முஸ்லிம் காங்ரசின் திடீர் அறிவிப்பால் தடுமாறும் ரணில்!  | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka
#rafkhan on Sat, 22 Dec 2018 15:58:06 +0530

மக்களின் அபிப்பிராயத்துடன் கூடிய அரசாங்க மொன்றை நிறுவுவதே மிகப் பொருத்தமானது என்பதுடன், அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதில் எமக்கு எந்தவிதமான ஈடுபாடும் இல்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ். 

தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கப் போவதில்லையென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் கூறியுள்ளதாக ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி என்பன பல்வேறு முரணான பிரசாரங்களை முன்னெடுப்பதில் எவ்வித பயனுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய பிரசாரங்களை விடுத்து, மக்களின் அப்பிராயத்தை அறிந்துகொள்வதற்கு அச்சமடைந்துள்ள தரப்பினர் யார் என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள முடியும் எனவும் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தற்போது கொண்டுள்ள அபிப்பிராயத்தின் பிரகாரம், அரசாங்கத்தை மேலும் ஒரு வருட காலத்திற்கு முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல் நிலை ஏற்படும் என்பதால், மக்கள் அபிப்பிராயத்தை அறிந்துகொள்வதே பொருத்தமானது என்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் கூறியுள்ளார்.

மக்கள் அப்பிராய வாக்கெடுப்பொன்றை நடத்தினால், அதற்கு ஜனாதிபதி நிச்சயமாக செவிசாய்க்க வேண்டும் என்பதுடன், வாக்கெடுப்பின் மூலம் தனி அரசாங்கத்தை நிறுவி, நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே சிறந்தது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாக தேசிய சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

 

 

 திகம் வாசிக்கப்பட்டவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 08:39:10 +0530

தொடர்புடயவை

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...