைவுகளில் இருந்து குறித்த பிள்ளைகளைப் பாதுகாக்கும்.

அதேபோன்று தண்டனைச் சட்டக்கோவை பிரிவு 140 ஆனது மேற்படி கூட்டுச் சேர்வதனால் வழங்கப்படக்கூடிய தண்டனை பற்றி குறிப்பிடுகிறது.

அத்தோடு, அக் கோவையின் பிரிவு 146 ஆனது பொது நோக்கத்தை முன்னேற்றுவதில் புரியப்பட்ட தவறு எதற்கும் குறித்த சட்டவிரோதக் குழுவின் உறுப்பினர் ஒவ்வொருவரும் குற்றவாளியாகக் கருதப்படவேண்டும் என குறிப்பிடுகிறது.

எனவே, அன்புள்ள பெற்றோர்களேவ, உங்களுடைய பிள்ளைகள் எவ்வாறான நண்பர்களுடன் சேர்கிறார்கள் என்பது பற்றி நீங்கள் அறிந்திருக்கவேண்டியது பின்னர் நிகழக்கூடிய பல்வேறு பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு உறுதுணையாக அமையும். மேலும் ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழ்ந்ததன் பின்னர் அது பற்றி சிந்திப்பதில் அர்த்தமற்ற தன்மை காணப்படும் என்பது கவலையான விடயமாகும்.

மு. முஹம்மது நப்ஸர் LLB, MBA

Wed, 08 Jan 2020 19:32:23 +0530

அமைச்சரவையில் முஸ்லிம் முகவர் இல்லாததையிட்டு அச்சப்படுவதா? அல்லது ஆறுதலடைவதா?

அமைச்சரவையில் முஸ்லிம் முகவர் இல்லாததையிட்டு அச்சப்படுவதா? அல்லது ஆறுதலடைவதா? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

ஜனாதிபதி கோத்தபாயா தலைமையில் அமைக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படாதது புதிய அரசாங்கத்தின் மீது அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது தென்னிலங்கையில் முஸ்லிம் விரோத போக்கினை முன்னிறுத்தியே சிங்கள மக்களின் அதிகமான வாக்குகளை பெற்று கோத்தபாய அவர்கள் ஜனாதிபதியாக தெரிவானார் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன் இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்ளலாம் என்ற வலுவான சந்தேகம் இருக்கின்ற நிலையில் முஸ்லிம் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படாதது புதிய அரசாங்கத்தின் மீது அச்சத்தை உருவாக்கியுள்ளது.

கடந்த காலங்களில் முஸ்லிம் அமைச்சர்கள் அங்கம் வகித்த நிலையில் முஸ்லிம் மக்களை பாதிக்கின்ற பல விடயங்கள் அமைச்சரவைக்கு கொண்டுவரப்பட்டபோது அத்தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் போராட்டம் நடாத்தி தடுத்தார்கள்.

ஆனால் தேசிய கட்சிகளின் அமைச்சரவை உறுப்பினர்களால் அவ்வாறு போராட்டம் நடாத்தி சமூகத்தை பாதிக்கின்ற விடயங்களை தடுக்க முடியுமா என்பதுதான் எமது கேள்வியாகும்.

இருந்தாலும் தேசிய கட்சியின் முகவர் மூலமாக அமைச்சர் பதவி வழங்காததையிட்டு நாங்கள் ஆறுதலடைய வேண்டும்.

அதாவது சிங்கள தேசிய கட்சிகள் ஒருபோதும் தனித்துவ சிறுபான்மை கட்சிகளின் பேரம்பேசும் சக்தியை விரும்புவதில்லை.

இரு தேசிய கட்சிகளுக்கிடையில் இருக்கின்ற போட்டி காரணமாக வேறுவழியின்றி சிறுபான்மை கட்சிகளுக்கு அமைச்சர் பதவிகள் உற்பட சில சலுகைகளை வழங்குவதன் மூலம் ஆட்சியை கைப்பேற்றுவார்களே தவிர, சிறுபான்மை கட்சிகளுடன் இதயசுத்தியுடன் நடந்துகொள்வதில்லை.

இதனாலேயே தங்களது சிங்கள தேசிய காட்சிகளில் அங்கம் வகிக்கின்ற தமிழ் முஸ்லிம் முகவர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கி அவர்கள் மூலமாக நேரடியாக சிறுபான்மை பிரதேசங்களில் அபிவிருத்தி மாயைகளை காண்பித்து சிறுபான்மை வாக்குகளை கவரும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறான செயல்பாடுகள் மூலமாக தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பேரம்பேசும் சக்திகளை சிதைவடைய செய்வதுதான் சிங்கள தேசிய கட்சிகளின் நோக்கமாகும்.

தற்போதைய அரசாங்கத்தில் சிறுபான்மை மக்களின் ஏகபிரதிநிதிகள் அங்கம் வகிக்காத நிலையில் ஆட்சியாளர்களின் முஸ்லிம் முகவர்கள் மூலமாக வழங்கப்படுகின்ற அமைச்சு பதவிகள் மூலம் அக்கட்சிக்கு ஆதரவை திரட்ட முயற்சிக்கவில்லை என்பதனையிட்டு நாங்கள் ஆறுதல் அடைய வேண்டும்.

எனவே இந்த நாட்டின் ஒரு சமூகத்தின் பிரதிநிதி ஒருவர் அமைச்சரவையில் அங்கம் வகிக்காத சூழ்நிலையில் அந்த சமூகத்துக்கு எதிராக தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என்ற அச்சம் ஒருபுறம் இருந்தாலும்,

கடந்த காலங்களில் தனது முகவர்களைக்கொண்டு முஸ்லிம் கட்சிகளை அழிப்பதில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக மீண்டும் அந்த முயற்சியில் இன்றைய ராஜபக்ச ஆட்சியாளர்கள் ஈடுபடவில்லை என்பதனையிட்டு நாங்கள் ஆறுதல் அடைய வேண்டும்.

Sat, 23 Nov 2019 13:31:50 +0530

தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்காமல் நாங்கள் விரும்புகினற வேட்பாளரை தெரிவு செய்யலாமா?

தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்காமல் நாங்கள் விரும்புகினற வேட்பாளரை தெரிவு செய்யலாமா? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

நாளை நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக வாக்களிப்பதற்கு மக்கள் தயாராக உள்ள நிலையில் ஏற்கனவே பலதரப்பில் இருந்தும் கருத்துக்க கணிப்புகள் வெளிவந்ததுள்ளன.  

வாக்களிக்கின்ற மக்களின் மனோநிலையானது இறுதி நேரத்தில் மாற்றமடைய வாய்ப்புகள் இருக்கின்றது. இது அனைத்து கருத்துக் கணிப்புக்களையும் தவிடுபொடியாக்கிவிடும்.  

இந்த தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கப்போவது பெரும்பான்மை இனத்தவர்களா ? அல்லது சிறுபான்மை இனத்தவர்களா ? என்பது நாளை தெரிந்துவிடும்.

ஏனெனில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிங்கள மக்கள் எந்த பாகுபாடுகளும், வேற்றுமைகளும் இல்லாமல் அனைத்து தரப்பினர்களும் ஆர்வத்துடன் வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு செல்வது வழமையாகும்.

ஆனால் சிறுபான்மை சமூகத்தில் முஸ்லிம் மக்களில் பணக்கார குடும்பம் மற்றும் உயர்பதவிகள் வகிக்கின்ற குடும்பங்களை சேர்ந்த பெண்கள் வாக்களிக்க செல்வதில்லை.

அதுபோல் நீண்டகால ஈழ யுத்தத்தில் விரக்திநிலை அடைந்துள்ள தமிழ் மக்களும், விடுதலை போராட்டத்தை அதிகம் நேசித்தவர்களும் “எந்த சிங்களவர் வந்தால்தான் நமெக்கென்ன” என்ற மனோநிலையில் வாக்களிப்பதில் ஆர்வம் காண்பிப்பதில்லை.    

இவ்வாறான அலட்சியப்போக்கு இருக்கும் வரைக்கும் சிறுபான்மை மக்களின் பலத்தினால் ஜனாதிபதியை தீர்மானிக்க முடியாத நிலை காணப்படுவதோடு சிறுபான்மை மக்களின் வாக்குப்பலம் பெறுமதியற்றதாகிவிடும்.  

இந்த தேர்தலில் சிறுபான்மை மக்களில் பெரும்பாலானவர்கள் யாருக்கு வாக்களிக்க உள்ளார்கள் என்பது ரகசியமல்ல. இந்த நிலையில் சிறுபான்மை மக்களில் குறிப்பிட்ட வர்க்கத்தினர் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருப்பது சிறுபான்மை இனத்தின் அரசியல் பலயீனத்தை காண்பிக்கும்.

எனவே சிறுபான்மை மக்கள் விரும்புகின்ற வேட்பாளரை வெற்றிபெற செய்வதற்காக உழைத்தவர்கள் தமிழ் முஸ்லிம் சமூகத்தில் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருப்பவர்கள் விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அதாவது சிறுபான்மை இனத்தவர்களின் வாக்களிக்கும் வீதத்தை அதிகரிக்க செய்வதன் மூலம்தான் சிறுபான்மை மக்கள் விரும்புகின்ற வேட்பாளரை வெற்றிபெற செய்ய முடியும். இல்லாவிட்டால் பெரும்பான்மை சிங்கள மக்களில் அதிகமாணவர்கள் விரும்புகின்ற வேட்பாளர்தான் வெற்றிபெறுவார். இதனை உரியவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். 

Fri, 15 Nov 2019 23:58:32 +0530

இலங்கை அரசியலில் சிறுபான்மையினரின் வாக்குகளின் சக்தி

இலங்கை அரசியலில் சிறுபான்மையினரின் வாக்குகளின் சக்தி | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

இந்த நாடு ஒரு தனி இனத்திற்கோ அல்லது மதத்திற்கோ சொந்தமான நாடு கிடையாது.சிறுபான்மையினரை விலக்கித் தள்ளி ஓரங்கட்டி செய்யும் எந்த அரசியல் செயற்பாடும் இந்த நாட்டில் வெற்றி பெற்றது கிடையாது.

சிறுபான்மை மக்களான தமிழர்கள்,முஸ்லீம்கள், கிறஸ்தவர்களை நிராகரித்துவிட்டு, அவர்களின் அபிலாஷைகளை குழி தோண்டிப் புதைத்துவிட்டு அவர்களின் எலும்புக் கூடுகளில் இருந்து முதுகெலும்புகளை வாரி உருவி அதன் உச்சியில் பெரும்பான்மைவாதத்தின் கொடியேற்ற நினைத்தவர்கள் அனைவரையும் இந்த நாடு நிராகரித்திருக்கிறது.

சிறுபான்மையினரைத் துன்புறுத்தி, அவர்களின் உரிமைகளை நசுக்கி, அவர்களின் இருத்தல் மீது நெருப்பை அள்ளிக் கொண்டும் அனைத்து முயற்சியும் தோல்வியடைந்திருக்கின்றன என்பது வரலாறு.

இனவாதத்தின் நெருப்புக் கங்குகளைக் கொண்டு அரசியல் செய்ய கிளம்பிய அனைவரையும் சிறுபான்மை என்கின்ற குளிர் நீர் நீர்த்திருக்கிறது என்பதும் வரலாறு.

இனவாதச் சாத்தான் வாயை அகலத் திறந்து இந்த நாட்டின் சமாதான சகவாழ்வை விழுங்கித் தள்ள எத்தனித்த போதெல்லாம் சிறுபான்மையினரின் தேவதூதனின் இறைக்கைகளுக்குள் அந்த இனவாதச் சாத்தான் நெருங்கிச் செத்ததுதான் வரலாறு.

இந்த நாடு சுதந்திரம் அடைந்தது முதல் அல்லது அதற்கு முன்னரும் இனவாதத்தின் விஷக் கொடுக்குகள் எம்மை வீழ்த்த எத்தனை முறையோ முனைந்தும் தோற்றுத்தான் போய்விட்டன.

தேர்தல் அரசியல் முடிவுகள் அதற்குச் சான்று.

அஷ்ரப் அன்று பிரேமதாசவை ஆதரித்தார்.பிரேமதாச வென்றார்.

1994 தேர்தலில் சிறுபான்மை முஸ்லீம்கள் சந்திரிக்காவை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்தார்கள்.சந்திரிக்கா வெற்றி பெற்றார்.

1999ம் ஆண்டைய ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை முஸ்லீம்கள் சந்திரிக்காவை ஆதரித்தனர்.சந்திரிக்கா ஜனாதிபதியானார்.

2000ம் ஆண்டைய பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிறஸ் மக்கள் கூட்டணியில் கதிரைச் சின்னத்தில் கேட்டது.வெற்றியும் பெற்றது.

2000ல் ரவூப் ஹக்கீம் முகா உறுப்பினர்களோடு கட்சி தாவினார்.அரசாங்கம் பெரும்பான்மையை இழந்தது. சந்திரிக்கா பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு அழைத்தார்.

2001 பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிறஸ் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்தது.ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றது.ஜனாதிபதி ஒரு கட்சியும் பிரதமர் ஒரு கட்சியுமாக தொங்கு பாராளுமன்றம் உருவாகியது.

2004 பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிறசின் உதவி இல்லாமல் சந்திரிக்காவின் கூட்டணி வெற்றி பெற்றது.ஆனால் ஜே.வி.பி சந்திரிக்காவின் மக்கள் கூட்டணியோடு நின்று தேர்தல் கேட்டது.அப்படி இருந்தும் 105 ஆசனங்களை மாத்திரமே அவர்களால் பெற முடிந்தது.காரணம் சிறுபான்மையினர் அவர்களோடு இல்லை.113 பெரும்பான்மை இல்லாமலே அரசாங்கம் அமைக்கப்பட்டது.

2005 ஜனாதிபதித் தேர்தல்.மஹிந்த தரப்பு விடுதலைப் புலிகளோடு டீல் பேசி வட- கிழக்கு தமிழர்களை தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு செய்தத.வாக்களிக்கச் சென்ற ஒருவரின் கையை விடுதலைப் புலிகள் வெட்டியதோடு மக்கள் வாக்குச் சாவடிப்பக்கமும் போகவில்லை.தமிழர்களின் வாக்கு கிடைத்திருந்தால் ரணல் ஜனாதிபதியாகி இருப்பார்.சிறுபான்மையினர் வாக்களிக்காததனால் ரணில் தோற்றுப் போனார்.

2010 ஜனாதிபதித் தேர்தல் சிறுபான்மையினர் சரத் பொன்சேகாவை ஆதரித்தனர்.ஆனால் மஹிந்த வெற்றி பெற்றார்.தேர்தல் ஆணையாளர் கடத்தப்பட்டதும்,துப்பாக்கி முனையில் வைத்து வெற்றியாளரை அறிவித்ததும்,அன்னத்திற்கு இடப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் பிற்காலத்தில் குப்பைகளுக்குள் இருந்து வெளிப்பட்ட செய்திகளையும் பலர் அறிவார்கள்.

2015 பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் இரு சிறுபான்மை இனத்தோரும் மஹிந்தவிற்கு எதிராக நின்றனர்.மைத்திரி வெற்றி பெற்றார்.ஐ.தே.க பாராளுமன்றில் பெரும்பான்மை எடுத்தது.

சுருக்கமாகச் சொன்னால் சிறுபான்மை வாக்குகள் இல்லாமல் ஒரு பெரும்பான்மைத் தலைவர் வெற்றி பெறுவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த கோட்டா தரப்பு பெரும்பான்மைச் சிங்களவர்களின் வாக்குகளை மாத்திரம் பெற்று வெற்றி பெறலாம் என்ற முயற்சியில் இறங்கி இருக்கின்றனர்.இந்த உத்வேகத்திற்கு நல்லாட்சியின் தோல்வி மற்றும் இறுதி உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் காரணமாக இருக்கலாம்.உள்ளூராட்சித் தேர்தலின் முடிவுகளை வைத்து எந்த சந்தரப்பத்திலும் ஜனாதிபதித் தேர்தலை முடிவு செய்ய முடியாது.நண்பனுக்கும்,அயலவனுக்கும்,உறவினர்களுக்கும் இடையே நடக்கும் ஒரு வட்டாரத் தேர்தலில் உள்ள வாக்காளனின் அரசியல் மனோ நிலை இரண்டில் ஒருவரை முழு நாட்டிற்கும் தெரிவு செய்யும் ஜனாதிபதித் தேர்தலில் இருக்காது.

70 சதவீத சிங்கள வாக்குகளில் 50 சதவீதத்தைப் பெறுவது என்பது அறவே சாத்தியமில்லாத விடயம்.ஜனாதிபதித் தேர்தலில் இரட்டைக் கட்சி முறையைக் கொண்ட ஒரு நாட்டில் இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளுக்கும் பெரும்பான்மை வாக்குகள் சரிசமமாக அல்லது ஒரு சிறு வித்தியாசத்துடன் இரண்டாகப் பிரியும்.கோத்தா தரப்பு எதிர்பார்ப்பது போல 50:20 என்று ஒரு போதும் பிரியப்போவதில்லை.ஆகக் கூடியது 40:30 என்ற வீதத்திலேயே பிரியும்.

இதற்கு நல்ல உதாரணம் 2015 ஜனாதிபதித் தேர்தல்.யுத்தத்தை முடித்த,சிங்களவர்களின் இதயத்தை வென்ற மஹிந்த ராஜபக்‌ஷ களமிறங்கியும் சிறுபான்மை தமிழர்களினதும்,முஸ்லீம்களினதும் வாக்குகள் இல்லாமல் அவரால் எடுக்க முடிந்தது 47 சதவீதமான வாக்குகளே.சிறுமான்மையினரின் ஆதரவு இல்லாமல் அவரால் வெல்லவே முடியாது.

ஆகவே சிறுபான்மையினரின் ஆதரவு இருக்கும் வேட்பாளர் பெரும்பான்மை வாக்குகளில் அரைவாசிக்கும் குறைவாகப் பெற்றாலும் வெற்றி பெறுவார்.ஆனால் பெரும்பான்மையினரின் வாக்குகள் மூலமாக மாத்திரம் வெல்ல நினைத்துப் பகல் கனவு காணும் ஒரு வேட்பாளர் 50 சதவீதமான பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவது என்பது நினைக்க முடியாத விடயம்.சிறுபான்மை வாக்குகள் இல்லாமல் சிங்களவர்களின் மனங்கவர்ந்த மஹிந்தவாலேயே முடியாதென்றால் வேறு எவரால் முடியப் போகிறது.

இந்த சிறுபான்மைச் சக்திதான் இலங்கையின் அரசியலைத் தீர்மானித்திருக்கிறது.இனியும் தீர்மானிக்கும்.

இனவாதம் பேசி அரசியல் செய்ய நினைக்கும் அனைவருக்கும் சிறுபான்மையினரின் சக்தி என்பது ஒரு எச்சரிக்கைதான்.

Raazi Muhammadh Jaabir

Sun, 10 Nov 2019 20:19:30 +0530

பொன்சேக்காவை ஏற்றுக்கொண்ட தமிழர்கள், ஏன் கோத்தாவை ஏற்கவில்லை? இதில் முஸ்லிம்களுக்கு படிப்பினை உள்ளதா?

பொன்சேக்காவை ஏற்றுக்கொண்ட தமிழர்கள், ஏன் கோத்தாவை ஏற்கவில்லை? இதில் முஸ்லிம்களுக்கு படிப்பினை உள்ளதா? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

2009 மே மாதம் முள்ளியவாய்காலோடு முடிவுற்ற இறுதி யுத்தத்தில் ஏராளமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு காணாமல் போனார்கள். இந்த யுத்த குற்றம் மேற்கொண்ட இராணுவத்தினரும், அதற்கு தலைமை தாங்கிய இராணுவ தளபதியுமே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

ஆனால் இராணுவத் தளபதி மீது குற்றம்சாட்டாமல் பாதுகாப்பு செயலாளர் மீதே தமிழ் மக்கள் விரலை நீட்டினார்கள்.

2010 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களித்ததன் மூலம் அவர் குற்றமற்றவர் என்ற சைகையை காண்பித்தார்கள்.

அவ்வாறானால் யார் யுத்தக் குற்றம் மேற்கொண்டார்கள் ?

ஒரு யுத்தம் நடைபெறுகின்றபோது மேற்கொள்ளப்படுகின்ற இராணுவ ரகசியங்கள் வெளியாகுவதில்லை. ஆனால் அவர்களுக்குள் அரசியல் முரண்பாடுகள் ஏற்பட்டால் ரகசியங்கள் வெளியாகுவது இயல்பாகும். அதனாலேயே இறுதி யுத்ததின்போது அரசாங்கம் மேற்கொண்ட பல ரகசியங்கள் அம்பலமானது.

யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது புலிகள் தங்களது கட்டுப்பாட்டு பிரதேசங்களை ஒவ்வொன்றாக இழந்துகொண்டு பின்வாங்கி சென்றபோது அவர்களது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் வாழ்ந்த மக்களும் இடம்பெயர்ந்து சென்றார்கள்.

இதனால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதனால் மக்களை வெளியேற்றும் வரைக்கும் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளுமாறு இரு தரப்புக்களுக்கும் ஐ.நா சபை அழுத்தம் வழங்கியது.

இந்த சூழ்நிலையில் யுத்த நிறுத்தத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உடன்பட்டாலும் பாதுகாப்பு செயலாளர் கோட்டப்பாய உடன்படவில்லை. தொடர்ந்து தாக்குதல் நடைபெற்றதனால் ஐ.நா அதிகாரிகளாலும் அங்கிருக்க முடியாமல் வெளியேறினார்கள்.

பின்பு எதிர்பார்த்ததுபோன்று ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கனரக ஆயுதங்களின் எறிகணை வீச்சினால் கொல்லப்பட்டார்கள். இறுதியில் ஐ.நா சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் நவநீதன்பிள்ளையின் அனுசரணையுடன் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் தலைமையில் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் வெள்ளைக்கொடியுடன் இராணுவத்திடம் சரணடைந்தார்கள்.

சரணடைந்தவர்களை பத்திரமாக பாதுகாக்குமாறு இராணுவ தளபதியினால் உத்தரவிடப்பட்டும் இறுதியில் சரணடைந்தவர்கள் அனைவரும் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

வெளியுலகுக்கு தெரியாத இந்த ரகசியங்களும் இராணுவத் தளபதியினாலேயே வெளிப்படுத்தப்பட்டது. அதனால் சரத் பொன்சேக்கா சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்பாவி சிறுபான்மை மக்களின் ஆயிரக்கணக்கான உயிர்களைவிடவும் சிங்கள மக்களிடம் வெற்றிச் செய்தியை கூறி தனது அரசியல் சக்தியை பலப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே அன்று கோத்தாவின் மனதில் இருந்தது.

யுத்தக் குற்றம் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான காட்சிகள் மேற்குலக ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டதுடன், இந்த விவகாரம் ஐ.நா சபைக்கும் சென்றது.

இந்த சம்பவம் மூலம் முஸ்லிம்களும் படிப்பினை பெறவேண்டும். அதாவது அண்மையில் மௌலவி சஹ்றான் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்பு சந்தேகத்தின்பேரில் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டு சில வாரங்களின் பின்பு விடுவிக்கப்பட்டார்கள்.

ஆனால் இந்த சூழ்நிலையில் கோத்தா அதிகாரத்தில் இருந்திருந்தால் இன்னும் வகைதொகையின்றி ஏராளமான அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு காணமல் போயிருப்பார்கள். அதாவது தமிழ் மக்களின் நிலைமைதான் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்டிருக்கும்.

எனவேதான் கோத்தபாய அதிகாரத்துக்கு வரவேண்டும் என்று வரிந்துகட்டுபவர்கள் அவர் யார் என்பது பற்றி முதலில் அறிந்திருக்க வேண்டும்.

Thu, 07 Nov 2019 13:05:12 +0530

சஜித் பிரேமதாஸவுக்கு எட்டாக் கனியாகும் ஜனாதிபதி பதவி

சஜித் பிரேமதாஸவுக்கு எட்டாக் கனியாகும் ஜனாதிபதி பதவி | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

கோடாபய ராஜபக்ஸ மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோர்களுக்கிடையில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நாள் தொடக்கம் பலத்த போட்டி நிலவியபோதிலும், அண்மைய நாட்களாக சஜித்தின் வெற்றி வாய்ப்புகள் அந்தக் கட்சி சார்பானவர்களின் செயற்பாடுகள் காரணமாக குறைந்துகொண்டு செல்வதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

இதில் முக்கிய திருப்பு முனையாக அமைந்திருப்பது, சஜித் வெற்றி பெற்றாலும் தானோ பிரதமர் என ரணில் விக்கிரமசிங்க அறிவிப்புச் செய்துள்ள விடயமாகும். சஜித் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுமிடத்து அவரது வழிகாட்டலின்கீழ் ஐக்கிய தேசியக் கட்சி புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த அக்கட்சியின் ஆதரவாளர்களுக்கு ரணிலின் அறிவிப்பு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாகவும், தபால்மூல வாக்களிப்புக்கு முந்திய தினம் மேற்படி அறிவிப்பு செய்தமை சஜித் பிரேமாதாஸவுக்கு விழும் வாக்குகளை இல்லாமல் செய்யும் நோக்கத்தில் திட்டமிட்டுச் செய்யப்பட்டுள்னதாகவும் பேசப்படுகின்றது. 

மத்திய வங்கி பிணைமுறி முறைகேடு மற்றும் நாட்டில் இடம்பெற்ற பல சம்பவங்களுடன் ரணிலை சம்பந்தப்படுத்தி தொடர்ச்சியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வந்ததும் ஐ.தே.க ஆதரவாளர்கள் மீண்டும் ரணிலின் தலைமையில் ஆட்சி நடைபெறுவதை விரும்பாது தங்களது வாக்குகளை மாற்றுக் கட்சி வேட்பாளருக்கு அளித்துள்ளதாகவும் ஆங்காங்கே கருத்து தெரிவிக்கப்படுகின்றது. மொட்டு தரப்பினர் தங்களுக்கு 80வீதமான தபால் வாக்குகள் கிடைத்துள்ளதாக பிரச்சாரம் செய்வதும் இந்த விடயத்தை வைத்தே எனக் கொள்ளவும் முடியும்.

அது மாத்திரமன்றி மிலேனியம் கோப்ரேஸன் சலேன்ஞ் உடன்படிக்கையானது (எம்.சி.சி) நாட்டைத் துண்டாடி அந்நிய நாட்டுக்கு அடகு வைக்கும் உடன்படிக்கை என்று வர்ணிக்கப்படுவதால் அதனைக் கைச்சாத்திடுவதற்கு எதிராக பல எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்ற நிலையில், தேர்தலுக்கு முன்பதாக அதனை கைச்சாத்திட ரணில் மற்றும் மங்கள அதிக முனைப்புக் காட்டுவதும் சஜித்தை தோற்கடிக்கும் சதியின் ஒரு அங்கமாகவே இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிடுகின்றனர்.

பௌத்த மக்களின் முக்கிய தலங்கள், குறித்த உடன்படிக்கையின் கீழ் அந்நிய நாட்டுக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்படவுள்ளதாக காட்டப்பட்டுள்ளதால், சிங்கள மக்களிடம் மிகுந்த விசனத்தை ஏற்படுத்தியுள்ள இந்த உடன்படிக்கை விவகாரம் நாடெங்கும் எதிரொலிக்கின்றது. சிங்கள் மக்கள் தாங்கள் சார்ந்துள்ள கட்சி அரசியலுக்கு அப்பால் நாட்டிற்கு முன்னுரிமை கொடுப்பதில் என்றும் தயக்கம் காட்டுவதில்லை. 

ஐக்கிய தேசியக் கட்சி இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் விடயத்தில் காட்டும் அவசரம் காரணமாக, அதனால் நாட்டின் இறைமைக்கே பாதிப்பு வரலாம் என்ற அச்சம் தற்போது மேலாங்கி வருவதன் காரணமாக அக்கட்சி ஆதரவாளர்களே மாற்றுக் கட்சி வேட்பாளரை ஆதரிக்கும் நிலைக்கு வந்துள்ளதால் நாளுக்கு நாள் சஜித்தின் ஆதரவு கணிசமாக குறைந்து செல்வதாக அரசியல் அவதானிகளால் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.

உண்மையில் நாட்டின் ஜனாதிபதியைத் தீர்மானிக்கப்போவது சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளே. வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம், அவர்கள் சார்ந்துள்ள கட்சியின் வெளியுறவு மற்றும் பொருளாதாரக் கொள்கை என்பவற்றை வைத்து தங்களது ஆதரவைத் தீர்மானிக்கும் மிதக்கும் வாக்காளர்களில் கணிசமாக தொகையினர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதிலிருந்து விலகி வருவதாக பேசப்படும் விடயமும் சஜித்தின் வெற்றியை தட்டிவிடும் ஆபத்தை தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கையை எந்த வேட்பாளரும் ஏற்றுக் கொள்ளாத நிலையில், அந்த தரப்பு சஜித்தை ஆதரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தக் கோரிக்கைகளில் நாட்டுக்கு பாதமான விடயங்கள் உள்ளடங்கியிருப்பதாக தெரிவித்து இதனை ஏற்றுக்கொள்வதில் இருந்து  பொதுஜன பெரமுன தரப்பு ஏற்கனவே விலகிவிட்டது.

சஜித் தரப்பு இதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்று வெளிப்படையாக கூறினாலும், மறைமுகமாக எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் பிரகாரமே கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக சிங்கள மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்படும் அரசியல் பிரச்சாரம் சஜித்தின் வெற்றியை கேள்விக் குறியாக்கியுள்ளது என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படாமலில்லை. 

மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதிலும், நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதிலும் முன்வைக்காத கோரிக்கைகளை சஜித்திடம் முன்வைக்க கூட்டமைப்பு தூண்டிவிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இன்றைய பேசுபொருளாக காணப்படுகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற முஸ்லிம் தலைவர்கள் தலைமை தாங்கும் கட்சிகள் எந்த அடிப்படையில் தங்களது ஆதரவைத் நிபந்தனைகளின்றி தெரிவித்தன என்று இதுவரை அவர்கள் வெளிப்படையான கருத்துகளை முன்வைத்ததாக அறியவில்லை. 

சஜித்தின் தரப்பிலிருந்தே அவருக்கான ஆதரவு தளம் இல்லாமல் செய்யப்படுவதற்கான முஸ்தீபுகளே அண்மைய நாட்களாக நடந்தேறி வருவதாகவும், இவ்வாறான விடயங்கள் சஜித்தின் வெற்றியை கேள்விக்குறியாக்கி வருவதாக பலத்த விமர்சனங்கள் நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

அது மாத்திரமன்றி சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு விவகாரத்தில் முக்கிய பொறுப்பினை வழங்குவதாக பகிரங்க அறிவிப்புச் செய்த சஜித்துக்கு, யாரை பிரதமராக்குவேன் என்று அறிவிப்பது சுலபமான விடயமே. ஆனால், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊடகவியலாளர் உட்பட பலரும் பிரதமர் தொடர்பில் கேள்விகளை முன்வைத்தபோதும் அவர் அதற்கு பதிலளிக்காது தவிர்ந்து வருவது சிறுபான்மை மக்களிடத்தில் வித்தியசமான பார்வையைத் தோற்றுவித்துள்ளது. காரணம் சஜித்தின் தரப்பு முக்கிய பிரமுகரான சம்பிக்க ரணவகவை பிரதமாராக்கும் எண்ணத்துடன்தான் சஜித் பிரதமர் குறித்து இதுவரை வெளிப்படையாக வாய்திறக்கவில்லை என்ற சந்தேகங்கள் மேலோங்கி காணப்படுகின்றன.

"முஸ்லிம் விரோத செயற்பாடுகளை இலங்கையில் முடுக்கிவிட்ட சம்பிக்க ரணவக, சஜித் அரசில் பிரதமராக நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினை ஆதரிக்கும் முஸ்லிம்கள் கடும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். சம்பிக ரணவக பிரதமராக நியமிக்கப்பட்டால் நாம் அங்கு இருக்க மாட்டோம் என அக்கட்சி முஸ்லிம் உறுப்பினர்கள் கூறி வருகின்றனர். அவர் இருக்கும் அமைச்சரவையிலே அங்கம் வகிக்க முஸ்லிம்கள் இருக்க முடியாது. இந்த நிலையில் அவர் பிரதமராக நியமிக்கப்பட்டால் முஸ்லிம்களின் நிலமை என்னவாகும். எனவே தேர்தலுக்கு முன்னர் பிரமராக நியமிக்கப்படப்போவது ரணிலா? சம்பிக்கவா? என்று சஜித் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்" என முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு கோரிக்கை முன்வைத்துள்ளதாக ஒரு இணையத்தளம் செய்தி வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறான விடயங்களை வைத்து நோக்கும்போது, சஜித் பிரேமதாஸவுக்கு ஜனாதிபதி பதவி எட்டாக் கனியாகிவிடலாம் என்ற அச்சம் அவருக்கும் அவரை ஜனாதிபதியாக்க துடிக்கும் தரப்பினருக்கும் தற்போது ஏற்பட்டுள்ளதாகவே பேசப்படுகின்றது.

எம்.ஐ.சர்ஜுன்
சாய்ந்தமருது

Tue, 05 Nov 2019 17:39:01 +0530

தொடரும் வாக்கு எண்ணிக்கைக் குழப்பம் - 50% இற்கு மேல் முதற்சுற்றில் தேவை என்பது ஏன்?

தொடரும் வாக்கு எண்ணிக்கைக் குழப்பம் - 50% இற்கு மேல் முதற்சுற்றில் தேவை என்பது ஏன்? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

அண்மையில் நடந்த அதிர்வு நிகழ்ச்சியில், குறித்த சுயேட்சை வேட்பாளர், இத்தேர்தலில் முதற்சுற்றில் யாரும் 50% மேல் பெறமாட்டார்கள். ஏனைய வேட்பாளர்களுக்கு வாக்களிப்பவர்களும் இரண்டாம் வாக்கைப் பாவிக்க மாட்டார்கள். ஜே வி பி யிற்கு வாக்களிப்பவர்கள்கூட, பெரிதாக இரண்டாம் வாக்கை அளிக்க மாட்டார்கள். எனவே, தனது இரண்டாம் வாக்கே வெற்றி வேட்பாளரைத் தீர்மானிக்கும்; என்ற கருத்தை முன்வைத்தார்.

அப்போது நிகழ்ச்சியை நடாத்தியவர்களில் ஒருவர் ஒரு கேள்வியைத் தொடுத்திருந்தார். அதாவது:

வாக்குகள் 100
A 48
B 40
ஏனையோர் 12 அதில் உங்களுடைய வாக்குகள் 3

இப்பொழுது இரண்டாம் சுற்று எண்ணிக்கைக்கு செல்லவேண்டும். இரண்டாம் சுற்றில் உங்களது இரண்டாவது வாக்குகள் A யின் வெற்றியைத் தீர்மானிக்க அவசியமில்லை. B யிற்கு அளித்தாலும் அவர் வெற்றிபெற போதாது. எனவே, நீங்கள் எவ்வாறு ஜனாதிபதியைத் தீர்மானிப்பீர்கள்? என்ற கேள்வியை எழுப்பினார்.

அதற்கு வேட்பாளரின் பதில் பலவாறாகவெல்லாம் அமைந்திருந்தது. ஒன்று, முதல் சுற்றில் A,B இருவரும் தோற்று இரண்டாம் சுற்றில் அவர்களில் ஒருவரை நாம் வெல்லவைப்போம்; என்பதாகும்.

நிகழ்ச்சி நடத்துனர் மீண்டும் கணக்கைச் சொல்லி, A யின் வெற்றிக்கு உங்கள் வாக்கு தேவையில்லை; B உங்கள் வாக்கு கிடைத்தும் வெற்றிபெறமுடியாதே!, என்றபோது அது முதலாவது சுற்றில் பயன்படுமே; என்றார்.

இரண்டாவது வாக்கு முதற்சுற்றில் எவ்வாறு பயன்படும்?

அதன்பின், நாம் வெற்றிபெறும் வேட்பாளருக்கே ஆதரவு வழங்குவோம்; என்றார்.

அவர் வெற்றிபெறும் வேட்பாளர் என்றால் நீங்கள் எவ்வாறு ஜனாதிபதியைத் தீர்மானிப்பது?

நீங்கள் தீர்மானிப்பதாக இருந்தால் உங்களது இரண்டாம் வாக்கு கிடைக்காதபோது அவர் தோல்வியடையக்கூடிய வேட்பாளராக அல்லவா இருக்கவேண்டும்.

அதாவது முதலாம் சுற்று எண்ணிக்கையில் யார் இரண்டாவதாக வருவார்; என நீங்கள் கணிக்கின்றீர்களோ, அவருக்கு உங்கள் இரண்டாம் வாக்குகளை வழங்கி வெற்றிபெறச் செய்யவேண்டும்?

சுருங்கக்கூறின், நீங்கள்/ உங்களது சிவில் அமைப்பு யாருக்கு இரண்டாம் வாக்கை வழங்கச் சொல்கிறீர்களோ அவர் முதல் சுற்று எண்ணிக்கையில் இரண்டாம் இடத்திற்கே வருவார்; என பிரகடனப்படுத்துகிறீர்கள்; என்பது பொருளாகும்.

முதல் சுற்றில் 50% மேல் என்பது என்ன?
—————————————————-
அளிக்கப்படுகின்ற செல்லுபடியான வாக்குகள் 100 எனக் கொள்வோம்.

முதல் சுற்று எண்ணிக்கையில்
A 51 வாக்குகள்
B 30 வாக்குகள்
ஏனையோர் 19 வாக்குகள் எனக்கொள்வோம்.

முதல் சுற்றில் 50% மேல் எடுத்தாலும் இரண்டாம் சுற்று எண்ணத்தான் வேண்டும்; என சட்டம் சொல்கிறது; என கற்பனை செய்வோம்.

இப்பொழுது இரண்டாம் சுற்றில் ஏனைய 19 பேரும் தமது இரண்டாம் வாக்கை B யிற்கே அளிக்கிறார்கள்; எனக்கொள்வோம். இப்பொழுது B யின் கூட்டுத்தொகை என்ன? 49 ஆகும். இப்பொழுதும் A தான் வெற்றியாளர்.

இப்படிப்பார்ப்போம்
எஞ்சிய 19 பேரில் 10 பேர் தமது இரண்டாம் வாக்கை B யிற்கு அளிக்கின்றனர். ஏனைய 9 பேரும் A, B தவிர்ந்த ஏனையோருக்கு தமது இரண்டாம் வாக்கை அளிக்கின்றனர்.

இப்பொழுது அந்த 9 பேரும் தமது மூன்றாம் வாக்கை B யிற்கே அளிக்கின்றனர். இப்பொழுது Bயின் கூட்டுத்தொகை என்ன? இப்பொழுதும் 49 தான். எனவே, வெற்றியாளர் இப்பொழுதும் A தான்.

உண்மையில் அந்த 19பேரும் B யிற்கே இரண்டாம் வாக்கை வழங்குவார்கள்; என்று கூறமுடியாது. அவ்வாறு வழங்கினாலும்கூட அவரால் 49 ஐத் தாண்டமுடியாது.

எனவே, சிந்தித்துப் பாருங்கள். முதல் சுற்றில் ஒருவர் 50% மேல் பெற்றுவிட்டால் இரண்டாம் சுற்று எண்ணுவதில் ஏதாவது பிரயோசனம் உண்டா? இல்லை. காலநேரம்தான் வீணாகும். எனவேதான் முதல் சுற்றில் ஒருவர் 50% ஐத் தாண்டினால் அவர்தான் வெற்றியாளர். தாண்டாவிட்டால் இரண்டாம் சுற்று எண்ணவேண்டும்; என்று சட்டம் கூறுகின்றது.

சிலர் இதனைப் புரிந்துகொள்ளாமல் முதல் சுற்றில் 50% இற்குமேல் என்பது “ கட்டாயம்”. அவ்வாறு பெறாவிட்டால் அவர்கள் முதல் சுற்றில் தோல்வியடைகிறார்கள். அதன்பின் இரண்டாம் சுற்றில், இரண்டாம் மூன்றாம் வாக்குகள் மூலம்தான் வெற்றிபெறுகிறார்கள்; என்று கற்பனை செய்துகொண்டு பகிரங்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கூறுகிறார்கள்.

இன்னும் சில சகோதரர்கள் இரண்டாம் சுற்றில் 50% இல் மேல் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்றெல்லாம் கேட்கின்றார்கள்.

எனவே, புரிந்துகொள்ளுங்கள், எந்தவொரு சுற்றிலும் “50% இற்குமேல்” என்பது கட்டாயம் இல்லை. அது வெறும் எண்கணிதம் மாத்திரமே!

தேர்தல் விஞ்ஞாபனம்
—————————-
தேர்தல் விஞ்ஞாபனம் என்பது ‘ தான் தெரிவுசெய்யப்பட்டால் செய்வதற்கு உத்தரவாதமளிக்கின்ற வேலைத்திட்டங்களும் அவற்றிற்கு வழிகாட்டுகின்ற கொள்கைத் திட்டங்களுமாகும்.

நீங்கள் ஜனாதிபதியைத் தீர்மானிக்கின்ற வேட்பாளர்தானே! உங்களுக்கேன் விஞ்ஞாபனம்? என்ற கேள்வியை நடுவர் தொடுத்தபோது அநுர, மகேஷ் சேனாநாயக்கா போன்றவர்களும் வெளியிட்டுத்தானே இருக்கிறார்கள்; என்பது அவரின் பதிலாக இருந்தது.

தேர்தல் முறையில்தான் அவருக்குத் தெளிவில்லை; குழப்பம் என்றுவிட்டுவிடுவோம். அவர் நீண்ட அனுபவமுள்ள அநுபவசாலி. தான் அரசியல் துறையில் உயர்கல்வி கற்றிருப்பதாக கூறுகின்ற ஒருவர். ஒரு சராசரி மனிதன்கூட கூறமுடியாத பதிலை எவ்வாறு கூறினார்.

அவர்கள் தம்மை வெற்றியடையச் செய்யுங்கள். இவற்றையெல்லாம் செய்வோம்; என்று விஞ்ஞாபனம் வெளியிட்டிருக்கின்றார்கள். இவரும் என்னையும் ஜனாதிபதியாக்குங்கள், நான் இவற்றைச் செய்கிறேன்; என்றா விஞ்ஞாபனம் வெளியிட்டிருக்கின்றார்? அவர்களை ஒப்பிட்டு இவர் ஏன் அந்தப் பதிலைக் கூறினார்?

இவரது விஞ்ஞாபனத்தை அடுத்தவேட்பாளரிடம் கொடுத்து அவர்கள் அமுல் படுத்த வேண்டுமாம். ஆனால் அவை கோரிக்கைகளும் இல்லையாம். demand உம் இல்லை. request ம் இல்லை என்கின்றார்.

சமூகத்தின் சார்பில் போட்டியிடுகிறேன்; எனக்கூறிக்கொண்டு இவ்வாறு சொல்வது தன்னையும் தான் சார்ந்த சமூகத்தையும் கேலிக்குரியதாக்காதா?

இந்த விஞ்ஞாபனம் வெளியிடல் முஸ்லிம்களுக்கு கிடைத்த பொன்னான சந்தர்ப்பம் என்பதுபோல் கூறுகிறார். தமிழ்க்கட்சிகளின் 13 அம்ச கோரிக்கைகளுக்கு தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்களில் கிடைத்த விளம்பரத்தில் 100 இல் ஒரு பங்கு விளம்பரமாவது கிடைத்ததா? ஐந்து லட்சம் முஸ்லிம் குடும்பங்களுக்கு அனுப்பி அவர்கள் என்ன செய்வது.

இதைவிட இவற்றை முஸ்லிம்களின் கோரிக்கையாக முன்வைத்து நேரடியாக ஒரு வேட்பாளருக்கு ஏன் ஆதரவு வழங்கமுடியாது? ஏன் வேட்பாளர் வேடம்?

இந்த சமூதாயத்தை எத்தனைபேர் எத்தனை பக்கம் ஏமாற்றுகிறீர்கள். பாவம் இந்த சமுதாயம்.

அரசியல்வாதிகளின் சுயநலத்திற்கு நான் எதிரானவன் அல்ல. அரசியல்வாதி சுயநலமே இல்லாத பொதுநலவாதியாக இருக்கவேண்டுமென்ற வரட்டுத் தத்துவம் நான் பேசுவதில்லை. ஏனெனில் அது நடைமுறைச் சாத்தியமல்ல.

இது கலீபா உமர் ( ரலி) அவர்களின் காலமல்ல. இங்கு அரசியலில் யாரும் அவ்வாறு இல்லை. அவ்வாறு யாராவது இருக்க முற்பட்டால் அவர்களுக்கு இந்த அரசியலோ, இந்த சமூகமோ இடம் கொடுக்காது. ஆனால் உங்கள் சுயநலம் பொது நலத்தை மேவாததாக இருக்கட்டும்.

சமூகத்திற்கு தீங்கு இல்லாதவரையில் எதை வேண்டுமானாலும் அனுபவித்துக்கொண்டு செல்லுங்கள்.

இந்தத்தேர்தல் இந்த சமூகத்திற்கு இக்கட்டான ஒருதேர்தல். இதைப் புரியாமல் வேதாந்தம் பேசிக்கொண்டு ஒரு கூட்டம் அலைகிறது. அதற்குள் நீங்களும் குளிர்காயாதீர்கள்.

Sun, 03 Nov 2019 23:19:18 +0530

கல்முனை செயலகப் பிரச்சினை தீராமல் இருப்பதற்கு காரணம் யார்? காரணம் என்ன?

கல்முனை செயலகப் பிரச்சினை தீராமல் இருப்பதற்கு காரணம் யார்? காரணம் என்ன? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

கல்முனை செயலகப் பிரச்சினை இன்னும் தீராமல் இருப்பதற்கான பிரதான காரணம் அமைச்சர் ரவூப் ஹக்கீம்; என்பது எனது மனச்சாட்சியை அடகுவைக்காத எனது கருத்தாகும்.

தமிழர்கட்காக, அவர்களது கோரிக்கையில் த தே கூ இன் தலைவர் சம்பந்தன் வாதாடுகிறார். நியாயமே இல்லாத ஒரு கோரிக்கையை நியாயம் என்று சுமந்திரன் வாதாடுகிறார். தமிழ் பா உ க்கள், தலைவர்கள் என்று எல்லோரும் வாதாடுகின்றனர்.

மிகவும் துரதிஷ்டவசமான விடயம் என்னவென்றால் அமைச்சர் ஹக்கீம் முஸ்லிம்களுக்காக வாதாடுவதற்குப் பதிலாக அவர் நீதிபதியாக செயற்பட முனைகின்றார்.

அண்மையில் கல்முனையில் இருந்து அமைச்சர் ஹக்கீமைச் சந்திக்கச்சென்ற ஒரு குழுவில் ஒருவர், “ நீங்கள் கல்முனை தொடர்பாக எதுவும் வெளிப்படையாக பேசுவதில்லை; என்று கல்முனை மக்கள் உங்களைக் குறைகூறுகின்றார்கள்;” என்று கூறியபோது “நான் ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசமுடியாது; அவற்றை கட்சியின் பா உ க்கள் தான் பேசவேண்டும்;” என்றார்.

அப்பொழுது, “ ஒரு கட்சியின் தலைவர் ஏனையவர்களைவிடவும் சற்று நிதானமாகப் பேசவேண்டும்; என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் உரிய அவையில் ஏன் முஸ்லிம்களின் நியாயத்தை முன்வைத்து வாதாடாமல் இருக்கின்றீர்கள்? முழுமையான நியாயம் முஸ்லிம்களின் பக்கம் இருந்தும் ஏன் இதனை உங்களுக்கு செய்துமுடிக்க முடியாமல் இருக்கின்றது? என்ற கேள்வியைத் தொடுத்தேன்.

அதற்கு அவர் கூறிய பதில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது, “ இரு பக்கமும் பேசிப்பேசித்தானே ஒரு தீர்வுக்கு வரவேண்டுமென்றார்.”

இங்கு அவர் “ பேசி” என்று கூறவில்லை; மாறாக “ இரு தரப்புடனும் பேசிப்பேசி” (சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்து); அதாவது, அவர் இரு தரப்பிற்குமிடையில் ஒரு நடுநாயகமாக, நீதிபதியாக இருக்க முனைகின்றார். அந்தத் தரப்பை கொஞ்சம் விட்டுக்கொடுக்கச் சொல்வது; இந்தத் தரப்பை கொஞ்சம் விட்டுக்கொடுக்கச் சொல்வது....

இங்கு இரு கேள்விகள் எழுகின்றன. ஒன்று: நீங்கள் நடுவராகச் செயற்பட்டால் முஸ்லிம்கள் சார்பாக வாதாடுவது யார்? நீங்கள்தானே முஸ்லிம்களின் பிரதான அரசியல் தலைவர்! உங்களது கட்சிக்குத்தானே காலாகாலமாக கல்முனை முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாக்களிக்கிறார்கள்.
இரண்டு: நியாயமில்லாவிட்டாலும் அவர்கள் விடாப்பிடியாக இருக்கின்றார்கள்; என்பதற்காக விட்டுக்கொடுக்க வேண்டுமா?

பிரதமரை நாங்கள் சந்தித்தபோது சொன்னார்“ கல்முனை வரலாற்று ரீதியாக முஸ்லிம்களின் நகர்; என்றுதான் நாம் அறிந்திருக்கின்றோம். சுமந்திரனிடம் கூறிவிட்டேன்; கல்முனை நகரைவிட்டுவிட்டு ஏனைய ஊர்களை எவ்வாறு பிரிப்பது; என்பதை இரு தரப்பும் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்; என்று” என்றார்.

அதன்பின் திரு சுமந்திரனை தொலைபேசியில் அழைக்கின்றார். சற்று நேரத்தில் அவரும் வருகின்றார். அவரும் “ பிரதமரின் செய்தியை எங்கள் கட்சியில் எத்திவைத்துவிட்டேன்;” என்கின்றார்.

பெரிய மன ஆறுதலுடன் நாங்கள் திரும்பி வருகின்றோம். அதன்பின் தமிழ்த் தரப்பினர் உங்களிடம் சோலி புரட்டினால் அவர்களுக்கு நியாயத்தை எடுத்துக்கூற ஏன் உங்களால் முடியாமல் இருக்கிறது?

முஸ்லிம்களின் நியாயத்தின் சுருக்கம்

கல்முனையின் பிரதான பிரச்சினை என்ன? பாண்டிருப்பிற்கு, சேனைக்குடியிருப்பிற்கு, ..... தனியாக ஒரு செயலகம் இல்லை. அவர்களுக்கு தனியாக ஒரு செயலகம் வேண்டும். தாராளமாக வழங்கலாம். அதற்காக கல்முனை நகரின் ஒரு பகுதியை உடைத்து பாண்டிருப்பு செயலகத்துடன் ஏன் இணைக்க வேண்டும்?

கல்முனையில் சில தமிழர்கள் இருக்கின்றார்கள்; என்பதற்காகவா? அவ்வாறாயின் முஸ்லிம் பெரும்பான்மை அலகொன்றில் ஒரு தமிழரும் இருக்கக்கூடாதா? அப்படியாயின் அது முஸ்லிம்களுக்கும் பொருந்தவேண்டுமே!

தமிழ் பாடசாலை மற்றும் தேவாலயம் இருப்பதை ஒரு நியாயமாக காட்டுகிறார்களாம். ஏன் இருக்கக்கூடாதா?

எத்தனையோ பள்ளிவாசல்களும் முஸ்லிம் பாடசாலைகளும் தமிழ் பெரும்பான்மை அலகுகளுக்குள் இல்லையா? வடகிழக்குப் பூராகவும் இவற்றையெல்லாம் கணக்குப் பார்ப்போமா? ஏன் கல்முனையில் மாத்திரம் ஓரப்பட்ச நியாயம்?

முழு வடகிழக்கிலும், ஏன், முழு இலங்கையிலும் முஸ்லிம்களுக்கென்று இருக்கின்ற ஒரேயொரு பிரதான நகரம் கல்முனை; என்பதை பொறுக்க முடியாத இனவாதம்தானே இது? இதனை ஏன் சகோ ஹக்கீமால் சுட்டிக்காட்டி பேசமுடியாமல் இருக்கிறது?

நீதிபதி ஸ்தானத்தில் இருந்தால் எவ்வாறு பேசுவது? முஸ்லிம்களின் பிரதிநிதியாக செயற்பட்டால்தானே பேசமுடியும். அதற்கு அவர் ஆயத்தமில்லையே!

கடந்த இரண்டொரு தினங்களுக்கு முன் கல்முனையில் இருந்து ஒரு குழு திரு பசில் ராஜபக்ச அவர்களை இது தொடர்பாக சந்தித்தபோது,

“ முழு இலங்கையிலும் கல்முனைதான் முஸ்லிம்களின் ஒரேயொரு பிரதான நகரமாக நாம் அறிந்திருக்கின்றோம். மட்டுமல்ல, உலக வரைபடத்திலேயே, முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்கின்ற முஸ்லிம்பான்மை நகரம் கல்முனை; எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. என்று கூறுகின்றார்.

எனவே, கல்முனை முஸ்லிம்களின் நகரம் என்பதை பிரதமரும் அடுத்த கட்சித் தலைவர்களும் எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தமிழ்த் தரப்பினரின் விதண்டாவாதத்திற்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் கல்முனையில் இந்தப் பகுதியை விட்டுக்கொடுப்போமா? அந்தப்பகுதியை விட்டுக்கொடுப்போமா?, விட்டுக்கொடுப்பு செய்யத்தானே வேண்டும்;எனத் தடுமாறுகிறார்கள்; முஸ்லிம்களின் தானைத் தளபதிகள்.

உங்களுக்கு சொந்தமான காணியில் ஒருவன் நியாமில்லாமல் பங்குகேட்டால் பேசிப்பேசி விட்டுக்கொடுத்து தீர்வுகாண்போம்; என்பீர்களா?

கல்முனையின் எல்லை தெற்கே சாஹிறா வீதி, வடக்கே தாளவட்டுவான்; என்பது 1897 ம் ஆண்டு வர்த்தமானி கூறுகின்றது. அவர்கள் மாற்று எல்லையை முன்வைத்தால் இதற்கு முரணான இதை மேவக்கூடிய ஆவணத்தைக் காட்டுமாறு ஏன் உங்களால் கேட்க முடியாது?

உங்களின் பலயீனத்தால் M S காரியப்பர், M C அஹமட், A R மன்சூர், தலைவர் M H M அஷ்ரப் போன்ற முன்னோடிகள் பாதுகாத்துத் தந்த கல்முனையை துண்டாடி தாரைவார்க்கப்போகிறீர்களா?

இந்தப் பிரச்சினையை இன்னும் சரியான முறையில் முன்வைக்க உங்களால் முடியவில்லை.

அண்மையில் இவ்விடயம் தொடர்பாக திரு சஜித் பிரேமதாசவைச் கல்முனையைச் சேர்ந்த ஒரு குழு சந்தித்தோம். அங்கு அமைச்சர் ஹக்கீம் எவ்வாறு விடயத்தை ஆரம்பிக்கின்றார்; என்றால், “ கல்முனைப் உப பிரதேச செயலகப் பிரச்சினை... அங்கு எல்லைப் பிரச்சினை இருக்கிறது; அதற்கு ஒரு “Delimitation Committee” போட்டு எல்லைப் பிரச்சினை தீர்க்க வேண்டும்.

இதுவே, சகோ ஹக்கீம் கல்முனைப் பிரச்சினையில் இருந்து எவ்வளவோ தூரத்தில் இருக்கின்றார்; என்பதற்கு அத்தாட்சியாகும். அன்றிலிருந்து இன்றுவரை delimitation committee பற்றியும் எல்லைப் பிரச்சினை பற்றியும்தான் பேசுகின்றார்கள்.

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்- கல்முனையில் முஸ்லிம்களுக்கு எல்லைப் பிரச்சினையுமில்லை. Delimitation Committee பிரச்சினையுமில்லை.

கல்முனையில் என்ன எல்லைப் பிரச்சினை இருக்கிறது? 1897ம் ஆண்டு வர்த்தமானியில் கல்முனையின் எல்லை தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 1987ம் ஆண்டிற்கு முன்பிருந்த உள்ளூராட்சி எல்லை தெளிவாக இருக்கிறது. எங்களுடைய பிரச்சினை கல்முனை துண்டாடப்படக்கூடாது; என்பதாகும்.

Delimitation Committee போடவேண்டும்; என்றால் அரசாங்கம் போடட்டும். அது அரசின் வேலை. நாம் நமது பிரச்சினையை சொல்வதற்குப் பதிலாக ஏன் Delimitation Committee ஐப் பற்றிப் பேசவேண்டும்.

அதுதான் தேவையென்றால் எதற்காக பிரதமரைச் சந்திக்கின்றோம்? எதற்காக சஜித்தை சந்திக்கின்றோம்? எதற்காக பசிலைச் சந்திக்கின்றோம்? Delimitation Committee ஐப் போடச்சொல்லிவிட்டு அந்த Committee ஐச் சந்தித்தால் போதுமே! தமிழ்த்தரப்பினர் Delimitation Committee கேட்கிறார்களா?

அந்தக் Committee முஸ்லிம்களுக்கு பாதகமான அறிக்கையைத் தந்தால் அதன்பின்போய் நியாயம் கேட்கப்போகிறீர்களா? “ நீங்கள் தானே Delimitation Committee கேட்டீர்கள். இப்பொழுது ஏன் எதிர்க்கின்றீர்கள்? என்று கேட்டால் என்ன பதில்?

நாம் நமது பிரச்சினையை மட்டும்பேசினால் நாளை அவர்கள் போடுகின்ற Delimitation Committee பிழைவிட்டாலும் நாம் கூறலாம்; ‘ பாருங்கள் நாம் உங்களிடம் தெளிவாக எமது பிரச்சினையை பல தடவை கூறியும் இந்த Delimitation Committee எங்களுக்கு அநியாயம் செய்திருக்கிறது. இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதென்று.

இவ்வளவு காலமும் Delimitation Committee, Delimitation Committee என்று காலத்தைக் கடத்தியதற்குப் பதிலாக எங்களுடைய நியாயங்களை முன்வைத்து வந்திருந்தால் இன்று எல்லோரும் நமது நியாயங்களை ஏற்றிருப்பார்கள். இன்றுவரை தமது நியாயங்கள் சரியாக முன்வைக்கப்படாமல் காலத்தைக்கடத்தி இன்று கல்முனையை ஹிஜ்ரா வீதியால் விட்டுக்கொடுப்பதா? Rest House வீதியால் விட்டுக்கொடுப்பதா? கடற்கரைப்பள்ளி வீதியால் விட்டுக்கொடுப்பதா? பிரதானவீதியை மட்டும் எடுத்துக்கொண்டு ஏனையவற்றை விட்டுக்கொடுப்பதா? என்று கையாலாகத்தனமாக பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

சகோ ஹக்கீம் அவர்களிடம் இருக்கின்ற மிகப்பெரிய பலயீனம்; எந்தவொரு விடயத்தையும் தெட்டத்தெளிவாக உறுதியாக பேசமுடியாமல் இருப்பதாகும். எமது உள்ளூர் பாசையில் சொல்வதானால்; எல்லாவிடயங்களிலும் ஒருவகை “ இழுவனா-படுவனா” வாகத்தான் பேசுவார். அழுத்தம் திருத்தமாக அவரால் பேசமுடியுமென்றால் அவர் தலைமையேற்ற இந்த 19 வருடத்தில் முஸ்லிம்களின் எத்தனையோ பிரச்சினைகளைத் தீர்த்திருக்கலாம்.

எனவே, உங்களுடைய பலயீனத்தினால் முஸ்லிம்களின் முகவெற்றிலையை இழக்க முடியாது. உங்களால் இப்பிரச்சினையைத் தீர்க்கமுடியாவிட்டால் அதை அவ்வாறே இருக்க விடுங்கள். இன்ஷாஅல்லாஹ், கல்முனைக்கும் ஒரு நாள் “நல்லகாலம்” பிறக்கும். அப்பொழுது தீர்த்துக்கொள்வோம்.

மறைந்த தலைவரின் தியாகத்தால் உருவான கட்சியை உங்களிடம் தந்ததற்காக அவரது சொந்த ஊரை, அவர் கனவுகண்ட அந்த முகவெற்றிலையை சிற்றினவாதத்திற்கு மண்டியிட்டு சுக்கு நூறாக்கி விடாதீர்கள்; அல்லாஹ்வுக்காக.

Sun, 03 Nov 2019 00:11:54 +0530

நக்கலுக்குள்ளாகும் நப்கின்ஸ் - பாரிய பெண்ணுரிமை மீறல்!

நக்கலுக்குள்ளாகும் நப்கின்ஸ் - பாரிய பெண்ணுரிமை மீறல்! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

தேர்தல்கால சூடு அனல்பறக்க, எதனை விமர்சனம் செய்ய வேண்டும்! எதனை விமர்சனம் செய்யக்கூடாது! என்ற நிலைத்தளம்பல் கோத்தபாய அணியினரின் தோல்வியை மீண்டும் மீண்டும் உறுதி செய்கிறது.

ஒரு நாட்டின் தலைவனாக வர இருக்கின்ற ஒருவன் நாட்டில் உள்ள மக்களின் சுகாதாரம் பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. அதனால்தான் சஜித் பிரேமதாஸ இந்த நாட்டில் உள்ள ஏழைப் பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரதான நப்கின்ஸ் பிரட்சனை தொடர்பில் தீர்வை முன்வைத்தார்.

பெண்ணொருவளின் அத்தியவசிய தேவையுள்ள பொருளாக இருந்தும், தனது தந்தையோடு , சகோதரனோடு, அல்லது கடைக்காரனிடம் கூச்சமின்றி சாதாரணமொழியில் கேட்டு வாங்கிக்கொள்ள முடியாத பண்டமாக சமூகத்தினால் மாற்றப்பட்டிருக்கும் நப்கின்ஸ் தொடர்பில் சஜித் பிரேமதாஸ பேசியிருப்பதானது பாராட்டுக்குரியதே.

ஏழ்மையின் கொடூரம் நப்கின்ஸ்களுக்கு பதிலாக வேறுபொருட்களை பயன்படுத்துவதனால் சமூகத்தில் ஏற்படும் கற்பப்பை புற்றுநோய், பெண்ணுறுப்பு அலர்ச்சி மற்றும் இதர நோய்கள் தொடர்பில் சஜித் ஆழச்சிந்தத்ததனாலேயே அச்சமின்றி அறிக்கைவிட்டுள்ளார்.

நப்கின்ஸ் எனப்படும் விடாய்க்கால அணையாடைகள்; பெண்ணானவள் சாதாரணமாக தனது வாழ்நாளில் சுமார் 15000 நப்கின்ஸ்களை அணிந்துகொள்ள வேண்டிய தேவையுள்ளது. இதனை இலவசமாக கொடுக்க ஒருவன் முன்வருவானானால் அவனே தலைவன்.

கடைகளில் 130-170 ரூபா வரையான விலைப்பெறுமதியில் கிடைக்கும் நப்கின்ஸ் 5 மணி நேரம் தாங்குதிறன் கொண்டவை. ஆகவே தான் நாளொன்றிற்கு சுமார் 3 நப்கின்ஸ்களாவது ஒரு பெண்ணுக்கு தேவைப்படும்.

இதனை தேர்தல்கால நக்கலாகவும் நையாண்டியாகவும் நோக்குகின்றவர்கள் நேர்கொண்ட கோணத்தில் சிந்திக்க வேண்டும். தம் வீட்டிலுள்ள தாய், சகோதரி, பிள்ளையை சிந்தித்துவிட்டு நக்கலில் மூழ்கலாம். பெண்ணின் யோனிவழி பிறப்பெய்தி பெண்ணுரிமை மீறும் கோர முகங்களின் அதிகாரவெறி கண்களை மறைத்துள்ளது.

இந்தியாவிலே பத்மசிறீ அருணாசலம் முருகதாஸ் குறைந்த விலையிலான நப்கின்ஸ் கண்டுபிடிப்புக்களுக்காகவே விருது பெற்றவர். நக்கலும் நையாண்டியும் செய்பவர்கள் முதலில் அருணாசலம் முடுகதாஸை தேடிப்படியுங்கள்.

நம் நாட்டு மக்கள் நடுநிலையான சிந்தனாவாதிகள் என்றிருந்தால் சஜித்தினுடையை வெற்றிக்கு இந்த ஒரு அறிக்கை மாத்திரமே போதுமானது.

Fri, 01 Nov 2019 13:43:37 +0530

தொடரும் புதிர்!

தொடரும் புதிர்! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

"நாங்கள் யாருக்கும் எதிரிகளல்ல, சிங்கள மக்களுக்கும் நாங்கள் எதிரிகளல்ல, தமிழ் மக்களுக்கும் நாங்கள் எதிரிகளல்ல, யாருக்கும் நாங்கள் எதிரிகளல்ல. இந்த நாட்டின் தேசிய ஒற்றுமை என்பது ஒரு முக்கோணத்தைப் போன்றது. இந்த நாட்டிலே தேசிய ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்றால் இந்த நாட்டிலே தமிழ் முஸ்லிம் ஒற்றுமை ஏற்பட வேண்டும். இந்த நாட்டிலே அடுத்த இரு சமூகங்களோடும் ஒற்றுமையாக இருக்கின்ற ஒரே ஒரு சமூகம் இந்த நாட்டிலே வாழுகின்ற முஸ்லிம் சமுதாயம் என்பதை நாங்கள் மறந்து விடக்கூடாது. நாங்கள் சிங்கள மக்களோடும் ஒற்றுமையாக இருக்கின்றோம், அதேபோல் தமிழ் மக்களுடனும் ஒற்றுமையாக இருக்கின்றோம். இன்றும் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்ற அல்லது இன்னும் இறுக்கமாக இணையாமல் இருக்கின்ற சிங்கள தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்தக் கூடிய ஒரு பாலமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த நாட்டிலே அமைய வேண்டும் என்பதனையும் தெளிவாகத் தெரிந்து, புரிந்தவர்களாக இருக்கின்றோம்.”

ஒரு இஸ்லாமியன், இஸ்லாமிய இயக்கம் பிறருக்கு முன்மாதிரியாக இருந்து ஒற்றுமையினை ஏற்படுத்த வேண்டும். ஒற்றுமையின் பலத்தை பிற சமூகத்தவருக்கு தனிக்கட்சியின் மூலம் நிரூபித்துக் கட்டினார் தலைவர் அஷ்ரப். ஆனால் இன்று அதே கட்சியின் தலைமை ஒற்றுமையின்மையினால் தனது தாயகத்திலேயே துரத்தப்பட்டு சிதறுண்டு கிடக்கின்றது. ஒற்றுமையின்மையினால் சிதறுண்டு தலைவர்கள் அந்தஸ்தில் உள்ளவர்களினால் இன்றுவரை தங்களது இருப்பை தக்கவைக்கும் பேரம்பேசலிலேயே காலத்தை கடத்திக் கொண்டிருக்கின்றனர். இதனால்தான் தலைவர் அஷ்ரப் மரணம் முதல் தொடரும் இனக் கலவரம் வரை நடைபெற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியாத இணக்க அரசியல் தலைமைகளாக முஸ்லிம் அரசியல் உள்ளது.

பச்சை, நீலம், பலவர்ணங்களில் ஆட்சி வந்தாலும் இனஒற்றுமையினை ஏற்படுத்தும் எண்ணம் உளத்தூய்மையுடன் வராதவரை நாட்டில் நல்லாட்சி வரப்போவதில்லை என்பதற்கு எடுத்துக்காட்டுத்தான் இலங்கையின் யாப்பில் ஏற்படுத்தும் மாற்றங்களும் அதற்கு விளங்காமல் கையுயர்த்தும் முஸ்லிம் அரசியலும். அரசியல் யாப்பு சபையாக மாற்றப்பட்ட நல்லாட்சியின் பாராளுமன்றத்தில் இன்னும் யாப்பே நிறைவேறாத நிலையில் சமூக ஒற்றுமையினை கொண்ட யாப்பினை சிறுபான்மை சமூகம் எப்பொழுது பெறப்போகின்றது?

Thu, 31 Oct 2019 20:18:19 +0530

உள்ளூராட்சி மன்ற வெற்றியை கூவி திரியும் மொட்டு - அந்த வாக்கு எத்தகையது?

உள்ளூராட்சி மன்ற வெற்றியை கூவி திரியும் மொட்டு - அந்த வாக்கு எத்தகையது? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

இன்று மொட்டு வெற்றி பெறுமென கூறுவோர், அது கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை முன் வைத்தே பேசுவர். வெளித் தோற்றத்தில் பார்க்கும் போது, அதுவும் நியாயம் தானே என்றெண்ண தோன்றும். உண்மை அதுவல்ல. அந்த வாக்கு எத்தகையது என சிந்திக்கும் போது மஹிந்தவின் வெற்றி எத்தகைய கடினமானதென்பதை சாதாரணமாக அறிந்துகொள்ள முடியும்.

வாக்காளர்களை இரு அணியினராக வகுக்கலாம். ஒன்று ஒரு குறித்த கட்சியின் நிலையான வாக்காளர்கள். இரண்டாவது குறித்த சந்தர்ப்பத்தில் சரி, பிழை ஆராய்ந்து வாக்களிக்கும் மிதப்பு வாக்காளர்கள். ஒரு அணியின் நிலையான ஆதாரவாளர்களை யாரும் அசைக்க முடியாது. ஒரு கட்சியின் வெற்றிக்கு மிதப்பு வாக்காளர்களை கவருவது முக்கியமானது. மிதப்பு வாக்காளர்களே அதிகமுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஐ.தே.கவுக்கு 33 இலட்சமளமான நிலையான வாக்குள்ளது. இதனை எக் கொம்பனாலும் இதுவரை காலமும் அசைத்து பார்க்க முடியவில்லை. இனியும் அசைக்க முடியாதென்பது யாருமே கிஞ்சித்தேனும் கேள்வியெழுப்ப முடியாத உண்மை. ஆகவே, ஐ.தே.கவின் வாக்குகளை 33 இலட்சத்திலிருந்தே கணக்கிட வேண்டும். சிறுதொகை மிதப்பு வாக்காளர்களை ஐ.தே.க கவருமாக இருந்தால், அதற்கு வெற்றி வாகை சூட முடியும்.

இப்போது விடயத்துக்கு வருவோம். மொட்டுவுக்குள்ள நிலையான வாக்குகள் எத்தனை? மொட்டுவின் நிலையான வாக்கு வங்கி பூச்சியம். அனைவரும் மிதப்பு வாக்காளர்களே!மொட்டு வெற்றிபெற வேண்டுமாக இருந்தால், அவர்கள் மீண்டும் பூச்சியத்திலிருந்து வேலை செய்ய வேண்டும். அந்த வாக்குகள் எந் நேரத்திலும், எப் பக்கமும், எச் சிறு விடயத்தாலும் மாறலாம். தற்போது கோத்தாவின் மேடைப் பேச்சின் கம்பீரமற்ற போக்கால் நாளாந்தம் மொட்டு அணியினர் பாரிய வாக்குச்சரிவை சந்திப்பதாக அவதானிகள் கூறுகின்றனர். மிதப்பு வாக்கு வங்கி சடுதியாக அதிக வீதத்தில் கூடும், குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலப்பகுதியில் ஐ.தே.கவுக்கு வாக்களித்தவர்கள், அதன் நிலையான வாக்காளர்கள் மாத்திரமே என்று கூறினாலும் தவறாகாது. இப்போது ஜனாதிபதி வேட்பாளராக சஜித் களமிறங்கியுள்ளார். இதுவே ஐ.தே.க கணிசமான மிதப்பு வாக்காளர்களை கவர காரணமாக அமைந்துள்ளது. இது போன்ற இன்னும் பல விடயங்களை வைத்து நோக்கும் போது, இம் முறை பெருமளவான மிதப்பு வாக்குகளை ஐ.தே.க பெறும் வாய்ப்புள்ளதென்பது துல்லியமாகின்றதல்லவா?

மொட்டு அணியினர் வெற்றி பெறுவது அவ்வளவு இலகுவான விடமல்ல என்பதே உண்மை. அது தவிர்ந்து, கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலை வைத்து மொட்டு அணியினர் வெற்றிபெறுவார்கள் என கூப்பாடு போடுவது பொருத்தமானது.

Thu, 31 Oct 2019 20:12:16 +0530

2020 ஜனாதிபதி சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம்

2020 ஜனாதிபதி சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

- வட, கிழக்கு மற்றும் மலையகம் மீதும் கரிசனை

- போதைப்பொருள், ஊழல் மற்றும் மதத் தீவிரவாதம் என்பவற்றுக்கு எதிரான போர்.

- பலமான தேசத்தை உருவாக்குதல்.

- தேசத்தை பாதுகாக்க ஸ்மார்ட் பாதுகாப்பு மற்றும் நவீன ஆயுதப்படை, அறிவார்ந்த புலனாய்வு வலையமைப்பு உருவாக்கம்.

- மக்கள் சக்தியை ஒருங்கிணைக்கும் மக்களுக்கான அரசியலமைப்பு.

- பாராளுமன்றில் 25% பெண்களுக்கான தேசிய பட்டியல் ஒதுக்கீடு.

- இலங்கை முதன்மையாக வலுவான வெளிநாட்டுக் கொள்கை.

- நவீன, பாகுபாடற்ற விரைவான நீதி அமைப்பு.

- நீதியும் சுதந்திரமுமான ஊடகத்துறை.

- பேரழிவுகளின் போதான இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை.

- போட்டித்தன்மை மிகு பொருளாதாரம்.

- மலிவான இணைய இணைப்பு மற்றும் எளிதான கொடுப்பனவு.

- பொருந்தோட்டங்களை தரம் உயர்த்துதல்.

- நீதியான சமூகத்தை கட்டியமைத்தல், நவீன யுகத்திற்கேற்ற நவீன கல்வி.

- பயன்தரும் சுகாதார சேவை.

- 35 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் மருத்துவ பரிசோதனை.

- அனைவருக்கும் உறையுள், 2025ல் சொந்த வீடு கொண்ட சமூகம்.

- தேசிய ஒற்றுமை மற்றும் சமத்துவம்.

> இனம், மதம், வர்க்கம், பாலினம் கருத்தில் கொள்ளப்படாமல் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவார்கள்.

> மும்மொழிக் கொள்கை.

> நல்லிணக்கம், மீள்கட்டுமாணமும்.

> நீண்டகால இடம்பெயர்வினால் பாதிக்கப்பட்டவர்களின் மீள்குடியேற்றம், வீடுகள் மற்றும் மறுசீரமைப்பு இன்ன பிற உதவிகள்.

> வட, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான அலுவலகத்தை முழுமையாக ஆதரித்தல்.

> நீண்டகாலம் விசாரணை இன்றி தடுத்து வைக்கப்பட்டிருப்போருக்கு விடுதலை.

> தனிநபர்கள், குழுக்கள், அரசியல் கட்சிகள், நிறுவனங்களின் வரலாற்று வகிபாகம், சிந்தனை போக்கு என்பவற்றை மாணவர்கள் புரிந்து கொள்ளும் பாடத்திட்ட சீரமைப்பு.

- இலங்கையின் ஆண்மீகம்.

- பெண்களுக்கு 52% சமவாய்ப்பு.

- மாற்றுத்திறனாளிகளை அரவணைக்கும் ஆணைக்குழு நிறுவல்.

- மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு.

- மலையக மக்கள்.
> அனைத்து தோட்ட தமிழ் குடும்பங்களுக்கும் 7 பேர்ச் காணி.

> தங்குமிடம் இல்லாத அனைவருக்கும் தங்குமிடம்.

> அவுட்-க்ரோவர் திட்டத்திற்கு அரச, தனியார் நிறுவனங்களுடன் கூட்டு.

> ஹைலேன்ட் பல்கலைக்கழகம் திறப்போம்.

Thu, 31 Oct 2019 20:07:30 +0530

ஒசாமா போன்று ஐ.எஸ் இயக்க தலைவர் கொல்லப்பட்டாரா? இஸ்லாமியசடங்குகளை ஏன் செய்ய வேண்டும்?

ஒசாமா போன்று ஐ.எஸ் இயக்க தலைவர் கொல்லப்பட்டாரா? இஸ்லாமியசடங்குகளை ஏன் செய்ய வேண்டும்? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

முக்கியத்துவம் குறைந்த செய்திகளுக்கு முன்னுரிமை வழங்குகின்ற பிரபல தமிழ் ஊடகங்கள் உலகின் முதன்மை செய்தியான ஐ.எஸ் இயக்கத் தலைவர் கொல்லப்பட்டது பற்றி கண்டுகொள்ளவில்லை.

குறுகிய காலத்துக்குள் உலகை திரும்பிப் பார்க்கவைத்த ஐ.எஸ் இயக்கத்தின் தலைவரை காட்டித் தருபவர்களுக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வழங்கப்படும் என்று அமெரிக்கா பல வருடங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

ஆனாலும் அவரை காட்டிக்கொடுக்கின்ற துணிச்சல் யாருக்கும் வரவில்லை. அவரோ தனது வதிவிடத்தை சந்தேகம் வராதபடி குர்திஷ் மக்கள் அதிகம் வாழும் வடக்கு சிரியாவில் அமைத்திருந்தார்.

அல்-பக்தாதி அவர்கள் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றியபடி இருந்ததாகவும், இறுதியாக துருக்கி நோக்கி செல்ல இருந்த நேரத்திலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்றும் கூறப்படுகின்றது. துருக்கிக்கு சென்றிருந்தால் அவரை இலக்கு வைப்பது கடினம் என்பதனாலேயே தனது தாக்குலை அமெரிக்கா விரைவு படுத்தியது.

ஐ.எஸ் இயக்கத்திடம் இருந்து மசகு எண்ணை கொள்வனவு செய்வது தொடக்கம் அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவது வரைக்குமான உதவிகளை துருக்கியே செய்தது என்ற சந்தேகமே இதற்கு காரணமாகும்.   

அல்-பக்தாதியின் மறைவிடம் குறித்து சில வாரங்களுக்கு முன்புதான் அமெரிக்காவின் சீ ஐ ஏ க்கு தகவல் கிடைத்தது. ஒசாமாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை போன்ற நடவடிக்கைக்கு அமெரிக்கா திட்டமிட்டதோடு அல்-பக்தாதியை கண்கானித்தவண்ணம் இருந்துள்ளது.  

மிகவும் பலம்வாய்ந்த ஐ.எஸ் இயக்க தலைவர் நூற்றுக்கணக்கான மெய்க்காப்பாளர்களோடு இருப்பார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே அவருக்கு பாதுகாப்பு வழங்கியிருந்தனர். அதிகமான ஆள்நடமாட்டம் இருந்தால் அது மேலதிக சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பதுதான் அதற்கு காரனமாகும்.

பாகிஸ்தானில் மறைந்திருந்த ஒசாமாவை கொல்வதற்கு ஆப்கானிஸ்தானிலிருந்து சத்தம் குறைந்த உலங்கு வானூர்தி மூலம் “சீல்” படைப் பிரிவினர் சென்றது போன்று ஈராக்கிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட அமெரிக்க படையினர் பயிற்றுவிக்கப்பட்ட இராணுவ நாய்களுடன் அதேபாணியிலான உலங்கு வானூர்தியில் சென்றுள்ளார்கள்.

குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் அமெரிக்க படையினர்களால் அல்-பக்தாதியின் மறைவிடம் சுற்றிவளைக்கப்பட்டு தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. சற்றும் எதிர்பாராத இந்த திடீர் தாக்குதலை எதிர்கொண்டு அவர்கள் பதில் தாக்குதல் நடாத்தியுள்ளார்கள்.

நூற்றுக்கணக்கான அமெரிக்க படையினர்களுடன் ஒருசில ஐ.எஸ் இயக்கத்தினர் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் போர் செய்துள்ளார்கள்.

இறுதியில் பக்தாதியின் அனைத்து மெய்க்காவலர்களும் கொல்லப்பட்ட பின்பு சத்தம் ஓய்ந்தது. அதன்பின்பு அவரது மறைவிடம் நோக்கி இராணுவத்தினர் செல்லாது பயிற்றுவிக்கப்பட்ட இராணுவ நாய்கள் அனுப்பப்பட்டது.

அப்போது நிலத்தடி மறைவிடத்துக்கு சென்ற அல்-பக்தாதி அவர்கள் தப்பிக்க முடியாத நிலையில் குண்டை வெடிக்கவைத்து தற்கொலை செய்துள்ளார். இந்த வெடிப்பினால் அவர் இருந்த இரண்டு மாடி கட்டிடம் முழுவதும் தரைமட்டமாகி சாம்பலானது.

இதனால் ஐ.எஸ் இயக்கத்தின் எந்தவொரு ஆவணங்களையும் அமெரிக்கப் படையினர்களால் கைப்பெற்ற முடியவில்லை. அத்துடன் கட்டடத்துக்குள் உள் நுழையவும் முடியவில்லை.     

நள்ளிரவு வேளையில் நடாத்தப்பட்ட ஒசாமா பின் லேடனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையானது சுமார் நாப்பது நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. அத்துடன் “சீல்” படைப்பிரிவினர் படுக்கையறை வரைக்கும் அதிரடியாக உள்ளே புகுந்து சுடப்பட்ட ஒசாமாவின் உடலை கைப்பெற்றியதுடன், கணணியில் இருந்த அல்கொய்தா இயக்கத்தின் அனைத்து ஆவணனக்ளையும் கைப்பெற்றி சென்றார்கள்.

ஆனால் அவ்வாறான நிலைமை அல்-பக்தாதிக்கு எதிரான இராணுவ நடவடிக்கையின்போது இருக்கவில்லை. இந்த சண்டை இரண்டு மணித்தியாலங்கள் நீடித்ததோடு இதில் அமெரிக்கப் படையினர்கள் அதிகம்பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சம்பவத்தை நேரில் கண்ட கிராமவாசிகள் கூறியுள்ளார்கள்.  

இறுதியில் அல்-பக்தாதியின் உடலை இஸ்லாமிய முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு ஒசாமாவை கடலில் வீசியதுபோன்று அல்-பக்தாதியின் உடலையும் கடலில் வீசியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இங்கேதான் குழப்பமாக உள்ளது. அதாவது அல்-பக்தாதி ஓர் யூதர் என்று பிரச்சாரம் செய்த அதே அமெரிக்க சார்பு ஊடகங்கள்தான் தற்போது அல்-பக்தாதி இஸ்லாமிய சடங்குகள் செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டார் என்று கூறுகின்றது. அவர் ஓர் யூதர் என்றால் ஏன் இஸ்லாமிய சடங்கு செய்ய வேண்டும் என்பதுதான் அனைவரது கேள்வியாகும். 

Thu, 31 Oct 2019 18:35:01 +0530

அச்சமூட்டும் கோத்தாவின் கோடரிகள்!

அச்சமூட்டும் கோத்தாவின் கோடரிகள்! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

“அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே” என்ற ஈமானிய நெஞ்சம் கொண்ட சமூகத்தினை அற்பன் கோத்தாவை காட்டி அச்சமூட்டும் கோடரிகள் சிலர் உருவெடுத்துள்ளார்கள்.

ஒருபுறம் பிவிதுறு ஹெல உறுமயவின் பிரதான செயற்பாட்டாளர் மதுமாதவ அரவிந்தவின் வீடியோ வெளியாகி முஸ்லிங்களை அச்சமூட்டும் வண்ணம் இருந்தமை; பின்னர் போலிக்கு வேலிகட்டி அவரை தேர்தல்வரை இயங்கா நிலையில் வைத்துள்ளமையும் நாம் அறிந்ததே.

அதே போன்றுதான் கோத்தாவின் மற்றொரு கோடரி, சட்டத்தரணி அலி சப்ரி அவருடைய அண்மைய அனல் பறக்கும் பிரசாரம் ஒன்றில் முஸ்லிங்கள் பெரும்பான்மையாக கோத்தாவுக்கு வாக்களியாது அவர் வென்றுவிட்டால் “அம்பாணைக்கு கிடைச்சும்” என்ற வார்த்தைப் பிரயோகத்தின் மூலம் அச்சுறுத்தியுள்ளார்.

இவருடைய இந்த வார்த்தைப் பிரயோகம் இன்றைய சூழ்நிலையில் கடுமையான விமர்சனங்களுக்கு ஆட்பட்டுள்ளதோடு அதற்கு அவர் வீடியோ பதிவுகள் மூலம் வியாக்கியானமும் வெளியிட்டு வருகின்றார்.

இவர்களை போன்றே கருணா அம்மான் அன்று இயக்கத்தத்தில் இருந்து எம் இனத்தை அழித்தவர். இன்று எம் உணர்வுகளைக் களங்கப்படுத்தி வருகின்றார். நஜீஸைப் பற்றி நாய் பேசுவது போன்று யுத்தகாலத்தில் அவர் செய்த கொடூரங்களை மறந்து இன்று முஸ்லிங்களையும் முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் பயங்கரவாதியாகவும் இனவாதிகளாகவும் சித்தரித்து வருகின்றார்.

கோத்தாக்களின் ஏஜெண்ட் மதுமாதவ அரவிந்தவும், அலி சப்ரியும், கருணா அம்மானும் சிறுபான்மை இனத்தை அச்சுறுத்தியேனும் தாங்கள் ஆட்சிபீடமேறிவிடவேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றார்கள். இவர்கள் அரியணை ஏறிவிட்டால்...!!

ஆகவேதான் அச்சுறுத்தும் கோத்தாக்களுக்கு அடிபணியாது பாடம் புகட்டும் தேர்தலாக இந்த தேர்தலை நாங்கள் கொள்ள வேண்டும். நமது பார்வையில் சகல இனமும் சுபீட்சமாக வாழக்கூடிய ஜனநாயக பாதையின் தெரிவே அன்னமாகும்!!

அச்சம் என்பது மடமையடா!

Wed, 30 Oct 2019 19:52:53 +0530

தற்போதே முஸ்லிம்களை புறக்கணித்த கோத்தா! அண்ணனை காட்டி தம்பிக்கு திருமணம்! முஸ்லிம்கள் ஆதரிப்பார்களா...?

தற்போதே முஸ்லிம்களை புறக்கணித்த கோத்தா! அண்ணனை காட்டி தம்பிக்கு திருமணம்! முஸ்லிம்கள் ஆதரிப்பார்களா...? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

முதற் கோணல் முற்றிலும் கோணலென்பார்கள். கோத்தா இப்போதே முஸ்லிம்களை புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டார். நேற்று ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ அம்பாறை மாவட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இருந்த போதிலும் அம்பாறை முஸ்லிம் கிராமங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பொதுவாக ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தல் காலங்களில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கு விசேட வருகை தருவார்கள்.

கோத்தா சிறுபான்மை மக்களிடையே சந்தைப்படுத்த முடியாத காலாவதியான ஒருவர் என்பது யாவரும் அறிந்த ஒன்று. இத் தேர்தலில் பொதுஜன பெரமுனவினர் சிறுபான்மை மக்களின் வாக்குகளை கருத்தில் கொண்ட வியூகம் வகுத்திருந்தால், நிச்சயம் கோத்தாபாயவை தெரிவு செய்திருக்க மாட்டார்கள். அவர்களின் வியூகங்கள் தனி சிங்கள வாக்குகளையே மையப்படுத்தியிருந்தன. இப்போது சஜிதின் வருகையால் ஐ.தே.முவிற்கு ஏற்பட்ட எழுச்சியை பார்த்து மிலைத்து நிற்கின்றனர் மொட்டு அணியினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சாய்ந்தமருது, அக்கறைப்பற்று ஆகிய ஊர்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பங்குபற்றுதலுடன் மொட்டு அணியினரின் பிரச்சார கூட்டங்கள் ஏற்பாடாகியிருந்தன. இதில் கோத்தா கலந்து கொள்வார் என்றிருந்த போதும் கலந்துகொள்ளவில்லை. குறித்த தினம் கோத்தாவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோத்தாவை முஸ்லிம்கள் ஏற்பதை விட, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை ஓரளவு ஏற்பார்கள். மஹிந்தவை காட்டி கோத்தாவுக்கு வாக்கு சேகரிக்கும் உத்தியே அங்கு பயன்படுத்தப்பட்டிருந்தது. சிங்கள வாக்குகளை மையப்படுத்தி வியூகம் வகுத்தவருக்கு, முஸ்லிம்களிடம் சென்று என்ன பேசுவதென அறியாமல் புறக்கணித்தாரோ தெரியவில்லை. இது தங்கச்சியை காட்டி, அக்காவை திருமணம் செய்து கொடுப்பது போன்றல்லவா உள்ளது? மொட்டு அணியினருக்கே கோத்தாவை முஸ்லிம்களிடையே சந்தைப்படுத்த முடியாதென தெரிந்துள்ள போது, ஏன் எம்மவர்கள் அவரை சந்தைப்படுத்த இத்தனை பிரயத்தனங்களை எடுக்கின்றனர்.

நேற்று அம்பாறையில் கோத்தாவின் பங்குபற்றுதலோடு இடம்பெற்ற மொட்டுவின் பிரச்சார மேடைக்கு முஸ்லிம் மொட்டு அணியினர், தங்களது பிரதேசங்களிலிருந்து ஆட்களை அழைத்து சென்றிருந்தனர். தங்களது ஜனாதிபதி வேட்பாளரை, தங்களது பிரதேசங்களுக்கு அழைத்து வர திராணியற்றவர்களுக்கு, அம்பாறைக்கு ஆட்களை அழைத்து செல்ல வெட்கமில்லையா? கோத்தா வென்றால், அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள், தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அம்பாறைக்கே செல்ல வேண்டுமென கோத்தா கூறாமல் கூறுகிறாரோ?

இப்போதே எம்மை புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டார். ஆட்சியமைத்தால் சொல்லவா வேண்டும். நாம் தேவையில்லையென தேர்தல் வியூகமமைத்தவர்களுக்கும், தங்களது செயற்பாட்டை முன்னெடுப்பவர்களும், நாம் ஏன் வலிந்து சென்று ஆதரவளிக்க வேண்டும். அதனைப் போன்ற மடமை, சுயநலம், இழிவு வேறேதுமிருக்குமா? இம் முறை சிந்தித்து வாக்களிப்போம்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Wed, 30 Oct 2019 19:45:22 +0530

இரண்டும் நஞ்சு - மீண்டும் மீண்டும் அவர்களின் பக்கமாக மாறி கொண்டே இருப்பார்களா?

இரண்டும் நஞ்சு - மீண்டும் மீண்டும் அவர்களின் பக்கமாக மாறி கொண்டே இருப்பார்களா? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

ஜனாதிபதி தேர்தலில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டதில் ஒரு எதிர்கால சிந்தனை கருதி ஒரு பதிவினை இட ஆசைப்படுகின்றேன்.

அதாவது 2015 க்கு பிறகு ஆட்சியில் அமர்ந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியில் சிறுபான்மை மக்கள் பல விதமாக பாதிக்கப்பட்டு வந்தனர் என்பது அறிந்த விடயம்.குறிப்பாக தமிழ் மக்களும் சரி , ஏப்ரல் 21ம் குண்டுதாக்கலின் பின் முஸ்லிம்களும் சரி மிகவும் மோசமான முறையில் விமர்சிக்கப்பட்டும் பாதிப்பும் அடைந்தனர்.

தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பாக கோட்டாவும் , புதிய ஜணநாயக முண்ணனி சார்பாக சஜிதும் , தேசிய மக்கள் சக்தி சார்பாக அநுரவும் மும்முனையில் போட்டியிடுகின்றர்.

இவ்வாறு இருக்கும் போது எந்த வித நிபந்தனையுமின்றி முஸ்லிம் சமூகத்தின் இரு பிரதான கட்சி தலைவர்களும் சஜித் அவர்களுக்கு ஆதராவாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தேர்தலில் சஜித் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனால் பின் அவரின் ஆட்சியில் (5 வருடங்களில்) மீண்டும் முஸ்லிம் சமூகம் தாக்கப்பட்டால் அல்லது சிறுபான்மை சமூகம் தாக்கப்பட்டால் அடுத்த தேர்தலில் மஹிந்த அணிப்பக்கம் செல்வோம் , வாக்களியுங்கள் என்று சொல்வார்களா?

ஏனெனில் சஜித் , கோட்டா மேடைகளில் அபிவிருத்தி தவிர்ந்து இனவாத பிரச்சாரங்களை முன்னிறுத்தியே பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது.இதனால் எதிர்காலத்தில் பிரச்சினைகள் வராது என்பது ஊர்ஜிதமானது அல்ல என்பதுவே எனது வாதம்.

இன்னுமொரு பக்கம் இவர்கள் இருவரை தவிர்த்து இலங்கை அரசியலில் மூன்றாம் சக்தியாக திகழும் தேசிய மக்கள் சக்தி வேற்பாளர் அநுரவுக்கும் சிறுபான்மை மக்கள் மத்தியில் ஆதரவு இருந்து வருகிறது.அவர் பெரும்பான்மை வாக்கு பெறமாட்டார் என்ற வாதம் இருக்கும் இந்த சந்தர்பத்தில் இந்த தேர்தலில் யாரும் 50℅ வாக்கினை பெறமாட்டார்கள் என்ற வாதமும் உள்ளது.

எனவே 2ம் விருப்பு வாக்கு எண்ணிக்கை இடம்பெற வாய்ப்புமுள்ளது.

எனவே நாட்டின் அரசியல் மாற்றதிற்காக அநுரவுக்கு முதல் வாக்கினை இட மக்களும் இருக்கின்றனர்.எனவே அவரும் பிரதான போட்டியாளராக மாற வாய்ப்புள்ளது.

இதிலும் இன்னும் தமிழ்தேசிய கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு கொடுப்பது பற்றி இன்னும் வெளியுலகுக்கு சொல்லாமல் இருப்பதுவும் கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது.

இன்னும் முன்னாள் இரானுவ தளபதி மகேஷ் சேனநாயக்க இறுதி நேரத்தில் அநுரவுக்கு வாக்களிக்க மக்களை வேண்டிக்கொள்ளமுடியும்.

இவ்வாறு நாட்டில் முக்கியமான தேர்தலில் நமது முஸ்லிம் கட்சி தலைமைகள் சஜித்துக்கு வாக்களிக்க செய்ய சொல்வதும் பிரச்சினை வந்தால் மீண்டும் கோட்டா பக்கம் செல்வார்கள் என்பது எதிர்பார்கலாம்.

எனவே மக்கள் முடியுமானவரை சிறந்த நபரை தெரிவு செய்து நாட்டின் தலைமையை சிறந்த நபரிடம் கொடுக்க ஊடகங்களும், இளைஞர்களும் முன் வர வேண்டும்.

கட்சி சார்ந்த அரசியல் தேர்தல் அல்ல தேசிய ரீதியான இந்த தேர்தல் முக்கியத்துவம் சிறுபான்மைக்கே..!

அஸ்கி அஹமட்

Wed, 30 Oct 2019 01:05:19 +0530

அல் பக்தாதி ஓர் யூதர் என்றால் அவரை ஏன் அமெரிக்கா கொல்லவேண்டும் ? ரஷ்யாவின் அறிவிப்பில் உள்ள குழப்பம்!

அல் பக்தாதி ஓர் யூதர் என்றால் அவரை ஏன் அமெரிக்கா கொல்லவேண்டும் ? ரஷ்யாவின் அறிவிப்பில் உள்ள குழப்பம்! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படுகின்ற ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

அமெரிக்க புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தகவல்களையடுத்து வடமேற்கு சிரியாவில் பக்தாதியின் மறைவிடத்தை நோக்கி அமெரிக்காவின் ஹெலிகொப்டர்களும், விமானங்களும் வான்வளி தாக்குதல் நடாத்தியது.   

விமானத்தாக்குதலில் இருந்து அவர் தப்பிச்செல்ல முற்பட்டபோது அப்பிரதேசத்தை அமெரிக்க தரைப்படைகள் சுற்றிவளைத்ததாகவும், அதனால் தப்பிச்செல்ல முடியாமல் வேறு வழியின்றி தனது உடலில் அணிந்திருந்த தற்கொலை அங்கியை வெடிக்கவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.  

ஐ.எஸ் இயக்கம் என்பது அமெரிக்காவினதும் யூதர்களினதும் செல்லப்பிள்ளை என்றும், அல் பக்தாதி ஒரு யூதர் என்றெல்லாம் கடந்த காலங்களில் சர்வதேச ஊடகங்கள் மூலமாக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

ஒசாமா பின் லேடன் அமெரிக்காவினால் கொல்லப்பட்டபின்பு அல்கொய்தா இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்களில் ஒருவராக இருந்த ஈராக்கை சேர்ந்த அபூபக்கர் அல் பக்தாதி அவர்கள் ஐ.எஸ் இயக்கத்தை ஆரம்பித்து ஈராக்கில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படைகளுக்கு எதிராக போர் தொடுத்தார்.

அந்தப்போரில் வெற்றிபெற்று ஈராக்கினதும் சிரியாவினதும் பெரும் நிலப்பரப்புக்ககளை கைப்பேற்றி ஆட்சி செய்ததுடன், தன்னை இஸ்லாமிய உலகின் ஹலீபாவாக அறிவிப்பு செய்தார்.

பக்தாதியின் இந்த அறிவிப்பு உலக இஸ்லாமிய மக்களிடத்தில் வரவேற்பை பெற்றது. குறிப்பாக மன்னராட்சி நிலவுகின்ற சவூதி போன்ற நாடுகளில் இளைஞ்சர்கள் வீதியில் இறங்கி மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.

ஐ.எஸ் இயக்கத்துக்கு உலக மக்கள் மத்தியில் கிடைக்கப்பெற்ற இந்த வரவேற்பினால் மன்னராட்சி செய்துவருகின்ற நாடுகளில் உள்ள அரச குடும்பத்தினர்களுக்கு அச்சத்தினையும் பீதியையும் ஏற்படுத்தியது.

இதனால் இஸ்லாமியர்களின் மனதிலிருந்து ஐ.எஸ் இயக்கத்தினர்கள் மீது வெறுப்பை உண்டுபண்ணும் நோக்கில் பக்தாதியை ஓர் யூதர் என்று பிரச்சாரப்படுத்தி வந்தபோது ஐ.எஸ் இயக்கத்தின் கடும்போக்கு நடவடிக்கைகள் மன்னர் குடும்பத்தினர்களுக்கு சாதகமாக அமைந்தது.  

அதாவது ஐ.எஸ் இயக்கத்தினர்கள் இரக்கமின்றி தண்டனை வழங்குகின்ற கொடூரமான காட்சிகளை சர்வதேச ஊடகங்கள் மூலமாக மிகைப்படுத்தி அவர்களை ஓர் கொடூரமானவர்களாகவும், இஸ்லாத்துக்கு எதிரானவர்களாகவும், யூதர்களாகவும் சித்தரிக்கப்பட்டார்கள். பின்பு ஐ.எஸ் இயக்கத்துக்கு ஆரம்பத்தில் இருந்துவந்த ஆதரவு சரியத்தொடங்கியது.  

இதனால் மன்னர் குடும்பங்கள் நின்மதி அடைந்ததுடன், அமெரிக்காவும், இஸ்ரேலும் மகிழ்ச்சி அடைந்தன.       

தற்போது அல் பக்தாதி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் அதிலும் சில குழப்பங்கள் காணப்படுகின்றது. அதாவது இந்த இராணுவ நடவடிக்கைக்கு செல்லும்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டு பிரதேசத்தை கடந்து சென்றதாகவும் அதற்காக அனுமதி வழங்கிய ரஷ்யாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமெரிக்கா அறிவித்தது.

ஆனால் அவ்வாறு எந்தவொரு அனுமதியும் தாங்கள் வழங்கவில்லை என்றும், அமெரிக்காவின் இந்த இராணுவ நடவடிக்கை பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாதென்று ரஷ்யா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் கருத்தினை ரஷ்யா மருத்துள்ளதாலும், கடந்த காலங்களிலும் பக்தாதி கொல்லப்பட்டார் என்று பல தடவைகள் அமெரிக்கா அறிவிப்பு செய்ததுமேதான் இந்த குழப்பத்துக்கு காரணமாகும்.

இருந்தாலும் அமெரிக்க ஜனாதிபதியே நேரடியாக பக்தாதியின் மரணத்தை உறுதிப்படுத்தும்போது அதனை நாங்கள் மறுதலிக்க முடியாது. 

Mon, 28 Oct 2019 17:06:21 +0530

வெற்றி வாய்ப்பை நோக்கி?

வெற்றி வாய்ப்பை நோக்கி? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

முன்னர் இடம்பெற்ற தேர்தல்களை ஒப்பிட்டு நோக்கி அனுமானம் ஒன்றை மேற்கொள்ளமுடியும். அந்த வகையிலே;

கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களிலே வாக்களிப்பு வீதத்தை நோக்குகின்ற போது பெரும்பான்மை மக்களின் அளிக்கப்பட்ட வாக்குகள் 2010, (யுத்த வெற்றி)1994(இளம் சந்திரிக்காவின் வருகை) தேர்தல் தவிர, மற்றைய தேர்தல்களில் இரு பெரும்பான்மை கட்சிகளுக்கும் சிறிதளவான ஏற்றத்தாழ்வுகளுடன் கூடிய வாக்குகளாகவே அளிக்கப்பட்டிருக்கின்றன.

அதே நேரம் சிறுபான்மை தமிழ்,முஸ்லிம்,மலையக மக்களின் வாக்குகள் பெரும்பாலும் வெற்றிவாய்ப்புள்ள அணியை நோக்கி 4:1 என்ற விகிதத்தில்; இரு பிரதான கட்சிகளுக்கும் அளிக்கப்பட்டு வந்திருப்பதோடு தீர்மானிக்கும் சக்திகளாக பல சந்தர்ப்பத்தில் இருந்திருக்கின்றன.

இம்முறை தேர்தலிலே பெரும்பான்மை மக்கள் மத்தியிலே மூன்றாவது சக்தியாக அனுரகுமார அணியும் போட்டியிட முன்வந்துள்ள காரணத்தினால்; (ஏலவே இவ்வணி 2005 ல் மகிந்த சார்பு அணியாகவும், 2010,2015 தேர்தலில் ஐ.தே.க சார்பு அணியாக இருந்தது)

இலங்கையில் வளமையாக அளிக்கப்படும் வாக்குகளில் 70% ஆனவை பெரும்பான்மை மக்களின் வாக்குகளாகவும், 30% ஆனவை சிறுபான்மை மக்களுடையதுமாகவே இருந்துள்ளது.

இன்றுவரை பெரும்பான்மையின் உத்தேச கணிப்பீடாக,

- ஏனையோருக்காக - 3%
- திசைகாட்டி அனுர அணி - 8%
- சஜித் அன்னம் - 24%
- கோட்டா மொட்டு - 35%
மொத்தம் - 70%
( இங்கு கோட்டா மொட்டுக்கு அதி உச்ச வாக்களிப்பே இடப்பட்டுள்ளது)

மறுபக்கம் அளிக்கப்படுகின்ற சிறுபான்மை வாக்குகளை நோக்குகின்ற போது;

-ஏனையோருக்காக - 0.25 %
- திசைகாட்டி அணி - 0.75%
- கோட்டா மொட்டு - 6%
- சஜித் அன்னம் - 23%
-மொத்தம் -30%
( இங்கும் கோட்டா மொட்டுக்கு அதி உச்ச வாக்களிப்பு இடப்பட்டுள்ளது)

இந்த அடிப்படையில் அரசில் அங்கம் வகிக்கும் அன்னத்துக்கு 47% மும், மொட்டுக்கு 41% மும் ( இது கடந்த பிரதேசசபை தேர்தல்களில் மொட்டு பெற்ற வாக்குகளை விடக் கூடிய விகிதாசாரம்) இருப்பதாகவே தோன்றுகின்றது. இதன் படி இரு அணியினரும் தேர்தலை நோக்கி பகீரதப்பிரயத்தனம் செய்யவேண்டிய தேவை உள்ளது.

இதன் அடிப்படையில் நோக்கும் போது இருக்கின்ற நாட்களுக்குள் சஜித் அணி வெற்றியை நோக்கி 3% +1 க்காக உழைக்கவேண்டிய அதேவேளை, கோட்டாபே 9% +1 எனும் இமாலய இலக்கை எட்டவேண்டிய தேவையுள்ளது. இவ்விலக்கு சிறுபான்மைக்குள்ளிருந்து இவருக்கு சாத்தியமில்லை என்றே தோன்றுகின்றது.

மேலும் கோட்டா அணிக்குள் சென்றிருக்கின்ற SLFP அணி சார்பில் அலட்ட வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. காரணம் அவர்களில் அனேகமானோர் கடந்த 2015 ஜனாதிபதி தேர்தலிலே மகிந்த அணியை பலப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களேயாவர்.

அதே வேளை சந்திரிக்கா தலைமையிலான SLFP தொகுதி அமைப்பாளர்கள் பலர் சஜித் வெற்றியில் பங்காளராக திடசங்கம் பூண்டுள்ளனர். இது சஜித் அணியின் வெற்றியில் தாக்கம் செலுத்துவதோடு கோட்டாவின் வீழ்ச்சிக்கு துணை போகும்.

மாத்திரமன்றி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இளம் தலைமைத்துவம் இன்றி பரிதவித்த ஐ.தே.க அணிக்கு இள இரத்தம் பாய்ச்சப்பட்டதும் ஏலவே ஐ.தே.க தோல்விகளின் வெறுப்பினால் கடந்த பல தேர்தல்களில் வாக்களிப்பில் ஈடுபட்டிராத பாரியளவிலான ஐ.தே.க பெரும்பான்மை ஆதரவாளர்கள் இம்முறை சஜித்துக்காக வாக்களிக்கவுள்ளதாக பெரும்பான்மை மக்களுக்குள் அரசல் புரசலாக பேச்சுக்களும் உள்ளன.

மேலும் இளையவர்கள் வாக்குகளை மாற்றக்கூடிய வல்லமை சஜித்திடமே காணப்படுகின்றது. அத்தோடு தன் அப்பாவின் செல்வாக்கும், பெளத்தத்தின் மீதான பற்றுடன்கூடிய தேர்தல் அணுகுமுறையும், மேடைப்பேச்சும் எதிரணியின் வாக்குகளை கவர்ந்திழுக்க சஜித்தின் வெற்றிக்கு போதுமானவையாகவே தென்படுகின்றது.

Fri, 25 Oct 2019 18:57:09 +0530

நியாயத்தின் பக்கம் நாமா? நாம் நிற்கும் பக்கம் நியாயம் பேசுகின்றோமா?

நியாயத்தின் பக்கம் நாமா? நாம் நிற்கும் பக்கம் நியாயம் பேசுகின்றோமா? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க ஒரு தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றோம். 2010ம் ஆண்டிற்கு முந்தியவை போன்ற ஒரு தேர்தலாக இத்தேர்தல் இருக்குமாயின் நாம் சற்று தளர்வாக நம் முடிவுகளை எடுக்கலாம். நமது பிரதான தலைப்புகள் அபிவிருத்தி, பொருளாதாரம், உரிமைகளோடு சம்பந்தப்பட்ட சில விடயங்கள்; என்று பேசலாம்.

இன்று அவைகளுக்கும் மேலாக, எதிர்காலத்தில் நாம் இந்த நாட்டில் வாழக்கூடிய ஒரு சந்தர்ப்பம் இருக்குமா? இலங்கை ஒரு மியன்மாராக மாறுமா? அல்லது சீனாவின் உய்குர் முஸ்லிம்களின் நிலைவருமா? அல்லது இந்தியாவின் வடமாநிலங்களில் வாழும் முஸ்லிம்கள் இறைச்சியை கொண்டுசென்றாலே அடித்துக் கொலைசெய்து அதனை சமூக வலைத்தளங்களிலேயே பதிவிட்டு எந்த சட்ட நடவடிக்கையும் இல்லாமல் இருக்கும் நிலை வருமா? என்று தெரியாத ஒரு நிலையை உருவாக்கக்கூடிய ஒரு இக்கட்டான தேர்தலை முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

இன்றைய பிரதான போட்டியாளர்களில் எந்தத் தரப்பும் சிறுபான்மைகளின் அல்லது முஸ்லிம்களின் நண்பன் என்று சொல்லக்கூடியதாக இல்லை. எல்லாம் இனவாத மேகம் கருக்கொண்ட, இனவாதிகளால் சூழப்பட்ட கூடாரங்களாகவே இருக்கின்றன.

இனவாதத்திற்கு சாஷ்டாங்கம் செய்யும் சிறுபான்மை

இன்று இருதரப்பிலும் உள்ள எந்த முஸ்லிம்கட்சியோ, மலையகக்கட்சியோ எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. ஒப்பந்தம் செய்யாததை சாணக்கியமாக அவர்கள் கருதுகிறார்கள். ஒப்பந்தம் செய்தால் அது இனவாதிகளுக்கு சாதகமாகப்போகும். எனவே, இனவாதிகளுக்கு தீனிபோடுவதைத் தவிர்த்திருக்கிறார்கள்.

இந்நிலை, பல அர்த்தங்களைத் தொனித்துக் கொண்டிருக்கின்றது. அதாவது, இந்நாட்டின் ஆட்சியாளர் யாராக இருந்தாலும் அவர்கள் இனவாதத்திற்கு அடிபணிந்துதான் ஆட்சிசெய்ய வேண்டும். சிறுபான்மைகள் இரண்டாம்தர பிரஜைகளாக அந்த இனவாதத்திற்கு சாஷ்டங்கம் செய்துதான் வாழவேண்டும்.

இன்று ஒரு தரப்பு சிறுபான்மையின் வாக்குகள் இல்லாமல் வெற்றிபெறுவோம்; என்கிறார்கள். ( களநிலவரம் அவர்களின் நிலைப்பாட்டைக்கூட மாற்றிக்கொண்டிருக்கிறது. அது தொடர்பாக பின்னர் பார்ப்போம்)

அடுத்த தரப்பு தன்வெற்றிக்குத் தங்கியிருப்பதே சிறுபான்மை வாக்கில்தான். அந்தத் தரப்பும் சிறுபான்மைகளுடன் எந்த ஒப்பந்தமும் செய்யத் தயாராயில்லை. சிறுபான்மையுடன் ஒப்பந்தம் செய்தால் வெற்றிபெறுவதற்குத் தேவையான மிகுதி வாக்குகளைக்கூட பெரும்பான்மை சமூகம் தராமல் விட்டுவிடுமோ என்கின்ற அச்சம். அப்படியானால் கிட்டத்தட்ட மொத்த பெரும்பான்மை சமூகமும் இனவாதத்தின் பக்கம்தான் நிற்கின்றதா?

முஸ்லிம் மற்றும் மலையகக் கட்சிகள் வெற்றிபெறுவதற்கு இனவாத வாக்குகளும் உங்களுக்குத் தேவை. கடந்தகாலங்களில் ஒப்பந்தம் எழுதித்தான் எதைச் சாதித்துவிட்டோம். எனவே, இனவாதிகளின் மனம்கோணாமல் தேர்தல் செய்து அவர்களின் வாக்குகளையும் பெறுங்கள்; என்கிறார்கள். அதை சாணக்கியம் என்றும் கூறுகிறார்கள்.

அவர்களது இந்த மனோநிலை சரியா? பிழையா? த தே கூ துணிச்சலாக ஒப்பந்தம் செய்துதான் ஆகவேண்டும்; என்கின்றதே! அதைப்பற்றி என்ன சொல்லப்போகிறோம்? என்ற விடயங்களை இன்னுமொரு ஆக்கத்தில் பார்ப்போம்; இன்ஷாஅல்லாஹ். ஆனால் தேர்தலில் சிறுபான்மையின் வாக்குகளில் தங்கியிருந்துகொண்டே இவ்வாறு செய்பவர்கள் ஆட்சிக்கு வந்தால் இனவாதிகளிடம் இருந்து எவ்வளவு தூரம் சிறுபான்மைகளை, குறிப்பாக முஸ்லிம்களைப் பாதுகாப்பார்கள்?

கடந்தகாலங்களில் முஸ்லிம்களைப் பாதுகாக்க காத்திரமாக எதையும் செய்யமுடியாமல்போன முஸ்லிம்கட்சிகள் எதிர்காலத்தில் எதைச்செய்வார்கள்? என்ற கேள்விகள் எமக்குள் எழுப்பப்பட வேண்டும்.

முஸ்லிம் கட்சிகளும் எதிர்காலத்தில் நமக்கு பெரிதாக உதவப்போவதில்லை. போட்டியிடும் பிரதான வேட்பாளர்களெல்லாம் ஒன்றில் இனவாதியாக அல்லது இனவாதிகளுக்கு அஞ்சுகின்றவர்காக அல்லது தலைசாய்க்கின்றவர்களாத்தான் இருக்கின்றார்கள். போதாக்குறைக்கு முன்னாள் ராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்ககூட “ One Coutry, One Law” என்று கோசம் எழுப்பிக்கொண்டு திரிகின்றார்.

இந்நிலையில், நாம் எடுக்கப்போகும் தீர்மானம் மிகவும் நுணுக்கமாக, பல விடயங்களையும் ஆராய்ந்து குறைந்த பாதிப்புள்ளவரைத் தெரிவுசெய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

இத்தேர்தலிலும் சிறுபான்மை வாக்குகளே ஜனாதிபதியைத் தீர்மானிக்கப்போகின்றன.

இந்த இக்கட்டான நிலையை இன்று நாம் சிந்திக்கின்றோமா?

இன்று நாம்

ஒரு கூட்டம் தம் சொந்த மூளையால் சிந்திக்க ஆயத்தமில்லை; என்ற நிலை. தனது கட்சி, தனது தலைவன் எந்தப் பக்கமோ, நாமும் அந்தப் பக்கம். இன்று தரப்பு A யை ஆதரிக்கும் கட்சிகள், தரப்பு B யையும் அடுத்த தரப்பு மறுதிசையிலும் ஆதரித்திருந்தால் இந்தக் கைகளெல்லாம் மறு திசையில் எழுதியிருக்கும்.

தன் கட்சியின் தலைவன் எதை உளறினாலும் அதற்கு வக்காலத்து வாங்குவதற்காக ஒருகூட்டம். இன்று ஒரு பதிவு பார்த்தேன். அதில், “தலைவன் கழுதையை குதிரையென்றால்; தொண்டன், ஆமாம் தலைவா, அது தரமான வரிக்குதிரை “ என்னுமளவு இந்தத் தொண்டன் இருக்கின்றான்; என்ற ஒரு கருத்தை அது குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இன்னொரு புறம்; சுயேட்சையாக போட்டியிடும் தன் தலைவனை தேர்தல் திணைக்களத்திற்கு முன்னால், அத்தனை தேசிய ஊடகங்களுக்குமுன்னால் வைத்துக்கொண்டு ஒரு தொண்டன் “ அபே ஜனாதிபதி துமாட”; என்கின்றான். அந்தத்தலைவனும் ஏனைய தொண்டர்களும் இணைந்து “ஜயவேவா” என்கின்றனர்.

இவற்றையெல்லாம் எங்கே போய்ச் சொல்லி அழுவது.

இன்னுமொரு கூட்டம், அவர்கள் எந்தத் தலைவனுக்குப் பின்னாலும் இல்லை; அவர்களாகவே, ஏற்கனவே தீர்மானித்துவிட்டார்கள்; தாம் எந்தப்பக்கமென்று.

கேட்டால் இந்தத் தரப்பு, அந்த ஆட்சியில் நடந்தவற்றைக் கூறுகிறது. அந்தத் தரப்பு இந்த ஆட்சியில் நடைபெற்றவற்றைக் கூறுகின்றது.

இரண்டு தரப்பிலும் முஸ்லிம்களுக்கு அநியாயம் நடந்தது; என்பதில் யாருக்காவது மாற்றுக் கருத்து இருக்கின்றதா? வெற்றிபெறக்கூடிய மூன்றாவது தரப்பும் இல்லாத நிலையில் இவ்விரண்டு தரப்பில் ஒன்றைத்தானே தெரிவுசெய்தாக வேண்டும்.

எவ்வாறு தெரிவுசெய்வது

இவ்விரண்டு தரப்பிலும் சாதகங்களைவிட பாதகங்களே அதிகமாக இருக்ககின்றன; என்பதும் நம் எல்லோருக்கும் தெரியும். இவற்றில் குறைவான பாதிப்பை அடையாளம் காணவேண்டுமானால் இரண்டினதும் கடந்தகால, சமகால செயற்பாடுகளை அலசி ஆராய்ந்து சமூகத்திற்கு எது சிறந்த முடிவோ, அதைத்தானே எடுக்கவேண்டும். ஆனால், என்ன நடக்கிறது.

ஒரு தரப்பு ‘ அவரது முகத்தில் கறுப்புப் புள்ளியிருக்கிறது’ என்றால் அடுத்த தரப்பு, ‘இவரது கழுத்தில் கறுப்புப்புள்ளி இருக்கிறதே!’ என்று எதிர்வாதம் புரிகிறது.

அதாவது, ஒரு தரப்பு தனது மாமன், மாமனை விட்டுக்கொடுக்க முடியுமா? என்பதுபோலவும் அடுத்த தரப்பு அவன் என் மச்சான், என் மச்சானை விட்டுக் கொடுக்க முடியுமா? என்பதுபோலவும் வாதப்பிரதிவாதம் புரிகிறார்கள்.

இவ்விரு தரப்பும் உங்கள் குடும்பமா? கண்ணை மூடிக்கொண்டு நியாயம், அநியாயங்களுக்கப்பால் வாதாடுவதற்கு. குடும்பமென்றாற்கூட நியாயத்தின் பக்கத்தில்தான் நிற்கவேண்டும்; ஆனாலும் பெரும்பாலும் அவ்வாறிருப்பதில்லை.

இவர்கள் யார் நமக்கு. ஏன் கண்மூடித்தனமாக ஆளுக்கொரு தரப்பை ஆதரித்துக்கொண்டு, தான் ஆதரிப்பதற்காக அத்தரப்பை நியாயப்படுத்துகிறீர்கள். மாறாக, ஒரு நடுநிலையான மனோநிலைக்கு வந்து, இருபக்கமுமுள்ள பாதகங்களை மீண்டும் மனத்திரைமுன் கொண்டுவாருங்கள்.

அவற்றை அசைபோடுங்கள். யாரையும் யாரும் தாக்காமல் நாம் எல்லோரும் சகோதரர்கள். எந்தப் பக்கம் முடிவெடுப்பது இச்சந்தர்ப்பத்தில் நமக்கு உசிதமானது; என ஏன் தீர்மானிக்க முடியாது?

எல்லா முட்டையையும் ஒரு கூடையில் வைக்கக்கூடாது

கோட்டாவுக்கு ஆதரவளிப்பதன்மூலம்தான் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்; அல்லது சஜித்தின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட சாத்தியமான ஆபத்துக்களைவிட கோட்டாவின் ஆட்சியில் ஆபத்துக்கள் குறைவாகத்தான் இருக்குமென்பதுதான் யதார்த்தமென்றால் அனைவரும் கோட்டாவுக்கு ஆதரவளிக்க வேண்டியது நமது கடமை.

ஆபத்துக்கூடிய வேட்பாளரைத் தெரிவுசெய்து நாளை அதனால் ஒரு முஸ்லிம் பாதிக்கப்பட்டாலும் மறுமையில் அதற்கும் நாம் பதில் சொல்லவேண்டும். ஆனால், எந்தவகையில் அந்த முடிவுக்கு வந்தீர்கள்; என்பதற்கான நியாயத்தைக்கூறவேண்டும்.

கடந்தகால, சமகால நிகழ்வுகள், அவர்களின் கொள்கை நிலைப்பாடுகள், அவர்களுடன் இணைந்திருப்பவர்கள், இவை அனைத்தும் தொடர்பாக ஒரு முழுமையான பார்வையில் ஆராயப்படவேண்டும். ( A holistic analysis).

அதைவிடுத்து ஒரு தரப்பு, ‘உங்களுடன் விமல், உதய, டிலான்’ போன்றவர்கள் இருக்கின்றார்கள்; என்றால் அடுத்த தரப்பு ‘உங்களுடன் சம்பிக்க’ இருக்கிறார்; என்பது. ஏட்டிக்குப்போட்டி. யாருக்காக இந்தப்போட்டி?

இதில் மிகப்பெரிய ஜோக், டிலான் பெரேராவையும் இனவாதி பட்டியலில் சேர்ப்பது. இவ்வாறு தாம் இருட்டில் தடவிக்கொண்டு சமூகத்திற்கு வழிகாட்ட ஒருகூட்டம்.

இதேபோன்றுதான், சஜித்திற்கு வாக்களிக்க வேண்டுமானால் அதற்கான நியாயங்களை கடந்தகால, சமகால அனுபவத்தின் அடிப்படையில் முன்வைக்க வேண்டும். அதன்பின் ஏற்படுகின்ற தெளிவின் அடிப்படையில் கோட்டாவோ, சஜித்தோ, சமூகம் ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும். ஆனால் இன்று நாம் அதற்கெல்லாம் ஆயத்தமில்லை.

யாராவது கடந்தகால மஹிந்த அரசினால் ஏற்படும் பாதிப்புக்களை எழுதினால் மஹிந்தவாதிகளுக்கு பொறுத்துக்கொள்ள முடியாது. ரணிலின் ஆட்சியின் குறைபாடுகளை எழுதினால் அவர்களுக்கு பொறுத்துக்கொள்ள முடியாது. நீங்களெல்லாம் யார்?

ஏன் இருதரப்பு விடயங்களையும் நடுநிலை மனோநிலையில் இருந்து ஆராய்வதற்கு ஆயத்தமில்லாமல் இருக்கிறீர்கள்.

இந்த லட்சணத்தில் சமூகத்தை மறந்து தாம் பிரிந்து நிற்பதற்கு கொடுக்கும் இன்னுமொரு நியாயப்படுத்தல் ‘ எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக்கூடாது. ஒரு முன்னாள் அமைச்சரும் இன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஒருவர் இதை பகிரங்கமாகவே சொல்கின்றார். அவர் குறித்த ஒரு தரப்பை ஆதரிப்பதற்குக் காரணம் அத்தரப்பு, சரியானதென்பதல்ல. எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக் கூடாது; என்பதாகும்.

மறுவார்த்தையில் கூறுவதாக இருந்தால் நாம் இருப்பதோ 10%, கத்தி தலைக்குமேல் தொங்குகிறது. சேர்ந்து முகம்கொடுக்காமல் பிரிந்து நிற்போம்; என்கின்றார். பிழையான கூடையில் முட்டையைப் போட்டு முட்டை கூழானாலும் பறவாயில்லை. ஒரே கூடையில் போடக்கூடாது; என்கிறார்.

எல்லோரும் நல்ல வேட்பாளர்களே! என்றால் அது பொருந்தும். சில கூற்றுக்கள் பொதுவாக பொருந்தும். சில விசேட சூழ்நிலைக்குப் பொருந்தாது. மழை வரும்போது குடையை விரிக்கவேண்டும்; என்பது பொதுவான விதி. அதற்காக, மழையுடன் சேர்த்து பயங்கர சூறாவளியும் வீசும்போது குடையை விரித்தால் என்ன நடக்கும். ஆளையும் சேர்த்துத் தூக்கிப்போகாதா?

2010 ஆண்டிற்கு முந்திய ஒரு ஜனாதிபதித் தேர்தலுக்கு அந்தக்கூற்று பொருந்தலாம். இனவாதம் உச்சம்தொட்ட இந்த காலகட்டத்திற்குப் பொருந்துமா? சிந்திக்க வேண்டாமா?

நாட்டைப் பாதுகாக்க வாக்களிப்போம்

இன்னும் சிலர் நாட்டைப் பாதுகாக்க வாக்களிக்கப் போகின்றார்களாம். யாரிடமிரூந்து நாட்டைப் பாதுகாக்க? முஸ்லிம்கள் அடிப்படை வாதிகள், தீவிரவாதிகள்; முஸ்லிம்களிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க அவர்கள் சிங்கள மக்களிடம் வாக்கு கேட்கிறார்கள். அனைத்து முஸ்லிம்களின் வீடுகள், பள்ளிவாசல்களில் தேடுதல் நடாத்தப்பட வேண்டுமென்று ஏற்கனவே கூறியிருக்கின்றார்கள். நீங்களும் முஸ்லிம்களிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்கத்தானா வாக்களிக்கப் போகின்றீர்கள்? அவ்வாறாயின் நீங்கள் யார்?

எனவே, அன்புள்ள சகோதரர்களே! நீங்கள் ஏதாவது தனிப்பட்ட ஆதாயத்திற்காக வாக்களிக்கப் போகின்றீர்களா? அல்லது உங்களுக்காக, உங்கள் எதிர்கால சந்ததிக்காக, இந்த சமூகத்திற்காக வாக்களிக்கப் போகின்றீர்களா?

முந்தியதுதான் உங்கள் காரணமென்றால் பேசுவதற்கெதுவுமில்லை. சில அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை அதுதான் காரணம்.

பிந்தியதுதான் காரணமென்றால் முதலாவது நடுநிலை மனோநிலைக்கு வாருங்கள். “ நான் எடுக்கும் முடிவு இந்த சமூகத்திற்கு நன்மை பயக்கக்கூடியதாக ஆக்கிவிடு இறைவா” என்ற பிரார்த்தனையுடன் சகல பக்கங்களையும் ஆராயுங்கள். அதன்பின் முடிவெடுங்கள்.

தமிழ் மக்களைப் பாருங்கள். எவ்வளவு ஆறுதலாக அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் அவசரப்படவில்லையே!

நவம்பர் 16ம் திகதிதான் வாக்களிப்பு. காலம் இருக்கிறது. எல்லாப் பக்கத்தையும் ஆராயுங்கள். அதன்பின் முடிவெடுங்கள்.

Thanks: Ashraff Khan

Sun, 13 Oct 2019 20:57:10 +0530

சதாம் ஹுசைன் விட்ட தவறினை ஈரான் விடுமா? அமெரிக்காவை தோற்கடிக்க ஈரான் என்ன செய்ய வேண்டும்?

சதாம் ஹுசைன் விட்ட தவறினை ஈரான் விடுமா? அமெரிக்காவை தோற்கடிக்க ஈரான் என்ன செய்ய வேண்டும்? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

எதிரிகள் எங்களை தாக்கபோகின்றார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் எங்களை தேடி வரமுன்பு நாங்கள் எதிரியை தேடிச்சென்று தாக்கி அழிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் இழப்பினை சந்திப்பது தவிர்க்க முடியாதது.  

தற்போது பாரசீக வளைகுடாவில் போர் பதட்டம் நிலவுகின்றது. ஈராக்கை அழித்து நிர்மூலமாக்கியது போன்று ஈரானையும் அமெரிக்கா எந்தநேரத்திலும் தாக்கலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது.

ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் விட்ட தவறினை ஈரான் விடுமா என்பதுதான் எமது கவலையாகும்.

பல ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் எங்கயோ இருக்கின்ற அமெரிக்காவானது நூறுவீதம் இஸ்லாமியர்கள் வாழ்கின்ற பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் தளம் அமைத்துக்கொண்டு இஸ்லாமிய நாடொன்றை தாக்கி அழிப்பதற்கு அப்பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்.

அவ்வாறு ஒத்துழைக்காவிட்டால் இஸ்லாமிய நாடொன்றை அழிப்பதென்பது அமெரிக்காவினால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாத விடயமாகும்.  

சதாம் ஹுசைனை பதவி கவிழ்க்கப் போகிறோம் என்ற போர்வையில் ஈராக்கை அழித்து பல இலட்சம் இஸ்லாமியர்களை அமெரிக்கா கொலை செய்யப் போகிறது என்று முன்கூட்டியே நன்றாக தெரிந்திருந்தும், தனது அயல் நாடுகளில் அமெரிக்கா தளம் அமைத்து தன்னை பலப்படுத்தும் வரைக்கும் பார்த்துக் கொண்டிருந்தது சதாம் ஹுசைன் விட்ட பாரிய தவறாகும்.

அதாவது ஈராக்கை தாக்குவதற்காக சவூதி அரேபியா, குவைத், கட்டார், உட்பட ஈராக்கை அண்மித்த பல நாடுகளில் அமெரிக்கா தளம் அமைத்துகொண்டும், பாரசீக வளைகுடா கடல் பகுதியில் தனது விமானம் தாங்கி கப்பலை நிறுத்தி அங்கிருந்தும் ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடாத்தியது.  

அவ்வாறு தளம் அமைத்து அமெரிக்கா தன்னை பலப்படுத்தும் வரைக்கும் அவகாசம் வழங்காமல் ஆரம்பத்திலேயே அந்த இடங்களை வலிந்து சென்று தாக்குதல் நடாத்தி நிர்மூலமாக்கியிருந்தால் ஈராக்கை அழிப்பது அமெரிக்காவுக்கு கடினமான காரியமாக இருந்திருக்கும்.

அமெரிக்கா வியட்நாமில் அடைந்த தோல்விக்கு பின்பு எந்தவொரு நாட்டின்மீதும் தனியாக சென்று போர் தொடுப்பதில்லை. தனது கூட்டாளி நாடுகளையும் அழைத்துக்கொண்டே செல்வது வழக்கம். அதிலும் தரைப்படையை கொண்டு தாக்குதல் நடாத்துவதில்லை.

முதலில் விமான தாக்குதல் நடாத்தி அதன்மூலம் எதிரி நாட்டின் இராணுவ கட்டளை மையங்கள், விநியோகப் பாதைகள், விமான தளங்கள், ஏவுகணை நிலைகள், விமான எதிர்ப்பு நிலைகள் என அனைத்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் நிர்மூலமாக்கிய பின்பே தரைப்படையினரை அனுப்புவார்கள்.

அதாவது எதிரி நாட்டின் முள்ளந்தண்டை உடைத்து அவர்களது எழுபது வீதமான பலத்தினை அழித்து நிலைகுலைய செய்த பின்பே அமெரிக்காவினதும், அதன் கூட்டாளி நாடுகளினதும் தரைப்படைகள் எதிரி நாட்டுக்குள் நுழைவது வழக்கம். இதுதான் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் நடந்தது.   

இதனை ஒரு படிப்பினையாக கொண்டு ஈரான் செயல்பட வேண்டும். அதாவது தன்னை சுற்றியுள்ள நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க விமான தளங்களையும், ஏவுகணை நிலைகளையும் வலிந்து சென்று தாக்கி அழிக்க வேண்டும்.

அத்துடன் மேலதிக அமெரிக்க படைகளும், விமானங்களும் வளைகுடா பகுதிக்குள் நுழைவதை தடுப்பதுடன், ஈரானுக்கும் ஓமானுக்கும் இடைப்பட்ட ஹோமொஸ் கடல் பாதையூடாக வளைகுடா கடல் பகுதிக்குள் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் செல்வதனையும் தடுக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால் அமெரிக்காவின் அதிநவீன F-35 விமானத்தின் மூலமாகவும், ஏவுகணைகள் மூலமாகவும் ஈரான் தாக்கப்படுவதனை தடுக்கமுடியால் போய்விடும்.

அண்மையில் வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் நற்பு நாடுகளின் கப்பல்கள் மீதும், சவூதியின் சில இடங்களிலும் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களை அவதானிக்கும்போது சதாம் ஹுசைன் விட்ட தவறினை போன்று ஈரான் செய்யாது என்பதனை புரிந்துகொள்ள கூடியதாக உள்ளது.

Sat, 06 Jul 2019 14:22:33 +0530

ஜனாதிபதி முகம்மத் முர்சியின் மரணமும், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு எதிரான கெடுபிடிகளும்

ஜனாதிபதி முகம்மத் முர்சியின் மரணமும், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு எதிரான கெடுபிடிகளும் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

எகிப்திய வரலாற்றில் ஜனநாயக முறைப்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி முகம்மது முர்சி அவர்களின் மரண செய்தி உலக இஸ்லாமியர்களை கவலை அடைய செய்துள்ளது.

அமெரிக்காவின் ஆதரவுடன் முப்பது வருடங்களாக சர்வாதிகார ஆட்சி செய்துவந்த ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சியை யாராலும் அசைக்கமுடியாது என்ற நிலைமை அப்போது இருந்தது.  

மத்தியகிழக்கில் அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடன் நீண்ட காலங்களாக சர்வாதிகார ஆட்சி நடாத்திவந்த நாடுகளில் அரபு வசந்தம் என்ற பெயரில் மக்கள் புரட்சி ஏற்பட்டது.

இந்த புரட்சியானது 2௦1௦ இறுதியில் துணீசியா நாட்டில் ஆரம்பித்தது. பின்பு 2௦11 இல் எகிப்தில் புரட்சி வெடித்தது. இப்புரட்சியின் மூலம் முப்பது வருடகால ஹோஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்டது.

எகிப்தின் வரலாற்றில் முதன் முறையாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடாத்தப்பட்டு மக்கள் தெரிவின் அடிப்படையில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை சேர்ந்த முகம்மத் முர்சி அவர்கள் எகிப்தின் ஜனாதிபதியாக தெரிவானார்.

ஆனாலும் அவர் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ முட்பட்டதனாலும், அமெரிக்காவுக்கு கட்டுப்படாததனாலும் தொடர்ந்து ஆட்சி செய்வதற்கு இராணுவத்தினர்கள் ஒத்துழைக்கவில்லை. அதனால் 2௦13 ஜூலை மாதம் இராணுவத்தினர்களின் சதி முயற்சியினால் ஒரு வருடத்தில் முகமத் முர்சியின் ஆட்சி அகற்றப்பட்டது. இதன் பின்னணியில் அமெரிக்கா இருந்தது.  

இதன்போது ஏற்பட்ட வன்முறையில் முஸ்லிம் சகோரத்துவ அமைப்பை சேர்ந்த பலர் எகிப்து இரானுவத்தினரினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  

பின்பு பலவித குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு ஜனாதிபதி முகம்மத் முர்சி அவர்களும், அவரது முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் முன்னணி உறுப்பினர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டதுடன், இவர்கள்மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.  

எகிப்தின் மிகப்பெரிய இஸ்லாமிய அமைப்பான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு உலகெங்கிலும் மிகவும் செல்வாக்கான அமைப்பாக காணப்படுவதுடன் இது 1928 இல் ஹசனுள் பன்னாவினால் நிறுவப்பட்டது.

இவ்வமைப்பு எகிப்திய மக்களின் மனங்களில் ஆழ பதியப்பட்டதனால் அம்மக்களிடமிருந்து இவ்வமைப்பை பிரிக்க முடியவில்லை. அதனால் அமெரிக்க கைபொம்மையான எகிப்திய இன்றைய அரசு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை ஓர் பயங்கரவாத அமைப்பாக அறிவித்து அதனை தடை செய்தது.

அத்துடன் அதன் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதுடன், சொத்துக்கள் மற்றும் முகம்மத் முர்சி உட்பட அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் சுமார் 15௦௦ க்கு மேற்பட்டவர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.      

இந்த அராஜக செயல் அனைத்துக்கும் இன்றைய எகிப்து அரசின் கைபொம்மையாக அந்நாட்டு நீதிமன்றமும் இராணுவமும் செயல்பட்டு வருகின்றது.

இத்தனை கெடுபிடிகளுக்கு மத்தியிலும் முஸ்லிம் சகோரத்துவ அமைப்பு தொடர்ந்தும் தனது செயல்பாடுகளை எகிப்திலும் அதற்கு வெளியேயும் செயல்பட்டு வருகின்ற வேளையில் முகம்மத் முர்சி அவர்களின் மரணம் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளது.

Tue, 18 Jun 2019 18:18:16 +0530

மாகந்துரே மதுஷ் இலங்கை வந்தால் என்ன நடக்கும்? ஜே.வி.பி. பரபரப்பு தகவல்!

மாகந்துரே மதுஷ் இலங்கை வந்தால் என்ன நடக்கும்? ஜே.வி.பி. பரபரப்பு தகவல்! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாள கோஷ்டி தலைவர்  மாகந்துரே மதுஷ், இலங்கைக்கு கொண்டுவரப்பட்டால் இங்குள்ள அரசியல்வாதிகளே அவரை தப்பிக்கவைத்துவிடுவார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டினார்.

மாவனெல்லையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு  குற்றஞ்சாட்டினார்.

மாகந்துர மதுஷ் உடன் கொடுக்கல்- வாங்களில் ஈடுபடும் அரசியல்வாதிகள் இலங்கையில் உள்ளனர்.

மாகந்துர  மதுஷின் பின்னால் இருக்கும் அரசியல்வாதிகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில்  கேள்வி எழுப்பினோம். இருப்பினும் எந்ததொரு பதிலும் வழங்கப்படவில்லை.

மதுசுக்கும் இலங்கையிலுள்ள அரசியல் வாதிகளுக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகின்றது. மதுஷின் தந்தையின் மரண ஊர்வலத்தில்கூட அரசியல்வாதியொருவர் பங்கேற்றிருந்தார்.
எனவே, தகவல்கள் வெளியானால் சில அரசியல் வாதிகளின் முகத்திரை கிழிந்துவிடும். இதனால்தான் தகவல்கள் மறைக்கப்படுகின்றன.

மாகந்துரே மதுஷ் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டால், அவருக்குகு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது சந்தேகமே.  அரசியல்வாதிகள் சிலர் அவரை சட்டத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு கூட  உதவியளிக்ககூடும்.” என்றும் அவர் கூறினார்

Sun, 13 Oct 2019 15:30:36 +0530

முஸ்லிம் சமூகத்தில் சஜீத் பிரமதாசவுக்கு இதுவொரு கறுப்பு புள்ளிதான்..!

முஸ்லிம் சமூகத்தில் சஜீத் பிரமதாசவுக்கு இதுவொரு கறுப்பு புள்ளிதான்..! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

ஏழு மாணவர்களின் விடயத்தில் போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு கேட்டும் அதற்கு சஜீத் பிரமதாச அவர்கள் கடைசிவரையும் இனக்கம் தெரிவிக்கவில்லை. 

அன்று சீகிரிய ஓவியத்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கு முகம்கொடுத்த பாடசாலை மாணவியை, மஹிந்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விடுதலை செய்யலாம் என்றால், நாளைய ஜனாதிபதியாகவர என்னியுள்ள சஜீத் பிரமதாசா அவர்களுக்கு இந்த விடயத்தில் அப்படி நடந்து கொள்ள முடியாமல்  போனது ஏன் என்ற கேள்வி எழும்புகின்றது அல்லவா?

அரசியல்வாதிகளினால் முடியாதபோது தங்களது பிள்ளைகளைக் காப்பாற்ற வேறுவழி இல்லாதபோது அந்தப் பெற்றோர்கள்  குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டப்பணமும் செலுத்திவிட்டு பிள்ளைகளை எப்படியாவது வெளியே கொண்டுவர வேண்டும் என்று விரும்பினார்கள். அதனால்தான் நாங்கள் அதன்படி செயல்பட்டோம் என்று, அந்த மாணவர்களுக்காக வாதாடிய சட்டத்தரணி ருஷ்பி ஹபீப் அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஆக, நாளைய ஜனாதிபதியாக வரவிரும்பும் இந்த சஜீத் பிரமதாசா அவர்கள் இந்த விடயத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதேநேரம் தான் ஒரு அரசியல்வாதி என்ற பண்பாட்டுக்கு ஏற்ப கருணை உள்ளத்தோடு நடந்திருக்க முடியும். ஆனால் அவர் நான் ஒரு பௌத்தன் என்றுதான் இந்தவிடயத்தில் செயல்பட்டாரேயொழிய, நாட்டில் உள்ள எல்லா மக்களுக்காகவும் பேசக்கூடிய அரசியல் தலைவன் என்று  அவர் நினைக்கவில்லை.

ஆகவே எதிர்காலத்தில் சஜீத் அவர்கள் ஜனாதிபதியாக வருவதற்கு முஸ்லிம் சமூகம் ஆதரவு கொடுக்கும் விடயத்துக்கு இதுவொரு கரும்புள்ளியாகவே இருக்கப்போகிறது.

Thu, 07 Feb 2019 16:00:07 +0530

பல்கலை மாணவர்களின் விடுதலைக்கு உரிமை கோரும் தகுதி யாருக்கு உரியது?

பல்கலை மாணவர்களின் விடுதலைக்கு  உரிமை கோரும் தகுதி யாருக்கு உரியது? | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

மிகப் பாரதூரமான தவறு ஒன்றைச் செய்த குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் எண்மரும் குற்றத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். நிம்மதியான செய்தி.

இவர்களின் விடுதலை தொடர்பில் கரிசனை காட்டிய அனைவரையும் பாராட்ட வேண்டும்.
வழக்கு விசாரணை முடியும்வரை பிணை வழங்க முடியாத குற்றங்களில் ஒன்றின் கீழ் கைது செய்யப்பட்ட இந்த மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டாவது தடவையிலேயே இவர்கள் தொடர்பான வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதே என்பது ஆச்சரியமான விடயம்.

எமது சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் இந்த மாணவர்களின் விடயத்தில் ஏனைய அமைச்சர்கள் சிலருடன் தொடர்பு கொண்டு மாணவர்களின் விடுதலைக்குஉதவிகளையும் ஒத்தாசைகளையும் கோரியிருக்கலாம். ஆனால், அவர்களது கோரிக்கைகளை நிராகரிக்கப்பட்ட நிலையில், இறைவன் நாட்டம் மற்றும் வாதத்திறமை காரணமகவே இந்த மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்பதே உண்மை.

இந்த விடயதானத்துக்குப் பொறுப்பான (தொல்பொருள்) அமைச்சர் சஜித் பிரேமதாசவோ வேறு அரசியல்வாதிகளோ இந்த மாணவர்களை விடுவிக்கும் விடயத்தில் கரிசனை காட்டவில்லை என்ற அப்பட்டாமன உண்மையையும் இங்கு கூறவேண்டும்.

இந்த மணவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது தொல்பொருள் திணைக்களத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கடுமையான வாதங்களை முன்வைத்திருந்தார். குறித்த எட்டு மாணவர்களுக்கும் குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனையாவது வழங்க வேண்டுமென்று வாதாடியதுடன் இவ்வாறு செய்வதன் மூலம்தான் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதனை எதிர்காலத்தில் தடுக்கவும் முடியுமென தெரிவித்திருந்தார்.

தொல்பொருள் திணைக்கத்துக்கும் பொறுப்பான அமைச்சரான சஜித் பிரேமதாச ஒரு தொலைக்காட்சியில் தோன்றி, இந்த மாணவர்கள் தொடர்பில் எவ்வாறான இறுக்கமாக மனப்போக்கை வெளிக்காட்டினாரோ அதே பிரதிபலிப்புடனேயே தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் இந்த விடயத்தில் நிதிமன்றில் நடந்து கொண்டார்கள் என்பது எமக்குப் படிப்பினையாக அமைய வேண்டும்.

அமைச்சர் சஜித் பிரேமதாச போன்று வேறு சில சிங்கள அமைச்சர்களும் இந்த விடயத்தில் தங்களது இறுக்கத்தைக் காட்டினார்களே தவிர, நெகிழ்வுத் தன்மையை ஒரு துளியேனும் காட்டவில்லை.

மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த மாணவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

1.தண்டனை சட்டக் கோவையின் 120, 140 ஆம் அத்தியாயங்களின் கீழ் தலா ஒவ்வொரு குற்றச்சாட்டும்

2.தொல்பொருள் சட்டத்தின் 31 (B) பிரிவின் கீழ் மற்றொரு குற்றச்சாட்டுமாக மூன்று குற்றச்சாட்டுகள் இந்த மாணவர்கள் மீது சுமத்தப்பட்டு ஹொரவப்பொத்தான பொலிஸாரால் நீதிமன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது
இவ்வாறு மிக இறுக்கமான, கடுமையான நிலையில், இந்த மாணவர்களின் விடுதலை என்பது இறைவனின் நாட்டத்துடன் சட்டவாதத் திறமைக்குக் கிடைத்த வெற்றி மட்டும்தான் எனக் கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தலைமையில் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், ரங்க சுஜீவ மற்றும் சப்ராஸ் ஹம்ஸா ஆகியோர் ஆஜராகியிருந்த நிலையில், சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீனின் கடுமையான எடுகோள்களுடனான வாதத்திறனால் அந்த மாணவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டவர்களாக அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்படுவதற்கான வழி பிறந்தது.

சுமார் 45 நிமிடங்கள் வாதித்திட்ட சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், இவர்களை விடுவிப்பதற்காக கடந்த காலங்களில் வழங்கப்பட்ட வழக்கு ஒன்றின் தீர்ப்பு, மற்றும் கடந்த காலங்களில் இவ்வாறான வழக்குகளின் போது கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகளை நீதிவானின் கவனத்துக்கு விரிவாகக் கொண்டு வந்திருந்தது மிகச் சிறப்பான அம்சமாகும்.
மேலும்..

  1. மாணவர்களின் எதிர்க்காலத்தை கருத்தில் கொண்டு சிறைத் தண்டனை வழங்கக் கூடாது
  2. குற்றம் தொடர்பில் கைவிரல் பதிவுகளைப் பெறவோ அல்லது ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்படவோ கூடாது.
  3. இந்த மாணவர்கள் இதற்கு முன்னர் எந்தக் குற்றங்களில் ஈடுபடாதவர்கள்.
  4. குறித்த தொல்பொருள் இடத்தில் புகைப்படம் எடுக்கக் கூடாது என எந்த அறிவித்தலும் இடப்படவில்லை போன்ற பல விடயங்களை நீதிவான் முன்னிலையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையில், சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்களின் அனைத்து வாதங்களையும் கருத்தில் கொண்டு அவற்றை ஏற்றுக் கொண்ட நீதிவான், அவர்களுக்கு அபராதம் விதித்து வழக்கை நிறைவுக்கு கொண்டு வருவதாக அறிவித்தார் என்பதே உண்மை.

Wed, 06 Feb 2019 00:05:28 +0530

புதிய அரபுக் கல்லூரிகள் தடையும் முஸ்லிம் புத்தி ஜீவிதத்துவமும்

புதிய அரபுக் கல்லூரிகள் தடையும் முஸ்லிம் புத்தி ஜீவிதத்துவமும் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

நாட்டில் புதிதாக அரபுக் கல்லூரிகள் நிறுவுவது நிறுத்தப்படுவதுடன் இருக்கின்ற அரபுக் கல்லூரிகளை வளப்படுத்துவதற்கான ஆலோசனையை தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் கௌரவ எம்.எச்.ஏ. ஹலீம் உரிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார் என்ற செய்தி பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக  உள்ளது.

குறித்த விடயம் தொடர்பான ஆழ்ந்த புலமை இல்லாதவர்களும் உலமாக்களை  முல்லாக்கள் என்று வசைபாடுபவர்களும் குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க முனைபவர்களும் தமது தனிப்பட்ட இலாபங்களுக்காக கருத்துக்களை கூறிவருகின்ற வேளை புத்திஜீவிகளது மௌனம் கவலையளிக்கின்றதாக உள்ளது. கௌரவ அமைச்சரின் கருத்தினை கவனமாக உற்றுநோக்குகின்றபோது காலத்திற்குத் தேவையான விடயத்தை சமூக நலன் கருதி குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இலங்கை இஸ்லாமிய கல்வி கலாச்சார பாரம்பரிய வளர்ச்சியும், தற்போது இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ஆழ்ந்து ஆராயும்போது அரபுக் கல்லூரிகளது வகிபாகம் மிகவும் தொடர்புபட்டதாகக் காணப்படுவது வெளிப்படையான உண்மையாகும்.

இலங்கை முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களின் சந்தேகப்பார்வைக்குள் சிக்கித் தவிப்பதற்கும் இஸ்லாம் இலங்கையில் வளர்ச்சியடையாமைக்கும் அரபுக் கல்லூரிகளும் அதில் வெளியாகிய உலமாக்களும் முக்கிய காரணியாக அமைந்துள்ளமை மறுக்க முடியாத  உண்மை. இலங்கையில் நிர்வாகத் துறையில், மருத்துவத் துறையில், கல்வித் துறையில், தொழிற் துறையில், அறிவியல் துறையில் என அனைத்து துறைகளிலும் முஸ்லிம் புத்தி ஜீவித்துவ நிபுணர்களின் வெற்றிடம் நிலவுவதாகக் கூறிக்கொள்ளும் நாம், கல்வித் துறையில் பேராசிரியர்களையும் கலாநிதிகளையும் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களையும் குறை நிறப்பு செய்ய முடியாமல் இருக்கின்ற முஸ்லிம் சமூகத்தின் இடர் நிலைக்கு அரபுக் கல்லூரிகளும் உலமாக்களும் வகை சொல்லியே ஆக வேண்டும் என்ற உண்மையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். குறைந்தது இஸ்லாமிய ஷரீஆ கல்வியில் நிலவுகின்ற தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹ், ஏனைய கலைகள் மீதான ஆழ்ந்த புலமை கொண்ட உலமாக்களின் தேவைப்பாட்டுக்கு அரபுக் கல்லூரிகளின் வகிபாகம் கேள்விக்குட்படுத்த வேண்டியும் உள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக நோக்குகின்றபோது இலங்கை போன்ற முஸ்லிம் சிறுபான்மையாக வாழும் நாட்டில் அரபுக் கல்லூரிகள் தொடர்பாகவும் அதன் பாடத் திட்டங்கள் தொடர்பாகவும் மீள்பரிசீலனை செய்ய வேண்டிய பொறுப்பு முஸ்லிம் புத்திஜீவிகளுக்கு உள்ளது போன்று முஸ்லிம் விவகார அமைச்சருக்கும் உள்ளதென்பதனை ஏற்றுத்தான் ஆக வேண்டும். குறித்த அமைச்சரின் கருத்து தொடர்பில் பின்வரும் அம்சங்களை நோக்கும்போது அவரது கருத்தியல் வெளியில் மறைந்துகிடக்கும் உண்மைகள் பலவற்றினை கண்டுகொள்ள முடியும்.

அரபுக் கல்லூரிகளும் பௌதீக வளங்களும்
அரபுக் கல்லூரிகளைப் பொறுத்தவரையில் இலங்கை முஸ்லிம் ஷரீஆ கல்விப் பாரம்பரியத்தில் மிக முக்கிய வகிபாகத்தினை ஆரம்ப காலங்களில் வகித்தது. இஸ்லாமியக் கற்கை நெறி என்பது பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் தெரிவுசெய்யப்பட்ட சில அரபுக் கல்லூரிகளினூடாக வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. காலி பஹ்ஜத்துல் இப்ராஹீமிய்யா, மஹரகமை கபூரிய்யா, கிழக்கிலங்கை சர்க்கிய்யா, காத்தான்குடி பலாஹ் போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய அரபுக் கலாசாலைகள் நாட் டில் காணப்பட்டாலும் போதிய வளங்களை கொண்டு ஸ்தாபிக்கப்பட்டிருந்தன. போதிய கல்விச் செயற்பாட்டுக்குரிய பௌதிக வளங்கள், தங்கு தடையின்றிய வருமான ஏற்பாடு, பயிற்றப்பட்ட போதனாசிரியர்கள் என தன்னிறைவு பெற்ற வளாகங்களாகக் காணப்பட்டது. விமர்சனங்களுக்கப்பால் இக்கல்லூரிகளில் வெளியாகிய உலமாக்களுக்கென சமூக மட்டத்தில் தனி இடமும் காணப்பட்டது. ஆனால் இன்று நிலைமை மறுதலையை நோக்கி செல்வதனை அவதானிக்க முடிகின்றது.

அதிகரித்து வரும் வேலையில்லாப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க முடியாத உலமாக்கள் பலர் தொழில் சந்தையில் புதிய அரபுக்கல்லூரிகளை உருவாக்குவது தான் தீர்வு எனக் கருதுவதனையும் குறிப்பிட முடியும். அண்மையில் பதிவிற்காக வந்த சில அரபுக் கல்லூரிகளை அவதானிக்கின்ற போது இந்த உண்மையை விளங்கிக் கொள்ள முடியும். வெறுமனே 20 அடி அகலம், 40 அடி நீளம் கொண்ட தகர கொட்டிலில் அமையப் பெற்ற  அரபுக் கல்லூரி பதிவிற்காக ஆவணங்களை சமர்ப்பித்து இருந்தது. குறித்த கல்லூரி தகரத்தினால் அமையப்பெற்றிருந்தது.

இத்தகர  கொட்டகையில் குர்ஆன் மத்ரஸா வகுப்புக்கள், மனன பிரிவு, கிதாப் பிரிவு, வளர்ந்தோருக்கான குர்ஆன் வகுப்பு, மற்றும் வாராந்த பயான் வகுப்புக்கள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்ட அதிபர் விரைவில் அஹதிய்யா வகுப்பினையும் ஆரம்பிக்க உள்ளதாக குறிப்பிட்டார். 122 மாணவர்களைக் கொண்டு இயங்கிவரும் இவ்வரபுக் கல்லூரிக்கு ஒரு மலசலகூடம் காணப்பட்டது. உண்மையில் இங்கு கற்கும் அதிகமான மாணவர்கள் பெண்களாக காணப்பட்டனர். உஷ்ணப் பிரதேசமான இக்கல்லூரி அமைந்துள்ள பகுதியில் மாண வர்களின் உளவியல் மற்றும் உடலியல் ரீதியான அம்சங்கள் எவ்வாறு இருக்கும் என்பதனை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.

இதேபோன்று இன்னுமொரு மனன பீடத்தில் பெண் மாணவிகள் உஷ்ணம் தாங்க முடியாமல் அடிக்கடி வகுப்பினை விட்டும் வெளியில் சென்று தமது ஆடைகளை நனைத்துக்கொண்டு வந்து காயும் வரை வகுப்பினை தொடர்வதும் காய்ந்த பின் மீண்டும் நனைத்துக்கொண்டு வருவதுமென  நிலைமை கவலையைத் தோற்று விப்பதாயுள்ளது.

பிறிதொரு அரபுக் கல்லூரியினை சென்று பார்வையிட்டபோது சமைத்தல், சாப்பிடுதல் தூங்குதல் என்பன ஒரே தகர அறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதனை காண முடிந்தது. உடுத்த உடுப்புகளை கொழுவி வைப்பதற்குக் கூட வசதி இல்லாமல் வியர்வையுடன் பெட்டியில் அமுக்கி வைக்கின்ற நிலைமைகள் ஏராளம்.
மற்றுமொரு பெயர்பெற்ற அரபுக் கல்லூரியினை பார்வையிட்டபோது மாணவர் தூங்கும் அறையை ஒட்டிய அறையில் பழைய சாமான்களை சேமிக்கும் களஞ்சியமாக பாவிப்பதுடன் துர்நாற்றம் வீசும் அளவு குப்பை கூளமாகக்  காணப்பட்டது.

சில அரபுக்கல்லூரிகள் தனியார் வீடு களில், கட்டடங்களில், பள்ளிவாசல்களில் ஆரம்பிக்கப்பட்டு குறித்த ஒப்பந்த காலம் முடியும் நிலையில் அல்லது பள்ளிவாசல் நிருவாகிகளுடனான முரண்பட்டினால் மூடுவிழாக் கொண்டாடப்பட்டு மாணவர்கள் வீதிக்கு வந்த வரலாறுகள் ஏராளம்.

கல்விச் செயற்பாடு
பொதுவாகப் பழமையான அரபுக் கல்லூரிகள் தவிர்ந்து சில புதிய அரபுக் கல் லூரிகளையும் விடுத்து ஏனைய புதிய பல அரபுக் கல்லூரிகள் கல்விச் செயற்பாட்டுக்கும், புறக்கிருத்தி நடவடிக்கைக்கும் உரிய போதிய பௌதீக வளங்களைக் கொண்டிருக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

 பிரபலமான நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு அரபுக் கல்லூரியில் வாசிகசாலைக்கென ஒதுக்கப்பட்ட அறையில் புத்தகங்கள் அலுமாரிகளில் வைத்து பூட்டப்பட்டு மாணவர்களுக்கான வகுப்பொன்று அதில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

மற்றுமொரு அரபுக் கல்லூரியில் அழகான வாசிகசாலை அமைப்பும் புத்தகங்களும் காணப்பட்டபோதும் ஒரு வருடத் திற்கு மேலாக அது மாணவர் பாவனைக் குத் திறக்கப்படவில்லை என்ற தகவல் தெரிய வந்தது. புதிதாகத் திறக்கப்பட் டுள்ள பல அரபுக் கல்லூரிகளில் வாசிகசாலை என்றால் என்ன என்று முகத்தை பார்க்கும் நிலை காணப்படுகின்றது. வாசிகசாலை உள்ள அரபுக் கல்லூரிகள் பல வற்றில் அரபு தவிர்ந்த ஏனைய மொழி நூற்கள் காண்பதற்கும் இல்லாமல் காணப் படுகின்றது.

இது தவிர பல அரபுக் கல்லூரிகளில் மாணவர்களின் தேகாரோக்கிய விளையாட்டுக்களுக்கான எவ்வித ஏற்பாடுகளும் காணப்படவில்லை. மைதானம் என்பது அவர்களுக்குத் தேவையற்ற ஒன்று என்ற மனநிலையில் இவ்வரபுக் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன என எண்ணத் தோன்றும்.

சில அரபுக் கல்லூரிகளில் மாணவர்கள் தேசிய போட்டிகளில், இஸ்லாமிய கல்விசார் பரீட்சைகளில் தோற்றுவதற்கு எச் சந்தர்ப்பமும் அளிக்கப்படுவதில்லை.
அதுமாத்திரமன்றி பல அரபுக் கல்லூரிகள் பாடசாலை பாடவிதானத்தை கற்பிக் காமல் வெறுமனே ஷரீஆ கல்வியை மாத்திரமே வழங்கி வருவது முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பாரிய சவாலாக அமைந்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலாளர் பிரிவில் முஸ்லிம் மாணவ மாணவிகள் பாடசாலைக் கல் வியை விட்டும் தூரப்படுத்தும் செயல் திட்டத்தில் மூளைச்சலவை செய்யப்பட்டு குறித்த பிரதேச முஸ்லிம் பாடசாலைகள் மூடுவிழாவினை சந்திக்கும் நிலை ஏற்பட் டுள்ளது.

உளவியல் பிரச்சினை கொண்ட உலமா சமூக உருவாக்கம்
மாணவர்களின் உளவியல் ரீதியான தேவைகளுக்கு போதிய வளங்களை தீர்வாக வழங்க புதிய பல அரபுக் கல்லூரிகள் தவறிவிட்டுள்ளமை உளவியல் ரீதி யில் தாக்கமடைந்த உலமாக்களை உருவாக்க வழிவகுத்துள்ளது. கற்பதற்கான குறைந்தபட்ச வகுப்பறை இட ஒதுக்கீடு, விளையாட்டு துறை, நடப்பு விவகாரங்களை தெரிந்துகொள்வதற்கான வசதிகள் மேற்கொள்ளப்படாமை என்பவற்றுடன் கல்லூரி வளாகத்தில் அவர்களது சுதந்திர செயற்பாட்டை முடக்கும் வகையில் பல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் குறித்த ஒரு அரபுக்கல்லூரிக்கு விஜயம் செய்தபோது மாணவர் தூங்கு விடுதி உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் கண்காணிப்பு கமரா பொருத்தப்பட்டிருந்தது. தமது வீடு களில் படுக்கையறைகளில் கேமராக்களை பொருத்த ஆட்சேபனை கொண்டுள்ள நாம் மாணவர்களின் படுக்கை அறைவரை  கண்காணிப்பு கமரா பொருத்துவது எத்தகைய ஷரிய்யத் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய அமைந்துள்ளது என்று சிந்திக்க தோன்றும். 

தொழில் சந்தையும் அரபுக் கல்லூரிகளும்
இலங்கையில் சுமார் 300க்கு மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட அரபுக் கல்லூரிகளும் அதைவிட கூடுதலான எண்ணிக்கை கொண்ட பதியப்படாத (பல்வேறு காரணங்களுக்காக) கல்லூரிகளும் காணப்படுகின்றன. வருடத்தில் சராசரியாக 20 உலமாக்கள் ஒவ்வொரு அரபுக் கல்லூரிகளில் இருந்தும் வெளியேற்றப்படுகிறார்கள். எனவே சுமார் 6000 உலமாக்கள் ஒவ்வொரு வருடமும் உற்பத்தி செய்யப்படுகின்றார்கள்.

 இவர்களில் 5%மானவர்கள் அரச தனியார் துறைகளிலும் 10% வெளிநாடுகளிலும் 5%மானவர்கள் பள்ளிவாசல்கள் மற்றும் அரபுக் கலாசாலைகள், குர்ஆன் மத்ரஸாக்களில் தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்கின்றனர். ஏனைய 80%மானவர்கள் தொழில் தேடும் படையினரில் உள்வாங்கப்படுகின்றனர்.

 இதனால் பலர் புதிய குர்ஆன் மதரஸாக்களையும் அரபுக் கல்லூரிகளையும் உருவாக்க முனைவதனை ஆய்வு மூலம் அறிய முடிகின்றது. குறிப்பாக இப்பிரிவில் 50%மானவர்கள் அரச கல்வி மற்றும் தொழில்துறைசார் கல்வி நடவடிக்கையினை மேற்கொள்ளாதவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்க விடயம்.

குறித்த ஒரு அரபுக் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டபோது கல்லூரியின் தலைவர் குறித்த பெயரில் இயங்கும் இன்னும் ஒரு கிளை அரபுக் கல்லூரிக்குச் சென்றுள்ளதாகத் தெரிவித்தனர். அத்தோடு அவர் அக்கல்லூரியினதும் அதிபராகக் கடமையாற்றுவதுடன் மூன்றாவது அரபுக் கல்லூரி ஒன்றினை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிட்டியது.

இதேபோன்று ஒரு மாணவி மனனப் பிரிவில் சேர்க்கப்பட்டு ஒருவருடம் கடந்த நிலையிலும் இன்னும் மனனப் பிரிவில்  சேர்க்காமல் குர்ஆன் ஓதும் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோரினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய முற்பட்டபோது கல்லூரியின் அதிபர் வருடத்தில் பெரும்பாலான நாட்களை கல்லூரிக்கு வெளியில் கழிப்பதுடன் மனனப் பிரிவிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட உலமா தனது வீடு உள்ளிட்ட மேலும் இரண்டு மத்ரஸாக்களில் பணி புரிவதினால் உரிய பாட மீட்டல்கள் இடம் பெறுவதில்லை என அறியக் கிடைத்தது.

மாத்திரமன்றி பெண்கள் கல்வி பயிலும் இக்கலாசாலையில் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படாமல் காணப்பட்டமை அவதானிக்க முடிந்தது. புத்தளம் மாவட்டத்தில் ஒரு அரபுக் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டபோது வருடத்தில் ஆறுமாதம் கல்வி செயற்பாட்டிலும் ஆறுமாதம் கல்லூரிக்கான நிதி வசூலிலும் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதனை அவதானிக்க முடிந்தது. இத்தகைய வெறுமனே பொருளாதார இலக்கு கொண்ட கற்பித்தல்  செயற்பாடு அமானித மாக தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு தலைமுறையைச் சீரழிப்பதாக அமைந்து விடுகிறது.

நிதித்துறை சார் நடவடிக்கைகள்.
சில அரபுக் கல்லூரிகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிதி உதவிகளை பெற்றுக்கொண்டு எவ்வித கணக்கறிக்கை செயற்பாடுகளும் இன்றி நடாத்தப்படுவதும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடந்துகொள்வதனையும் காணக்கூடியதாக உள்ளது. மதரஸாக்களுக்கு சொந்தமான காணிகளை தமது சுயவிருப்பில் விற்பனை செய்துகொள்வது போன்ற அம்சங்களும் இல்லாமல் இல்லை.

நீண்ட வரலாறு கொண்ட ஒரு கல்லூரிக்கு விஜயம் செய்தபோது அனைத்து வளங்களும் அங்கு காணப்பட்டது. வருடாந்தம் சுமார் 50 மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்டு வந்த குறித்த கல்லூரியில் தற்போது 25 மாணவர்கள் அளவிலேயே மொத்தமாக காணப்பட்டனர். ஏழு வருட கற்கை நெறி என கல்லூரி நிருவாகம் குறிப்பிட்டபோதும் மாணவர்கள் பாடசாலை வகுப்பின் அடிப்படையிலேயே பிரித்து வைக்கப்பட்டிருந்தனர். வெளிநாட்டு உதவிபெறும் இக்கல்லூரி நிருவாகம் எவ்வித கல்வி மேம்பாட்டு திட்டங்களையும் கொண்டிருக்கவில்லை என அறிய முடிந்ததுடன் உரிய கணக்கறிக்கைகளும் பேணப்பட்டிருக்கவில்லை என காணக்கூடியதாக இருந்தது.

இவ்வாறு பல்வேறு எதிர்மறைகள் அரபுக் கல்லூரிகளை சுற்றி வெளிவராத உண்மைகளாக காணப்படுவதனை அவ தானம் கொண்டே கௌரவ அமைச்சர் ஹலீம் அவர்கள் அரபுக் கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்படுவதனை நிறுத்தி நன்கு வளமுள்ள கல்லூரிகளை மேலும் தரப்படுத்த வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்துள்ளார். மாகாணத்தில் ஒன்று என்ற நிலைமாறி ஊருக்கு இரண்டு, மூன்று ஐந்து என அரபுக் கல்லூரிகள் தோற்றம் பெறுவதனால் எந்தவொரு அரபுக் கல்லூரியையும் சிறப்புற செயற்படுத்த முடியவில்லை என்ற உண்மையினை நடைமுறையில் விளங்கியே ஆக வேண்டும். குறைந்தது மாவட்டத்தில் ஒரு அரபுக் கல்லூரியை தெரிவுசெய்து வலுப்படுத்த வேண்டிய தேவை சமூகத்திற்கு உள்ளது.

அனைத்து அரபுக் கலாசாலைகளுக்கும் பொதுவான பாடத்திட்டம் அமைகின்ற போது  சமயப் பாட ஆசிரியர்கள் பதவி உள்ளிட்ட பல அரச பதவிகளுக்கும் உலமாக்கள் உள்ளீர்ப்பு  செய்ய வாய்ப்பாக அமையும் என்பதுடன் ஆளுமையுள்ள உலமா சமூகத்தை உருவாக்க வழிவகை செய்யும். இத்தகைய பாடத்திட்டம் ஒன்றினை மேற்கொள்ள கடந்த 20 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம் சமய விவகார திணைக்களம் முயற்சிக்கின்றபோதும் குறுகிய கொள்கைசார் சிந்தனையினால் அம் முயற்சி தேக்கம் அடைந்துள்ளமை குறித்துப் பேச வேண்டி தருணம் இதுவாகும்.

இத்தகைய பாரிய திட்டமிடல்கள் இல்லாமல் குறித்த விடயதானம் குறித்த எவ்வித ஆழ அகல அறிவில்லாமல் கௌரவ அமைச்சர் அவர்களின் கருத்தினை சில்லறைத்தனமாக அரசியலாக்குவது முதிர்ச்சியுள்ள ஒரு சமூகத்திற்குப் பொருத்தமானதாக  அமையாது.

ஜுனைட் நளீமி

Sun, 03 Feb 2019 08:10:56 +0530

சிங்கள – முஸ்லிம் தொடர்புகள் வரலாற்று ஆய்வுகளில் மிக வலிமையாக உள்ளன

சிங்கள – முஸ்லிம் தொடர்புகள் வரலாற்று ஆய்வுகளில் மிக வலிமையாக உள்ளன | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

இலங்கையில் முஸ்லிம்கள் தொடர்பாக நான் மேற்கொண்ட ஆய்வொன்றில் கண்டி மாவட்டத்தில் மடவளை 
என்ற இடத்தில் பள்ளியொன்று கட்டுவதற்கு பௌத்தர் ஒருவரும், விகாரை ஒன்று கட்டுவதற்கு முஸ்லிம் ஒருவரும் காணிகளை அன்பளிப்புச் செய்த வரலாற்றைக் காணக்கிடைத்தது என்று பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் ரோஹித்த திசாநாயக்க தெரிவித்தார்.

தேசிய ஒற்றுமைக்கும் அபிவிருத்திக்குமான புத்திஜீவிகள் சங்கம் கண்டியில் ஒழுங்கு செய்த கூட்டமொன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். மேற்படி சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி  எம்.ஏ.சீ.எம்.யாக்கூப் தலைமையில் நடந்த இக்கலந்துரையாடலில் அவர் மேலும் கூறியதாவது,

இவ்வாறான ஒரு கூட்டத்தில் முஸ்லிம் அறிஞர்களுக்கு மத்தியில் உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில், நான் சாதரணமாக மடவளையிலுள்ள சில முஸ்லிம் கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்வேன். அவ்வாறு நான் அங்கு செல்லும்போது பல முதலாளிமார்கள் எனக்கு நண்பர்களாக உள்ளனர். அதில் ஒரு முதலாளி நண்பர் என்னிடம் சொன்னார் மடவளையில் விகாரை கட்டுவதற்கு முஸ்லிம் ஒருவரும் பள்ளிவாசல் கட்டுவதற்கு பௌத்தர் ஒருவரும் காணி வழங்கியுள்ளதாக. பின்னர் நான் ஆராய்ந்து பார்த்ததில் அது உண்மை என்பதை ஆய்வுமூலம் அறிந்துகொண்டேன்.  அந்த முதலாளி நண்பர் அடிக்கடி என்னிடம் கேட்பார் எப்போது அந்த ஆய்வு முடிவடையும் என்று. அது எனக்கு நினைவிற்கு வருகிறது. அதனை இங்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நான் மேற்கொண்டுள்ள முஸ்லிம்கள் தொடர்பான இந்த ஆய்வை கட்டாயம் பூரணப்படுத்தும்படி கலாநிதி சுக்ரி ஒருமுறை என்னிடம் சொன்னார்.  அதன்படி சில ஆய்வுகளைச் செய்தேன். 2002இல் இந்த ஆய்வை மேற்கொண்டேன். எனக்கு சில விடயங்களை சரியாகத் தெரிந்துகொள்ள அரபு மொழியில் எனது குறைபாடு பாரிய சவாலாக இருந்தது.

முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையிலான உறவுகள் பற்றி அநேகருக்குத் தெரியாது. அதேநேரம் எமக்கிடையே பிரிவு உள்ளதாகக் காட்டப்பட்டால் பிரிவினைவாதிகளுக்கு அது ஒரு பெரிய  பக்கத்துணையாகவும் மாறிவிடும்.

எமது பிரதேச கிராமங்களிலுள்ள முதலாளிமார்களுக்கும் எமது தாய்மார்களுக்குமிடையே பாரிய இணைப்பு காணப்படுகிறது. சில முதலாளிமார் எமது தாய்மார்களையும், எமது தாய்மார்கள் முதலாளிமார்களதும் சுகதுக்கங்களை அடிக்கடி விசாரிப்பர். சில நாட்கள் காணாவிட்டாலும் ஒருவரை ஒருவர் நலம் விசாரிப்பது வழக்கமாக உள்ளது.

1400 ஆண்டுகளுக்கு முன் இலங்கையை ஆண்ட ஒரு அரசனுக்கு முஹம்மத் நபி என்ன செய்கிறார் என்பதை அறிய ஆவல் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் சில தூதுவர்களை மதீனா நகருக்கு அனுப்பிவைக்கிறார். ஆனால் தூதுவர்கள் மதீனாவை சென்றடையும்போது முஹம்மத் நபி அவர்கள் மரணமடைந்திருந்த தகவல் அவர்களுக்கு கிடைக்கிறது. பின்னர் திரும்பிவந்த அவர்கள் அத்தகவலை மேற்படி அரசனுக்கு தெரிவிக்கினறனர். எனது ஆய்விற்குக் கிடைத்த தகவல்களில் இலங்கையில் முஸ்லிமகள் தொடர்பாக கிடைத்த ஆகக்கூடிய காலத்து அல்லது முஸ்லிம்கள் பற்றிய முதலாவது தகவலாக இது உள்ளது. அதாவது, இலங்கையில் முஸ்லிம்கள் வரலாறு பற்றிய முதலாவது தகவல் இதுவாகப் பதிவாகியுள்ளது. எனவே இலங்கை முஸ்லிம்கள் பற்றிய 1400 வருட வரலாற்றை அது தெரிவிக்கிறது. .

கி.பி 800ஆம் வருடத்தில்  அரேபிய வர்த்தகர் ஒருவர் இலங்கையில் மரணித்துவிட்டார். அவரின் உடல் இலங்கையில் உருவாக்கப்பட்ட ஒரு கப்பலில் எகிப்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட தகவலும் பதிவாகியுள்ளது.  மேற்படி தகவல் எழுதப்பட்ட நூல் 1990களில் அதன் மொழிபெயர்ப்பு மூலமே கிடைத்தது. அதுகாலவரை அரபு மொழியில் இருந்ததை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஏறக்குறைய 1200 வருடங்களாக அது மறைக்கப்பட்டிருந்தது. இது அன்று அரபு உலகிற்கும் இலங்கைக்கும் உள்ள கப்பல் மார்க்கம் தொடர்பான ஒரு பேருண்மையாகும். சோமாலிய கடற்கொள்ளையர்கள் பற்றி பேசப்படுகின்றன. அவர்கள் அன்றும் இருந்துள்ளார்கள். அவர்கள் கடல் விவகாரங்களில் மிகத் திறமையானவர்கள்.

‘அரேபியன் நைட்’ என்ற புத்தகம் வெறும் கற்பனை கதையெனக் கருத வேண்டாம். அது சிறந்த ஆய்வுக்குரிய நூலாகும். பக்தாத் போன்ற நகரங்களின் உன்னத நிலையை அதனூடாக அறிந்துகொள்ள முடியும்.

1815 முதல் ஐரோப்பியர் இலங்கைக்கு வந்து எமது வளங்களை சூறையாடிச் சென்றனர். இன்றும் அவர்களது பரம்பரையினர் எமது வளங்களை அனுபவிக்கின்றனர். மூன்றாவது தலைமுறைவரை அவர்கள் அதனை அனுபவித்துக் கொண்டுள்ளனர்.

ஆன்றைய அரபுலக பேரரசனான ஹாரூன் அல்-ரசீத் இலங்கை மன்னர்களுடன் நெருங்கிய மற்றும் சிறந்த தொடர்புகளை வைத்திருந்தார். அவர்கள் சிறந்த நண்பர்களாக இருந்துள்ளனர்.

அனுராதபுர காலத்து அரசர்களது தகவல்களை சரியாகத் தெரிந்து கொள்ளக்கூடிய தகவல்கள் அரேபிய நூல்களில் உள்ளன. வேறு எந்த நூல்களையும்விட மிகத் தெளிவாக அரேபிய நூல்களில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. அதாவது, இலங்கை அரசர்கள் பற்றிய விரிவான தகவல்கள் அரேபியாவிலுள்ள நூல்களில் காணலாம். இது எமது உறவுக்கு முக்கிய பாலமாக உள்ளது.

இலங்கையின் தேன் அக்காலத்தில் பக்தாத் நகரில்  விற்பனை செய்யப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள கண்வைத்தியத் துறையில் உள்ளவர்களுக்கும் பக்தாதில் உள்ளவர்களுக்கும்  இடையே  சிகிச்சைவழியாகப் பல தொடாபுகள் இருந்துள்ளன. இப்படி பல தொடர்புகள் அரபுலக முஸ்லிம்களுக்கும் இலங்கைக்கும் இருந்துள்ளன. ஸ்ரீபாத மலையிலுள்ள பாதத்தை தரிசித்த 47 ஆய்வாளர்களில் 46 பேர் அதனை ‘அடம்ஸ்பீக்’ (ஆதமின் பாதம்) என்றே குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீபாத மலைக்கு ஏறுபவர்களில் வழிகாட்டிகளாக முஸ்லிம்கள் இருந்துள்ளனர்.

மொல்லிகொடை பிரதானியின் வளவ்வை (மாளிகையை) பாதுகாத்தவர் ஒரு முஸ்லிம். அவர் மிகவும் நம்பிக்கையானவராகக் காணப்பட்டார். அது மட்டுமல்ல, பிரதானி கெப்பட்டிபொல மறைந்துள்ளதைக் கண்டுபிடிக்க  முஸ்லிம் வியாபாரிகள் மூலமே முடிந்தது. இதனை சிலர் தவறாகக் கூறுவர். அதில் மறைந்துள்ள உண்மையை அறியாதவர்கள்தான் அப்படிக் கூறுகின்றனர். காரணம், முஸ்லிம் வர்த்தகர்கள் எந்த வீட்டுக்குள் நுழைந்தாலும் நம்பிக்கையாக நடப்பார்கள். சதி செய்யமாட்டார்கள். வீடுகளுக்குள் நுழைந்தாலும் தவறான வேலை எதனையும் புரியமாட்டார்கள்; திருட மாட்டார்கள்; பெண்களை தவறாக நடத்த மாட்டார்கள்; நோக்கவும் மாட்டாரகள்.  எனவேதான் அவர்கள் மூலமாக தகவல் அறிந்துகொண்டார்கள்.

ஆனால், முஸ்லிம்களுடான சிங்களவர்களுக்கிருந்த நம்பிக்கையை உடைக்கவே பிரித்தானியர் அன்றும் இன்றும் முயற்சிக்கின்றனர்.

‘சிங்கள’ என்று கூறுவது பெளத்தர்களை மட்டும் குறிப்பதல்ல. சிங்கக் கொடியை சிங்களவர் கொடி என சில தமிழர்கள் கூறுவதைக் கேட்டுள்ளேன். அது தவறாகும். சிங்கக் கொடியில் முஸ்லிம்களும் உள்ளனர். அதேபோல் சிங்கள என்றால் இலங்கையர்களையே குறிப்பிடுகிறது. அதில் முஸ்லிம்களும் அடங்குகின்றனர். முஸ்லிம்களின் குடும்பப் பெயர்கள் சிங்கள வாசகமயுடன் உள்ளது. முதியான்சலாகே, விதானலாகே, ஆரச்சிலாகே என்றெல்லாம் உண்டு. இலங்கைக்கு வந்த அரேபியர்கள் தமிழர்களுடன் வியாபாரம் செய்ய தமிழைப் பயன் படுத்தினார்கள். அது காலப்போக்கில் வியாபாரத்துக்காக தமிழ் மொழி பாவனை அதிகரித்து இலங்கையிலுள்ள அரேபியர்களது அரபு மொழிப் பாவனை குறைந்தது. காலப்போக்கில் அரேபியர்களது கலப்பினமான முஸ்லிம்களது மொழியாகவும் தமிழ் மொழி மாறியது என்றார்.

கண்டி சிட்டி ஜம்இய்யதுல் உலமா தலைவர் மௌலவி பஸ்லுல் றஹ்மான், அக்குறணை ஜம்இய்யதுல் உலமா தலைவர் மௌலவி எம். ஏ. எம். சியாம், சப்ரகமுவ பல்கலைக்கழக பேராசிரியர் எம்.எஸ்.எம்.அஸ்லம் உட்பட மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

 ஜே.எம்.ஹபீஸ் -Vidivelli

Sat, 02 Feb 2019 09:21:08 +0530

Loudspeaker | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

பிரபலமானவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 08:53:46 +0530

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...