அட்டனில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka
KamisKalees on Mon, 12 Oct 2020 20:02:39 +0530

அட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டன், ஹிஜ்ஜிராபுர பகுதியில் வீட்டினுள் இறந்த கிடந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (12.10.2020) திகதி மீட்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டு உரிமையாளர் வழங்கி தகவலினை அடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டவர் பழணியாண்டி வயது 60 மதிக்கதக்கவர் என்றும் இவர் ஒரு முச்சக்கரவண்டி சாரதி என்றும் இவர் மூன்று நாளுக்கு முன் இறந்து இருக்கலாம் என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளன.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

குறித்த நபர் தனது வீட்டின் முன்னுள்ள வீதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் முச்சக்கர வண்டியினை நிறுத்தி விட்டு சென்ற நிலையில் திரும்பி தனது முச்சக்கர வண்டியினை எடுக்காததால் சந்தேகம் கொண்ட வீட்டு உரிமையாளர் அவரின் குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து அவரின் உறவினர்கள் இவர் பற்றி தகவல் எதுவும் தெரியாது என தெரிவித்ததனை அடுத்து உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுத்த பொலிஸார் அவர் நிர்வாணமாக வீட்டினுள் இறந்து கிடப்பதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் கூலிக்காக இந்த வீட்டில் தனது 2வது முறை திருமணமான மனைவியுடன் வாழ்ந்து வந்தாகவும் 2 நாட்களுக்கு முன் அவரின் மனைவி வீட்டை விட்டு சென்றதாகவும் அதன் பின் குறித்த நபரையும் காணவில்லை. என்றும் மின்சார பட்டியில் மற்றும் தபால் காரர்கள் வந்து கதவு தட்டிய போதும் திறக்கப்படவில்லை. என்றும் அயலவர்கள் தெரிவித்தனர்.

குறித்த நபர் நோய்வாய்க் காரணமாக இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணங்களால் இறந்தரா என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் அட்டன் கைரேகை அடையாளப் பிரிவு மற்றும் அட்டன் பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் குறித்த நரேந்திரன் ஜெயந்திநாத் வீட்டு உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில், குறித்த நபர் எனது வீட்டில் தான் கூலிக்கு இருக்கிறார் கடந்த 2 நாட்களுக்கு முன் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ எடுக்கப்படவில்லை நாய்கள் அதில் படுத்து உறங்கியதனால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து அவரின் மகனுக்கு இந்த தகவலினை வழங்கினேன். அதனை தொடந்து இன்று (12.10.2020) காலை என்னிடம் அவரது மகன் தொடர்பு கொண்டு அவர் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவித்தார். அதனை தொடர்ந்து நான் பொலிஸாருக்கு அறிவித்தேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

அட்டனில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka அட்டனில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka அட்டனில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka அட்டனில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

திகம் வாசிக்கப்பட்டவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 09:33:11 +0530

தொடர்புடயவை

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...