அதிக சத்தத்தினால் ஏற்படும்  தொல்லைகள் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka
KamisKalees on Sun, 10 Nov 2019 11:19:33 +0530

அதிக சத்தம் என்பது மிக சத்தமாக ஒலிக்கும் பாடல், கட்டிட ரிப்பேர், மிக்ஸி சத்தம் இப்படி பல சத்தங்கள் உள்ளன. இவை அநேகருக்கும் எரிச்சலையும், கோபத்தினையும் கடும் சொற்களையும், அழிவுப் பூர்வமான சிந்தனைகளையும் ஏற்படுத்துகின்றன என விஞ்ஞானிகளின் ஆய்வுகள் கூறுகின்றன.

சிலருக்கு மற்றவர் முன்கரண்டி, ஸ்பூன் கொண்டும் தட்டுகளை சுரண்டி கொண்டும், சத்தம் போட்டுக்கொண்டும் சாப்பிட்டால் தாங்க முடியாத எரிச்சல் வரும்.

சிலர் நகங்களால் போர்டுகளை சுரண்டும் பொழுது அருகில் இருப்பவர்கள் காதுகளை பொத்திக்கொள்வார்கள். ஒலியும் ஒரு சக்திதான். காரணம் ‘வைபரேட்’ செய்து ஒலி அலையினை ஏற்படுத்துகின்றன. இந்த ஒலி அலை நம் காதினுள் சென்று பல கட்டங்களைத் தாண்டி நம்மை கேட்க வைக்கின்றது. இனிமையான ஒலி மனதுக்கு மகிழ்வினை ஏற்படுத்தும்.

* குழந்தை வீரிட்டு விடாது அழுவது.
* பெண்ணின் கூச்சல்.
* மின்சாரம் கொண்டு சுவரில் துளை போடும் சப்தம்.

போன்றவை எளிதில் ஒருவரின் மன நலத்தினை மாற்றி விடுகின்றதாம். சிலருக்கு தன்னுடைய சொந்த குரலை பதிவு செய்து திரும்ப கேட்கும் பொழுது பிடிப்பதில்லை. ஏனெனில் அதை கேட்கும்பொழுது அவர் கேட்கும் குரல் வேறு. பதிவு செய்யப்பட்ட குரல் காற்றின் மூலம் உள் சென்று பதிவு செய்யும் கருவியை அடைந்து ஒலி கேட்கும் பொழுது மாறுதலாக ஒலிக்கிறது.

இதற்கு தீர்வு என்ன?

இதற்கு சத்தம் ஏற்படும் இடங்களில் இருந்து தள்ளி இருப்பதே தீர்வு ஆகும். இதுவே நம் மன நலனை சீராய் வைக்கும்.

நமக்கு கோபம் இதற்கு மட்டுமா வருகின்றது?

மேற்கூறியதிலாவது அதிக சத்தம் ஏற்பட்டால் அங்கிருந்து நகர்ந்துவிடலாம்.

ஆனால் சிலர்:

  • நம்மை கடுமையான வார்த்தைகளால் தாக்கும்போது.
  • ஒரு நிகழ்வுக்கு நம்மை அழைக்காமல் ஒதுக்கும் போது.
  • நமக்கு பாராட்டு வர வேண்டிய இடத்தில் நம்மை மட்டம் தட்டி பேசும்போது.
  • உடற்பயிற்சியினை 30 நிமிடங்களுக்குப் பதிலாக 15 நிமிடங்கள் மட்டுமே செய்யும்போது.
  • நமக்கு உரிய வேலை கிடைக்காத பொழுது.

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். அதற்காக எடுத்ததற் கெல்லாம் கோபப்பட்டுக்கொண்டே இருந்தால் வாழ்க்கை தான் என்னாவது? இதற்கு ஒரே ஒரு வழி இருக்கின்றது. இரண்டே இரண்டு வார்த்தைகள் தான். அதைச் சொன்னால் மனம், மகிழ்வாய் மாறிவிடும். அந்த வார்த்தைகள்.

அதனால் என்ன? ஆங்கிலத்தில் சொன்னாலும் தமிழில் சொன்னாலும் அது இரண்டு வார்த்தைகள் தான். உங்களையும் உங்கள் வாழ்வையும் நீங்கள் நேசிக்கத் தொடங்கி விடுவீர்கள்.

உலகெங்கும் உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு சர்வ சாதாரணமாக காணப்படுகிறது. உயர் ரத்த அழுத்தமே உயிர் இழப்பிற்கும், உடல் பாதிப்பிற்கும் முக்கிய காரணம் ஆகின்றது. இருதய நோய், சிறுநீரக பாதிப்பு, பக்கவாதம் இவற்றுக்கு உயர் ரத்த அழுத்தமே முக்கிய காரணம் ஆகின்றது. ரத்த நாளங்களில் செல்லும் ரத்தம் அதிக அழுத்தம், வேகம் கொண்டு செல்வதினை உயர் ரத்த அழுத்தம் என்கின்றோம்.

ஸ்டிரைங் கூடும்பொழுது, நோய் பாதிப்பு இருக்கும் நேரத்தில் இந்த உயர் ரத்த அழுத்தம் இருக்கலாம். உடனடியாக இது உடல்நலம் சீராகும் பொழுது சரியாகிவிடும். ஆனால் உயர் ரத்த அழுத்தம் நீண்ட காலம் இருக்கும் பொழுது ரத்த குழாய்கள், இருதயம் இவற்றில் பாதிப்பினை ஏற்படுத்தி விடுகின்றது. இது மிக அபாயகரமான முடிவைக் கூட தந்துவிடலாம். வயது, பரம்பரை, எடை, உணவுமுறைகள், பழக்கவழக்கங்கள் இவை அனைத்துமே காரணங்கள்தான். அதிக உப்பும், அதிக கொழுப்பும் ரத்த நாளங்களின் அடைப்பிற்கு முக்கிய காரணம் ஆகின்றன.

சிறுநீரகம் பாதிப்பு, தைராய்டு பிரச்சினை, சில மருந்துகள், அதிக மது இவையும் பாதிப்புக்கு முக்கியகாரணம் ஆகின்றன. காலம் கூடும் பொழுது உயர் ரத்த அழுத்தத்தால் இருதய பாதிப்பு, கண் பாதிப்பு, மாரடைப்பு, வாதம், மறதி என கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. உயர் ரத்த அழுத்தமும் ஆரம்பகால அறிகுறியாக சில அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

குழம்பிய நிலை, நெஞ்சுவலி, முறையற்ற இருதய துடிப்பு, பார்வைக்கோளாறு, காதில் சத்தம், சோர்வு, தலைவலி, மூச்சு வாங்குதல், மூக்கில் ரத்தம் வடிதல், படபடப்பு, வியர்த்து கொட்டுதல், தூங்குவதில் கடினம் என்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். எனவே மருத்துவரிடம் ரத்த அழுத்தத்தினை அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

உயர் ரத்த அழுத்தம் மட்டும்தான் பிரச்சினையா என்றால் குறைந்த ரத்த அழுத்தமும் பிரச்சினையே. தொடர்ந்து குறைந்த ரத்த அழுத்தம் இருந்தால் உடல் உறுப்புகளுக்கு தேவையான அளவு ஆக்ஸிஜனும், சத்தும் கிடைக்காமல் போகலாம். கீழ்கண்டவை குறைந்த ரத்த அழுத்த அறிகுறிகளாகும். தலைசுற்றல், மயக்கம், கவனம் செலுத்த இயலாமை, மங்கிய பார்வை, வயிற்றுப் பிரட்டல், வெளிறிய சருமம், சோர்வு, தாகம், மனச்சோர்வு ஆகியவை காணப்படும்.

உயர் ரத்த அழுத்தத்தின் தீர்வாக மருத்துவர் முறையான மருந்துகளை பரிந்துரைப்பார். வாழ்க்கை முறையில் மாற்றம் (உ.ம்) உடற்பயிற்சி, உணவு முறையில் மாற்றம் இவை அறிவுறுத்தப்படும். நார்சத்து, பூண்டு, ஒமேகா மற்றும் தாது உப்புகள் இவற்றினை உணவு நிபுணர், மருத்துவர் அறிவுறுத்துவார். மேலும் சர்க்கரை, உப்பு, கொழுப்பு, கேபின், உடல் உழைப்பின்மை, மது, புகை இவற்றினை அடியோடு தவிர்த்துவிட வேண்டும். மன உளைச்சல் நீங்க யோகா, தியானம் உடற்பயிற்சி போன்றவை பயன்படுகிறது.திகம் வாசிக்கப்பட்டவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 09:45:54 +0530

தொடர்புடயவை

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...