மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வில்லன் நடிகர் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka
@minhajMJ on Thu, 31 Oct 2019 11:43:14 +0530

விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கிய இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

விஜய்யுடன் பிரபல வில்லன் நடிகர் தீனாவும் பிகில் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் விஜய்யின் ‘தளபதி 64’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்க இருக்கிறது.

மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வில்லன் நடிகர் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வில்லன் நடிகர் | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

திகம் வாசிக்கப்பட்டவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 08:45:06 +0530

தொடர்புடயவை

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...