சிறுபான்மையினரின் முக்கிய அடையாளம் நீக்கம்!!...புதிய சர்சையை உருவாக்கும் மஹிந்த | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka
#rafkhan on Tue, 13 Nov 2018 04:06:10 +0530

புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவுக்கு சிங்கள இனவாதிகள் பலத்த வரவேற்பை வழங்கி இருந்தனர். Sri Lanka Flag Issue

எனினும் மஹிந்த ராஜபக்ச புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட நாளில் இருந்து அரசியல் சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்து சென்றது.

இந்நிலையில் மஹிந்த ராஜபக்ச நிகழ்வு ஒன்றில் பயன்படுத்திய இலங்கை தேசிய கொடியில் தமிழ் , முஸ்லிம் மக்களை பிரதிநித்துவம் செய்யும் நிறங்கள் , அடையாளங்கள் நீக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது.

பிரதமராக பதவியேற்று சில நாட்களில் மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றிலேயே இந்த கொடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஹர்ச டி சில்வா தனது டுவிட்டேர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார்.

சிங்கள கடும்போக்குவாதிகள் தமது நிகழ்வுகளில் வெளிப்படையாக பயன்படுத்தி வந்த இந்த கொடியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேடையில் அமர்ந்திருக்கையில் மகிந்தவின் ஆதரவாளர்கள் பயன்படுத்தி இருந்தமை வெட்கக்கேடான விடயம் என அவர் கூறியுள்ளார்.

மேலும் தமிழ் முஸ்லிம் அடையாளங்களை மறைத்து இலங்கையை தனி சிங்கள நாடாக பிரகடனப்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறதா என்னும் சந்தேகம் இதன் மூலம் எழுந்துள்ளது.

Thanks : Tamil Winதிகம் வாசிக்கப்பட்டவை

 | Courier Boys | Tamil News Website | Tamil News Paper in Sri Lanka

Fri, 25 Jun 2021 08:27:48 +0530

தொடர்புடயவை

மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெற...

உங்கள் முன்னஞ்சல் முகவரியினை இங்கு பதிவு செய்வதன்மூலம் தினசரி எமது தளத்தில் பதிவு செய்யப்படும் செய்திகளை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்...