மீண்டும் சிக்கலை சந்திக்கும் மாளிகைக்காடு மையவாடி : ஜனாஸாக்களுக்கு மதிப்பளித்து உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை. | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka
KamisKalees on Sun, 08 Nov 2020 13:33:02 +0530

கடந்த மாதம் கடலரிப்புக்குள்ளாகி இடிந்து வீழ்ந்த மாளிகைக்காடு அந்- நூர் ஜும்மா பள்ளிவாசல் மையவாடி சுவர்கள் திரும்பவும் கடல் அரிப்புக்கு உள்ளாகும் நிலை தோன்றியுள்ளது. தற்காலிய தீர்வாக பிரதேச மக்களினால் இடப்பட்ட மண் மூட்டைகளும் கடல் அலைகளுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தொடர்ந்தும் சேதமாகிய நிலையில் உள்ளது

இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் பலரும் நடவடிக்கை எடுக்க போவதாக தெரிவித்தும் இது வரை நிரந்தர தீர்வு இல்லாத நிலையில் உள்ளது. கரையோரம் பேணல் திணைக்கள உயரதிகாரிகள் இது சம்மந்தமாக வேலைகளை ஆரம்பிக்க ஆரம்ப கட்டத்தை முன்னெடுத்தும் அது இன்னும் அடுத்த கட்டத்தை தொடவில்லை.  

இந்த மதில் இடிந்து விழுந்தால் முஸ்லிம் ஜனாஸாக்கள் கடலில் அள்ளுண்டு போகும் நிலை உருவாகும்.  எங்களின் பிரதேசத்து மக்களின் நிலைய உணர்ந்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொள்கின்றனர். திகம் வாசிக்கப்பட்டவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 09:47:53 +0530

தொடர்புடயவை

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...