கறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka
KamisKalees on Thu, 17 Oct 2019 23:38:26 +0530

உலகின் பாரிய கறுப்பு இணைய சந்தையைப் பயன்படுத்தி 38 நாடுகளைச் சேர்ந்த 337 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்ட 2 இலட்சத்திற்கும் அதிக காணொளிகளைக் கொண்ட குறித்த கறுப்பு இணையத்தளம் கடந்த வருடத்தில் பிரித்தானியா முன்னெடுத்த விசாரணைகளை தொடர்ந்து முடக்கப்பட்டு அதன் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த இணையத்தளத்தை பயன்படுத்திய 337 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரித்தானியா, அயர்லாந்து, அமெரிக்கா, தென் கொரியா, ஜேர்மனி, ஸ்பெய்ன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், செக் குடியரசு மற்றும் கனடா உள்ளிட்ட 38 நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

NewsFirst

இந்தநிலையில், குறித்த இணையத்தளத்தின் நிர்வாகியான 23 வயதுடைய Jong Woo Son என்பவருக்கு எதிராக அமெரிக்க அதிகாரிகள் 9 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளனர்.திகம் வாசிக்கப்பட்டவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 09:31:46 +0530

தொடர்புடயவை

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...