உருவகேலிக்காக மன்னிப்பு கேட்ட விஜய் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka
KamisKalees on Sun, 03 Nov 2019 00:15:42 +0530

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து திரைக்கு வந்துள்ள படம் பிகில். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாகவும், இந்துஜா, அமிர்தா, ரெபோ மோனிகா, வர்ஷா, இந்திரஜா உள்பட பலர் கால்பந்தாட்ட வீராங்கனைகளாகவும் நடித்து இருந்தனர். இவர்களில் இந்திரஜா, காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் ஆவார். உடல் பருமனாக இருக்கும் அவரை இந்த படத்தில் ஒரு காட்சியில் குண்டம்மா என்று சொல்லி திட்டி உசுப்பேற்றுவார் விஜய். உடல் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்த விஜய்க்கு சமூகவலைதளங்களில் எதிர்ப்புகள் எழுந்தன.

இந்த நிலையில், இந்திரஜா அளித்த ஒரு பேட்டியில், ''என்னை குண்டம்மா என்று சொல்வதற்கு விஜய் தயங்கினார். படத்தின் காட்சிக்கு அது தேவைப்பட்டதால் அப்படி நடித்தார். நானும் எந்தவித சங்கடமும் இல்லாமல் இயல்பாகவே நடித்தேன். ஆன போதும், அந்த காட்சியில் நடித்த பிறகு அவர் என்னிடம் வந்து குண்டம்மா என்று சொல்லி நடித்ததற்கு மன்னிப்பு கேட்டார்’ என தெரிவித்துள்ளார்.

உருவகேலிக்காக மன்னிப்பு கேட்ட விஜய் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka உருவகேலிக்காக மன்னிப்பு கேட்ட விஜய் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

திகம் வாசிக்கப்பட்டவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 10:13:06 +0530

தொடர்புடயவை

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...