சைலண்டாக பிகிலுக்கு டஃப் கொடுக்கும் “கைதி” - நாளுக்குநாள் அதிகரிக்கும் வசூல்! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka
KamisKalees on Tue, 29 Oct 2019 20:38:48 +0530

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் உருவானபடம் "கைதி". முழுக்க முழுக்க இரவிலேயே நடக்கும் கதை, ஹீரோயின், பாடல்கள் இல்லாத படம் என எக்கச்சக்க ஹைலைட்களுடன் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த இந்தப் படம், விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

எனினும் பெரும்பாலான திரையரங்குகளை பிகில் ஆக்கிரமித்ததால், கைதிக்கு குறைவான ஸ்கிரீன்களே கிடைத்தன. எனினும், படத்திற்கு கிடைத்த பாஸிட்டிவ் விமர்சனங்கள் மற்றும் ரசிகர்களின் வரவேற்பால் மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகள் உட்பட பல திரையரங்குகளில் கொஞ்சம் கொஞ்சமாக 'கைதி' படத்திற்கான ஸ்கிரீன்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் படத்தின் வசூலும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் 'கைதி' படம் இதுவரை ரூ. 15 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். சென்னையில் மட்டும் சுமார் ரூ.1.50 கோடியை வசூலித்துள்ளதாம். அதுமட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளதால், தற்போதே இந்தப் படம் லாபத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் அமெரிக்காவில் பிகிலையே ஓவர்டெக் செய்யும் அளவுக்கு 'கைதி' படத்தின் வசூல் வந்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'பிகில்' என்ற பிரமாண்ட படத்திற்கு போட்டியாக களமிறங்கி 'கைதி' படம் வசூலில் மிரட்டி வருவது தயாரிப்பு தரப்பை மட்டுமின்றி கார்த்தி ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளது.

சைலண்டாக பிகிலுக்கு டஃப் கொடுக்கும் “கைதி” - நாளுக்குநாள் அதிகரிக்கும் வசூல்! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka சைலண்டாக பிகிலுக்கு டஃப் கொடுக்கும் “கைதி” - நாளுக்குநாள் அதிகரிக்கும் வசூல்! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka சைலண்டாக பிகிலுக்கு டஃப் கொடுக்கும் “கைதி” - நாளுக்குநாள் அதிகரிக்கும் வசூல்! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka சைலண்டாக பிகிலுக்கு டஃப் கொடுக்கும் “கைதி” - நாளுக்குநாள் அதிகரிக்கும் வசூல்! | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

திகம் வாசிக்கப்பட்டவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 08:13:35 +0530

தொடர்புடயவை

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...